Rahul,
Welcome after a long Gap.Refreshing to see your pesum deivam. You mentioned my favourite scene in the movie ,where NT was about to leave with the kid for outstation, padmini's instructions and sivaji's interludes and reactions. Good.
Printable View
Rahul,
Welcome after a long Gap.Refreshing to see your pesum deivam. You mentioned my favourite scene in the movie ,where NT was about to leave with the kid for outstation, padmini's instructions and sivaji's interludes and reactions. Good.
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு
கடந்த பதிவின் இறுதி பகுதி.
நமது தொடரில் இதனையும் சொல்வதற்கு காரணம் நான் இந்த தொடரின் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தது போல பட்டிக்காடா பட்டணமாவிற்கு opposition படம் அதுவும் strong opposition என்ற முறையில் இந்தப் படம் எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் எங்கள் மதுரையில் தங்கத்தில் வெளியானது நான் ஏன் பிறந்தேன். பட்டிக்காடா பட்டணமா ஓடிக் கொண்டிருந்த சென்ட்ரல் சினிமாவிலிருந்து a stone's throw away என்பது போன்ற தூரத்தில்தான் தங்கம் அமைந்திருந்தது இந்த opposition பேச்சிற்கு வலு கூட்டியது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
நண்பர் ஆதிராமிற்கு வேண்டி சஸ்பென்ஸை முதலிலேயே சொல்லி விடுகிறேன். acid test என்பது தொடர் ஹவுஸ்புல் காட்சிகளில் பட்டிக்காடா பட்டணமா ஒரு புதிய சாதனை படைக்குமா என்பதே ஆகும். இந்த தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற concept உருவெடுத்ததே 60-களின் இறுதிப் பகுதியில்தான். குறிப்பாக தில்லானா வெளிவந்த சமயம் நண்பர்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன் காரணம் நமது திரியில் கூட அந்த விளம்பரம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 1968 ஜூலையில் வெளியான தில்லானா சாந்தியில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்டபோது தொடர்ந்து 100 கொட்டகை நிறைந்த காட்சிகள் என்ற விளம்பரம் பத்திரிக்கையில் வெளிவந்தது. இதுதான் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள என்ற கான்செப்ட் பிரபலமாவதற்கு வழி வகுத்தது. அதுவும் ஒரு சின்ன விஷயத்தில் கூட போட்டி என்று இரு தரப்பு ரசிகர்களும் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் என்பதால் இந்த விஷயம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பெரிய நகரங்களில் எல்லாம் இந்த ஜுரம் பரவியது. எங்கள் மதுரையில் கேட்கவே வேண்டாம்.
சென்னை மாநகரில் 70-களில்தான் காலைக்காட்சி என்ற item சேர்க்கப்பட்டது. அதுவரை வாரத்தின் 7 நாட்களிலும் தினசரி 3 காட்சிகள்தான். ஆனால் தமிழகத்தின் மற்ற நகரங்களில் வழக்கம் என்னவென்றால் தினசரி 3, சனி ஞாயிறு 4 காட்சிகள். ஆக ஒரு வாரத்திற்கு மொத்தம் 23 காட்சிகள். மதுரையில் இது பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இன்றைய நாட்கள் போல் அல்லாமல் terms முறையில் படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் ஒவ்வொரு காட்சிக்கும் hold over என்ற முறையிலே படத்தின் ஓட்டம் தீர்மானிக்கப்பட்டது. விளக்கமாக சொல்வதென்றால் சனிக்கிழமை காலைக் காட்சி திரையிடப்படும்போது அந்த காட்சிக்கு குறைந்தபட்சம் ஒரு தொகை வசூலாக வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையைதான் hold over (இதை விநியோகஸ்தர்கள் பேச்சு தமிழில் holder என்று குறிப்பிடுவார்கள்) என்று சொல்லுவார்கள். அந்த தொகை வரவில்லையென்றால் அடுத்த வாரம் சனிக்கிழமை காலைக்காட்சி ஓடாது. விளம்பரத்திலேயே தினசரி 3, ஞாயிறு 4 காட்சிகள் என்று வந்து விடும். இது போன்றே ஞாயிறு காலைக்காட்சி, சாதாரண தினங்களில் பகல் காட்சிக்கு என்று தனி தனி hold over உண்டு.
இதை இத்தனை விளக்கமாக சொல்வதற்கு காரணம் அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரம் 23 காட்சிகள். நான்கு வாரத்தில் 92 காட்சிகள். 5வது வாரம் சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெறும் 8 காட்சிகளும் புல் ஆகிவிட்டால் 30-வது நாள் ஞாயிறு இரவு காட்சியுடன் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து விடும். இதே வெள்ளிக்கிழமை வெளியான படம் என்றால் நான்கு வாரத்தில் 92 காட்சிகள். 29-வது நாள் வெள்ளி அன்று 3 சேர்த்தால் 95, சனிக்கிழமை 4 சேர்த்து 99, பிறகு ஞாயிறு காலைக்காட்சிதான் 100 ஆகும். இதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்று பார்ப்போம்.
இன்றைய நாட்கள் போல் அன்றைக்கு 5 days week கிடையாது. சனிக்கிழமை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் வேலை செய்யும். எனவே ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் ஹவுஸ் புல் ஆவதற்கு மிகவும் கடினமான காட்சி என்றால் அது சனிக்கிழமை காலைக்காட்சிதான். அதற்கு அடுத்தது ஞாயிறு காலைக்காட்சி. புதிய படங்கள் வெளியாகும்போது குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் படங்கள் வெளியாகும்போது முதல் இரண்டு மூன்று வாரத்திற்கு இந்த சனிக்கிழமை காலைக்காட்சிக்கு அந்தளவிற்கு பிரச்சனை இருக்காது. அதன் பிறகு படத்தின் ரிப்போர்ட் அனுசரித்து இந்த காட்சிக்கு கூட்டம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். எனவே தொடர் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கும் படங்களுக்கு இந்த காட்சிகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமையும்.
(தொடரும்)
அன்புடன்
8+2=10
Quote:
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by parthasarathy http://www.mayyam.com/talk/images/bu...post-right.png நண்பர்களே,
புதிய பறவை - பேசும் படம் அட்டைப்படம் - நடிகர் திலகம் க்ளோசப் - ஒரு மாதிரி அதிர்ச்சியைக் காட்டும்படி அமைந்திருப்பது.
நன்றாக உற்று நோக்கினீர்கள் என்றால் ஒரு மிகப் பெரிய விஷயம் நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற திறன் விளங்கும்.
அவரது ஒரு கண் அதிர்ச்சியையும் மற்றொரு கண் சோகத்தையும் ஒரே சமயத்தில் காட்டுவதைப் பார்க்கலாம்.
பல வருடங்களுக்கு முன், அவர் ஜப்பானுக்குச் சென்றிருந்த போது, அங்கு ஒரு மேடையில் இதை செய்து, அரங்கமே அதிர்ந்து உறைந்ததாகச் சொல்லுவார்கள்.
கலைமகளின் மறு அவதாரத்திற்கு எது தான் சாத்தியமில்லை?
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
பார்த்தசாரதி
நீங்கள் குறிப்பிட்ட பின்தான் உற்று நோக்கினேன் உண்மைதான்
அவரது ஒரு கண் அதிர்ச்சியையும் மற்றொரு கண் சோகத்தையும் ஒரே சமயத்தில் காட்டுகிறது
பிறவி நடிகனையா வேறு எந்த நடிகனால் இது முடியும்?
ஜப்பான் நிகழ்ச்சி விபரம் ஆவணம் இருந்தால்
யாராவது பதிவிடுங்கள்
http://i157.photobucket.com/albums/t...ps3465638c.jpg
[QUOTE=sivaa;1143107][COLOR=#0000cd][SIZE=4]
பார்த்தசாரதி
நீங்கள் குறிப்பிட்ட பின்தான் உற்று நோக்கினேன் உண்மைதான்
அவரது ஒரு கண் அதிர்ச்சியையும் மற்றொரு கண் சோகத்தையும் ஒரே சமயத்தில் காட்டுகிறது
பிறவி நடிகனையா வேறு எந்த நடிகனால் இது முடியும்?
ஜப்பான் நிகழ்ச்சி விபரம் ஆவணம் இருந்தால்
யாராவது பதிவிடுங்கள்
Superb insertion Sivaa. For all seasons, starting from the dialogue filled movies to subtle acting portrayal, NT remains the definitive actor for all sorts of expressions that speak! Pudhiya Paravai is the ideal movie of NT to parade all bits of his skill and histrionics. Thanks Parthasarathy sir.
Dear Sivaa. ஒரு தேர்ந்த நடிகனின் முகபாவங்களும், உடல்மொழியும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒப்பனையும், உடைகளின் தேர்வும்,நடிப்புத்திறனும்,பார்வையாளர்களின் மனதில் பசுமரத்தாணிபோல பதிவதற்க்கு கேமரா கோணங்களும் பின்னணி அரங்க அமைப்புக்களும் மிகமிக முக்கியம். இவை அத்தனையும் நம் நடிகப்பேரரசருக்கு அமைந்ததுபோல் உலகின் மற்றெந்த கலைஞனுக்கும் அமைந்ததில்லை. புதியபறவை முழுப்படமுமே நடிகர்திலகத்தின் நடிப்புப்பசிக்கு போடப்பட்ட தீனி. அதேபோல் வியட்நாம் வீடு, கெளரவம், தெய்வமகன், தில்லானா, தூக்குத்தூக்கி, தங்கப்பதுமை, வசந்த மாளிகை, பா வரிசைக் காவியங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் திரையுலகின் நிரந்தர சாதனை முன்னோடி கர்ணன்......இந்த அம்சங்கள் அனைத்துமே குறைவின்றி நிறைந்த நடிப்புப் பெட்டகங்கள். நடிப்பின் நாளந்தா பல்கலைக்கழகம் நடிகர்திலகம் மட்டுமே.
Mr Senthil,
The answer to the puzzle of Mr Siva is the postings on Madura Ganam and
NT's thread. If the posting in Madura Ganam is 8 and in NT's thread is 2 he
will mentioned as 8+2 = 10. That is all.
My only request to all the NT's hubbers to post in main thread as well as
contribute the same in other thread.
God only knows when they will come.
Regards