நல்ல முடிவு ...அருமையான பாடல் ..
Printable View
நல்ல முடிவு ...அருமையான பாடல் ..
//'தன்னை மறந்தாடும் என் மனம் நாடும் சந்திரனே'
வண்ணத்தமிழ் பாடி என்னையும் தேடி வந்திடக் கண்டேனே
என்ன வைப்ரேஷன்ஸ் இசையரசி குரலில். // வேலவன் வேல் போலே இரண்டு விழிகள் மின்னுதய்யா//
தன்னைமறந்தாடும் பாட்டு வெகு அழகு.. அந்த மாடுலேஷன்ஸ் இனிமை..இசையரசியின் குரல் ம்ம்
//வேலவன் வேல் போலே இரண்டு விழிகள் மின்னுதய்யா//
இல்லை இல்லை என்ற இடை சொல்வது என்னடியோ..
பட்டுக்கால்கள் பட்டதனாலிபஞ்சு விளைந்ததடி
உன் கூட இருந்தால் குளிராய்த் தோன்றுதய்யா...ஓ..
ஒரு இனிமையான டூயட்..
அழகான பாடல் தந்த ராஜேஷீக்கும்.. வாசு சாருக்கும் ஒரு ஓ :) அண்ட் நன்றி..
வாசு சார்..அந்தபத்மினி பிரிய தர்ஷனியெல்லாம் எப்படி நினைவு வைத்துக்கொள்கிறீர்கள் ம்ம் ஆச்சர்யம்.
சரி ராஜேஷ் சார்/சி.க. சார்.
நான் போய் தூங்கப் போறேன். இன்னைக்கு நிறையப் பக்கங்கள். நிறையத் தகவல்கள். தங்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி!
நாளை பார்க்கலாம்.
குட் நைட்.
ஷ்யுர் வாசு சார்..இனிய பாடல்கள் (மட்டும்) உங்க்ள் கனவுகளில் வரட்டும் :) குட் நைட்..( நாளைக்கு மறக்காமச் சொல்லணும் என்ன :) )
ராஜேஷ் கண்ணா.. நானும் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்..:)
ஏன் ஓய் ப.பி யோட புதிரே விடுபடல்ல இதுல ஜெமினி சந்திராவா.. எனக்கு ஜெமினி கணேஷ், ஜிஜி (ஹேண்டில் வித் கேர் மாதிரி கார்த்திக் பாடுவாரே), ரேகா தான் தெரியும்..
சின்ன பெண்ணான போதிலே .. ஆஹா என்ன அருமையான பாடல்
ராமனாதன் தனக்கும் மேல் நாட்டு பாணி அற்புதமாக வரும் என்பதை சொல்லாமல் சொல்லும் பாடல்
que sera que sera .. ஒரிஜினல் .. டோரிஸ் டே.. எனக்கு மிகவும் பிடித்த நடிகை
அதே போல் ஜிக்கியம்மா என்ன உருட்டல் அந்த குரலில்.... சின்ன பெண்ணான போதிலே போன்று பல பாடல்கள்
இசையரசியிடம் பேசும்பொழுதெல்லாம் ஜிக்கியம்மா பற்றி சிலாகித்து சொல்வார் ...
கணவனே கண் கண்ட தெய்வத்தின் இயக்குனரின் மகனும், பல இசையமைப்பாளரிடம் போங்கோஸ் வாசிக்கும் என் நண்பர் திரு பாஸ்டன் கணேஷ் மற்றும் அவரது நண்பர் திரு சி.ஏ.ராஜா அவர்களும் சேர்ந்து பல கலைஞர்களை நினைவு கூறும் இசை நகிழ்ச்சிகளை நடத்துகிறார்கள்
பாடகர் திலத்திற்கும், வாலி ஐயாவிற்கும் ஆகிவிட்டது. இந்த மாதம் ஜிக்கியம்மாவிற்கும் அடுத்த மாதம் ஸ்வர்ணலதாவிற்கும் நடத்துகிறார்கள்
சென்னை நண்பர்களை கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். விருப்பபட்டவர்கள் எனக்கு பிரைவேட் மெசேஸ் அனுப்புங்கள்
அவருடைய அலைபேசி எண் தருகிறேன்.
நன்றி
Attachment 3481
சர்ர்ரிய சொன்னீங்க.. அவங்க மட்டும் நளினமாக ஆடியிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க.. "பொன் மகள் வந்தாள்" பாட்டுக்கு அபினயத்துல ரெண்டு வெட்டு வெட்டுவாங்க.. தியேட்டர்ல ஒரு பாட்டி "ஏன் இப்படி ஆடறா ? ஃபிட்ஸ் வந்துடுச்சா?" என்று கேட்டு ஆடியன்ஸை அலற வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.