-
நன்றி ராஜேஷ்ஜி /மதுஜி
'உடே ஜப் ஜப்' பாடலின் (பாட்டாளியின் சபதம்) தமிழ் வடிவத்திற்கு.
வேதா இந்தப் பாடலிலிருந்து இரண்டு வரி டியூனை எடுத்துக்கொண்டு தன்னுடைய ஒரிஜினலையும் சேர்த்து கண்டுபிடிக்க முடியாதபடி மிளிர வைத்திருப்பார் மணமாலை படத்தின் 'நடக்காது ஜம்பம் பலிக்காது
என்னை ஏமாற்றி ஓடவே முடியாது' பாடலை.
-
http://i1146.photobucket.com/albums/...pseebd5d89.jpg
உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே...
உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பும் இதயமே...
-
-
மய்ய நண்பர்கள் அனைவருக்கும் என் இதய தெய்வத்தின் பிறந்த நாள் சார்பாக என் மனமுவந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://i1087.photobucket.com/albums/...ivanthaman.jpg
-
மதுர கானங்கள் திரி நண்பர்களுக்கும், நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நடிகர் திலகத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
இன்று நமது திரி நடிகர் திலகத்தின் பிறந்தநாள் சிறப்புத் திரியாக சுடர் விட்டு பிரகாசிக்க இருக்கிறது. நண்பர்கள் நடிகர் திலகம் பற்றிய தங்களுடைய பதிவுகளை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
-
நடிகர் திலகம் நாடகங்களில் நடித்த சில அபூர்வ நிழற்படங்கள்.
'தேன் கூடு' நாடகத்தில் (மிக மிக அபூர்வமான படம்)
http://i1087.photobucket.com/albums/...02ab087046.jpg
-
உன்னை தவிர யாராவது நான் சோழ மன்னன் பரம்பரை என்று சொல்லியிருந்தால் நகைத்திருப்போம். நீ சொன்ன போது வருந்தினோம். உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் சக்கரவர்த்தி ,ஏன் சோழ பரம்பரை என்று தமிழ் நிலத்தை மூன்றிலொரு பங்காக குறுக்க வேண்டும்?
உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே.
அவதார புருஷர்களில் தந்தை தாய் இருவரையுமே பெருமையாக அடையாளம் காட்டி வாழும் ஒரே அவதாரன் நீ.
சரியான நிலத்தில் சரியான விதையாக ,நாடக உரத்தில் தழைத்த அற்புத பயிரே! உன்னை சுவைக்க வேண்டிய இனமோ , அந்நிய கள் குடித்து அறியாமையில் உழன்றது.
நாங்கள் ஏற்றுமதி செய்திருக்க வேண்டிய முதல் உலகத்தரம் வாய்ந்த இந்திய பொருள் நீதான்.ஆனால் தரமான பொருளுக்கு அழகான உறை போட்டு அலங்கரிக்க தவறினோம் . இப்போது சரியான உறைகளில் தவறான பொருளெல்லாம் ஏற்றுமதி கண்டு தழைக்கிறது.
நீ மட்டுமே பணம்,அதிகாரம் விளம்பர போதைகளால் போலி புகழில் வாழாமல், எங்கள் குடிசை வீடுகளிலும் நிரந்தர தெய்வமாய் எங்களை உன்னதம் பெற வைத்து எங்கள் ஒவ்வொரு அணுக்களிலும் அனுதினமும் உயிர்க்கிறாய்.இந்த உயிர்ப்பு ,சமாதிகள் அல்ல.சந்நிதிகள் .
ஒரு பிறவியால் ,இத்தனை பிறவிகளுக்கு வாழும் போதே மோட்சமளித்த நடிப்பு ராமானுஜனே!!!
உலகத்திற்கு பல நாட்கள் ,பல தினங்கள். தாய்க்கு,தந்தைக்கு,நண்பர்களுக்கு,காதலர்களுக்க ு என்று. தமிழர்களுக்கு ஒரே நாள். அக்டோபர் 1 மட்டுமே.
தமிழர் பெருமை நாள்.
திருவள்ளுவனுக்கு பிறகு பெருமை மீட்ட நாள்.
சேர பாண்டியர்களை தலை குனிய வைத்த சோழ திருமகனின் அவதார நாள்.
மேதைமையும்,திறமையும் ,உழைப்பும்,நேர்மையும்,புகழும் அதிசயமாக இணையும் ஒரே நாளின் நினைவு திருநாள்.
உன்னால் தலை நிமிர்ந்த தமிழே தலை குனிகிறது. உன்னை போற்ற போதிய சொற்களின்றி.
என் உயிர்,உடல் என்றவற்றை தாண்டி எதை உனக்கு காணிக்கையாக்குவேன்?அழியும் இவைகள் அழியாத உனக்கு எப்படி காணிக்கையாகும்?
என் எழுத்தே உனக்கு நானளித்த காணிக்கை. அது என்றும் வாழும் சரஸ்வதி தேவி.என் எழுத்துக்களே நான் உன்னை அர்ச்சித்து போற்றும் சத்திய பூஜை.
எங்கள் போற்றுதலுக்குரிய தலை தமிழ் மகனே!!! தரம் கேட்ட தமிழர்களையும் உன் ஆன்மா மன்னிக்குமாக.வாழும்போதே நண்பர்-பகைவர், உற்றோர்-மற்றோர் என்று பேதம் காட்டாத நீயா ,தெய்வமாகிய பின் பேதம் காட்டுவாய்? உன்னை திரிக்கும் ,திரிக்கும் ,தமிழர்களாய் வாழாமல் தாழும் நரிக்கும் கூட அருள் தருவாய்
நடிப்புக்கும்,ஆண்மைக்கும்,அழகுக்கும்,திண்மைக்கும், தன்மைக்கும்,தகைமைக்கும்,பண்புக்கும்,நட்புக்கும்,தூ ய மனதுக்கும், சொற் தமிழுக்கும் இலக்கணம் வகுத்த எங்கள் தலை தெய்வமே!!
தமிழனான எனது முழு முதற் கடமை நிறைவேறிய திருப்தியில் ,நான் நிஜமாக நேசிக்கும் ஒரே நாளில் என் பணிகளை தொடங்குகிறேன்.
-
-