http://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU
Printable View
Vinod Sir,
MGR being in active politics,Sathya Movies had to think of alternative heroes when they could not get his call sheets. Jai Shankar replaced MGR as a dynamic police officer in Sathya Movies Kannipen directed by A.Kasilingam and released in 1969.
Re. Kannipen, should it be "Sathya films" instead of "Sathya Movies"?
Re. Kannipen, should it be "Sathya films" instead of "Sathya Movies"
you are correct sailesh sir . thanks for the correction
‘வாழ்க்கை தத்துவம்’
திரு. சைலேஷ் சார்,
நீங்கள் கூறியிருப்பது சரிதான். கன்னிப் பெண் படம் சத்யா பிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்ட படம். மேலும் அந்தக் கட்டுரையில் மற்றொரு பிழையும் உள்ளது. எட்டாவது பத்தியில்3, 4வது வரிகளில் ரிக்க்ஷாக்காரனில் தலைவருக்கு அக்காவாக பத்மினி நடித்தார் என்று கூறப்பட்டுள்ளது. தலைவருக்கு அக்காவாக நடித்தவர் ஜி.சகுந்தலா. அவர் இறக்கும் தருவாயில் (விஷம் கொடுத்து கொலை) தனது குழந்தையை (மஞ்சுளா) தோழி பத்மினியிடம் ஒப்படைப்பார். பத்மினி மஞ்சுளாவை வளர்ப்பார். அவர் தலைவரின் அக்கா அல்ல.
தினமலர் நாளிதழில் தலைவர் பற்றிய பி.வாசுவின் பேட்டியை சகோதரர் திரு.லோகநாதன் சார் பதிவிட்டுள்ளார். கண்ணழகு சிங்காரிக்கு பாடலில் தலைவரின் உதட்டசைவு திருப்திகரமாக இல்லை என்பதை அவரது முதுகுக்கு பின்னே இருந்து ஸ்ரீதருக்கு அவர் ஜாடை காட்டியுள்ளார். அதனால், ரீ ஷுட் செய்துள்ளார் ஸ்ரீதர். தலைவர் காரணம் கேட்டபோது, அவர் மனம் புண்படாமல் இருக்கவோ அல்லது பலர் முன்னிலையில் சொல்ல வேண்டாம் என்ற காரணத்தாலோ கேமராவில் ரிப்பேர் என்று ஸ்ரீதர் சமாளித்துள்ளார். மீண்டும் அந்த காட்சியில் நடித்து கொடுத்து விட்டு, பின்னர், வாசுவிடம் ‘என்ன வாசு, காட்சி ஓ.கே.வா?’ என்று கேட்டிருக்கிறார் பாருங்கள்..... அதுதான் தலைவர்.
*சுற்றி நடப்பதை (முதுகுக்கு பின்னாலும்) கவனிக்கும் கூர்மை.
*ஸ்ரீதர் தன்னை திருப்திப்படுத்துவதற்காக கேமராவில் ரிப்பேர் என்று சொல்கிறார் என்று தெரிந்து கொண்டாலும், தானும் அதை வெளிப்படுத்தாமல் இருந்த சாதுர்யம்.
*அதே நேரம் எனக்கு எல்லாம் தெரியும் என்பதை ரீ ஷூட் முடிந்த பின் வாசுவிடம் பூடகமாக தெரியப்படுத்திய ராஜதந்திரம்.
* வாதம் செய்யாமல், ஒரு நடிகர் என்ற முறையில் மீண்டும் அந்த காட்சியை நடித்துக் கொடுத்த தொழில் பக்தி. (அவர் மறுத்தால் யார் நிர்பந்திக்க முடியும்?)
* மாலை போட்டிருந்த டெக்னீஷியன்கள் மீன்களை தொடத் தயங்கியபோது, ‘சபரி மலைபோவது இறைவனை பார்ப்பதற்கு. மனசு சுத்தமாக இருந்தால் போதும். இது தொழில். கூச்சம் பார்க்க வேண்டியதில்லை’ என்று அவர்களின் நம்பிக்கையையும் புண்படுத்தாமல், அவர்களுக்கு தெளிவு ஏற்படுத்தி பணியாற்றத் தூண்டிய தலைமைப் பண்பு.
‘தலைவர்’ ................ திரையில் மட்டுமல்ல, அவரது நிஜ வாழ்க்கையிலும் நாம் படித்து, உணர்ந்து, பின்பற்றி நம்மையும் உயர்த்திக் கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவம்.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பின்குறிப்பு: இன்று மகாதேவி விமர்சனம் எழுதலாம் என்று இருந்தேன். நேரமில்லை. விரைவில்...
உலகம் சுற்றும் வாலிபன் - 2015 வெளியீடு புதிய தகவல் .
http://i61.tinypic.com/2r3cto0.jpg
மக்கள் திலகச்தின் தீவிர அபிமானியும் , திண்டுக்கல் திரை அரங்கு உரிமையாளருமான திரு நாகராஜ் அவர்களின் கடும் உழைப்பில் மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் சிறந்த முறையில் மெருகேற்றப்பட்டு வருகிறது .
75% பணிகள் நிறைவு பெற்று விட்டது . டிசம்பர் முதல் வாரத்தில் முதல் பிரதி தயாராகி சென்சார் அனுமதிக்கு சென்று விடும் என்று தயாரிப்பு நிர்வாகி கூறினார் .
2015 - மக்கள் திலகத்தின் பிறந்த நாள் 17.01.2015 அன்று ''உலகம் சுற்றும் வாலிபன் '' டிரைலெர் விழா நடை பெறும் என்று தெரிகிறது . சென்னையில் நடை பெறும் இடம் - தேதி மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் , உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , பொது மக்களுக்கும் கண்ணுக்கு விருந்தாக , முற்றிலும் மாறுபட்ட படமாக , நமக்கெல்லாம் விருந்த படைக்க வருகிறார்
உலகம் சுற்றும் வாலிபன் .
1973ல் வந்த உலகம் சுற்றும் வாலிபன் - பிரமாண்ட படைப்பு .
2015ல் வர உள்ள உலகம் சுற்றும் வாலிபன்- நவீன தொழில் நுட்பத்தில் பிரமாண்டத்தின் பிரமாண்டமாக காணலாம்
சினிமாஸ் கோப் -டிஜிடல் என்று புதிய பரிணாமத்தில் புறப்பட்டு வருகிறார் - உலகம் சுற்றும் வாலிபன் .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு நமக்கு மாபெரும் பரிசாக
http://i57.tinypic.com/2hsc58x.jpg
''நாடோடி மன்னன் '' முழு நீள வண்ணப்படமாகவும் , சினிமாஸ் கோப் மற்றும் டிஜிடல் படமாகவும் வர உள்ளது .
நாடோடிமன்னன் - பற்றிய அறிவிப்பு விரைவில் வர உள்ளது .
இன்னும் 40 நாட்களே உள்ளது .........
பொன்விழா ஆண்டான 1965 மறக்க முடியுமா ?
இந்தியா திரைப்பட உலகையே திரும்பி பார்க்க வைத்த மக்கள் திலகத்தின் '' எங்க வீட்டு பிள்ளை ''
சமுதாய சீர்கேடுகளை சித்தரித்த ''கண் போன போக்கிலே .. தந்த ''பணம் படைத்தவன் ''
கடலில் படமாக்கப்பட்ட பிரமாண்ட படைப்பு ''ஆயிரத்தில் ஒருவன் ''
மெல்லிசை மன்னரின் இசை வெள்ளத்தில் ஜொலித்த ''கலங்கரை விளக்கம் ''
தேவரின் பொழுது போக்கு படமான ''கன்னித்தாய் ''
வாசம் படைத்த மலர்களின் முதன்மையான ''தாழம்பூ ''
கோடிக்கணக்கான மக்களின் - ரசிகர்களின் அன்றும் இன்றும் என்றும் ''ஆசை முகம் ''
ஏழு படங்களின் பொன்விழா நிறைவு - நாம் எல்லோருமே பெருமையுடன் ஏழு படங்களை பற்றியும் மக்கள்
திலகத்தின் நடிப்பை பற்றியும் விரிவாக இங்கே பகிர்ந்து பதிவுகள் இடலாம் .
http://i62.tinypic.com/25s7f4h.jpg
இனிக்கும் செய்தி
***********************
1965 -2015 பொன்விழாவை முன்னிட்டு சிறப்பு மலர்கள் - சிறப்பு வீடியோ தொகுப்புகள் - விழாக்கள் என்று அமர்க்களமாக நாம் கொண்டாட உள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன் .
திரு.எஸ்.வி.சார்,
‘s’ = sweet
s.vinod = ‘sweet’ vinod
இனிப்புகளை அள்ளி வழங்கி விட்டீர்கள். தமிழில் முதல் வண்ணப்படமாகும் கருப்பு வெள்ளை படம் என்ற சாதனையையும் நாடோடி மன்னன் செய்யப் போகிறார் என்று சொல்லுங்கள். சந்தோஷத்தில் இன்று என் இரவை தூங்கா இரவு ஆக்கி விட்டீர்களே? சாதனை சக்ரவர்த்திக்கு இதெல்லாம் சாதாரணம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்