-
19.06.11 அன்று மாலை சாந்தியில் நம் Hub நண்பர்களோடு மன்னவன் வந்தாண்டி படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, நான் நாட்ட திருத்தபோறேன் பாடல் காட்சியோடு தோன்றும் NT அவர்களின் முகத்தை பார்த்தவுடன் ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது, காதல் ராஜ்ஜியம் எனது பாடலுக்கு திரைக்கு வெகு அருகில் ரசிகர்களின் உற்சாக ஆட்டம் தொடர்ந்தது, பின்பு இவர்கள் நமது பங்காளிகள் பாடலுக்கு ரசிகர்களின் உற்சாகம் கட்டுபடுத்த முடியாத அளவுக்கு போனது, பாடலுக்கு முன் NT அவர்கள் ஸ்டைலாக Friends thankyou for accepting my invitation and honoring me with your extreem presents, thankyou
என்று கூறி பாடலை ஆரம்பித்தபோது அரங்கம் அலறியது.
இடைவேளை வரை வரும் தர்மராஜாவின் நக்கல் நையாண்டி கலந்த நடிப்பு சூப்பர் என்றால் இடைவேளைக்கு பின் நம்பியாரின் மாப்பிள்ளையாக வரும் NTஇன் நடிப்பு சூப்பேரோ சூப்பர், ஸ்டைலான ஸ்லிம்மான NTயை திரையில் பார்த்து எவ்வளவு நாளாயிற்று?
மொத்தத்தில் அன்று ஒரு இனிமையான நாள்.
J.Radhakrishnan
-
மன்னவன் வந்தானடி : சாந்தி : 19.6.2011 ஞாயிறு மாலை
(தொடர்ந்து நிறைகிறது)
[புகைப்படப் பதிவுகளைப் பாராட்டிய mr_karthikக்கு நன்றி !]
மன்னவனுக்கு மகிழ்ச்சிகரமான ஆராதனை
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3755.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3760.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3771.jpg
அரங்கம் நிறைந்திருந்த கண்கொள்ளாக்காட்சி
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3769.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
இன்றைய [10.7.2011 : ஞாயிறு] சென்னைப் பதிப்பு 'தினத்தந்தி'யில் வெளிவந்துள்ள விளம்பரம் :
http://i1094.photobucket.com/albums/.../GEDC3837a.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
கோயில் மாநகரில் கோமகனின் காவியங்கள்
14.7.2011 வியாழன் முதல் தினசரி 3 காட்சிகள் : ராம் : நான் வாழவைப்பேன்
15.7.2011 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள் : சென்ட்ரல் : இரு மலர்கள்
இனிப்பான செய்திகளை வழங்கிய அன்புள்ளங்கள் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கும், திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
சாதனைச் சக்கரவர்த்தியின் "கௌரவம்" : சாந்தி : விளம்பரங்கள்
நேற்றைய [14.7.2011] தினத்தந்தி சென்னைப் பதிப்பு
http://i1094.photobucket.com/albums/.../GEDC3884a.jpg
இன்றைய [15.7.2011] தினத்தந்தி சென்னைப் பதிப்பு
http://i1094.photobucket.com/albums/.../GEDC3888a.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
-
இரு மலர்கள் : வசூல் மழை
மதுரை மாநகரின் 'சென்ட்ரல்' திரையரங்கில் உலக மகா நாயகரின் "இரு மலர்கள்" முதல் நாளில் [15.7.2011 : வெள்ளி], நான்கு காட்சிகளில், ஒன்பதாயிரத்து இருநூற்று ஏழு [9,207/-] ரூபாய் வசூல் செய்துள்ளது. பழைய படங்களின் முதல் நாள் வசூலில் இது சிகர சாதனை. இது ஒரு வசூல் மழை என்று புளகாங்கிதப்படுகின்றனர் மதுரை அன்புள்ளங்கள் !
தித்திக்கும் இத்தகவல்களை உடனுக்குடன் வழங்கிய அன்புள்ளங்கள் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கும், திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும் இதயங்கனிந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
Gouravam : Shanthi Cinemaas : Chennai
Sunday [17.7.2011] Evening Show
HOUSE FULL in advance booking itself ! pammalar
-
பக்கம் பக்கமாக கதைகளை சொல்லி புரிய வைக்க முடியாத தெரிய வைக்க முடியாத விஷயங்களை, ஒரு படம் சொல்லும் என்பார்கள். அப்படி ஒரு படம் இதோ-
http://i872.photobucket.com/albums/a...board17711.jpg
சென்னை சாந்தி நிகழ்வுகளின் உணர்வுகளை தொடரும் பதிவுகளில் காண்க...
Raghavendra
-
சாந்தியில் 12 . 30 மணி காட்சிக்கு சென்ற பொது ஆச்ரியம், அதிசயம். 38 வருடங்களுக்கு முன் வந்த படம் "கெளரவம்". பலமுறை தொலை காட்சியிலும், dvd / cd ரூபத்தில் வந்த போதிலும், கிட்ட தட்ட முக்கால் வழி ரசிக பெருமக்கள் திரை அரங்கத்தில். அமைதியாக படம் பார்க்க முடிந்தது.
மீண்டும் 6 .45 மணி காட்சிக்கு சென்ற பொது, ரசிகர்களின் அலப்பறை. பாரிஸ்டர் வரும் காட்சி எல்லாம், ரசிகர்களின் அலப்பறை கேட்கவும் வேண்டுமா ? சரியாக விவரிக்க தெரியாததால் , முரளி, ராகவேந்திரா, பம்ம்ளார்யிடம் விட்டுவிடுகிறேன். நடிகர் திலகத்தின் தலை முடி முதல் கால் நகம் வரை எல்லாமே நடிக்கும் என்பார்கள். உதாரணம், முகதில் உணர்சிகளை நடிகர் திலகத்தை போல் வேறு எவரும் கொண்டுவர முடியாது. பெங்களூரில் இருந்து சென்னை வந்து, இரண்டு காட்சிகள் பார்த்து மீண்டும் பெங்களூர் திரும்பி (AC class ) ஆன செலவு, ஒரு சீன்கே நிகர் ஆகிவிட்டது. அந்த சீன் - மேஜர் இரண்டாம் முறையாக நடிகர் திலகத்தை (பாரிஸ்டர்) காலை பிடித்து காப்பாற்றுமாறு கேட்பார். அப்பொழுது , செந்தாமரை இட் இஸ் டூ லேட் சார் என்று சொல்ல, நடிகர் திலகம் வாயில் பைப்பை வைத்து கொண்டு, பாதி வாயின் முலம் புகையை வெளியேற்றி, இரண்டு கண்களின் கிழே உள்ள கண்ணங்களின் சதையை மட்டும் அசைக்கும் பொது, செலவு செய்த பணம் எல்லாம் இந்த ஒரு சீன்கே சரியாகி விட்டது.
படம் முடிந்து வெளியே வரும் பொது, சிலர் பேசியது. "இன்று ரசிகர்களுடன் பார்ப்பது ஒரு அனுபவம், மீண்டும் நாளை (18 ஆம் தேதி) வந்து படம் பார்க்க வேண்டும் - ஒவ்வொரு சீன் ரசித்து பார்க்க".
HUB நண்பர்களான , முரளி, ராகவேந்திரா, பம்மலார், ராதா, சேகர், பெங்களூரில் இருந்து வந்த ரசிகர்களையும் மற்றும் சில நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இல்லாததால், உரையாட முடியவில்லை. அடுத்த முறை இதற்காகவே நேரம் ஒதுக்க முயற்சி செய்கிறேன்.
abkhlabhi