''உலகம் சுற்றும் வாலிபன் ''
1970 ............நினைவலைகள் ......
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் முதல் அறிவிப்பு
''உலகம் சுற்றும் தமிழன் ''
இசை - குன்னக்குடி வைத்தியநாதன்
இயக்கம் - ப . நீலகண்டன் .
பின்னர் ஏற்பட்ட மாற்றம்
''உலகம் சுற்றும் வாலிபன் ''
இசை - எம்,எஸ், விஸ்வநாதன் .
முதலில் ஜெயலலிதா நடிப்பார் என்றும் லக்ஷ்மி என்றும் , ராஜஸ்ரீ அல்லது வேறு நடிகைகள் நடிக்க கூடும் என்ற
பல செய்திகள் வந்த வண்ணம் இருந்த நேரத்தில் மஞ்சுளா - லதா - சந்திர கலா என்ற மூன்று கதா நாயகிகள் நடிக்கிறார்கள் என்பதை மக்கள் திலகம் உறுதி செய்தார் .
மெல்லிசை மன்னரின் கடுமையான உழைப்பில்
டி .எம் எஸ்
எஸ்.பி .பாலசுப்ரமணியம்
ஜேசுதாஸ்
சுசீலா
ஈஸ்வரி
ஜானகி
பிரபல பாடலாசிரியர்கள் கண்ணதாசன் - வாலி - புலமைபித்தன் வரிகளில்
இனிய குரல்களில் 10 பாடல்கள பதிவு செய்யப்பட்டது .
1970 செப்டம்பர் மாதம் ''எங்கள் தங்கம் '' படத்தை முடித்து விட்டு உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காகமக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய குழுவினர்களோடு கீழ் திசை நாடுகள் பயணம் செய்வதை முன்னிட்டு தினத்தந்தி - முரசொலியில் வாழ்த்துக்கள் விளம்பரம் வந்தது . பிரபல தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை விளம்பரமாக தந்தார்கள் .
தொடரும் ...
உலகம் சுற்றும் வாலிபன் - நினைவலைகள்
உலகம் சுற்றும் வாலிபன் - நினைவலைகள் ... தொடர்ச்சி ..
மக்கள் திலகம் தன்னுடைய குழுவினருடன் வெளிநாடுகளில் வெற்றிகரமாக படபிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய அவருக்கு மாபெரும் வரவேற்பு தரப்பட்டது . வெளிநாடு செல்லும் முன்கொடுத்த வழி அனுப்பு விழாவை விட வரவேற்பு விழா சிறப்பாக நடந்தது .
உலகம் சுற்றும் வாலிபன் - படக்காட்சிகள் -ஷூட்டிங் நிலவரம் ,பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் - கதை பற்றிய தகவல்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டது . அதில் நடித்தவர்கள் - தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒருவர் கூட வாலிபன் பற்றி ஒரு வார்த்தை தெரிவிக்கவில்லை
1971ல் மக்கள் திலகம் அவர்கள் பொம்மை சினிமா இதழில் ''திரைக்கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் '' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினார். பொம்மை இதழ் மூலம் ரசிகர்கள்உலகம் சுற்றும் வாலிபன் - வெளிநாட்டில் எடுக்கப்பட்ட நிழற் படங்கள் - படமாக்கப்பட்ட விதம் பற்றிய அனுபவங்கள் அறிந்தனர் .
1971 மத்தியில் இரண்டு பாடல்கள் முதல் முறையாக இசைத்தட்டு விற்பனைக்கு வந்தது .
1. சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
2. லில்லி மலருக்கு கொண்டாட்டம் .....
1971 தீபாவளிக்கு உலகம் சுற்றும் வாலிபன் திரைக்கு வருவதாக இருந்தது . பின்னர் மாறி வந்தஅரசியல் சூழ் நிலையில் 1971 நாடாளுமன்ற - சட்ட மன்ற தேர்தல்கள் - ரிக்ஷாக்காரன் மாபெரும்வெற்றி தொடர்ந்து நீரும் நெருப்பும் வெளியீடு .
அரசியல் மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத சோதனைகள் போன்ற நெருக்கடிகளால் உலகம் சுற்றும் வாலிபன் - தயாரிப்பில் தேக்கம் ஏற்பட்டு 1971ல் வரமுடியாமல் , 1972லும் திரைக்கு வரமுடியாமல் 1973ல் திரைக்கு வந்தது .
இடைப்பட்ட நேரத்தில் கிளம்பிய வதந்திகள்
எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் - நெகடிவ் சேதமடைந்து விட்டது .
எக்காரணம் முன்னிட்டும் படம் திரைக்கு வராது .எம்ஜிஆர் இந்த படத்தை கை விட்டு விட்டார் .
1972 அக்டோபரில் மக்கள் திலகம் அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவான நேரத்தில் மிகவும் பொறுமையுடன் உலகம் சுற்றும் வாலிபன் - படத்தின் அத்தனை செய்திகளையும் ரகசியமாக வைத்திருந்தார் . ஒருபக்கம் தொடர்ந்து புதிய படங்கள் ஒப்பந்தம் .மறு பக்கம் புதிய இயக்கத்தின் வளர்ச்சியில் ஈடுபாடு . மத்தியில் ஆளும் கட்சியின் அராஜகம்எல்லாவற்றையும் இன்முகத்துடன் எதிர்கொண்டு உலகம் சுற்றும் வாலிபனை 11.5.1973 அன்றுதிரைக்கு வர ஏற்பாடுகள் செய்து அதிலும் மாபெரும் வெற்றி கண்டார் .
தொடரும் ....