Quote:
கவரி மான்கள்
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `கவரி மான்கள்' தொடர் 100-வது எபிசோடை தாண்டியிருக்கிறது.
தொடர் இனி எப்படிப்போகும்? இயக்குனர் பிரபுநேபாலைக் கேட்டால்...
"வெங்கடேஷின் பாசமான குடும்பத்தில் உறவுகள் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த நேரத்தில் விஜி தான் மருமகளாக வரவேண்டுமென சாரதா பிடிவாதம் பிடிக்கிறாள். மாதவியை சந்தியா அருணுக்கு மனைவியாக்க நினைக்க, சாரதா இதை எதிர்க்க, விளைவு மாமியார்-மருமகள் மோதலில் முடிகிறது.
முத்துப்பாண்டி விரித்த சதி வலையில் விழுந்த விஜி, அவர் மகன் விக்ரமனால் கெடுக்கப்படுகிறாள். இதனால் தன் தங்கையாக இருந்தாலும், பிள்ளைபோல் கருதும் மச்சினன் அருணுக்கு விஜி வேண்டாம் என்று சந்தியா சொல்ல, குடும்பத்தில் பிளவு தொடங்குகிறது.
மறுபடியும் மாதவியே அருணுக்கு மனைவியாகட்டும் என்ற பேச்சு வர, விவேக் - காயத்ரி, மாதவியிடம் போய் பேசுகிறார்கள்.
சந்தியாவை வெறுக்கும் மாதவி இதை மறுப்பாளா? இல்லை பழி உணர்ச்சியில் ஏற்றுக்கொள்வாளா? மாதவி மருமகளாக வந்தால் சாரதாவால் ஜீரணிக்க முடியுமா?
சாரதா - சந்தியா மோதல் என்னவாகும்?
விஜியை கெடுத்துவிட்டு, அவளைக்காப்பாற்றி நாடகமாடும் முத்துப்பாண்டியின் மகன் விக்ரமின் அடுத்தகட்ட நாடகம் என்ன?
முற்றிலும் எதிர்பாராத திடுக்கிடும் திருப்பங்களை, முடிச்சுகளை, உணர்வுகளை சித்தரிக்கும் மாறுபட்ட தொடர் இது'' என்கிறார், தொடரை இயக்கும் பிரபுநேபால்.
நடிகர்கள்: சித்தாரா, உமா, நிர்மல், பிர்லா, ராஜா, சுஹாசினி, வினோத்ராஜ். திரைக்கதை: தேவிபாலா. தயாரிப்பு - இயக்கம் -பிரபுநேபால்.