Originally Posted by venkkiram
ஹேராம் படைப்பு ஒரு குறைப்பிரசவமாக எனக்குத் தோன்றுவதின் காரணங்களில்
முதன்மையான ஒன்று அதன் ஒலிப்பதிவு. நிறைய இடங்களில் வசனம் அளவுக்கும் மீறி குறைவானதாக இருந்தது. பின்னணி இசையும் சில இடங்களில் (உதாரணம் : சாகேத்ராமும் அம்ஜத்தும் சோடா ஃபாக்டரி சண்டையில் நடத்தும் விவாதம்) வசனங்களின் ஒலியை குறைத்துவிட்டது.
இரண்டாவதாது.. பன்மொழித் திறமையுள்ள மக்கள் மட்டுமே புரிந்துக்கொள்ளக் கூடிய வகையில் ஒரு படைப்பினை வழங்கியிருப்பது..
மூன்றாவது..எவ்வளவுதான் படைப்பாளி என்ற கமல் ஹேராம் படத்தில் வானளவு உயர்ந்திருந்தாலும், சரியான முறையில் மக்களுக்கு எடுத்துச்செல்ல தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது. காந்தியத்தை, அஹிம்சையை வலியுறுத்தும் படைப்பாகத் தோன்றினாலும், படைப்பில் முக்கால் வாசி நேரத்தை கமல் செலவிட்டிருப்பது பயங்கரவாத உணர்வு எப்படி தோன்றுகிறது, எப்படி விதை, செடி, மரமென தழைக்கிறது என்பதையே! இறுத்திக்காட்சிகளில் சாகேத் அம்ஜத் மூலமாக காந்தியத்திற்கு மாற ஆரம்பிக்கும் தருணங்கள் என ஆரம்பித்து பின்வரும் எல்லாக் காட்சிகளும் துரித கதியில் செல்வது மனதில் ஒட்டவில்லை.