-
என்ன மாதிரியான கடின உழைப்பு: பாகுபலி குறித்து ஷாரூக் கான் ஆச்சரியம் - August - Tamil HINDU
எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிரம்மாண்ட தயாரிப்பான பாகுபலி படத்தை பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தன்னுடைய ‘தில்வாலே’ படப்பிடிப்புக்காக பல்கேரியா பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ஷாரூக் தனது ட்விட்டரில் பாகுபலி படத்தை “பெரிய அகத்தூண்டுதல்” என்று வர்ணித்துள்ளார்.
“பாகுபலி! ஒரு படத்துக்காக என்ன மாதிரியான கடின உழைப்பு; இந்தப் படத்தின் உருவாக்கத்தில் உள்ள அனைவருக்கும் எனக்குள் ஏற்படுத்திய தூண்டுதலுக்காக நன்றிகள். தாவ முயற்சி செய்தால்தான் வானுயரத்தை எட்ட முடியும்” என்று ட்வீட் செய்துள்ளார் ஷாரூக்.
பாகுபலியின் அடுத்த பாகம் 2016-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Is Suriya the surprise element of 'Baahubali 2'?
https://igmedia.blob.core.windows.ne...aahubali_m.jpg
With only a few weeks to go before the shooting to commence for S.S. Rajamouli’s ‘Baahubali – The Conclusion’ there is a lot of curiosity drummed up for this mega sequel. While the principle cast Prabhas, Rana Daggubatti, Anushka, Tamannaah, Ramya Krishnan, Sathyaraj, Nasser will have more to do there are also going to be some major additions to the cast as it has now become a pan Indian film.
One bit of news that keeps surfacing time and again is the possible appearance of Suriya in a very important role in the film. Incidents that support this is Rajamouli has expressed his desire to work with Suriya in many interviews and likewise on the occasion of the audio release function of ‘Baahubali’ Suriya openly asked Rajamouli for a small part in the sequel. The suspense regarding Suriya’s involvement in the mega ‘Baahubali 2’ will only be broken as time goes on.
Looks like Suriya wants to be part of it ...
-
It is a very good business tactic too. If Surya is involved, then they can get a bigger BO collection in Tamil version of BB-2. As nGnavelraaja was the distributor of baahubali, it all adds up well in this "story"! :)
-
'பாகுபலி' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜமவுலி
ஹாலிவுட் படங்களின் பிரமாண்டங்களை மட்டுமே பார்த்து ரசித்த நமது ரசிகர்களுக்கு ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை கொடுத்ததோடு, உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் இயக்கிய இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'பாகுபலி' உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஆரம்பகட்ட பணிகளில் எஸ்.எஸ்.ராஜமவுலி தீவிரமாக உள்ளார்.
இந்நிலையில் 'பாகுபலி' இரண்டாம் பாகத்தை அடுத்து 'பாகுபலி' மூன்றாம் பாகத்தை இயக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.ராஜமவுலி தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
'பாகுபலி 3' படம் குறித்து பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த படத்தை இரண்டாம் பாகத்திற்கு மேல் கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. எனவே 'பாகுபலி' மூன்றாம் பாகம் குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார். இந்த விளக்கத்தின் மூலம் 'பாகுபலி' மூன்றாம் பாகம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
-
பாகுபலி கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு... பிரபாஸ் அப்டேட் வெர்ஷன்?
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் மெகா ஹிட்டான படம் பாகுபலி. படத்திற்கு கிடைத்த வரவேற்பால் ஹீரோ பிரபாஸுக்கு தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்புகள் கிடைக்கத் துவங்கிவிட்டன.
தமிழில் வரும் பிரபல கார் விளம்பரத்தில் கூட பிரபாஸ் தலை காட்டுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ராணாவும் ஒரு இண்டர்நெட் குறித்த விளம்பரத்தில் வருகிறார்.
இந்நிலையில் மிகப்பெரிய வாய்ப்பாக பாலிவுட் வசூல் புகழ் பட சீரீஸ் தூம் படத்தின் 4ம் பாகத்தில் நடிக்க பிராபாஸிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தூம் 4ல் ஹ்ருதிக் ரோஷன் , அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கிறார்கள் என்ற செய்தியே தூம் பட ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தி. அதே சமயம் ஹ்ருத்திக் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே வருவதாகவும், அமிதாப் ஹீரோவாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் அபிஷேக் பச்சன் கண்டிப்பாக போலீஸாக வருவார். என்ற நிலையில் பிரபாஸை வில்லனாக நடிக்கக் கேட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இன்னும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம் படத்தின் ஹீரோதான் கதைப்படி வில்லன் என்பதால் பிரபாஸ் தான் ஆன்டிஹீரோவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தூம் 4ல் ஒரு வேளை அமிதாப் தான் ஆன்டி ஹீரோ எனில் படம் கண்டிப்பாக சான் கானரி நடித்து வெளியான எண்ட்ரேப்மெண்ட் பாணியில் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
'பாகுபலி 2'-வில் கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மாற்றம்
http://tamil.thehindu.com/multimedia...2_2600125f.jpg
ராஜமெளலி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'பாகுபலி 2' படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக கமலக்கண்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்து, தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கிய இப்படத்தை, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூலையும் வாரிக் குவித்தது.
'பாகுபலி' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை 'எந்திரன்', 'ஐ' உள்ளிட்ட படங்களுக்கு பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் மோகன் மேற்பார்வையில் காட்சிப்படுத்தினார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 'பாகுபலி 2' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மேற்பார்வையாளராக கமலக்கண்ணன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக 'பாகுபலி' படத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "'மகதீரா', 'ஈகா' உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணிபுரிந்த கமலக்கண்ணன் 'பாகுபலி 2' படத்திற்கு பணியாற்ற இருக்கிறார். இவர் பல்வேறு மாநில விருதுகளும், கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இரண்டு முறை தேசிய விருது வென்றிருப்பது நினைவுகூரத்தக்கது" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
'எந்திரன் 2' படத்துக்காக ஸ்ரீனிவாஸ் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதால், இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
-
இந்திய அளவில் 2015-ன் கூகுள் தேடலில் 'பாகுபலி' சாதனை!
http://tamil.thehindu.com/multimedia...i_2659218f.jpg
2015ம் ஆண்டுக்கான கூகுள் இந்தியாவின் மொத்த தேடலில் 'பாகுபலி' இரண்டாம் இடத்தையும், படங்களின் பெயர் தேடலில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறது.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. மரகதமணி இசையமைத்த அப்படத்துக்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இப்படம் இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது. 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் துவங்கப்பட்டு, விரைவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், 2015 ஆண்டுக்கான கூகுள் தேடலிலும் 'பாகுபலி' சாதனை படைத்திருக்கிறது. இத்தகவலை 'பாகுபலி' படத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
2015 ஆண்டுக்கான மொத்த கூகுள் தேடலில் 'பாகுபலி' இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. அதுமட்டுமன்றி கூகுள் தேடலின் படங்களின் பிரிவில் 'பாகுபலி' முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.
இதே போன்று 2015ம் ஆண்டுக்கான ஃபேஸ்புக் தேடலில் 4ம் இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Baahubali @BaahubaliMovie 1 hour ago
#Baahubali (Telugu) Pacchaa Bottesina Video Song has garnered nearly 1.5 Crore views on Youtube. A BIG Thanks to all
https://pbs.twimg.com/media/CXOnhfTUMAAvXwQ.jpg
-
Watch #Baahubali, the greatest battle in Indian Cinema, today at 8pm, only on Sony MAX HD.
https://pbs.twimg.com/media/CXPMCJ3UAAQf0BY.jpg