உங்கள் ஆவலைப்பூர்த்தி செய்ய இதோ "இமயம்".Quote:
Originally Posted by rajeshkrv
(ஆனால் நிஜமாக உங்கள் ஆவலைப்பூர்த்தி செய்யுமா என்பது தெரியாது).
Printable View
உங்கள் ஆவலைப்பூர்த்தி செய்ய இதோ "இமயம்".Quote:
Originally Posted by rajeshkrv
(ஆனால் நிஜமாக உங்கள் ஆவலைப்பூர்த்தி செய்யுமா என்பது தெரியாது).
"இமயம்" (1979)
'அந்தமான் காதலி' திரைப்படம் பல்வேறு இடங்களில் 100 நாட்களைக்கடந்து ஓடி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, முக்தா பிலிம்ஸார் தயாரித்த வண்ணப்படம் 'இமயம்', நடிகர்திலகத்தின் 203-வது படமாக வெளியானது. 1979 ஜனவரியில் வெளியான நடிகர்திலகத்தின் 200-வது படம் திரிசூலம் அதுவரை இல்லாத சாதனையாக தமிழகமெங்கும் எட்டு அரங்குகளில் வெள்ளி விழாவைப்பூர்த்தி செய்ய, 176-வது நாளன்று இமயம் வெளியானது. இதனிடையே கவரிமான், நல்லதொரு குடும்பம் ஆகிய படங்கள் வெளிவந்தன. படத்தின் வெளிப்புறக்காட்சிகள் அனைத்தும் நேபாள நாட்டின் எழில்கொஞ்சும் இடங்களில் படமாக்கப் பட்டிருந்தன. முடிந்தவரையில் இன்டோர் காட்சிகளைக் குறைத்து, அவுட்டோரிலேயே படமாக்கப்பட்டிருததால், படம் முழுதும் கண்களுக்கு விருந்து படைத்தன. இமயமலைச்சாரல் நம் கண்களையும் இதயத்தையும் குளுமையாக்கின.
தொழிலதிபர் கங்காதரன் (நடிகர்திலகம்) எங்கும் எதிலும் சுதந்திரத்தை விரும்புபவர். தன் மனைவி காவேரி (ஸ்ரீவித்யா) வின் தங்கை சிந்து (மீரா)வை தன் பொறுப்பில் வளர்த்து வருகிறார். இதனிடையே கங்காதரனின் பார்ட்னர் வைகை அம்பலத்தின் (தேங்காய் சீனிவாசன்) தம்பி கிருஷ்ணாவை (ஜெய்கணேஷ்) சிந்து காதலிப்பதை அறிந்து, சுதந்திர எண்ணத்துடன் அதை கங்காதரன் அனுமதிக்கிறார், கிருஷ்ணாவின் உண்மை சொரூபம் அறியாமல். ஏற்கெனவே கங்காதரன் அலுவலகத்தில் வேலை செய்யும் நர்மதாவுடன்(ரீனா) கிருஷ்ணா வரம்பு மீறிப்பழகியதன் விளைவாக, நர்மதாவுக்கு யமுனா என்ற நான்கு வயதுப் பையன் இருக்கிறான். இது கிருஷ்ணாவுக்கும், நர்மதாவுக்கும் மட்டுமே தெரியும். காலப்போக்கில் நர்மதாவின் அண்ணன் ஹூக்ளிக்கும் (கே.கண்ணன்) இது தெரிய வருகிறது. அவன் நேரே சென்று கிருஷ்ணாவின் சட்டையைப்பிடித்து உலுக்குவதை விடுத்து, தங்கையிடம் சொல்லி விடுகதை போடச்சொல்லிக் கொண்டிருக்கிறான். (மெத்தப்படித்த பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், இதுபோன்ற கோமாளித்தனங்களில் கைதேர்ந்தவர்).
ஒருகட்டத்தில், கிருஷ்ணா தன்னை விட்டு விட்டு, சிந்துவை திருமணம் செய்துகொள்ளப்போவதை அறிந்ததும், தன்னை ஏற்ற்க்கொள்ளும்படி நர்மதா மன்றாட அவன் மறுத்து விலகியே போய்விடுகிறான். மனமுடைந்துபோன நர்மதா, தன்னை கிருஷ்ணா ஏமாற்றியதை ஒரு கடிதத்தில் எழுதி தன் மகனிடம் கொடுத்து கங்காதரனிடம் கொடுக்கும்படி சொல்லி விட்டு, அரளிவிதையைத் தின்று இறந்துபோகிறாள். கடிதத்தைப் படித்த கங்காதரன், கிருஷ்ணாவின் கடந்தகால பித்தலாட்டங்களை அறிந்து அதிர்ந்து போவதுடன், அவனிடமிருந்து தன் மைத்துனி சிந்துவைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். அவளோ காதல் வேகம் கண்ணை மறைக்க, மாமாவின் எச்சரிக்கையை அலட்சியம் செய்கிறாள். அவருடைய கட்டுப்பாடுகள் அவளுக்கு வெறுப்பைத் தர, அவரை ஒரு எதிரியாக நினைக்கத்துவங்குகிறாள். மேஜராகும் நாளை எதிர்பார்த்திருந்து, வீட்டை விட்டு வெளியேறி கிருஷ்ணாவிடம் போய்விடுகிறாள். அக்கா காவேரி தடுக்க முயன்றும் அவள் நிற்கவில்லை. தாயை இழந்து, தந்தையாலும் ஏற்றுக்கொள்ளப்படாத சிறுவன் யமுனாவை தன் பொறுப்பில் வளர்க்கிறார் கங்காதரன்.
தன் தம்பி ஒரு தங்கக்கம்பி என்று நினைக்கும் வைகை அம்பலமும், கங்காதரனின் கூற்றை ஏற்கத்தயாராயில்லை. கிருஷ்ணா ஒரு அயோக்கியன் என்று நிரூபிக்க கங்காதரன் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கிருஷ்ணாவின் சாதுரியத்தால் முறியடிக்கப்படுகின்றன. போலீஸாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான நர்மதாவின் அண்ணன் ஹூக்ளியால், தைரியமாக வெளியில் வந்து உண்மையை நிரூபிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் சிந்து தன்னையே கிருஷ்ணாவிடம் தர முயற்சிக்கும் போது, தன் அண்ணனும், கங்காதரன், காவேரி ஆகியோரும் வருவதைப்பார்த்துவிட்டு, யோக்கியன்போல நடித்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றுவிடுகிறான். கங்காதரனின் அனுமதியில்லாமலேயே கிருஷ்ணா, சிந்து திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. தன் தங்கையின் சாவுக்கு காரணமாக இருந்த கிருஷ்ணா, இப்போது வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய இருப்பதையறிந்து ஹூக்ளி, கிருஷ்ணாவைக்கொல்ல திட்டம் போடுகிறான்.
கிருஷ்ணாவின் சுயரூபத்திக்கிழிக்க எந்த ஆதாரமும் இல்லாமல் தவித்த கங்காதரனுக்கு, நர்மதாவுக்கும் தனக்கும் குழந்தை பிறந்தபோது ஆஸ்பத்திரியில், கிருஷ்ணா தன் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த யமுனாவின் பிறப்புச்சான்றிதழ் கிடைக்க, அதைவைத்து கங்காவை மிரட்டும் கங்காதரன், திருமணத்துக்கு முன்பாக தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை ஒத்துக்கொண்டு அனைவரிடமும் மன்னிப்புக்கேட்டு யமுனாவை தன் மகனாக ஏற்றுக்கொள்வதுடன், சிந்துவை விட்டு விலகிப்போய்விட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அனைவரின் முன்னும் கிருஷ்ணாவின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்துவேன் என்றும் அவர் மிரட்ட, அவன் ஆடிப்போகிறான். தன் திருமணத் திட்டம் தோற்றுவிடுமோ என்ற விரக்தியோடு ஒரு பாம்பு புற்றருகே அவன் அமர்ந்திருக்க, அங்கு வரும் சிறுவன் யமுனா, கைதவறி தங்க டாலருடன் கூடிய தன்னுடைய செயினை பாம்பு புற்றுக்குள் போட்டுவிட அதை எடுத்துத்தருமாறு கிருஷ்ணாவை வேண்ட, அவனும் தயங்காமல் பாம்பு புற்றுக்குள் கைவிட்டு அதை எடுக்க, மறைந்திருந்து இவற்றை கவனிக்கும் கங்காதரனுக்கு கிருஷ்ணா மீது நம்பிக்கை (??) வருகிறது. இதனிடையே யின் கொலைத்திட்டம் அவருக்குத்தெரியவர, அவன் ஒளிந்திருக்கும் கோயிலுக்குபோய் அவனைத்தாக்கி விட்டு வரும் போது, அவன் கங்காவை பதிலுக்குத்தாக்கி வீழ்த்தி விட்டு, திருமண மண்டபத்துக்கு வந்து கிருஷ்ணாவை சுட முயற்சிக்க, அதற்குள் அங்கு வந்துவிடும் கங்காதரனின் முயற்சியால், குண்டு அவரது கையில் பாய்ந்துவிட, அடுத்த குறி பார்ப்பதற்குள் அங்கிருப்போரால் பிடிக்கப்பட, கங்காதரனின் பெருந்தன்மையறிந்து கிருஷ்ணா யமுனாவை தன் மகனாக ஏற்றுக்கொள்ள முடிவு சுபம்.
பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் எழுதிய இந்தக்கதை, திரைப்படங்களுக்குரிய விறுவிறுப்புக்கள் குறைவாக கொஞ்சம் மந்தமான கதையாக அமைந்துவிட்டது. ஏதோ புதுமை செய்வதாக நினைத்துக்கொண்டு, கதாபாத்திரங்கள் அனைவருக்கும் நதிகளின் பெயரை வைத்தது மட்டுமே சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. திருமணத்துக்கு முன் தனக்கு குழந்தை பிறந்து, அதற்கு ஐந்து வயதாகும் வரை திருமணம் ஆகாமலேயே அவனுடன் வாழ்க்கை நடத்துகிறாள் என்பதும், அவள் அண்ணனும் அதை ஒரு தலைபோகும் விஷயமாக எடுத்துக்கொள்ளாததும், தன் தங்கையை அவன் மணந்துகொள்வானா மாட்டானா என்பதையறிந்துகொள்ள அவனுக்கு விடுகதை போடச்சொல்வதும் எல்லாம் ஜீரணிக்க முடியாத, சற்று கோமாளித்தனமான விஷயங்களே. பேராசிரியர் எப்படி இத்தனை ஆண்டுகள் சினிமாவில் வண்டி ஓட்டினார் என்பது ஆச்சரியம். (அவரது ‘ஆளப்பிறந்தவன்’ படத்தில் சீரியஸான கட்டங்களில் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலைகள் எழுந்ததைப் பார்த்திருக்கிறேன்).
கதை சுமாராக இருந்தபோதிலும், படமாக்கப்பட்ட விதத்திலாவது மக்களைக்கவர்வோம் என்ற எண்ணம் இயக்குனருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் முடிந்தவரையில் வெளிப்புறங்களிலேயே படமாக்கி நம் கண்களைக்குளிர வைக்கிறார். நான்கு பாடல்களும் வெளிப்புறங்களிலேயே படமாக்கப்பட்டுள்ளன. வண்ணத்தில் குளித்த நேபாளத்தின் இயற்கை எழில் சிந்தும் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். சிவந்த மண், அனபைத்தேடி, தியாகம் போன்ற நடிகர்திலகத்தின் பல்வேறு படங்களை சிறப்பாக ஒளிப்பதிவு செய்த என்.பாலகிருஷ்ணன், கேமராவை அற்புதமாகக் கையாண்டிருந்தார்.
"இமயம்" (PART-2)
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவியரசர் கண்ணதான் படைத்திருந்த நான்கு பாடல்களும் அருமையே. நடிகர்திலகமும் ஸ்ரீவித்யாவும் காதலர்களாக அல்ல, கணவன் மனைவியாக பங்குபெறும் கண்ணியமான டூயட் பாடல்
'கங்கை.... யமுனை... இங்குதான்... சங்கமம்
ராகம்.... தாளம்... மோகனம்.... மங்களம்...'
பாடலை கே.ஜே.யேசுதாஸும், வாணி ஜெயராமும் பாடியிருந்தனர். கேட்கும்போதே நம் காதுகளை மட்டுமல்ல, மனதையும் பரவசமூட்டும் பாடல். படம் வெளிவந்தபோது இலங்கை வானொலியில் கலக்கிய பாடலாம். அது மட்டுமல்ல, இப்படம் வெளியாகி சில ஆண்டுகள் கழித்து மெல்லிசை நிகழ்ச்சிக்காக ஜேசுதாஸ், சுஜாதா மற்றும் குழுவினர் இலங்கை சென்றிருந்தபோது, நிகழ்ச்சி நடந்த இடங்களிலெல்லாம் 'ஒன்ஸ்மோர்' கேட்கப்பட்ட பாடலாம் இது. (தான் ரொம்ப எதிர்பார்த்திருந்த ‘விழியே கதை எழுது, தெய்வம் தந்த வீடு, அந்தமானைப்பாருங்கள், மலரே குறிஞ்சி மலரே’ பாடல்களை யெல்லாம் அந்நிகழ்ச்சிகளில் இப்பாடல் முந்தியது என்று ஜேசுதாஸ் சொல்லியிருந்தார்). இவையனைத்துமே மெல்லிசை மன்னரின் குழந்தைகள்தான்.
நர்மதா (ரீனா) இறந்தபின் தன் பொறுப்பில் வளர்த்துவரும் சிறுவன் யமுனாவைத் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு, கங்காதரன் (நடிகர்திலகம்) பாடும்....
'கண்ணிலே குடியிருந்து கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தையென்று' பாடலை டி.எம்.எஸ். பாடியிருந்தார். வழக்கமாக இதுபோன்ற பாடலை, இண்டோரில்தான் படமாக்குவார்கள் ('எந்தன் பொன் வண்ணமே', 'மான்குட்டி இப்போது' போன்ற பல பாடல்கள்). ஆனால் வெளிப்புறக் காட்சிகளை முடிந்தவரை 'கவர்' பண்ணி விட வேண்டும் என்ர இயக்குனரின் சாதுரியத்தால், இப்பாடலும் கண்ணுக்கு விருந்தாக அமைந்து போனது. சலசலத்து ஓடும் ஆறுகள், அவற்றின் மீது அமைந்த அழகான பாலங்கள், பிரமாண்ட உயரத்துடன் கோயில் படிக்கட்டுக்கள் என நம் நெஞ்சை அள்ளும் இடங்களில் படமாக்கியிருப்பார்கள். (அந்தப்பாடலில் நடித்த சிறுவன்தான் இப்போது சின்னத்திரை சீரியல்களில் பிரபலமாக இருக்கும் சுரேஷ்வர் என்றும், நான் வாழவைப்பேன் படத்தில் நடித்த சிறுவன்தான் சின்னத்திரை மற்றும் பெரிய திரை புகழ் பப்புலு என்கிற ப்ரித்விராஜ் என்றும் சொல்கிறார்கள். படம் வந்து 31 ஆண்டுகளாகி விட்டதால் அவர்கள் தோற்றத்தை பார்க்கும்போது நம்பும்படியாகத்தான் இருக்கிறது).
நடிகர்திலகமும், ஜெய்கணேஷும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுப்பாடும் பாடல்...
'சக்தி என்னடா... உன் புத்தியென்னடா...'
இப்பாடலை டி.எம்.எஸ்., மற்றும் எஸ்.பி.பி. பாடியிருந்தனர். நேபாளத்தின் வித்தியாசமான கோயில் வெளிப்புறங்களிலும், பச்சைப்பசேல் மலைப்பிரதேசங்களிலும் படமாக்கம் செய்யப்பட்டிருந்தது.
ஜெய்கணேஷ் - மீரா ஜோடிக்கான டூயட் பாடல்...
'இமயம் கண்டேன்....
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப்பார்த்தேன்... சுகங்கள்'
இப்பாடலை எஸ்.பி.பி., சுசீலா பாடியிருந்தனர். பனிபோர்த்திய இமயமலைச் சிகரங்களை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட அற்புதமான டூயட் பாடல். இப்படம் வெளியானபோது இந்தப்பாடலும் ரொம்பவே பாப்புலர்.
தான் உச்சநடிகராக இருந்த காலத்திலேயே இதுபோல எத்தனை அருமையான டூயட் பாடல்களைத் தன்னுடைய படத்தில், அடுத்த நாயகர்களுக்கும் துணை நடிகர்களுக்கும் விட்டுக் கொடுத்திருக்கிறார்..!!.
இன்பம் பொங்கும் வெண்ணிலா - கட்டபொம்மன்
காற்று வெளியிடை கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன்
காலங்களில் அவள் வசந்தம் - பாவமன்னிப்பு
யார் யார் யார் அவள் யாரோ – பாசமலர்
அன்று ஊமைப்பெண்ணல்லோ – பார்த்தால் பசி தீரும்
இதழ் மொட்டு விரிந்திட - பந்தபாசம்
பண்ணோடு பிறந்தது ராகம் - விடிவெள்ளி
வாராதிருப்பானோ - பச்சை விளக்கு
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா - பச்சை விளக்கு
வட்ட வட்ட பாறையிலே - பழனி
உள்ளத்துக்குள்ளே ஓளிந்திருப்பது - பழனி
கண்ணிரண்டும் மின்ன மின்ன - ஆண்டவன் கட்டளை
இரவு முடிந்துவிடும் - அன்புக்கரங்கள்
காத்திருந்த கண்களே - மோட்டார் சுந்தரம்பிள்ளை
செந்தூர் முருகன் கோயிலிலே – சாந்தி
மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் - பார் மகளே பார்
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் - ஊட்டி வரை உறவு
என் கேள்விக்கென்ன பதில் - உயர்ந்த மனிதன்
எங்க வீட்டு தங்க தேரில் - அருணோதயம்
சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் - குலமா குணமா
முள்ளில்லா ரோஜா - மூன்று தெய்வங்கள்
என்ன சொல்ல என்ன சொல்ல - பாபு
யாருக்கு இங்கு கல்யாண ஊர்வலமோ - வாணி ராணி
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே - வாணி ராணி
பூவிழி வாசலில் யாரடி வந்தது – தீபம்
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி -அந்தமான் காதலி
அழகி ஒருத்தி இளநி விக்கிறா - பைலட் பிரேம்நாத்
செவ்வானமே பொன்மேகமே - நல்லதொரு குடும்பம்
தேவதை ஒரு தேவதை - பட்டாக்கத்தி பைரவன்
அவசரத்தில் நினைவுக்கு வந்தவை இவை. இன்னும் இருக்கிறது. இதைக் குறிப்பிடக்காரணம், இவர் காலத்தில் இருந்த "மற்ற சில" நாயகர்கள், தங்கள் படத்தில் எத்தனை டூயட் பாடல் இருந்தாலும் அனைத்தையும் தானே பாடித் தீர்த்தார்களே தவிர மற்றவர்களுக்கு கொடுப்பதில்லை. (இதைச்சொல்லக்காரணம், பழம்பெரும் இயக்குனர் ப.நீ. தன்னுடைய கடைசிக்காலத்தில் ஒரு உண்மையைப்போட்டு உடைத்து விட்டுப்போனார். எழுபதுகளில், தான் இயக்கிய ஒரு குதிரைவண்டிக்காரர் பற்றிய வண்ணப்படத்தில் இரண்டாம் நிலை நாயகனாக நடித்த ஒரு நவரசமான திலகத்துக்கு ஒரு டூயட் பாடல் கொடுத்து விட்டதற்காக, அதில் நடித்த பெரிய நடிகர் இவருடன் சண்டை போட்டாராம். 'விடுங்கண்ணே நீங்க எவ்வளவோ டூயட் பாடியிருக்கீங்க. அப்படியிருக்க ‘கண்ணுக்கு தெரியாத’ ஒரே ஒரு பாடலால் என்ன வந்துவிடப்போகிறது' என்று அவரை சமாதானம் செய்தார்களாம்).
முதன்முதலாக நடிகர்திலகத்துக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீவித்யா மனைவி வேடத்தில் மிகவும் பாந்தமாகப் பொருந்தினார். இவர்களுடன் ஜெய்கணேஷ், மீரா, ரீனா, தேங்காய் சீனிவாசன், மனோரமா, ஒய்.ஜி.மகேந்திரன், கே.கண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். முக்தா சீனிவாசன் படத்தை இயக்கியிருந்தார்.
சென்னையிலும், திருச்சியிலும் இப்படம் நடிகர்திலகத்தின் சாதனைக்கு பெரிய வில்லங்கமாக வந்து சேர்ந்தது. கிட்டத்தட்ட முக்கால்வாசி அரங்கம் நிறைந்த நிலையில் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருந்த சாதனைப்படம் 'திரிசூலம்' சர்வசாதாரணமாக 200 நாட்களைக்கடக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், 'இமயம்' படத்துக்காக சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி மற்றும் திருச்சி பிரபாத் அரங்குகளில் 'திரிசூலம்' 175 நாட்களில் நிறுத்தப்பட்டு, இப்படம் வெளியிடப்பட்ட நிகழ்வு, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுவரை யாரும் சாதிக்காத சாதனைகளை நிகழ்த்தலாம் என்றால் 'நம்மவர்களே' அதற்கு இடையூறாக இருப்பதை எண்ணி மனம் சோர்ந்தனர். (இத்தனைக்கும் திரிசூலம் தமிழில் அதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக தமிழ்நாட்டில் மட்டும் எட்டு அரங்குகளில் வெள்ளிவிழாவைக் கொண்டாடிய படம்). என்னய்யா இது? சென்னையில் 'இமயத்துக்கு' வேறு தியேட்டர்களே கிடைக்காதா?. இதற்கு முன் இதே நிறுவனம் தயாரித்த அந்தமான் காதலி மிட்லண்ட், மகாராணி, ராக்ஸியில் 100 நாட்கள் ஓடவில்லையா?). இது போதாதென்று, மதுரையில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த, கண்டிப்பாக 100 நாட்களைக்கடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த 'நல்லதொரு குடும்பம்' படத்தையும் 79 நாட்களில் கெடுத்து அதே அரங்கில் 'இமயம்' வெளியானது. இப்படியாக வெளியாகும்போதே ரசிகர்களின் சாபத்தோடு வெளியான இமயம் படம், மனதைக்கவரும் வண்ணம் கதையும் அமையாததால், மக்களின் ஆதரவையும் பெறத்தவற, அத்தோடு பின்னாடியே 'நான் வாழ வைப்பேன்' படம் துரத்திவர, இமயம் 60 நாட்களைமட்டுமே பூர்த்தி செய்ய முடிந்தது.
நடிகர்திலகத்தின் 203 வது படமான 'இமயம்' படம் பற்றிய எனது கருத்துக்களைப்படித்த அனைவருக்கும் என் நன்றி.
அன்புச் சகோதரி சாரதா அவர்களுக்கு,
இமயத்தின் இமயம் பற்றிய பதிவும் ஓர் ரசிக இமயம் அவர்களிடமிருந்து நம்மோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளது.
தங்களுடைய இமயம் பற்றிய கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சதம் உண்மை. சரியான திரைக்கதை அமைக்கப் படாததும் ஒரு காரணம். கருத்து நன்றாக இருந்தாலும் படைக்கப் பட்ட விதம் சரியில்லை. நடிகர் திலகம், மெல்லிசை மன்னர், பாலகிருஷ்ணன் மூவர் கூட்டணியே இப்படத்தை அமர வைக்கிறது. குறிப்பாக ஸ்ரீவித்யாவுடன் ஜோடி என்கிற ஒரு எதிர்பார்ப்பு. திரிசூலம் படத்தின் வெற்றியால் பாதிக்கப் பட்டு, அதே சமயம் அத்னுடைய சாதனையையும் பாதித்து வெளியான இமயம் தவிர்க்க முடியாத தோல்வியை சந்திதத்து என்பதும் உண்மை.
இருந்தாலும் ஜேசுதாஸின் குரலில் கங்கை யமுனை பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடலாய் அமைந்ததும், அப்பாடலில் நடிகர் திலகம் ஸ்ரீவித்யா கண்ணியமான தோற்றமும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டின என்பது மிகையில்லை.
மற்ற நடிகர்களுக்கும் டூயட் பங்கு பற்றிய தங்கள் கருத்தும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியது. இத்தனைக்கும் கண்ணுக்குத் தெரியாத பாடல் வேறு ஒரு படத்திற்காகப் பதிவு செய்யப் பட்டதாகும், அதனைப் பயன்படுத்துவதற்கே இந்தப் போராட்டம் என்றால், இன்னும் தனியாக ட்யூன் போட்டு எழுதி இசையமைத்திருந்தால்....
தாங்கள் கூறியது போல் இமயம் படத்தில் நடித்த அந்தக் குழந்தை தற்போது ஒய்.ஜி.மகேந்திராவின் குழுவில் வியட்நாம் வீடு நாடகத்தில் நாகேஷ் பாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே போல் பத்மினி வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நித்யாவின் கணவர் ரவீந்திரன் அவர்கள் , பாவ மன்னிப்பு படத்தில் அந்த நாள் முதல் பாடலில் சைக்கிள் கூடையில் அமர்ந்திருக்கும் குழந்தையாவார்.
அன்புடன்
ராகவேந்திரன்
//
kunguma pottin mangalam
nenjamirandin sangamam
nenjamirandin sangamam
indrena koodum ilamai ondrena paadum
//
Dear all
Is this from shivaji sir movie?
thanks
may be Kudumbam Oru Koyil ...?
hmm I dont think so, :roll: can some 1 pls verify this ?Quote:
Originally Posted by RAGHAVENDRA
சாரதா,
வழக்கம் போல் கண் முன் காட்சிகள். இமயம் படத்தைப் பற்றிய எண்ணங்கள் மற்றும் வழக்கம் போல் அந்த காலத்திய நினைவுகளை இன்னும் 3,4 நாட்களுக்கு பிறகு [நடுவில் வெளியூர் செல்வதால்] பதிகிறேன்.
Raghu,
The song what you have mentioned is from Kudiyirundha Koyil starring MGR. The song is for MGR and JJ.
Regards
சகோதரி சாரதா அவர்களே ,
தங்களின் இமயம் திரைப்பட ஆய்வு படித்தேன், நன்றாக இருந்தது.
என்ன ஒரு குறை, நம் NT அவர்கள் தாங்கள் லிஸ்டில் கூறியபடி பல நல்ல பாடல்களை சக நடிகர்களுக்கு விட்டு கொடுத்து விட்டாரே, அதிலும் இதில் வரும் இமயம் கண்டேன் பாடலை நம் நடிகர் திலகம் அவர்கள் விட்டு கொடுத்தது ஏமாற்றமாக இருந்தது.
மேலும் இந்த படம் வந்த காலத்தில் அடிக்கடி வானொலியில் ஒலிபரப்புவார்கள் நான் அப்போது 6ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன், படம் பார்க்கும் வாய்ப்பு 8 மாதத்திற்கு பிறகு தான் கிடைத்தது அதுவரை இந்த பாடல் கேட்கும் போது அதில் NTஅவர்கள் நடிததாகவே எண்ணி இருந்தேன்.
Raghavendra Sir should have meant Kudiyirundha kOvil...