கமான் .. இதை சொல்லும் நீர் ஒரு மகான் .... ஆஹா நமக்கும் எழுத வருதே
Printable View
ஹாய் குட்மார்னிங்க் வாசுங்க்ணா, ராஜேஷ்.. வ.போ.கல் நாயக் கலை ராகவேந்தர்சார் ரவி
பயில்வான் கனவான் கமான் மகான்..ம்ம்
அதாவது தமிழ் இலக்கியத்துல பார்த்தீங்கண்ணா வ வுக்கு ம எதுகையா வரும் அதே சமாத்துல கவ்க்கு ம எதுகையா வராது..ஓ புரியலையா;; சரி சரி..இருவருக்கும் நன்றி என்றுசொல்லி இதோ ஒரு இளையராஜா பாடல் நவ்வுலோ புட்டானு ..( முகநூலில் நண்பர் சொல்லிக் கேட்டுப் பார்த்தேன்..ஓ.கே..சாங்க்.. அண்ட் ரவளி)
https://youtu.be/CvOKhfZyG_c
ஹை தமிழ்லயும் கொஞ்சம் பொம்மைப் பாட்டு இருக்கே ..இருமனம் கொண்ட திருமண வாழ்வில்..ம்ம் அது வேண்டாம்..
இதே சின்னப்பாயி தெலுங்குப் படத்தில் இன்னொரு பாட்டு..தெலுசுகோ தெலுசுகோ ஓ வன மாலி.. மெலோடியாக ஆரம்பித்து ரம்யாவின் அதிரடி..ஆட்டம்..
https://youtu.be/STxVmawQDtI
நைட் ஷோ உ.வி பார்த்துட்டு வந்து அரைத்தூக்கத்துலஏற்கெனவே ஆரம்பித்து பாதியில் நிறுத்தியிருந்த சி.க.மூக்குத்தி டைப்படிச்சேனா.போஸ்ட் பண்ணினேனா ( கதை மட்டும் கண்ணதாசன்..வரிகள் என்னுடையவை! எனில் பயம்) இப்பவும் ஒரு ஹாஆஆவ்..
மூன்று பெண்கள் பற்றிய டீடெய்லுக்கு நன்றி வாசுசார்.. கொஞ்சூண்டு பாராட்டு அல்லது திட்டு கெடிச்சா போதும்..கைவலியாவது ஒண்ணாவது..சி.க மூக்குத்தி படம் போராக இருக்கும் எனத் தெரியும் ம்ம் நன்றி
ராஜேஷ்.. நன்றிப்பா. பர்த்டேக்கு என்னவாக்கும் செய்தீர்கள்..
சரி சரி..கொஞ்சம் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட்டு தூங்கி யூ.வி பத்தி எழுதறேன்..
அத்திமரப் பூவிது - பாட்டில் ஆரம்பத்தில் ஆடும் நடிகையே நளினியை விட அழகாய் இருக்கிறார்..
மூங்கில் மரக்காட்டினிலேயில் கல்யாண் குமாரோடு இருப்பது பத்மினியா
புளியமரம், வாழை மரத்தோட்டம், புன்னை மரம் ஒண்ணு தென்னை மரம் ஒண்ணு - இது எல்லாம் முன்பே ரொம்ப காலத்துக்கு முன்னால் கேட்டிருந்தாலும் இப்போது தான் பார்த்தேன்..
ஆத்தங்கர மரமே அரசமர இலையேயும் ஸ்வீட் சாங்க்..
மரங்கள் பாடல்கள் வழங்கிய வாசு, ராகவேந்திரர்,கல் நாயக்கிற்கு நன்றி..
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
2
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த பாடல்களுள் ஒன்று. பாலா மக்கள் திலகம் அவர்களுக்காக பாடிய 'அடிமைப் பெண்' (1969) படப் பாடல்.
http://i.ytimg.com/vi/yHfBRUdJ0Ts/hqdefault.jpg
'ஆயிரம் நிலவே வா'
உடன் சுசீலா அம்மா.
தினை மாவும், வெல்லமும் சேர்ந்தால் என்ன ருசியோ அதை விட இந்தப் பாடல் தெவிட்டாத திகட்டாத ருசி தரும்.
பாலாவின் பால் குரலும், சுசீலாவின் சுகக் குரலும் நம்மை அப்படியே சுவீகாரம் எடுத்துக் கொள்ளும்.
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பொருத்தமாயும் பாலாவின் குரல் அமைந்து விட்டது.
நடிகர் திலகம் காரில் பயணிக்கும் போது கார் ஓட்டுனரை இந்தப் பாடலை அடிக்கடி போடச் சொல்லிக் கேட்டு மனம் மகிழ்வாரம். 'அண்ணனின் இசை ரசனையே தனி' என்று எம்.ஜி.ஆர் அவர்களை மனதாரப் புகழ்வாராம்.
பாலாவின் பச்சைப் பசுங்குரல் பாரையே கட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல. 'திரை இசைத் திலக'த்தின் பிரம்மாண்ட காட்சிக்கேற்ற இசையமைப்பு. அதுவும் அந்த ஆரம்ப உற்சாக வேக இசை வேனிற் காலத்தில் வீசும் வேக இளம்தென்றல்.
வித்தியாசமான ரோமானிய காஸ்ட்யூமில் எம்.ஜி.ஆர் அவரது ஸ்டைலில் இப்பாடலைப் பாட ஆரம்பிக்க, உடன் ஜெயலலிதா கீழுதட்டை விரால் இழுத்துக் கடிக்க, இந்த இனிமையான பாடலில் அப்படியே இணைய ஆரம்பித்து விடலாம்.
அவர் ரசிகர், இவர் ரசிகர் என்ற பேதமின்றி அனைவரும் பாலாவை ஒருமித்து ரசிக்க வைத்த ஒருதலைப் பட்சம் காட்ட வைக்காத பாடல்.
ராமமூர்த்தியின் காமெரா நம் வாயைப் பிளக்க வைக்க, அதற்கு மேல் ஜெய்ப்பூர் அரண்மனையின் பிரம்மாண்டம் இன்னும் நம்மைத் திகைக்க வைக்கிறது.
http://thamizhnadhi.com/wp-content/u...r-pulamai1.jpg
பாடல் வரிகள் அமிழ்தினும் இனியவை. புலமைப்பித்தன் தமிழ்ப் பித்தனாகி இலக்கியத் தரத்துடன் அமுத விருந்து படைத்து விட்டார்.
குரலில்
குழைவு... குழைவு...குழைவு..
பாலாவுக்கு கடவுள் தந்த வரம்.
அதனால் எல்லோர்க்கும் பெரு
மகிழ்வு... மகிழ்வு... மகிழ்வு
இது பாலா நமக்கு தந்த வரம்
பாடகர் திலகத்தின் கம்பீரக் குரலுக்கும், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்ற மென்குரல்களுக்கும் வசப்பட்ட தமிழ்நாடு வித்தியாசமான பாலாவின் குரலில் கிறங்கிப் போய் சுருண்டு அடிமை ஆனது. தெலுங்கில் காமெடி டிராக் பாடிக் கொண்டிருந்தவர் தென்னகம் புகழும் 'பால சுப்ரமணிய மன்னவன்' ஆனார். வித்யாசக் குரல் கேட்டு இளைஞர்கள் இனம் கானா இன்பம் அடையத் துவங்கினர். தெலுங்கில் கண்டசாலாவை விட்டு நீண்ட காலம் கழலாத மக்கள் அவருக்குப் பிறகு பாலாவின் குரலில் கொஞ்சம் கொஞ்சமாக சுழல ஆரம்பித்தார்கள்.
அவரவர் வாயிலும் 'ஆயிரம் நிலவே வா' தான். மேடைக் கச்சேரிகளில், திருமண வைபவங்களில், சுப நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் 'ஆயிரம் நிலவை 'வா' என்று கூப்பிட்டு மகிழ்ந்தனர். அந்த ஆர்ப்பரிப்பு உற்சாகம் இன்றும் எள்ளளவும் குறையவில்லை என்பதுதான் எல்லாவற்றையும்விட அதிசயம். இதற்காக திரை இசைத் திலகத்திற்கும், மக்கள் திலகத்திற்கும் நன்றி கூற கடமைப் பட்டவர்கள் ஆகிறோம்.
http://www.kaathal.com/songs/lyrics/...ilavae_vaa.gif
https://youtu.be/yHfBRUdJ0Ts
பாலா மேடையில் 'ஆயிரம் நிலவே வா' என்று அப்போது போலவே அச்சு பிசகாமல் அப்படியே அள்ளி நமக்கு வழங்குவதை ஒரு சாம்பிளாகக் காணுங்கள்
https://youtu.be/KA9IjMctzLY
இல்லை சி.க. அது மாலினி. நடிகர் திலகத்துடன் 'சபாஷ் மீனா' படத்தில் ஜோடியாகவும், (காணா இன்பம் கனிந்ததேனோ, சித்திரம் பேசுதடி) மக்கள் திலகத்துடன் 'சபாஷ் மாப்பிள்ளை' படத்தில் ஜோடியாகவும் நடித்தவர்.
இவர் ஒரு ஆணழகி.:)
http://i.ytimg.com/vi/f6Q8ILxM_RM/maxresdefault.jpg
http://upload.wikimedia.org/wikipedi..._mappillai.jpg
'சபாஷ் மீனா' படத்தில் 'காணா இன்பம் கனிந்ததேனோ' மாலினி நடிகர் திலகத்துடன்.
https://youtu.be/MewOsMqwg3Y
'சபாஷ் மாப்பிள்ளை' படத்தில் சூலமங்கலம் குரலில் மாலினி பாடும் 'முத்து போலே மஞ்சள் கொத்து போலே'
https://youtu.be/H8ODbfz5kMo
'இன்பத்தின் வேகமா' என்று 'கள்ளபார்ட்டை'க் கவிழ்க்கும் மாலினி 'சபாஷ் மீனா' திரைப்படத்தில்.
https://youtu.be/RAayED4S300
சி.க,
உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் பாடல். நீங்கள் கேட்ட மாலினி நடித்ததுதான். குளிர்ச்சியான பாடல் என்பதால் உங்களுக்கு மட்டுமே. (கல், கலை கண்டுக்க வேண்டாம். விட்டுடுங்க.):)
https://youtu.be/43Uhk4qAHqY
Courtesy: Tamil Hindu
‘ஈர விழிக் காவியங்கள்’ படப்பிடிப்பில்...
துயருறும் தருணங்களில் இசை தரும் ஆறுதல் ஆத்மார்த்தமானது. தனது துயரத்தை, ஆறுதல் தேடி அலையும் மனதின் ஊடாட்டத்தை ஒருவரால் இசையாக மாற்ற முடிந்தால், அந்தத் துயரமே அவருக்குப் போதையாகிவிடும். இசைக் கருவியின் வழியே துயரத்தின் குறிப்புகளைக் காற்றில் எழுதிக் கரையவிடுவது சுகமான அனுபவமாகிவிடும்.
காதலின் இழப்பை, சிக்கலான குடும்பப் பின்னணியின் வலியை இசையால் பிரதியெடுக்கும் கலைஞனைப் பற்றிய படம் ‘ஈரவிழிக் காவியங்கள்’. இசைக் கலைஞராகும் ஆசையுடன் நகரத்துக்கு வருகிறான் நாயகன். தனக்கு உதவும் பெண் மீது அவனுக்கு மையல். அந்தப் பெண்ணோ வேறொருவரின் காதலி என்று நீளும் கதை இது.
1982-ல் வெளியான இந்தப் படத்தை பி.ஆர். பந்துலுவின் மகனான பி.ஆர். ரவிஷங்கர் இயக்கியிருந்தார். கையில் கிட்டாருடன் அப்பாவித்தனத்தைச் சுமந்து திரியும் பாத்திரம் பிரதாப் போத்தனுக்கு. ஏக்கம் ததும்பும் இசையை மென் சாரலைப் போலப் படம் முழுவதும் தூவியிருப்பார் இளையராஜா.
மிதக்கவைக்கும் இசை
கனவில் விரியும் பாடலுடன்தான் படம் தொடங்குகிறது. நாயகன் கிட்டார் இசைக் கலைஞன் என்பதால் இப்படத்தின் ஒவ்வொரு பாடலும் கிட்டார் இசையுடன் தொடங்க, வயலின்(கள்), புல்லாங்குழல் என்று இளையராஜாவின் பிரியத்துக்குரிய இசைக் கருவிகள் இணைந்து இசைக்கின்றன. ‘கனவில் மிதக்கும் இதயம் முழுதும்’ என்று தொடங்கும் இந்தப் பாடலும் அப்படித்தான். சென்னையின் காலைநேரக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே பயணப்படும் நாயகனின் மனதில் இசையின் லட்சியக் கனவுகள் ஒவ்வொன்றாக விரிந்துகொண்டே வருவதுபோன்ற காட்சியமைப்பு அது.
ஆனால், பாடல் அதையும் தாண்டி வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நிலப் பரப்புகளைக் கற்பனையில் காட்சிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இளையராஜாவின் இசை, இந்தப் பாடலில் கற்பனை உலகின் நிலங்களைக் கண்முன் நிறுத்துகிறது. அடங்கிய மென் குரலில் எளிமையாக, பாந்தமாகப் பாடியிருப்பார் ஜேசுதாஸ்.
ஏழையின் கீதம்
ரசிகர்கள் கூடியிருக்கும் அரங்கில் தனது இசையை அரங்கேற்ற வேண்டும் எனும் கனவைத் தன் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறான் நாயகன். ‘என் கானம் இன்று அரங்கேறும்’ எனும் அந்தப் பாடலை, வலியில் துடிக்கும் மனதைப் பிரதியெடுக்கும் குரலுடன் பாடியிருப்பார் இளையராஜா. ஒரு கலைஞர் தனது கற்பனைக்குத் தானே உயிர்கொடுக்கும்போது படைப்புகள் உள்ளார்ந்த உயிர்ப்புடன் ஒளிரும். அந்தப் பட்டியலில் இடம்பெறும் ‘ராஜா பாட்டு’ இது.
நிகழ்காலத்தின் வெறுமையையும் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகளையும் கிட்டாரின் தந்திக் கம்பிகள் வழியாகவே வரைந்துகாட்டியிருப்பார் மனிதர். ‘பாலைவனத்தின் பனிமழையே வா’ எனும் வைரமுத்துவின் வரிகள் பாடலின் தன்மையை மேன்மைப் படுத்தியிருக்கும். இரண்டாவது சரணத்தில் இணைந்துகொள்ளும் ஜென்சியின் குரல், நிலைகொள்ளாமல் தவிக்கும் நாயகனுக்கு ஆறுதல் தரும் மாயக் குரலாகப் பரவும்.
ஏகாந்தத்தின் இசை
அடிவானத்தைத் தொடும் முயற்சியில் விரிந்துகொண்டே செல்லும் சமுத்திரத்தை, யாருமற்ற தீவின் கரையில் நின்றுகொண்டு ரசிப்பது எத்தனை சுகமானது. அந்தச் சுகத்தை இசை வடிவத்தில் கேட்க வேண்டும் என்றால், இந்தப் பாடலைக் கேளுங்கள். ‘பழைய சோகங்கள்… அழுத காயங்கள்’ என்று தொடங்கும் இந்தப் பாடலையும் இளையராஜாதான் பாடியிருக்கிறார். இரவில் வானத்தைப் பார்த்தபடி படுத்திருப்பவர்களின் கனவில் ஏதாவது ஒரு நட்சத்திரம் தோன்றும்; கண்சிமிட்டிப் புன்னகைத்த பின்னர் கண்முன்னே பூமியில் விழும். அந்த உணர்வை இந்தப் பாடல் தரும்.
வெற்றிப் பாடல்
‘காதல் பண்பாடு… யோகம் கொண்டாடு’ என்று இசைக்கும் இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியிருப்பார். வாய்ப்பு நிறைவேறி, தனது தாய், நண்பர்கள் முன்னிலையில் நாயகன் கொண்டாட்டத்துடன் பாடும் பாடல் இது. இருளான மேடையில் மஞ்சள் விளக்கில் ஒளிரும் சிகையுடன் தோன்றிப் பாடுவார் பிரதாப் போத்தன் (இந்தப் பாடலின் ஒளிப்பதிவு, அசோக்குமாரின் தனி முத்திரைகளில் ஒன்று!). தனக்கு நம்பிக்கையளித்த காதலி (ராதிகா) வராத சோகம் பாடலின் வரிகளிலும் ஜேசுதாஸின் மென்சோகக் குரலிலும் விரவிக் கிடக்கும். வலி, உற்சாகம் என்று இருவேறு உணர்வுகளை ஒன்றாக இணைத்து இழைத்து வார்த்திருப்பார் இளையராஜா.
அவரது இசையமைப்பில் அந்தக் கால கட்டத்தில் வெளியான மற்ற படங்களின் பாடல்களை ஒப்பிட, இப்படத்தின் பாடல்கள் அதிகம் புகழ்பெற்றவை அல்ல.
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 13
angkor wat , cambodia - unusual celestial is happening - the sun enters the temple which happens once in 2000 years.
" சீலமாய் வாழும் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் , ஞாயிறே போற்றி !
சூரியா போற்றி ! சுதந்திரா போற்றி !!
வீரியா போற்றி , வினைகள் களைவாய் போற்றி போற்றி !!!
http://i818.photobucket.com/albums/z...psn8jazvnl.jpg