.....
Printable View
டியர் ரவி சார்,
பேசும் தெய்வம் மற்றும் காவல் தெய்வம் பற்றிய தங்களின் பதிவு அருமை.
தாங்கள் குறிப்பிட்ட மாதிரி அது காவல் தெய்வம், கந்தன் கருணையாக இருந்தாலும் சரி, பிற்காலங்களில் வந்த தேவர் மகன், படையப்பா, ஒன்ஸ் மோர் என்று எக்காலத்திலும் நடிகர்திலகம் 5 நிமிடங்கள் படத்தில் வந்தாலும் அவர்தான் ஸ்கோர் பண்ணுவார் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.
மகா சிவராத்திரிக்காக தாங்களின் ஸ்பெஷல் பதிவுகளுக்கும் நன்றி.
டியர் ரவிகிரன் சூர்யா,
ஜெயலலிதா பிறந்தாளையொட்டி நடிகர்திலகத்துடன் ஜெ இணைந்து நடித்த திரைப்பட விபரங்கள், காட்சிகள் இணைப்பு மற்றும் நடிகர்திலகத்தை பொம்மை இதழுக்காக ஜெயலலிதா எடுத்த பேட்டி என்று தங்களுடைய அசத்தலான பதிவுகளுக்கு நன்றி.
பேசும் தெய்வம் - 14-04-1967
NTயின் 112வது படம்
வசனம் : K.S . கோபாலகிருஷ்ணன்
ஜோடி : பத்மினி
இசை : K .V .மஹாதேவன்
படம் : நல்ல வசூல் ; எல்லோரராலும் பாராட்ட பட்ட படம் - திருப்பதி ஏழுமலையானை நம்புவர்கள் என்றுமே கைவிட பட மாட்டார்கள் என்பதை ஒரு குடும்ப கதை மூலம் வெகு அழகாக சொல்லியிருப்பார்கள்
http://i818.photobucket.com/albums/z...ps3d13c859.jpg
:):smokesmile:
அழகு தெய்வம் மெல்ல மெல்ல --
" இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரமும் அல்ல
மழைமேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் நீர்பாயும் நீரோடை அல்ல - இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல !! "
இந்த வரிகளை பார்த்த உடன் NT , வாலியை கட்டி பிடித்துகொண்டு மனமார புகழ்ந்தாராம் - இந்த பாட்டை போல இனிமையாக பல வந்தாலும் ஒரு முன்னோடியாக இன்றும் இருப்பது இந்த பாடல் தான் - கற்பனை வளமும் , கவிதையின் அழகும் இந்த பாடலை பல முறை நம்மை கேட்க்க சொல்லும்
படத்தை பற்றி அலசும் முன் இந்த படத்தின் தேனான சில பாடல்களை கேட்போமா ?
http://youtu.be/R12D7i5PWGQ
Awesome pair of NT and Padmini. Wonderful Songs. Totally a Fantastic family
Entertainer.
சமீபகாலமாக நடிகர்கள் படபிடிப்பில் பிரியாணி சமைத்து இயக்குனர் மற்றும் இதர நண்பர்களுக்கு பரிமாறுவது பெரிய செய்தியாக மீடியாக்கள் பறைசாற்றுகின்றனர்.
நல்ல விஷயம் தான் என்றாலும் இவை தான் முதல் முதலாக திரை உலகில் நடப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஓரளவு அந்த மாயை வெற்றியும் அடைகிறது இந்த கால தலைமுறையினர் பொறுத்தவரை.
நடிகர்கள் சமைத்து பரிமாறுவது ஒன்றும் இன்று நேற்று நடந்த விஷயமல்ல , இதை நம் நடிகர் திலகம் அவர் நடிக்கும் காலத்திலயே செய்திருக்கிறார்.
இயக்குனர் rv உதயகுமார் அவர்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பாருங்கள் !
இதுபற்றி உதயகுமார் கூறியதாவது:-
"கிழக்குவாசல்" படப்பிடிப்பையும், "உறுதிமொழி" படப்பிடிப்பையும், ஒரே நேரத்தில் இரவும் பகலுமாக நடத்தினேன்.
அப்போது தேக்கடிக்கு எங்களுடன் சிவாஜி சார் குடும்பத்துடன் வந்து தங்கினார்.
எங்கள் அனைவருக்கும், அவரது கையாலேயே அயிரைமீன் குழம்பு சமையல் செய்து பரிமாறினார். அதை இன்றைக்கும் மறக்கமுடியாது.
Thiru Kannadasan avargal our kaval deivam poster i parthavudan sumar 15 nimidangal karai niruthivittu poster i vaitha kan vangamale parthu vittu selvaram.oru kavi arasanukke ippadi endral?
Siva(ji)rathiri valthukkal to our hub members.
பார்த்ததில் பிடித்தது -13
நான் எழுதியதை சற்று திரும்பி பார்த்தல் , அதில் பல படங்கள் நடிகர் திலகத்தின் பிற பகுதி படங்களை மட்டுமே அதிகமாக இருந்தது . அந்த monotony யை , கொஞ்சம் உடைத்து , நடிகர் திலகத்தின் முதல் சில வருடங்களில் வந்த படத்தை பற்றி தான் இந்த 13 ம் பதிவு
தங்கமலை ரகசியம்
இந்த படத்தை ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை , ஆனால் பார்க்க சந்தர்பம் கிடைக்க வில்லை , இந்த திரியில் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் , சன் லைப் தொலைகாட்சியில் இந்த படம் ஒலிபரப்பபட்டது என்று எழுதி இருந்தார்
அது தான் turning பாயிண்ட் , இந்த முறை பார்க்க வேண்டும் என்று முயன்றேன் , வெற்றியும் பெற்றேன் , நான் ரசித்த படத்தை , உங்கள் அனைவருடனும் சேர்ந்து அசை போட வேண்டும் ஆசையில் தான் இந்த பதிவு , மிக நீள பதிவு என்பதினால் கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் என்று கேட்டு கொளுகிறேன்
படம் வந்த வருடம் 1957, 1952 ல் தமிழ் திரை உலகில் புரட்சியை ஏற்படுத்திய நடிகர் திலகம் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்து உள்ள படம் தான் இது
படத்தின் நீளம் இந்த காலத்தை காட்டிலும் மிகவும் அதிகம் கிட்ட தட்ட 3 மணி நேரம் மொத்தம் 11 பாடல்கள்
படத்தை பற்றி அனைத்தயும் எழுதி உள்ளேன் , மிக பழிய படம் என்பதினால் , படத்தில் நடித்த சில நடிகர் நடிகைகளின் பெயர் தெரிய வில்லை மன்னிக்கவும்
படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் ஒரு மரத்தின் உச்சியில் 2 கிளிகள் இருக்கிறது அடுத்த காட்சியில் இரு குழந்தைகள் விளையாடி கொண்டு இருக்கிறது , அந்த இரண்டு குழந்தைகளும் அரசரின் குழந்தைகள் அந்த கிளிகள் அங்கே வந்த உடன் , அரசி (அதாவது அந்த இரு குழந்தைகளின் தாய்) , அந்த இரு குழந்தைகளிடமும் அந்த கிளிகளின் கதையை பற்றி சொல்லுகிறார்
கதை FLash back காட்சிகளில் செல்லுகிறது
மங்களபுரி இளவரசி நந்தினியை ( TR ராஜகுமாரி ) பெண் பார்க்க வருகிறார் சொர்ணபுரி மன்னன் ஆதித்யன் (MN நம்பியார் )
வந்த இடத்தில கடை வீதிக்கு செல்லலாம் என்று எண்ணி இளவரசி என்று எண்ணி அவரின் தோழியை(மவ் ராஜம்மா ) காதலிக்கிறார் , சுயம்வரம் நாள் அன்று , தான் காதலித்து ராணியை அல்ல தோழியை என்று அறிந்த உடன் அதிர்ச்சி அடைகிறார் , ஆனால் அந்த தோழிக்கு மாலை சூட்டி மணம் முடிக்கிறார் மன்னர் ஆதிதியன்.
மங்களபுரி இளவரசி நந்தினி மிகவும் திமிர் பிடித்த பெண் , தன் தோழி மனிப்பு கேட்டும், அதை அலட்சிய படுத்தி விடுகிறார்
ஆதிதியன். தன் மனைவி , மற்றும் சகோதரன் (TR ராமசந்திரன்) உடன் சந்தோசமாக வாழுகிறார்
இந்த நேரத்தில் ஆதிதியன் தந்தை ஆகுகிறார் , மங்களபுரி இளவரசி நந்தினியின் தந்தை காலமாகிறார் , இளவரசி யின் நிலைமையை நினைத்து வருதும் அவர் தோழி , அவரை , தன் நாட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார் , தன் தோழியை பழி வாங்க சந்தர்பத்தை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறார் , முதலில் , ஆதிதியன் யின் தம்பியை காதல் வலையில் விழ வைத்து , சதி செய்கிறார் , அது பலிக்காமல் போகவே , நந்தினி தன் நம்பிக்கைக்கு உரிய ஒரு பெண்ணை அழைத்து வந்து , இளவரசன் விக்ரமன் யை கடத்துகிறார் ,
நந்தினியின் தோழி (அங்கமுத்து / தனம் (பெயர் தெரிய வில்லை )) தன் அண்ணன் மகேந்திரன் (PSV ) 5 மாத்திரைகளை ஒரு மந்திரவாதி யிடம் இருந்து திருடி வந்து விடுகிறார் , அந்த மருந்தை சாபிட்டால் , எந்த உருவத்தை விரும்பினாலும் அதை அடையாளம் . 5 மாத்திரைகளில் ஒரு மாத்திரையை டெஸ்ட் செய்து பார்த்து விட்டு அடுத்த திட்டத்தை தீட்டுகிறார்
அரசன் மற்றும் அவரின் மனைவி இருவரிடமும் , நந்தினி ஒரு சாமியாரை பற்றி சொல்லி , அங்கே சென்றால் அவர்களின் மகனை பற்றி அறியலாம் என்று சொல்லி , ஒரு குகைக்கு அழைத்து செல்லுகிறார்
4 மாத்திரைகளில் , ஒரு மாத்திரையை தானே வைத்து கொண்டு , 3 மாத்திரைகளை 3 கோப்பைகளில் கலந்து விடுகிறார்
ஒரு கோப்பை மன்னர் அருந்திய உடன் அவரை முத்துமாலை ஆகும் படியும் , அவரின் தோழியை பிச்சகாரி ஆகும் படியும் செய்து விடுகிறார் , மகேந்திரன் அந்த மாத்திரையை எடுத்து கொண்டு , ஆதித்தியன் ஆகி விடுகிறார் , நந்தினி மட்டும் தான் அதே உருவத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறார் (பொய் சொல்லி விடுகிறார் )
ஊருக்கு வரும் ஆதித்தியன் (PSV ) தன் மனைவி இருந்து விட்டதாக கதை கட்டி விடுகிறார் , நந்தினி மற்றும் ஆதித்தியன் இருவரும் காந்தர்வ திருமணம் செய்து கொண்டதாக இன்னும் ஒரு பொய் சொல்லி விடுகிறார் .
ஆதித்தியன்( மகேந்திரன் )க்கு தன் முதல் மனைவி மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது , அதின் பெயர் அமுதா
தொலைந்து போன விக்ரமன் காட்டில் மிருகங்கள் உடன் வாழுகிறார் (TARZAN )
வருடங்கள் நகர நகர அமுதா இப்பொழுது ஒரு அழகிய இளவரசியாக வாழ்ந்து வருகிறார் , மகேந்திரன் மற்றும் அவர் சகோதரி இருவரும் , நந்தினியின் கொடுமையை சகித்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து தான் tarzan வளர்ந்து , பெரிய வீரராக வளம் வருகிறார் , ஒரு நாள் காட்டுக்கு வரும் அமுதாவை காப்பாத்தி அவரின் அன்புக்கு பாதிரமாகிறார்
அமுதா தன் தந்தை மற்றும் சிட்டியின் எதிர்ப்பையும் மீறி அந்த
டார்சன் யை தன் கூடவே வைத்து கொண்டு அவருக்கு நாகரிகம் , கல்வி , அறிவு அனைத்தையும் போதிக்கிறார்
இந்த தோழமை காதலாக மாறுகிறது , tarzan க்கு அமுதா கஜேந்திரன் என்று பெயர் வைக்கிறார் , இந்த காதலை ஏற்க மறுக்கிறார் அமுதாவின் தந்தை மற்றும் சித்தி. கஜேந்திரன் மீண்டும் காட்டுக்கே வந்து விடுகிறார்
அமுதா அவரை தேடி வந்து , கஜேந்திரன் யை கல்யாணம் செய்து கொள்ளுகிறார் ,
கஜேந்திரன் தன் தாய் மற்றும் தந்தை இருவரையும் தேட ஆரம்பிக்கிறார் ,(அமுதாவின் தந்தை அவரை அனாதை என்று சொன்னதினால் தேட ஆரம்பிக்கிறார் )
கஜேந்திரனின் தாய் , தன் கணவர் உடன் அதான் முத்துமாலை உடன் செல்லும் பொது , முத்துமாலையை பரி கொடுக்கிறார்
திருடு போன முத்துமாலையை அந்த திருடன் விற்று விடுகிறார் , அந்த நேரம் பார்த்து , அங்கே வரும் கஜேந்திரன் மற்றும் அமுதா இருவரும் அந்த மாலையை பார்த்து , அதை வாங்கி அணிந்து கொண்டு விடுகிறார்
கஜேந்திரனின் தந்தை இப்பொழுது அவர் கழுதில்
அப்போ அங்கே வரும் கஜேந்திரனின் தாய்யை பைத்தியம் என்று அனைவரும் கிண்டல் செய்ய , கஜேந்திரன் அவர் உடன் அழைத்து சென்று விடுகிறார் (யார் என்று தெரியாமல் தான் )
கஜேந்திரன் தாங்கும் அறை , விக்ரம்ஆதித்தியன் தங்கிய அறை , அவர் உறங்கும் கட்டில்க்கு பக்கத்தில் இரு பொம்மைகள் பேசி கொண்டு இருப்பதை கேட்டு விடுகிறார் கஜேந்திரன் , அந்த இரு பொம்மைகளும் தன் தாய் தான் இப்போ பிச்சகாரியாக இருப்பதும் , அவரின் தந்தை தான் இப்போ தன் கழுத்தில் இருபதையும் , இதற்கு தீர்வு கோளிமலையில் இருக்கும் தங்கமலை ரகசியம் தான் என்று சொல்லி அதை அடையும் வழிகளையும் சொல்லுகிறது
கஜேந்திரன் தன் தாய் , மற்றும் மனைவி உடன் தங்கமலை ரகசியத்தை அறிந்து கொள்ள அந்த காட்டுக்கு செல்லுகிறார்
முதலில் கஜேந்திரன் ஒரு ராட்சசனை சந்திக்கிறார் , அவர் உடன் சண்டை இட கூடாது என்பது விதி , அதனால் கெஞ்சுகிறார் ,அந்த ராட்சசன் அதை சட்டை செய்யாமல் நடந்து கொண்டு செல்வதால் , ரத்தகாயம் ஆகிறது , ஒரு பாடல் பாடி அவரை சமாதான படுத்துகிறார் , முடிவில் அந்த ராட்சசன் தன் சாபம் விலகி ஒரு தேவராக மாறுகிறார் , அவர் அந்த தங்கமலை ரகசியத்தை அடைய அடுத்த கட்ட யுக்தி யை கஜேந்திரன்க்கு சொல்லிவிடுகிறார்
அடுத்த சவால் கஜேந்திரன் அழகிய 2 மோகினிகளை எதிர்கொண்டு வெற்றி பெரும் சமயத்தில் , அந்த இரண்டு பெரும் , அடுத்த யுக்தி யை சொல்லும் முன்பு கஜேந்திரன் யின் இளமை , அழகு இரண்டையும் கேட்க , கஜேந்திரன் அதை ஒத்துக்கொண்டு , வயசானவராக மாறுகிறார்.
இதற்கு இடையில் , அலகபுரியில் , மகேந்திரன் மற்றும் நந்தினி இருவரையும் கண்காணிக்கிறார் அமைச்சர் சாரங்கபாணி ,அதன் மூலம் உருவம் மாறும் மாத்திரை யை மகேந்திரன் சாப்பிடும் படி செய்து விடுகிறார் , மீதி உள்ள மருந்தை , tr ராமசந்திரன் அறிந்தி பெரிய காது உடன் வளம் வருகிறார் , மாத்திரையை சாபிட்ட மகேந்திரன் மீண்டும் தன் உருவத்தை அடைந்து விடுகிறார் , இதனால் நந்தினி மற்றும் மகேந்திரன் இருவரையும் சிறை வைத்து விடுகிறார்
கஜேந்திரன் வயோதிகர் ஆனதினால் அவர் மனைவி மீதி ரகசியத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் நேரத்தில் , (ரகசியத்தை சொன்னால் சிலையாகி விடுவார்கள் ) கஜேந்திரனின் சந்தேகத்தினால் சிலையாகி விடுகிறார்
கஜேந்திரன் அந்த மலைக்கு வந்து சேரும் நாள் பௌர்ணமி (, அந்த நாளில் அவரின் தாய் , தந்தை உருவம் மாறாவிட்டால் , பிறகு எப்போதும் மாறது ) கஜேந்திரன் அங்கே ஒரு சாமியாரை சந்திக்கிறார் , அவர் தான் மகேந்திரனின் குரு , மகேந்திரன்க்கு மந்திரம் சொல்லி தரவில்லை என்ற காரணத்தினால் அவரை பாதி கலாக மாத்தி விடுகிறார் , கஜேந்திரன் க்கு அவர் அந்த மந்திர கோளை எப்பிடி அடைவது என்று சொல்லி விடுகிறார்
மகேந்திரன் சிறையில் இருந்து தப்பித்து வந்து விடுகிறார்
இருவரும் சண்டை போட்டு , முடிவில் மகேந்திரன் தோல்வி அடைகிறார்
அந்த சாமியாரின் உதைவினால் அனைவரும் (கஜேந்திரன் , அவர் மனைவி அமுதா , அவர் தந்தை ஆதித்தியன் (mn நம்பியார் ), அவர் மனைவி ராஜம்மா ) தங்கள் சொந்த உருவத்தை அடைகிறார்கள்
இத்தனை கேடுகளை செய்த நந்தினி மற்றும் மகேந்திரன் இருவரையும் கிளிகளாக மாற சபித்து விடுகிறார் அந்த சாமியார்
ஆம் , அந்த இரு குழந்தைகளும் தன் தாத்தா , பாட்டி உடன் விளையாடுகிறது
சுபம்
படத்தின் கதையை பற்றி பார்த்தோம் , படத்தை பற்றி , அதில் நடித்தவர்களின் நடிப்பை பற்றி , இன்னும் பிற அம்சங்களை பற்றி இப்போது பார்க்கலாம்
இந்த படம் fantasy ,folkfore கதை தான் , இந்த படத்தின் கதை சின்ன அண்ணாமலை மற்றும் லட்சமணன் , சின்ன அண்ணாமலைக்கு அறிமுகம் தேவை இல்லை , சிவாஜி ரசிகர்களுக்கு , அவரை நன்கு பரிச்சியம் உண்டு , ரசிகர் மன்றத்தை நன்றாக ஒருகிணைத்தவர் , பிறகு ஜெனரல் சக்ரவர்த்தி , தர்மராஜா படங்களை தயாரித்தவர் , லட்சமணன் வித்வான் லட்சமணன் என்று நினைக்கிறன் சரியாக நினைவுஇல்லை
அதை போலே ஸ்டுன்ட் மாஸ்டர் பல்ராம் , அந்த காலத்தில் பெரிய fight மாஸ்டர் , ஒரே நேரத்தில் ஸ்டுன்ட் மாஸ்டராகவும் , நடன இயக்குனராகவும் இருந்தார் , துரதிஷ்டவசமாக ஒரு வெறி நாய் கடித்து இறந்து போனார் (MGR ஒரு சகப்தாம் என்ற நூலில் இருந்து )
இந்த மாதிரி படங்களில் action காட்சிகள் ஏராளம் ,சிவாஜி சார் முதல் முதலில் ஒரு taarzan படத்தில் நடிக்கிறார் , அதுவும் முதல் முதலில் தமிழில் வந்த taarzan படம், சண்டை காட்சிகள் படு பிரமாதம்
படம் ஆரம்பித்து 1 மணி நேரம் கழித்து தான் ஹீரோ introduction , 1952 ல் சினிமாவின் போக்கை தன் வசனம் பேசும் தமிழ் புலமையினால் ரசிகர்களை ஈர்த்த நபர் படம் ஆரம்பித்து 1 மணி நேரம் கழித்து தான் வருகிறார் , செம தில் தான் , இயகுனர்க்கும் , தயாரிப்பாளருக்கும் , என்ன டா இவன் சிவாஜி சாரின் பெயரை சொல்ல வில்லை என்று யோசிப்பது தெரிகிறது , நம்மவர் தான் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் தருவாரே , இல்லையென்றால் எதிர்பாராது படத்தில் வில்லன் வேடம் போடுவாரா அதுவும் மிகவும் கொடூர வில்லனாக .
அவர் அறிமுகம் ஆகும் காட்சி முதலில் யானை மேல் அமர்ந்து trumpet போன்ற கருவியை ஊதும் போதே அவர் தோற்றம் நல்ல வித்தியாசம் தெரிகிறது , உடை ஒரு one பீஸ் லாங் டிரஸ் , பாதி மார்பு தெரிகிறது , காலும் நன்றாக தெரிகிறது , அதனால் டுப் போட்டால் நன்றாக தெரிகிறது
ரொம்ப நாளாக இன்றும் சிவாஜி சார்க்கு நடிப்பு மட்டும் வரும் சண்டை வராது என்று சொல்லும் நபர் நிறைய , அவர்களை இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும் , ஜமுனாவை காப்பாற்ற அவர் சண்டை இடும் காட்சி எத்தனை வேகம் , இங்கே இருந்து அங்கே தாவி , பிறகு ஒரு உயரமான இடத்தில சண்டை போட்டு , அங்கே இருந்து குதித்து பாஞ்சு பாஞ்சு சண்டை போடுவார் பாருங்கள் , அதுவும் ஒரு பெரிய பாறையை தூக்கி ஜமுனாவை காப்பாற்றி சிரிப்பார் , ஒரு காட்டு மனிதரின் அசல் பிரதிபலிப்பு
ஊருக்குள் வரும் அந்த காட்டு மனிதர் சாப்பிடும் காட்சி நல்ல தமாஷ்
ஜமுனா சிவாஜி சாருக்கு தமிழ் கத்து கொடுக்கும் காட்சியில் அவர் பண்ணும் சேஷ்டைகள் டாப்
தன் காதலியின் தந்தை தன்னை அவமானம் செய்யும் பொது கத்தி யை எடுத்து விட்டு , உறையில் வைக்கும் காட்சியில் , அவர் முகத்தை காண கண் கோடி வேண்டும்
காட்டுக்கு வந்த உடன் தன் நண்பர்கள் (யானை ) உடன் பேசும் காட்சி விலங்குக்கும் பாசம் உண்டு என்பதை நிருபிகிறது
அதுவும் அவர் பெயர் வைக்கும் காட்சி அருமை , ஒரு யானைக்கு கணேசன் என்று பெயர் வைத்து விட்டு அவர் சிரிக்கும் சிரிப்பில் தான் எத்தனை அர்த்தங்கள்
வயசானவராக மாறிய உடன் அவர் குரல் , body language ல் தான் எத்தனை மாற்றங்கள்
For a change நம்பியார் நல்லவர் , அதனால் ஏக பட்ட கஷ்டங்களை அனுபவிக்கிறார் , PSV தான் நம்பியார் உருவம் மாறி அவர் சிரிக்கும் காட்சி பலே
TR ராஜகுமாரி - என்ன ஒரு வில்லத்தனம்
ஜமுனா - கடைசி சில காட்சிகளில் மட்டுமே நன்றாக நடிக்க வாய்ப்பு
மோகினியாக -சரோஜா தேவி பார்க்க நன்றாக இருக்கிறது
ஒரே ஷாட் ல் சிவாஜி சார் நடக்கும் பொது - பல யானைகள் நிற்கும் காட்சியில் - ஒளிபதிவாளர் GK ராமு வின் திறமை தெரிகிறது (இவர் நாடோடி மன்னன் படத்தில் இரண்டு MGR கை குலுக்கும் காட்சி , ஒருவர் சுற்றி வர , ஒருத்தர் உக்கார்ந்து இருக்கும் காட்சி , இன்னும் பல காட்சிகளை எடுத்து காட்டி இருப்பார் )
இது பாதி கலர் என்று கேள்வி பட்டேன் , ஆனால் நான் பார்த்த பிரிண்ட் அப்படி இல்லை , அதுவும் , படம் நன்றாக போகும் பொது TR ராமசந்திரன் காமெடி (பெரிய காது காமெடி ) மட்டுமே ஏமாற்றம்
வித்தியாசமான படத்தை எல்லோரும் ரசிக்கலாம்
என்னுடைய முகநூல் பக்கத்தில் நான் இன்று பகிர்ந்த ஒரு சிறு பதிவு.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே -
உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் வரும் இப்பாடல் முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
எனக்கும் அந்த நாள் ஞாபகம் இப்பொழுது வந்தது. நடிகர் திலகம் திரை உலகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த 40 வருடங்களுக்கும் மேலான காலத்தை என்னவென்று சொல்வது?
அவரின் ஒவ்வொரு திரைப்படமும் கண்களுக்கு விருந்து மட்டுமல்ல. ஒரு குடும்பம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் - தாய், தந்தை பாசம் ( தெய்வ மகன் ), சகோதரர்களுக்கு இடையிலான உறவு, விட்டுக்கொடுக்கும் சுபாவம் ( படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம் ) , சகோதரர், சகோதரி பாசம் ( பாசமலரைத் தவிர வேறு எந்தப் படத்தைக் குறிப்பிடுவது? அத்துடன் தங்கை, ), குடும்ப உறவு ( வியட்னாம் வீடு, பாரத விலாஸ் ), தன்மானம் ( கௌரவம், சவாலே சமாளி ), தவறு செய்தால் தன் மனைவியே ஆயினும் தண்டிப்பது ( கவரிமான் ).
மேலும் வீரத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா, தேசப்பற்றுக்கு கப்பலோட்டிய தமிழன், பக்திக்கு திருவருட்செல்வர், திருமால் பெருமை, காதலுக்கு வசந்த மாளிகை, அன்பு மிக்க நேசத்துக்கு பாலும் பழமும், நகைச்சுவைக்கு சபாஷ்மீனா, கலாட்டா கல்யாணம், பலே பாண்டியா, ஊட்டி வரை உறவு, தான் செய்துவிட்ட தவறுக்காக துடிப்பதில் எதிரொலி, நீதி, புதிய பறவை , அழகான மெல்லிய நடிப்புக்கு முதல் மரியாதை, தீபம், தொழிலாளர் தோழனாக இரும்புத் திரை, உணர்ச்சி மிக்க நடிப்புக்கு அவன் தான் மனிதன், எங்கிருந்தோ வந்தாள், எங்க ஊர் ராஜா, பட்டிக்காட பட்டணமா, கீழ் வானம் சிவக்கும், நீதிபதி.
மிடுக்கான காவல் துறை அதிகாரியாக தங்கப் பதக்கம், வேடிக்கையான காவல் துறை அதிகாரியாக வெள்ளை ரோஜா, கலாய்க்கும் காவல் துறை அதிகாரியாக விடுதலை, பன்முக நடிப்புக்கு நவராத்திரி, ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் தங்கச் சுரங்கம், ராஜா.
இப்படிப் பல பல படங்களில் நம்மை மகிழ்வித்த அந்த நடிப்புலக வித்தகனைப் போல் இனி ஒருவர் வருவரோ?
அவரின் திரைப்படங்களுக்குத்தான் ஈடு இணைதான் உண்டோ?
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர் தம் படங்கள் நம் வழி வழி சந்ததியினரையும் மகிழ்விக்கும் என்றால் அது மிகையில்லை.
இணைய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - எவ்வளவோ வேலைகளுக்கு நடுவில் கிடைத்த இடைப்பட்ட நேரத்தில் , NT யின் மீது உள்ள பாசத்தினாலும் , மரியாதையினாலும் நாம் நம் பதிவுகளை -போடுகிறோம் - பதிவுகளை பார்த்தாலே அதில் எவ்வளவு உழைப்பு இருக்கு என்பது தெரியும் - போடும் பதிவுகளை பாராட்ட வேண்டாம் - குறைந்த பட்சம் அந்த பதிவுகளை அலசலாமே - அதன் மூலம் பல கருத்துக்களை பரிமாற வாய்ப்பு கிடைக்குமே - திரியின் வேகமும் அதிகரிக்கும் - அலசல்கள் முடியும் முன் துளிக்கூட சம்பந்தமே இல்லாமல் ஏன் மற்ற பதிவுகளை போடவேண்டும் ? இதனால் எடுத்துக்கொண்ட நல்ல படங்களும் சரியாக அலசபடுவதில்லை - போடும் பதிவாளர்களுக்கும் எதற்காக இப்படி உழைத்து பதிவுகளை போட வேண்டும் - மற்றவர்களை போல சும்மா படித்துவிட்டோ அல்லது ஒன்று இரண்டு வரிகள் எழுதிவிட்டு இருந்துவிடலாமே என்ற எண்ணம் கண்டிப்பாக வரும் - இந்த செயல் இந்த திரிக்கு ஆரோக்கியம் தரக்கூடியது அல்ல - மற்ற திரிகளை பாருங்கள் - எந்த பதிவும் மற்றவர்களின் எண்ண பரிமாரணம் இல்லாமல் இருப்பதில்லை - பாராட்டுவதை விடுங்கள் - ஒருவர் எழுதுவதை மற்றவர்கள் வரவேற்கிறார்கள் , எழுதுபவரை உற்சாகப்படுத்துகிண்டார்கள் - எழுதபவரின் பதிவுகளை அலசின பின்பே , புதிய பதிவுகள் வருகின்றன - அங்கு உள்ள ஒவ்வருவருக்கும் குறைந்தது 1000 பதிவுகளாவது குறைந்த காலகட்டத்தில் போடவேண்டும் என்று கனவு உள்ளது - சரியான விஷயங்கள் இல்லாவிட்டாலும் அங்கே எப்படியாவது , எதாவது போடவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வருவருக்கும் இருகின்றது - ஆனால் - இங்கே நம்மிடம் எழுத பல நல்ல விஷயங்கள் உள்ளன ; அலச பல பதிவுகள் உள்ளன - ஆனால் நமக்குதான் எழுத மனம் வருவதில்லை , அப்படியே எழுதினாலும் முந்தைய பதிவுகளுக்கு கொஞ்சம் கூட connect இல்லாமல் பதிவுகளை போடுகிறோம் -
முக்கியமாக ஒன்றை எல்லோரும் நம்ப வேண்டும் - இங்கு , மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்று யாருமே எழுத வில்லை - அப்படி பாராட்டுக்கள் கிடைத்தால் நல்லது - இன்னும் எழுத தெம்பு வரலாம் -ஆனால் எழுதுவது ஒரு ஆத்ம திருப்திக்காக தான் - நம் தலைவருக்கு ஒரு புஷ்பாஞ்சலி - அவள்ளவு எல்லோரும் சேர்ந்து இழுக்க தேர் ஓடவேண்டும் - ஒருவர் பதிவு போடும் போது அதை முறியடிக்கும் மாதிரி நாம் நம் கருத்துக்களை திணிக்கும் போது திரி கண்டிப்பாக தொய்வை சந்திக்க வேண்டிருக்கும்
எல்லோரும் எழுதுங்கள் - தட்டி கொடுத்த வண்ணம் முன்னே செல்வோம் - யாருமே போட்ட பதிவுகளை படிப்பதில்லை என்ற எண்ணத்தை எழுதபவர்களுக்கு உண்டாக்கவேண்டாம் - மற்றவர்கள் தன கருத்துக்களை முழுவதும் சொல்லிவிட்டாரா எண்டு தெரிந்துகொண்டபின் புதிய பதிவுகளை போட்டால் இந்த திரி மிகவும் ஆரோக்கியமாக முன்னே செல்லும் - இது என் தாழ்மையான கருத்து - யாரையும் புண் படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதவில்லை ---
அன்புடன் ரவி
நண்பர்களே,
வேலை பளுவின் காரணமாக பதிவிட இயலாவிடினும் படிக்க தவறுவதில்லை.இங்கு பதிவிடும் அனைத்து நண்பர்களின் பதிவுகளையும் ரசித்து வருபவன். நான் ஏதாவது சொன்னால் விபரீதமாகி விடுகிறது என்பதால் நகைச்சுவை,கிண்டல்,அறிவுரை,முதலியவற்றை தவிர்த்து என் பாட்டில் எழுதவே இருக்கிறேன். இதை தயவு செய்து உதாசீனம் என்று எண்ணவே தேவையில்லை. வாசு சார்,ராகவேந்திரா சார் கூடிய விரைவில் இணைவார்கள்.
RAVI sir
Your message to NT fans really a heart toching one all of us are closely following the thread and enjoying the stuff always with lot of interest and speed, perhaps due to personal reasons or lack of time acknowlegements has come down and no other reason otherwise. please continue the good wok as usual.
blessings.
Dear Ravi sir and Ragularam sir,
I have been wanting to respond to all your posts for quite sometime.
The posts that I have been publishing here is done either using my mobile or by using tab, most of the times during my travel in train or bus.
Today, I thought i should pen it from my system which is more flexible than the above two gadgets.
Coming back to the posts of Ragulram sir and Ravi sir....
First things first - It is certainly not a ordinary effort in sharing every enjoyment of yours here. Highly appreciable ! 3 cheers to both of you !
The way your description and analysis of the film and the performance of lead stars in equal footing is something not seen for quite sometime other than Neyveli Vasudevan Sir !
We do miss the Class writeups of Neyveli Vasudevan sir and though, i wanted to continue in the thread eagarai, I have forgotten the password of my login.
The class of writing , needless to say that it is our domain !
Ragulram sir's analysis of film and the lead stars is a "Badam Gheer" ! While Ravi sir's analysis of film and the lead stars is "Rasa Malai" ! Irendumae Thigattaadhadhu !
The "Nadai" both of you adapts is something superb and makes everyone enjoyable ! Most of the times, it makes most of us to feel that our writing is not up to the mark as both of you and may be that's
one reason of guilt that's preventing many of us from commenting even !
Both of you are spending quite a lot of time of value and contributing to the benefit of this thread and am sure, our "Appa's" blessing will always be with us.
3 cheers once again to both of you and my sincere thanks for your contribution to the glory of our APPA !
டியர் ரவி சார்,
இத்திரியின் பங்கேற்பாளர்களின் உழைப்பை என்றுமே, யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது. தங்களைப் போன்றவர்கள் திரி மற்றும் இணையதள பதிவுகள் மூலம் நடிகர்திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்ப்பதுபோல, என்னுடைய அலுவலகப் பணிக்கிடையே, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை பணியின் காரணமாக திரியின் ஆய்வுகளில் பங்கேற்க இயலவில்லை. என்னைப்போன்ற பலரும் திரைப்பட ஆய்வுகள் / அலசல்களில் பங்கேற்காவிட்டாலும், தொடர்ந்து திரியின் பார்வையாளர்களாக, ரசிகர்களாக இருக்கிறார்கள்.
புதிய(பழைய)பறவை கோபால் அவர்களின் மீள் வருகை அறிவிப்பும் நமக்கு புதுத் தெம்பூட்டியுள்ளது. இதுபோல மற்ற பதிவர்களும் வருவார்கள் என்று நம்புவோம்.
தாங்கள் ஒவ்வொரு முறையும் தெரிவிக்கும் கருத்துக்கள், ஆலோசனைகள் திரியின் நன்மை, வளர்ச்சிக்காகவே என்பதை அனைவரும் அறிவர். இருந்தாலும் சில சமயம் ஆர்வ மிகுதியில் சிலர் இத்தகைய பதிவுகளை இடுவதும் வருங்காலங்களில் தவிர்க்கப்படும் என்று நம்புவோம். நன்றி.
Thanks for your comments KC Sekar sir and Ravi Kiran Surya sir
அன்புள்ள ரவிகிரண் , KC Sekhar சார் , சுப்பிரமணியம் ராமஜெயம் அவர்களுக்கும் , வாசுதேவன் சார் எல்லோருக்கும் - என் பணிவான நன்றிகள் - நீங்கள் எல்லோரும் பாராட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பதிவுகளை போடுவதில்லை - என் மன சந்தோஷத்திற்காக மட்டுமே நான் இங்கு பதிவுகளை இடுகிறேன் - நான் சொல்லவந்ததே வேறு - இந்த திரி ஒரு "Relay race "ஆக இருந்தால் மிகவும் நன்றாக இருக்குமே என்ற ஒரு ஆசையில் தான் என் சொந்த கருத்துக்களை பதிவிட்டேன் - ஒருவர் ஒரு பட அலசலை முடித்தவுடன் அதை தொடர்ந்து - அந்த பட கதை , பாடல்கள் , அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் இவைகளை ஒவ்வருவராக அலசலாமே - திரியின் வேகமும் கூடும் , அந்த படமும் முழுவதும் ஆராயப்படும் - உதாரணத்திற்க்கு காவல் தெய்வத்தை எடுத்துகொள்வோம் - என் சிறிய அலசலுடன் அந்த படத்தின் அலசல் முடிந்துவிட்டதே - இதுதான் என் வருத்தம்.
அந்த படத்தில் ஆராய எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன - அந்த மாதி ஒரு side ரோல் , புகழின் உச்சியில் இருக்கும் எவராவது பணம் வாங்காமல் நடிப்பார்களா ? தன் மகள் தான் உலகம் என்று இருந்தவனை ஏன் தூக்கு கயிறு மட்டுமே வரவேற்க வேண்டும் ? எவ்வளவு அர்த்தமுள்ள வசனங்கள் , பாடல்கள் - இப்படி என்னும் அலசலை தொடர்ந்திருக்கலாமே !! ப்ராப்தம் கதையில் , வர்த்தக ரீதியில் தொய்வு கண்டு இருக்கலாம் - ஆனால் அந்த படத்தை பற்றி பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன - ராகுல்ராமின் அற்புதமான பதிவுகள் - நீரோடை போன்ற அவருடைய எண்ணங்கள் - ஆனால் அவர் பாட்டு எழுதிக்கொண்டே செல்கிறார் - நாமும் எங்கோ மழைபெய்வது போல வேறு விஷயத்தில் கவனம் செலுத்துகின்றோம் - ஏன் இந்த "DISCONNECT "???? -
NT யின் படங்களில் மட்டுமே அறிந்துக்கொள்ள , ஆராய , விவாதிக்க , உற்சாகபடுத்திகொள்ள எராளமான விஷயங்கள் இருக்கும் - ஒவ்வரு பாடலும் , கதையும் , நடிப்பும் ஒரு திரிக்கு சமமானவை . வெறுமனே படித்து செல்லாமல் ஒவ்வருவரும் , நேரம் கிடைக்கும் போது சில வார்த்தைகள் இருந்தாலும் போதும் - அவரவர்களின் எண்ண ஓட்டத்தை எழுத்து மூலம் தெரிவித்தால் - இந்த திரியின் வேகத்தை யாராலும் தடுக்க முடியாது - சமபந்தமே இல்லாமல் பதிவுகள் வரும் பொழுதுதான் - இந்த திரியின் ஆரோக்கியம் பாதிக்க படுகின்றது
என்னை பொருத்தவரையில் , NT யின் வெற்றி படங்களை விட அவருடைய வெற்றி இல்லாத படங்கள் தான் அதிகம் அவருடைய நடிப்புக்கு தீனி போட்டன - படங்கள் தோல்வியை சந்திக்கலாம் என்று தெரிந்தும் அவர் தன் நடிப்பில் , ஈடுபாட்டில் துரோகம் செய்ததே இல்லை , மாறாக இன்னும் நன்றாகவே தன திறமையை வெளி படுத்திருப்பார் - யாருக்கு இந்த நல்ல மனம் வரும் ? கொடையாளிகள் என்று சொல்பவர்கள் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும் - இப்படி உள்ள சில படங்களை ஏன் நாம் முழுவதும் அலசிய பின் வேறு தலைப்புக்கு செல்ல கூடாது ? இதுதான் என் ஆதங்கம் !!
அன்புடன் ரவி
திரியின் வேகத்தை எப்படி அதிகரிப்பது - ஒரு கற்பனை பதிவு - பெயர்கள் உட்பட
அசோக் : நமது 6வது திரி இந்த பதிவுடன் மிகவும் வெற்றிகரமாக முடிவடைகின்றது - அடுத்த பாகத்தை நமது நண்பர் , ராஜ ராஜ தொண்டைமான் அவர்கள் துவக்கி வைக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
முத்து : அருமையான யோசனை அசோக் அவர்களே !- தொண்டைமான் தான் சரியான நபர் - இந்த திரியில் அவர் உழைத்தது போல நம் தலைவர் கூட படத்தில் உழைத்திருக்க மாட்டார்.
கார்த்தவராயன் : அப்படி சொல்ல வேண்டாமே முத்து அவர்களே !- தொண்டைமானே தொவக்கட்டும்
ராஜு , ஸ்ரீதர் , செல்வ பாண்டியன் , கரும்தேள் கண்ணன் , முக்காடு மூவேந்தன் - ஆமாம் , ஆமாம் தொண்டைமானே தொவக்கடும் - தலைவர் புகழ் தாரணி எங்கும் பரவட்டும் - தமிழ் ஓங்கட்டும் - வருக வருக தொண்டைமான் அவர்களே !!
6வது திரி இப்படியே 350பக்கங்களை தொட்டு விட்டது
தொண்டைமான் : முத்து உங்களுக்கு தெரிந்திருக்கும் - "விட்டேனா உன்னை " என்ற படத்தில் தலைவர் தண்ணீரில் நின்று கொண்டிருப்பார் - அப்போது ஒரு பெரிய மீன் தன குட்டிக்கு , நீந்த சொல்லிகொடுக்கும் - அந்த குட்டி நீந்த முடியாமல் தவிக்கும் - நம் தலைவர் அதை கையில் எடுத்து தரையில் விடுவார் - தலைவா அப்படி செய்யாதீர்கள் என்று நாம் திரை அரங்கில் கத்தினோமே ! - பிறகு தான் தெரிய வரும் - அதுதான் அந்த சின்ன மீனுக்கு நீந்த சரியான வழி - தாய் மீன் உடனே தலைவரின் காலை தொட்டு முத்தமிடும் - அந்த காட்சியில் அழாதவர்களே கிடையாது தயாரிப்பாளர்கள் உள்பட -
முத்து : எப்படி மறக்கமுடியும் இந்த படத்தை - படம் 239.5 அரங்குகளில் 567 நாட்கள் ஓடி சுமார் 10 லட்சம் அந்த காலத்திலேயே சம்பாதித்து கொடுத்ததே - அதில் வரும் பாடல் ஒன்று உங்களுக்காக
பகலில் சந்திரன் வருவதில்லை
இரவில் சூரியனை காண்பதில்லை
ஏழையின் வீட்டிலோ உணவில்லை
மாடி விட்டிலோ அமைதி இல்லை "
அசோக் : அதே மாதிரி தலைவர் - "வரியா , வரவில்லையா " படத்தில் ஐஸ் கிரீம் சாப்பிடுவார் - சாப்பிட்டுவிட்டு அந்த கோனை ஒரு ஏழை பாட்டிக்கு தரும் போது கைத்தட்டல் வானை பிளக்கும்
தொண்டைமான் : இந்த திரி இவ்வளவு சீக்கிரமாக முடிவடையும் என்று நினைக்கவே இல்லை - இதுவரை சுமார் 45,47,78,001 பேர் இந்த பதிவை படிக்கிறார்கள் என்று நினைக்கும் போது தலைவர் தலைவரே , அவரை வெல்ல அவரால் தான் முடியும் என்று சத்தம் போட்டு சொல்ல தோன்றுகின்றது -----
அன்புடன்
ரவி
இப்படி நாம் நம் திரியை வளர்க்கவில்லை - அப்படி ஒரு வேலை வளர்த்திருந்தால் - இந்த நேரம் திரி 120வது பாகத்தை தொட்டிருக்கும் - என்ன உழைப்பு , எவ்வளவு கருத்துக்கள் , எத்தனை எண்ண ஓட்டங்கள் , எந்த மாதிரியான ஆவணங்கள் , எத்தனை ஆணி தரமான உண்மைகள் - இதையெல்லாம் மீறி எத்தனை பக்தி , dedication , hard work ? ஆனால் முயல் போல அதிகமாக உறங்கிவிடுகின்றோம் - அலசவோ ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றது - எழுதவோ ஏகப்பட்ட உண்மைகள் உள்ளது - இரண்டு மனம் எல்லோருக்கும் இருந்தால் - ஒன்று படிப்பதற்கு , இன்னும் ஒன்று நிறைய எழுதுவதிற்கு - இந்த திரி எவ்வளவு இன்னும் பிரகாசமாக எரியும் -------
அன்புடன் ரவி
நன்றி வினோத் சார் - உங்களை பற்றி நினைக்காத நாளே இல்லை - இங்கும் தொடருங்கள்
அன்புடன்
ரவி
நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் தமிழகத்திலே எங்கே எப்போது திரையிடப்பட்டாலும் அவை அனைத்தும் பரவலான ரசிகர்களை சென்றடைந்து நல்ல வசூலைப் பெற்று, வெளியிட்டவருக்கும் அரங்க உரிமையாளருக்கும் லாபத்தை ஈட்டிக் கொடுப்பதை நாம் இந்த திரியில் பல முறை செய்திருக்கிறோம். அந்த சந்தர்பங்களிலெல்லாம் நாம் உண்மையான விவரங்களை மட்டுமே பதிவு செய்கிறோம். தவறான dataவோ உண்மையில் வந்ததை விட அதிகப்படுத்தப்பட்ட வசூலோ நாம் சொல்வதில்லை.
இங்கே இதை குறிப்பிட காரணம் சென்ற வாரம் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் வெளியான சந்திப்பு திரைப்படம் ஓடிய ஒரு வார காலத்தில் 3804 பார்வையாளர்களை அரங்கிற்கு வரவழைத்திருக்கிறது. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்தவர்கள் எண்ணிக்கை 3804. அந்த அரங்கில் டிக்கெட் கட்டணம் ருபாய் 20/- மற்றும் 25/- ஆகும். அப்படியென்றால் என்ன வசூல் உத்தேசமாக வந்திருக்கும் என்பதை நமது திரி வாசிப்பாளர்களே உணர்ந்துக் கொள்ளலாம். 2014-ல் அந்த அரங்கில் வெளியான எந்த படமும் இந்த வசூலை பெறவில்லை எனபதை அரங்க உரிமையாளர் சொல்கிறார்.
எல்லா புகழும் நடிகர் திலகதிற்கே!
அன்புடன்
சென்ற 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். ராஜு என்ற மில் தொழிலாளி தன கடுமையான உழைப்பால் ராஜசேகரன் என்ற மில் முதலாளியாக மாறி தங்கைக்காகவே வாழ்ந்து மறைந்த கதை, காவியமாக திரையரங்குகளில் வலம் வர தொடங்கிய போது பல பல காரணங்களால் அந்த வலம், அந்த உலா தடைப்பட நேர்ந்தது. அதைப் பற்றிய பின்னணி தகவல்களும் காரண காரியங்கள் பற்றியும் ஒரு நீண்ட பதிவை நான் இங்கே பதிந்திருந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கும். அந்த பதிவில் நிறைவாக இந்தப் படம் சரியான முறையில் முன்னெடுத்து செல்லப்பட்டால் படம் நல்ல முறையில் வரவேற்கப்படும் என்றும் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களின் முதல் திருப்பிக் கிடைக்கும் என்றும் சொல்லியிருந்தேன்.
இப்போது படத்தை மூடியிருந்த இருள் விலகி மீண்டும் வெளிச்சக் கீற்று விழுவதற்க்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. அதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில்.
நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியீடு செய்யப்படுவதில்லை. அப்படி செய்தாலும் வரவேற்பு இல்லை/இருக்காது என்பது போன்ற ஒரு பொய் பிரச்சாரம் பரவலாக சில பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. நாம் அப்போதெல்லாம் அதற்கு அளித்த பதில் நடிகர் திலகத்தின் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டால் அவை நிச்சயமாக பெரிய வரவேற்ப்பை பெறும் என்று உறுதிபட கூறினோம். அதற்கேற்றாற் போல் 2010-11 ஆண்டுகளில் ஆரம்பித்து கர்ணன் மூலம் அது தமிழகமெங்கும் பரவி இன்று வெளியாகும் அனைத்து ஊர்களிலும் நடிகர் திலகத்தின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு அதை உறுதி செய்கிறது. இதன் காரணமாகவே சிவாஜி படங்களின் வெளியீட்டு உரிமையையும் பிரிண்டையும் வைத்துக் கொண்டிருக்கும் நபர்கள் இப்போது அரங்க உரிமையாளர்களை அணுகி சிவாஜி படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த பின்னணியில், வெகு நாட்களாக உரிமை வைத்திருந்த ஒருவர் மகாலட்சுமி திரையரங்கை அணுக அவருக்கு வெளியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அடுத்த வாரத்தில் மகாலட்சுமி அரங்கில் நடிகர் திலகத்தின் இரு துருவம் நண்பகல் காட்சியாக திரையிடப்படுகிறது. இதே நபர் அதே அரங்கில் எங்கிருதோ வந்தாள் படத்தை விரைவில் ரெகுலர் காட்சிகளில் திரையிடப் போகிறார்.
அது போன்று கோவை மாநகரில் மார்ச் 7-ந் தேதி முதல் நடிகர் திலகத்தின் சொர்க்கம் திரையியிடப்படப் போவதை சொல்லியிருந்தோம். அதில் ஒரு சின்ன மாற்றம். அது மார்ச் 14- ந் தேதி மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு surprise சந்தோஷம் ஒளிந்திருக்கிறது என செய்தி வந்திருக்கிறது. விவரங்கள் விரைவில்
அன்புடன்