-
1964ல் வந்த புதிய பறவை திரைப்படம். அதில் இடம் பெற்ற "எங்கே நிம்மதி பாடல் காட்சி" அந்த பாடலுக்கான செட் தயாராகி விட்டது.இயக்குனர் தாதாமிராசியும் ஒளிப்பதிவாளர் வின்செண்டும் வந்து பார்த்தனர். இருவருக்கும் திருப்தி அவர் இரவெல்லாம் லைட்டிங் செய்து விட்டு காலையில் "சிவாஜியை கூப்பிட்டு காட்டிடுங்க " என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.
சிவாஜிக்கு தகவல் சொல்லப்பட்டது.அவரும் கிளம்பி வந்து செட்டைப் பார்த்து மகிழ்ந்து விளக்குகளை ஆன் செய்ய சொல்லிவிட்டு,செட்டுக்குள் ஒருமுறை நடந்து பார்த்த சிவாஜி, கூரையை சுட்டி காட்டி "அங்க ஒரு லைட் எரியல போல இருக்கே" என்று சொல்லி விட்டு போய் விட்டார்.
செய்தி வின்செண்ட் காதுக்கு போனது. மறுநாள் படப்பிடிப்பிற்கான ஒத்திகை தொடங்கியது.செட்டில் மீண்டும் நடந்து பார்த்த சிவாஜி வின்செண்டின் உதவியாளரை அழைத்து நேற்று தான் சொன்னது போலவே செட்டுக்கு மேலே மறைவாக வைக்கப்பட்டு இருக்கும் ஒரு விளக்கு எரியவில்லை என்று மறுபடியும் சொல்லி இருக்கிறார்.
இப்போது வின்செண்ட் வந்து "மீட்டர் ரீடிங் கரெக்டா இருக்கு சார் என்று சொல்ல, சிவாஜி தன் கன்னத்தை வருடியபடி என் மீட்டர்ல தப்பா காட்டாதே என்று சொல்ல, செட்டின் கூரை மறைப்புகளை பிரித்து பார்க்க சொல்கிறார் வின்செண்ட்.
பிரித்து பார்த்தால். சிவாஜி சொன்னது போலவே அவர் சொன்ன திசையில் ஒரு ஆர்க் லேம்ப் அனைந்திருந்தது. தன் முகத்தில் படும் விளக்கின் வெப்பத்தை வைத்தே விளக்கு எரியாததை கண்டுபிடித்த சிவாஜியின் நுண் அறிவை பல பேரிடம் சொல்லி வியந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வின்செண்ட்
நன்றி! இணைய பகுதியிலிருந்து .....
Thanks Ganesh Pandian
-
13-05-2020
புதன்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1) நான் வணங்கும் தெய்வம்-....................... காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
2) ஜல்லிக்கட்டு -............................................... காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்
3) பாகப்பிரிவினை -....................................... காலை 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில்,
4) பணம் -.................................................. ......... காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்
5) பாவமன்னிப்பு -........................................... காலை 11 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்,
6) சாதனை -.................................................. .... பிற்பகல் 1:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்,
7) விடுதலை -.................................................. . பிற்பகல் 2 மணிக்கு பாலிமர் டிவியில்,
8) பாவமன்னிப்பு -.......................................... இரவு 7 மணிக்கு முரசு டிவியில்,
9) குலமகள் ராதை -....................................... இரவு 9:30 க்கு கலைஞர் தொலைக்காட்சியில்
நாடக நடிகராக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி- பிற்பகல் 12:30- 1:00 மணி வரை வசந்த் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி,
Thanks Sekar Parasuram
-
கொடைவள்ளல்
தமிழ் நாட்டு மக்களிடையே நடிகர் திலகம் ஒரு சிக்கனகாரர் காசிலே மகா கெட்டி என்பது போன்ற ப்று தவறான கருத்து எப்படியோ ஏற்பட்டுவிட்டது.ஆனால் உண்மை என்ன்வென்றால் நடிகர்திலகம் வலதுகை கொடுப்பது இடது கைக்குதெரியாமல் வாரி வாரி கொடுத்த வள்ளல்.பாத்திரமறிந்து பிச்சை இடுபவர்.செய்த தர்மத்தை விளம்பரம் செய்யாதவர்.கொடுத்த வாக்கை மீறாதவர் என்பதுதான்.
1952ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிக்க வந்த கணேசன் 1960ம் ஆண்டுக்குள்லேயே சுமார் 20லட்ச ரூ பாய்க்கு மேல் பல்வேறு பொது பணிகளுக்கு வாரி வழங்கி இருக்கிறார்என்றால் கடந்த 31ஆண்டுகளில் அவர் எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்பதை கணக்கிட முடியுமா?
1959ஏப்ரல் மாதம் 28ம் தேதியிட்ட கவிதை ஏடாம் குயில் இதழில்
பாவேந்தர் பாரதிதாசன் சிவாஜியின் கொடை தன்மையை பாராட்டி எழுதிய பாடல் வருமாறு
பள்ளியில் மானவர்கள்
பகலுண வுன்னும் வண்ணம்
அள்ளி ஓர் இலக்கம் ஈந்த
அண்ணல் கணேசர் இந்நாள் புள்ளி னம் பாடும் சோலை மதுரையின் போடி தன்னில்
உள்ளதோர் தொழிற் பயிற்சி பள்ளிக்கும் ஈந்து வந்தார்
இன்றீந்த வெண்பொற் காசோ இரண்டரை இலக்கமாகும்
நன்றிந்த உலகு
மெச்சும் நடிப்பின்நற் நிறத்தால் பெற்ற
குன்றொத்தபெருஞ்செல்வத்தை குவித்தீந்த கணேசனார் போல் என்றெந்த நடிகர் ஈந்தார்?
இப்புகழ்யாவற் பெற்றார்
இந்த பாடலில் லேயே சுமார் மூன்றரை லட்ச ரூபாய் நன்கொடைக்கு கணக்கு வரூ கிறதல்லவா
தமிழ்வாணன் புத்தகத்தில் இருந்து
Thanks Vijaya Raj Kumar
-
14-05-2020
வியாழக்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1)என் தம்பி -........................................ காலை 7:00 மணிக்கு ஜெயா மூவியில்,
2)காத்தவராயன் -.............................. காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
3)தெனாலிராமன் -............................ காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
4)என்னைப் போல் ஒருவன் -.......... பிற்பகல் 1:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்,
5)பார்த்தால் பசி தீரும் -................... மாலை 4 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்,
6)கலாட்டா கல்யாணம் -................. இரவு 10:30 க்கு பாலிமர் டிவியில்,
Thanks Sekar Parasuram
-
-
-
-
-
-
15-05-2020
வெள்ளிக்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!,
நீதிபதி -.................................................. ........................... காலை 6:30 க்கு விஜய் சூப்பர் சேனலில்,
முதல் மரியாதை -.................................................. ........ காலை 10 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்,
கந்தன் கருணை -.................................................. ........ காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்,
என் ஆசை ராசாவே -.................................................. .. பிற்பகல் 1:00 மணிக்கு K டிவியில்,
அவன் ஒரு சரித்திரம் -.................................................. பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிவியில்,
Thanks Sekar Parasuram