-
மக்கள் திலகத்தின் '' நாளை நமதே '' - இன்று 39 ஆண்டுகள் நிறைவு தினம் .
மக்கள் திலகத்தின் 125 வது படம் .
இலங்கைக்கு மிகவும் ராசியான படம் . காரணம் தமிழகத்தை விட இலங்கையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் .20 வாரங்கள் மேல் ஓடிய வெற்றி சித்திரம் .இனி விமர்சனத்திற்கு செல்வோம் .
சங்கர் - விஜய் என்ற இரட்டை வேடத்தில் மக்கள் திலகம் நடித்த படம் . தனது குடும்பத்தை அழித்தவர்களை , சகோதரர்களை பிரிய காரணமானவர்களை கண்டு பிடித்திட சங்கர் சந்திக்கும்
போராட்ட்டங்கள் காட்சியில் மக்கள திலகம் மிகவும் சீரியாசாக நடித்துள்ளார் .
விஜய் -ரோலில் துரு துருப்பான வாலிபராக இளமை ததும்பும் வாலிபராக எம்ஜிஆர் காட்சிக்கு காட்சி தோன்றும் காட்சிகளில் கைதட்டல்கள் பெறுகிறார் .
நானொரு மேடை பாடகன் - மக்கள் திலகம் தன்னுடைய 58 வயதில் என்னமாய் ஜொலிக்கிறார் . அட்டகாசமான நடனம் . ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார் .
என்னை விட்டால் யாருமில்லை -
நீல நயனங்களில் .....
காதல் என்பது காவியமானால் ....
அன்பு மலர்களே ,,,நம்பி இருங்களேன்
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . கிளைமாக்ஸ் சண்டை காட்சி புதுமையாக இருந்தது .
மொத்தத்தில் நாளை நமதே - எதிர்காலத்தில் எல்லோரும் உச்சரிக்கும் பெயர் - நாளை நமதே
நம்பிக்கையின் உயிர் வாசகம் - நாளை நமதே
1975ல் எம்ஜிஆர் நாளை நமதே என்று முழங்கினார் . வெற்றியும் கண்டார் . அவரை தொடர்ந்து அவருடைய ரசிகர்களும் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார்கள் .
1
-
-
-
-
-
-
-
-
-