Just now finished watching the movie. Wonderful performance of our beloved MGR.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Printable View
Just now finished watching the movie. Wonderful performance of our beloved MGR.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
நானும் தற்போது தான் அபிமன்யு படத்தைப் பார்த்து ரசித்தேன். 1988ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போது தான் இப்படத்தை முதல் முறையாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பிரமித்துப் போனோம். என் தந்தையும் மற்றவர்கள் நடிப்பினையும் மக்கள் திலகத்தின் நடிப்பினையும் ஒப்பிட்டு இன்றைக்கும் பொருந்தும் வண்ணம் இயல்பாய் இருப்பது மக்கள் திலகம் அவர்களது நடிப்பு மட்டுமே என்பதைச் சுட்டிக் காட்டினார். அது மறுக்க முடியாத உண்மை என்பதை படம் பார்க்கும் யாவரும் உணரலாம். மற்ற பாத்திரங்களின் நடிப்பு அந்தக் காலப் படம் என்பதை நினைவூட்டினாலும் மக்கள் திலகத்தின் நடிப்பு மாத்திரம் தனித்துவமாக இயல்பாக இன்றைக்கும் பொருந்தும் வண்ணம் உள்ளது சிறப்பு. மேலும் மகனை இழந்து கலங்கும் காட்சியிலும் அவரது நடிப்பு மிளிர்கிறது. ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளது போல மக்கள் திலகம் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்னமாகவே இப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் வெளிவந்த படம் என்பது நன்றாகத் தெரிகிறது. எம்.ஜி.சக்கரபாணி , நம்பியார் போன்றோர் வரும் காட்சிகள் அதிகமாக இருந்தும் மக்கள் திலகம் வரும் காட்சிகள் குறைவாக உள்ளது இதற்கு ஓர் உதாரணம். ஆனால் வரும் காட்சிகளில் வளமான நடிப்பைத் தந்து நம்மை பிரமிக்க வைக்கிறார் மக்கள் திலகம் . 1948ல் இப்படி ஓர் நடிப்பா?
அபிமன்யு படக் காட்சிகளை பதிவு செய்த சைலேஷ்பாசு சார், விவரங்களைப் பதிவு செய்த செல்வகுமார் சார், அப்படம் முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட போவதை முன்கூட்டியே அறிவித்த வினோத் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
https://www.youtube.com/watch?v=6nA1lAGzICQ
ABHIMANYU-2
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த அபிமன்யு படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பார்திபன் வேடம்.
சகுனியின் சூழ்ச்சியால் போரித் ஜெயத்ரதன் என்பவனால் அபிமன்யு கொல்லப்படுகிறான். அன்று போர்க்களத்தில் பார்திபனை இல்லாமல் செய்துவிடுகிறான் கண்ணன் தனது கபட நாடகம் ஒன்றினால்.
அன்றிரவு பாசறையில் பாண்டவர் நால்வரும் அடுத்த நாள் போருக்கு நடக்க வேண்டியவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். அபிமன்யூவைப் போருக்கு அனுப்பி அவன் மரணத்திற்கு காரணமாகிவிட்ட நால்வரும், தந்தை பார்த்திபனுக்கு எப்படி சமாதானம் கூறுவது என்று கலங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் பார்த்திபன் அங்கு வருகிறான். மகனைக் கொன்றவனைப் பழிவாங்குவதாகச் சூளுரைக்கிறான். இது தான் காட்சி.
எம்ஜி.ஆர் அவர்கள் வசனத்தைப் படித்துப் பார்த்துவிட்டு ஓர் அபிப்பிராயம் கூறினார்கள். மாண்டு போன மைந்தனின் சடலத்தை இரு கைகளிலும் ஏந்தி துயர் கொண்ட நெஞ்சோடு சகோதர்களை நோக்கி பாசறைக்குள் நுழைகிறான் பார்த்திபன். உள்ளம் வெதும்ப கண்கள் நீர் சொரிய ஆறாத்துயர் கலந்த ஆத்திரத்தோடு நியாயம் கேட்கிறான். சற்றைக்கெல்லாம் சோகம் மாறி வீராவேசம் கொண்டு மறுநாள் போரில் சூரியன் சாய்வதற்குள் ஜெயத்ரதனைப் பழிதீர்ப்பதாகச் சபதம் செய்கிறான். காட்சியை இப்படி அமைத்தால் நலமாக இருக்குமே, அவ்வாறெழுதி வசனம் அமையுங்களேன் என்று அபிப்ராயம் கூறினார்கள். அவ்வாறே எழுதினேன். அவ்வாறே படமாக்கப்பட்டது. மகனைக் கையில் ஏந்தி வரும் ஐடியா அவருடையது. அபிமன்யு படத்தில் உணர்ச்சிமிக்க கட்டங்களில் இந்தக் காட்சியும் ஒன்று.
அதாவது பாண்டவ சகோதரர்கள் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருந்த வெறும் வசனக்காட்சி உணர்ச்சி நிரம்பிய உயிரோட்மான காட்சியாக மாறியது. அது எம்.ஜி.ஆரின் நாடக அனுபவத்தில் தோன்றிய எண்ணமா? சாதாரண காட்சிகள் கூட திரைக்காட்சியாக எப்படி உயிர்பெற முடியும் என்ற திரைப்பட (Cinematic) கற்பனையா? புதிர்தான். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி அபிப்ராயம் கூறியதைத் தலையீடு என்று எப்படிச் சொல்ல முடியும்?
15-12-1987ஆம் ஆண்டு சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் பிரபல இயக்குநரும் (அபிமன்யு பட இயக்குநரும் இவர்தான்), முன்னாள் திரைப்படக்கல்லூரி முதல்வருமான ஏ.எஸ்.ஏ. சாமி அவர்கள் எழுதிய நானும் மூன்று முதல்வர்களும் என்ற கட்டுரைத் தொடரிலிருந்து ....
பொன்மனச்செம்மல் திரி துவங்கிய நல்ல நேரம் . மக்கள் திலகத்தின் 65 ஆண்டுகள் முன்பு வந்த படமான அபிமன்யு படத்தை முரசு தொலைகாட்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது .
மக்கள் திலகத்தின் இளம் தோற்றம் - துடிப்பான நடிப்பு - வளமான குரல் -எல்லாமே அருமை . ரசித்து படத்தை பார்த்தேன் .
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 18வது திரைப்படம் ராஜமுக்தி பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. இத்திரைப்படம் வெளியான தேதி : 09-10-1948
2. தயாரிப்பு : எம். கே. தியாகராஜ பாகவதரின் "நரேந்திர பிக்சர்ஸ்" நிறுவனம்
3. இயக்குனர் : ராஜா சந்திரசேகர்
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : சேனாதிபதி
5. பாடல்கள் : பாபநாசம் சிவன்
6. கதை & ஸினாரியோ : ராஜா சந்திரசேகர்
7. வசனம் : புதுமைப்பித்தன், நாஞ்சில் நாடு டி. என். ராஜப்பா
8. இசை : சி. ஆர். சுப்பராம்
9. கதாநாயகன் மற்றும் நாயகி : : எம். கே. தியாகராஜ பாகவதர் - பி. பானுமதி
10.. இதர நடிக நடிகையர் : வி. என். ஜானகி, எம். ஜி. சக்கரபாணி, பி.எஸ் வீரப்பா, சி. டி. ராஜகாந்தம்,
இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 18வது திரைப்படம் "ராஜமுக்தி" கதைச்சுருக்கம் ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதாச்சாரம்
===========
வைஜயந்தி மன்னன் ராஜேந்திர வர்மன், தன வம்ஸ விரோதியான மகேந்திர வர்மனோடு ஆறு வருடமாக தொடர்ந்து போரிடுகிறான். அவன் மனைவி மிருணாளினி கணவன் வெற்றியுடன் சீக்கிரம் திரும்ப வேண்டுமென்று திருமாலை துதிக்கிறாள். மந்திரியும், ராஜகுருவும், மன்னன் வராமலிருக்க போர் நீடிக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள். ஆனால் வேந்தன் வெற்றியுடன் சேனாதிபதி அமரசிம்மனோடு நாட்டிற்கு வருகிறான். வரவேற்பின் போது மந்திரியின் தங்கை கன்னிகா சேனாதிபதியிடம் உள்ளத்தை பறிகொடுக்கிறாள். தனிமையில் காதல் பிக்ஷை கேட்டு, மறுக்கப்படுகிறாள். இதை அறிந்த மந்திரி தங்கையின் அசட்டுத்தனத்தை இடித்துக் காட்டி, மன்னனை மயக்கி ஓர் மைந்தனை பெற்று விட்டால், "மகுடம் உனக்கு, மஹாராணி நீ" என்று தூபமிடுகிறான்.
கன்னிகா உள்ளம் களைந்து தன காதலை மன்னர் பக்கம் திருப்புகிறாள். சந்தர்ப்பம் வாய்க்கிறது. ஒரு நாள் இரவு உப்பரிகையில் வேந்தன் தனியே இருப்பதை அறிந்து, கனி வர்க்கங்களை எடுத்துக் கொண்டு கன்னிகா அங்கு செல்ல இரூவருக்கும் உரையாடல் நடக்கிறது. அவளுடைய சிற்றின்பம் பற்றிய கேள்விகளுக்கு வேந்தன் பேரின்பப் பொருளில் விடை கொடுத்தவாறே பழத்தை புசித்து தோலை வெளியே எறிகிறார். எதிர்பாராமல் அங்கு வந்த ஒரு முதியவர், எறியப்பட்ட தோல்களை எடுத்து தின்று பசியாறுகிறார். அந்தபுரத்தருகில் அன்னியனைக் கண்ட, ரஜனி என்ற பணிப்பெண், கூச்சலிடவே காவலர்களால் முதியவர் பிடிபட்டு கசையால் அடிபடுகிறார். அவர்கள் அடிக்க அடிக்க, அவர் சிரிக்கிறார் சிரிப்பின் எதிரொலி அரண்மனையை கலக்குகிறது. இந்த சிரிப்பினை கேட்ட அரசன் திடுக்கிட்டு வந்து பார்க்க, அந்த முதியவர் சாது என அறிந்து கசையால் அடிபடுவதை தடுத்து அடுத்த நாள் அரசவைக்கு அழைத்து வரும்படி ஆக்ஞையிடுகிறான் (ஆணையிடுகிறான்). இந்த சம்பவத்தால் அரசன் மன அமைதியின்றி சயனித்திருக்கும்போது, கன்னிகா பிரவேசித்து காதல் வலை வீசுகிறாள். ஆனால், அந்த நேரம் மிருணாளியின் எதிர்பாராத வருகையால், அரசர் கன்னிகாவின் வலையில் சிக்காமல் தப்புகிறார்.
மறுநாள் விசாரணையில், சாதுவின் ஞான மொழிகளால் மன்னன் மனம் மாறி, பொக்கிஷத்திலுள்ள பொருளையெல்லாம் தான தருமம் செய்து, கர்ப்பம் தரித்திருக்கும் தன் மனைவியையும் பிரிந்து, பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கன் அருள் பெற்று துறவியாகி ஊருராய் சுற்றி உபதேசம் செய்து வருகிறார்.
அரண்மனையில் மந்திரியின் மண்ணாசை, ராஜகுருவின் பெண்ணாசை, கன்னி காவின் கா மச்சே ட்டை யாவும் வெளியாகவே, மூவரையும் உடனே வெளியேறும்படி சேனாதிபதி கர்ஜிக்கிறார். ராஜகுரு தந்திரத்தால் தப்புகிறான். அண்ணனும் (மந்திரியும்) , தங்கையும் (கன்னிகாவும்) அப்போதே நாட்டை விட்டு புறப்பட்டு பகையரசன் மகேந்திரனை தஞ்சமடை கின்றனர். அவன் கன்னி காவை மணந்து, மைத்துனனை மந்திரியாக்குகிறான்.
ஊர் சுற்றி வந்த துறவி ராஜேந்திரன் தற்செயலாய் மகேந்திரன் நாட்டிற்கு வருகிறான். பட்டத்தரசி கன்னிகா தனது அண்ணன் உதவியால் துறவியை அரண்மனைக்கு அழைத்து உபசரிக்கிறாள்.
விதி தாண்டவமாடுகிறது. கன்னிகா மலை மேலிருந்து உருட்டப்படுகிறாள். மந்திரி பாதாளச் சிறையில் தள்ளப்படுகிறான்.
துறவி உயிரோடு கல்லறையில் புதைக்கப்படுகிறார். காரணம் என்ன ? முடிவு என்ன ? கர்ப்பிணி மிருணாளினி கதிதான் என்ன ? - என்பதை திரியுள் கண்டு ஆனந்தியுங்கள்.
இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்