http://i57.tinypic.com/2j1lr2f.jpg
http://i58.tinypic.com/snougi.jpg
நியூ பிராட்வே திரை அரங்கில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வாரம்
Printable View
http://i57.tinypic.com/2j1lr2f.jpg
http://i58.tinypic.com/snougi.jpg
நியூ பிராட்வே திரை அரங்கில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வாரம்
http://i60.tinypic.com/w0kdar.jpg
http://i57.tinypic.com/110yoeh.jpg
மேடையில் லஷ்மன் ஸ்ருதி குழு இசை நிகழ்ச்சி செய்யும் காட்சி
Tirupur Ravichandran sir convey my regards to Mr.V.P.Haridass.
Ravichadran sir thanks for uploding coimbatore images
sailesh sir thanks for uploading vellore images
esvee sir thanks for uploading bangalore images
loganathan sir thanks for uploading thalaivar birthday functions aayirathil oruvan 10th day posters and broadway thalaivar week posters.
:ty::ty::ty::ty::ty::ty::ty::ty::ty:
ayirathil Oruvan is a super hit yester year film which had MGR and Jayalalithaa in the lead roles. The overwhelming trade response for the digitally restored version of MGR’s Aayirathil Oruvan has overjoyed its makers. Coming 49 years after its original release, the superhit film starring MGR, Jayalalithaa and Nambiar will open on nearly 120 screens across the State.
While multiplexes like SPI cinemas and old cinema-houses like AVM and Albert had asked for the movie in Chennai, other theatres like Devi Paradise jumped into the fray and asked for a print on Wednesday, said G Chokkalingam of Divya Films, the firm that bought the original film and restored it digitally. And astonishingly, despite indie films like Adiyum Andhamum and Kadhal Solla Aasai releasing on Friday, the advance reservation in uptown multiplexes like Escape have been mind-blowing. “Some of the shows are nearly full all the way up to Wednesday, which almost never happens these days,” confirmed a theatre official. Coming from the same firm that digitally remastered and released Sivaji Ganesan’s Karnan, the MGR blockbuster has already outdone his old rivals film by quite a stretch. “Karnan was a period film, while Aayirathil Oruvan was a mass flick in 1965. Obviously, it will make waves now,” said distributor R Selvam.- courtesy net
Aayirathil Oruvan
Now that India’s election dates to Parliament have been announced – from early April to mid-May – a strict code of conduct is in place. Politicians and their parties have to abide by this code, formulated by the Election Commission.
But what happens if someone is both a film star and a politician? Or, what if someone had been a popular actress once upon time, and who is now a leading politician? It may help in the political fortunes of a candidate.
Officials of the Commission have made sure that public walls and spaces are stripped of the posters of politicians. But then there can be a way out of this, as one has seen in Coimbatore, the second largest city in Tamil Nadu after Chennai, and perhaps richer by far.
In Coimbatore or Kovai as it is called for convenience, the posters and banners of Tamil Nadu Chief Minister Jayalalithaa – whoseAIADMK is now in power in the state – have all gone.
But they have been replaced by the posters from the hugely popular 1965 Tamil movie, Aayirathil Oruvan (One in a Thousand), starring Jayalalithaa and M G Ramachandran (a former Tamil Nadu chief minister).
Why have the movie posters appeared now? In what seems like a perfect timing, Aayirathil Oruvan has been digitally restored and re-mastered, and the brand new prints are now being screened in theatres across Tamil Nadu. The film may well run for weeks.
When it first opened in the mid-1960s, it proved to be a great hit, and had some of the leading actors of the day, like Nambiar (who was as great a screen villain as Pran in Hindi cinema was), comedian Nagesh (as witty as Mehmood), R S Manohar and Madhavi, besides the lead – Jayalalithaa and MGR.
Directed by the legendary B R Panthulu (who made classics like Kappalotiya Tamizhan and Karnan), Aayirathil Oruvan ran for 100 days in Chennai and other Tamil Nadu centres, and helped the helmer clear the debts he had accumulated earlier
What is more, the movie firmed up the lead pair, and they went on to act together in 28 other films – a relationship that eventually led to a political understanding. Jayalalithaa became MGR’s successor in the AIADMK.
The plot of Aayirathil Oruvan is an exciting mix of piracy, adventure on high seas and romance with some lilting numbers thrown in.
With the songs from the Aayirathil Oruvan playing and the posters from the movie showing a young Jayalalithaa and MGR splashed across, the implication cannot be missed.
Even if these film posters are removed, one presumes that the movie itself cannot be taken off the theatres. And Aayirathil Oruvan with its powerful message may well move the electoral masses.- courtesy net
மக்கள் திலகத்தின் ''திருடாதே '' இன்று 53 ஆண்டுகள் நிறைவு தினம் .
http://i60.tinypic.com/2uxvl3m.jpg
சமூகப்படங்களில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிய படம் . மக்கள் திலகம் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்த
சமூகப்படம் .மக்களுக்கு திருட்டு தொழிலால ஏற்ப்படும் விளைவுகளை அருமையாக சித்தரித்த படம் .
1961ல் மிகப்பெரிய வெற்றி படங்கள் பவனி வந்த நேரத்தில் வெளிவந்து சாதனை படைத்த மக்கள் திலகத்தின் படம் .
பல இடங்களில் 100 நாட்கள் மேல் ஓடி சாதனை புரிந்த படம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு -இனிய பாடல்கள்
படத்தின் மிகப்பெரிய வெற்றியாகும் .குடும்ப படங்களின் கதை மையமாக கொண்டு வந்த படங்களின் நடுவே
சமூக சீர்திருத்த கதையினை துணிச்சலுடன் எடுத்து மாபெரும் வெற்றி கண்ட படம் .
http://i59.tinypic.com/35m13ld.jpg
TODAYS TIMES OF INDIA ADVT
courtesy - MALAIMALAR
சமூகப் படங்களுக்கு எம்.ஜி.ஆரை திருப்பிய "திருடாதே மிகப்பெரிய வெற்றி
எம்.ஜி.ஆர். பொதுவாக சரித்திரப் படங்களிலும், ராஜாராணி படங்களிலும் நடித்து வந்தார். ஒரு சில சமூகப் படங்களில் நடித்தாலும், வேட்டி_ சட்டை அணிந்து நடிப்பார். அவர் கோட்டு_ சூட்டு முதலான நவீன உடைகள் அணிந்து நடிக்க வழி வகுத்த படம் "திருடாதே" இந்தப்படம் உருவானதில் ஒரு கதையே அடங்கி இருக்கிறது.
இதுபற்றி, தமிழரசு கழகப் பிரமுகரும், பட அதிபரும், பிற்காலத்தில் அகில இந்திய சிவாஜிகணேசன் ரசிகர் மன்றத்தின் தலைவராக ஆனவருமான சின்ன அண்ணாமலை, ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:- "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ராஜாராணி கதைகளில் நடித்து புகழ் பெற்று கொண்டிருந்த சமயம். அவர் நடித்துக் கொண்டிருந்த `சக்ரவர்த்தி திருமகள்' என்ற திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
`சக்ரவர்த்தி திருமகள்' ஒரு ராஜாராணி கதைதான். எம்.ஜி.ஆர்.தான் அதில் கதாநாயகன். அஞ்சலிதேவி கதாநாயகி. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் _மதுரம் அதில் நடித்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் எனக்கு முன்னமேயே நல்ல பழக்கம் உண்டு. எம்.ஜி.ஆருடன் நான் நெருங்கிப் பழகியது `சக்ரவர்த்தி திருமகள்' படப்பிடிப்பின்போதுதான். படப்பிடிப்பின் இடைவேளையில் அரசியலைப் பற்றி சலிக்காமல் விவாதம் செய்வார். படப்பிடிப்பு காலங்களில், தினமும் நாங்கள் ஒன்றாகவே சாப்பிடுவோம். அதனால்
எம்.ஜி.ஆருடன் மிக நெருங்கிப் பழகவும் _மனம் விட்டுப் பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், "நீங்கள் ஏன் ராஜா_ ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?" என்று கேட்டேன். "சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்" என்று சொல்லி பேச்சை வேறு திசைக்கு கொண்டு சென்றுவிட்டார். அப்போது எம்.ஜி.ஆர். `பாகவதர் கிராப்'தான் வைத்திருப்பார்.
எம்.ஜி.ஆருக்கு ஒரு பலகீன மனப்பான்மை இருக்கிறது என்று நான் ïகித்தேன். அதாவது தனக்கு, சமூகக் கதைக்கு ஏற்றமுகம் இல்லை. தற்கால கிராப் வைத்தால் பார்க்க நன்றாக இராது. கத்திச்சண்டை முதலியவைகள் சமூகக் கதையில் போட முடியாது. அம்மாதிரி சண்டை இல்லை என்றால் படம் ஓடாது என்று எண்ணிக்கொண்டுதான், சமூகக் கதையில் நடிக்க முயற்சிக்கவில்லை என்று நான் எண்ணினேன்.
பின்னர் ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், "நான் ஒரு சமூகக் கதை எடுக்கலாம் என்றிருக்கிறேன். தாங்கள்தான் அதில் நடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன். எம்.ஜி.ஆர். சிறிது நேரம் யோசித்து, "சரி, தங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. நல்ல கதையாகப் பாருங்கள்" என்று சொன்னார். நான் முன்னமே இந்திப்படமான `பாக்கெட் மார்' என்னும் கதையை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். ஆகவே அப்படத்தைப் போட்டு எம்.ஜி.ஆருக்குக் காண்பித்தேன். அவருக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. "சரி. இந்தக் கதையையே எடுக்கலாம். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று சொன்னார்.
மறுநாள் சியாமளா ஸ்டூடியோ மேக்_அப் அறையில் எம்.ஜி.ஆர். மேக்கப் போட்டுக்கொண்டிருக்கும் போது, நானும் எனது கூட்டாளியான வி.அருணாசலம் செட்டியாரும் சென்று "சாவித்திரி பிக்சர்ஸ்" என்ற பெயரில் ஒரு கம்பெனி துவங்கியிருக்கிறோம். அதில்தான் தாங்கள் நடிக்கும் படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்" என்று சொன்னோம். எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியடைந்து, மிகவும் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். "எனக்கு படங்கள் அதிகமிருக்கிறபடியால், ஆறு மாதத்திற்கு அவைகளுக்கெல்லாம் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். ஆனால் `கால்ஷீட்' நேரம் பூராவும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரைதான் கொடுத்திருக்கிறேன். அதனால் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தினமும் சூட்டிங் நடத்தினால் படத்தைச் சீக்கிரம் முடிக்கலாம். அதற்கு தகுந்தாற்போல நடிகர்_ நடிகைகளை போடவேண்டும். குறிப்பாக கதாநாயகியை புதுமுகமாகப் போட்டால்தான் நம் சவுகரியம் போல் சூட்டிங் நடத்தலாம்" என்று சொன்னார்.
நான் அப்போது பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் கம்பெனியில் `தங்கமலை ரகசியம்' என்ற திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். `தங்கமலை ரகசியம்' எனது கதையாதலால் என்னை பந்துலு தன் கூடவே வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் சென்னை கடற்கரையில் தனிமையாக உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
அப்போது அங்கு டைரக்டர் கே.சுப்ரமணியத்தின் புதல்வி பத்மா சுப்ரமணியம் (பரதநாட்டியக் கலைஞர்) வந்தார். அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்தாள். என்னைக் கண்டதும் பத்மா அங்கேயே உட்கார்ந்தார். பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வரும்போது, நான் `தங்கமலை ரகசியம்' என்ற திரைப்படத்துக்கு கதை எழுதியிருப்பதையும், அதில் வேலை செய்து வருவதையும் சொன்னேன்.
உடனே பத்மா, "இந்தப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவள். தாய்மொழி கன்னடம். கன்னடப் படத்திலும் நடித்திருக்கிறாள். தமிழ்ப்படத்திலும் நடிக்க வேண்டுமென்பது ஆசை. ஏதாவது தமிழ்ப்படத்தில் ஒரு சிறு `சான்ஸ்' கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்க" என்று கேட்டுக்கொண்டார். "தங்கமலை ரகசியம்" படத்தில் அழகு மோகினி, யவ்வன (இளமை) மோகினி என்று இரண்டு பெண்கள் நடனமாடும் காட்சி வருகிறது. அதில் ஒரு நடன மணியாகப் போடலாம். நான் பந்துலு அவர்களிடம் சொல்கிறேன்" என்று சொன்னேன்.
பத்மா சிபாரிசு செய்த பெண், மாநிறமாக இருந்தார். ஆனால் அவர் முகம் கேமிராவுக்கு ஏற்றதாக தோன்றியது. மறுநாள் பந்துலுவிடம் அப்பெண்ணைச் சிபாரிசு செய்தேன். மேற்படி பெண்ணை அழைத்து வந்தார்கள். நடனமணிகளில் ஒருத்தியாகப் போட பந்துலு சம்மதித்தார். அழகு மோகினி, யவ்வன மோகினி நடன சூட்டிங் ரேவதி ஸ்டூடியோவில் நடந்தது. படத்தின் டைரக்டர் பந்துலு, நடிகர் திலகம் சிவாஜி நடிக்கும் வேறு காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தபடியால், மேற்படி நடனக் காட்சியை டைரக்ட் செய்யும்படி ப.நீலகண்டனை ஏற்பாடு செய்திருந்தார்.
பத்மா சிபாரிசு செய்த பெண், மேக்கப் போட்டு அலங்காரம் செய்து கொண்டு வந்து காமிரா முன் நின்றார். காமிரா மூலம் அந்தப் பெண்ணின் உருவத்தைப் பார்த்த நீலகண்டன், என்னை தனியாக கூப்பிட்டு, "இந்தப் பெண், காமிராவுக்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள். எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய நடிகையாக வருவாள். கொஞ்சம் யோசியாமல் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்" என்று சொன்னார். பின்னர் நடனக்காட்சி படமாக்கப்பட்டு, தியேட்டரில் போட்டுப் பார்த்தோம். எல்லோரும் `ஆகா' என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண் காட்சி அளித்தார். அந்தப் பெண் வேறு யாருமல்ல, பின்னர் தமிழ்நாட்டில் மிகப் பெரிய கதாநாயகியாக விளங்கிய சரோஜாதேவிதான்!
சொன்னால் நம்பமாட்டீர்கள், `தங்கமலை ரகசியம்' படத்தில் நடனம் ஆடியதற்கு சரோஜாதேவிக்கு அப்போது பந்துலு கொடுத்த பணம் ரூபாய் இருநூற்றி ஐம்பதுதான்! பின்னர் அதே பந்துலு, அதே சரோஜாதேவிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் உண்டு. டைரக்டர் நீலகண்டன் சொல்லியபடி உடனே மூன்று படங்களுக்கு சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தேன். ஒவ்வொரு படத்திற்கும் பணம் எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்? முதல் படத்திற்கு ரூபாய் மூவாயிரத்து ஐநூறு. இரண்டாவது படத்திற்கு ரூபாய் ஏழாயிரம். மூன்றாவது படத்திற்கு ரூபாய் பத்தாயிரம்.
மேற்படி ஒப்பந்தம் முடிந்ததும், எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று புதுமுகம் சரோஜாதேவி பற்றி சொன்னேன். "ஒரு `டெஸ்ட்' எடுங்கள் பார்க்கலாம்" என்று சொன்னார். `சரி' என்று சிட்டாடல் ஸ்டூடியோவில் ஒரு `டெஸ்ட்' எடுத்தோம். "டெஸ்ட் எடுப்பது" என்பது, பலமாதிரி நடிக்கச் சொல்லி படமாக எடுப்பது. `டெஸ்டை' எம்.ஜி.ஆர். பார்த்தார். கூட நாங்கள் சிலரும் பார்த்தோம். சரோஜாதேவி நடந்து போகும்போது ஒரு கால் தாங்கித் தாங்கி நடந்து சென்றதைச் சிலர் எம்.ஜி.ஆரிடம் சுட்டிக் காட்டினார்கள். அதற்கு எம்.ஜி.ஆர். `அதுவும் ஒரு `செக்ஸி'யாகத்தானே இருக்கிறது! இந்தப் பெண்ணையே கதாநாயகியாகப் போட்டுவிடுங்கள்" என்று சொன்னார்.
எங்களது "சாவித்திரி பிக்சர்ஸ்" என்ற நிறுவனத்தின் மூலம் `பாக்கெட்மார்' என்ற இந்திப்படக் கதையை தமிழில் எடுப்பது என்றும் அதில் எம்.ஜி.ஆர் _சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும், பா.நீலகண்டன் டைரக்ட் செய்வதென்றும், ஏ.எல்.சீனி வாசன் "நெகடிவ்" உரிமை வாங்கிக் கொள்வதென்றும் முடிவு செய்து, வேலை துவங்கினோம். படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர், "எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம். அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும். பணம் செலவு செய்து `போஸ்டர்' ஒட்டுகிறோம். பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச்சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்" என்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.
எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில் எங்கள் குழுவைச் சேர்ந்த மா.லெட்சுமணன், மேற்படி படத்திற்கு "திருடாதே" என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமுகமாக ஆதரித்தோம். எம்.ஜி.ஆருக்கும் அந்தப்பெயர் ரொம்பவும் பிடித்துவிட்டது. மா.லெட்சுமணனுக்கு 500 ரூபாயை எம்.ஜி.ஆர். கொடுத்தார். `திருடாதே' படம் வேகமாக வளர்ந்து வந்தது. எம்.ஜி.ஆரும், "திருடாதே" படத்தை மிக நன்றாக தயாரிக்க ரொம்பவும் உதவியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கால் ஒடிந்துவிட்டது. படுத்த படுக்கையாகிவிட்டார். நானும் அடிக்கடி போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வருவேன். ஒரு நாள் எம்.ஜி.ஆர். என்னிடம், "என் கால் குணமாகி நான் படப்பிடிப்பிற்கு வர எவ்வளவு நாள் ஆகுமென்று தெரியாது. அதுவரையில் நீங்கள் காத்திருந்தால் உங்களுக்கு வீண் சிரமம் ஏற்படும். படத்தின் மீது வாங்கியிருக்கும் கடன்களுக்கு வட்டி அதிகமாக ஏறிப்போகும். ஆகவே படத்தை ஏ.எல்.எஸ். அவர்களுக்கே கொடுத்து விடுங்கள். உங்களுக்கு நான் லாபமாக ஒரு நல்ல தொகை தரச் சொல்லுகிறேன்" என்று சொன்னார். நான் சிறிது யோசித்தேன். அவர் விடவில்லை. "என் பேச்சை கேளுங்கள்" என்று விடாப்பிடியாகச் சொன்னார். `சரி' என்று ஒப்புக்கொண்டேன். அவர் சொன்னபடியே எல்லாம் செய்து கொண்டோம். `திருடாதே' படத்திற்காக எனக்கு கிடைத்த பணத்தை வைத்துத்தான் `கடவுளின் குழந்தை' என்ற படத்தை நான் எடுத்தேன்.
அதன்பின் "திருடாதே" ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடியது. அந்தப் படத்துக்கு நான்தான் அஸ்திவாரம் என்ற உண்மை பலருக்கு தெரியாமல் போயிற்று. ஆனால், சரோஜாதேவிக்கு எல்லாம் தெரியும். அதனால் `திருடாதே' நூறாவது நாள் வெற்றி விழா நடைபெற்ற அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் கொண்டு வந்து என்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்து கொடுத்துவிட்டுச் சென்றார். இவ்வாறு சின்ன அண்ணாமலை கூறியுள்ளார். "திருடாதே" தயாராவதில் மிகவும் தாமதம் ஆனதால், "நாடோடி மன்னன்", "கல்யாணப் பரிசு" ஆகிய படங்கள் அதற்கு முன்னதாகவே வெளிவந்துவிட்டன. அவற்றின் மூலம் சரோஜாதேவி பெரும் புகழ் பெற்றார்.
2011
எம்.ஜி.ஆர். படவிழா : திரண்ட பழைய நடிகைகள்
எம்.ஜி.ஆர். -சரோஜா தேவி ஜோடியாக நடித்து 1961-ல் வெளியான படம் திருடாதே. இப்படத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை அதை தயாரித்த ஏ.என்.எஸ். புரடக்ஷன் படநிறுவனம் தியாகராயநகர் ஜெர்மன் ஹாலில் இன்று நடத்தியது.
விழாவில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள், அவர் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.
நடிகை சரோஜாதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பழைய நடிகைகள் ஜெயச்சித்ரா, ஷீலா, சி.எஸ்.சரோஜா, ராஜசுலோசனா, ராஜஸ்ரீ, சி.ஐ.டி. சகுந்தலா, ரத்னா, எஸ்.என்.பார்வதி, நடிகை சாவித்ரி மகள் விஜயா சாமூண்டீஸ்வரி, பின்னணி பாடகர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் ஏ.என்.எஸ். புரடக்ஷன் சார்பில் ஜெயந்தி கண்ணப்பன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் 50 வயதை தாண்டிய எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மனைவி, குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
நடிகைகள் எம்.ஜி.ஆருடன் நடித்த அனுபவங்களை மேடையில் பேசினார்கள். விழாவையொட்டி அரங்கின் வெளியே எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் கண்காட்சி இடம் பெற்றது. என்கடமை, திருடாதே, நாடோடி மன்னன், அன்பேவா உள்ளிடட பல படங்களின் ஸ்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.
எம்.ஜி.ஆர். உருவப்படங்களின் பேனர்கள் கட்டி இருந்தனர். எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் கிளிப்பிங் காட்சிகள் மற்றும் பாடல்கள் திரையில் காட்டப்பட்டது. பழைய ரசிகர்களின் விசில் சத்தம் காதை பிளந்தது. அவர்கள் மகிழ்ச்சியில் நடனம் ஆடினார்கள்.
"இந்த உலகில் இரண்டே இரண்டு சக்திகள்தான் மிகுந்த பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை கத்தியும், புத்தியும் தான். ஆனால் போகப்போக கத்தியின் சக்தி எப்போதும் அறிவின் பலத்திற்கு முன்னால் தோற்றுப்போய் விடுகிறது.”
- மாவீரன் நெப்போலியன் போனபார்ட்
வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம். இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.
இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல் "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்
"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -
சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.
பாடல் மேலும் வளர்கிறது :
"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."
எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.
தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.
"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. - என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.
மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது."
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார்
http://i57.tinypic.com/fnvgpl.jpg
இன்று (22.03.2014) பிறந்த நாள் காணும் எங்கள் எம்ஜிஆர் குடும்ப நண்பர் திருப்பூர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் நீண்ட நெடுங்காலம் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்போடும் இதய தெய்வத்தின் புகழ்பாடி வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
FROM TO DAY
MADURAI - TIRUPPARNGUNDRAM - LAKSHMI
MAKKAL THILAGAM MGR IN NADODI MANNAN
http://i60.tinypic.com/2957ipu.png
http://i58.tinypic.com/vxdu05.jpg
இன்று பிறந்த நாள் காணும் அருமை சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு,
எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அன்பான வாழ்த்துக்கள் !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகளையும் , அரசியல் வெற்றிகளையும் ஏற்று கொள்ளாத சிலரின் பதிவுகள் பரிதாபமாக உள்ளது . எம்ஜிஆரின் தனி திறமைகள் பற்றி
உலகமே நன்கு அறியும் . குறிப்பாக அவருடைய சண்டை காட்சிகளில் அவருடை ஸ்டைல் ,
வாள் வீச்சு கம்பீரம் - விறுவிறுப்பு - சுறுசுறுப்பு மற்ற சண்டை காட்சிகளில் அவருடைய
விவேகம் - ரசிகர்களுக்கு என்றென்று விருந்தாகும் .
ஆயிரத்தில் ஒருவனில் நம்பியாரோடு மோதும் வாள் வீச்சு சண்டை காட்சிகள் அனல் பறக்கும் .
நடிகர் திலகத்தின் பல ரசிகர்கள் இந்த படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பையும் சண்டை காட்சிகளில் அவருடைய வீரத்தையும் மனதார பாராட்டி உள்ளார்கள் .
நடிகர் திலகத்தின் ரசிகர் என்று சொல்லி கொண்டு ஒரு நண்பர் எந்த அளவிற்கு எம்ஜிஆரை
தரமின்றி விமாசிக்க முடியுமோ அந்த அளவிற்கு தரமிறங்கி பதிவிட்டுள்ளது அவருடைய
அறியாமையை காட்டுகிறது .அவருக்காக பரிதாப படுகிறோம் .
ஆயிரத்தில் ஒருவன் - பிரமாண்ட மகுடம் . சந்தேகமில்லை . வெற்றியின் பாதிப்பு மறுக்கவில்லை .
பெங்களுர் சாரதா அரங்கில் தற்போது ஆயிரத்தில் ஒருவன் நடை பெறுகிறது .
http://i61.tinypic.com/34phmw3.jpghttp://i61.tinypic.com/2u8dp2f.jpg
1965 முதல் வெளியீட்டில் இதே அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்பட்டு 9 வாரங்கள்
ஓடியது . 1965க்கு பின்னர் பல முறை இந்த அரங்கில் மறு வெளியீடு களில் வந்துள்ளது .
கடைசியாக இந்த அரங்கில் 2009ல் ஆயிரத்தில் ஒருவன் 2 வாரங்கள் ஓடியது . 5 ஆண்டுகள்
இடைவெளிக்கு பிறகு தற்போது ஆயிரத்தில் ஒருவன் ஓடிகொண்டிருப்பது -திரை உலகினருக்கு
வியப்பளிக்கிறது .
Happy returns of the day Tirupur Ravichandran Sir.
http://i60.tinypic.com/2uqmxht.jpg
பேரறிஞர் அண்ணாவின் கூட்டம் தமிழ் இனத்தை மீட்டெடுத்தது .வேனில்
பயணித்தவாறு ,பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்களை சந்திக்கும் காட்சி.
http://i61.tinypic.com/2ip2k9.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் கூட்டம் அசலான தமிழ்
வளர்ச்சிக்கு உதவியது.கூட்டத்தின் நடுவே, வேனில் நின்று கொண்டு
புரட்சி தலைவர் மக்களை பார்த்து கை அசைக்கும் காட்சி.
செய்தி/புகைப்படங்கள் வெளியீடு:இந்த வார கல்கி இதழ்.
நன்றி: கல்கி இதழ்.
esvee,
Good recollections about Thirudathe movie. Apart from 'thirudaathe paappa', the other popular song is 'ennaruge nee irunthaal' by PBS & PS. Two tidbits about this song:
* This was actually composed by MSV but came out as by SM Subbaia Naidu
* This is one of the very few songs PBS sang for MGR. What are the other songs? MGR fans can guess them.
வணக்கம் , எட்டாவது வள்ளல் எம் ,ஜி.ஆர் புகழ் பாடும் , மக்கள் திலகம் பகுதி 8 இணைவதில் பெருமை கொள்கிறேன் .இதில் இணைந்துள்ள என் உடன் பிறப்புகளுக்கு அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள் பல .இதில் நான் இணைவதற்க்கு உறுதுணையாக இருந்த அண்ணன் இராமமூர்த்தி ( வேலூர் ) அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்,மற்றும் எனக்கு வாழ்த்து கூரிய அண்ணன் வினோத் அவர்களுக்கும் நன்றிகள் பல.நம் புரட்சிதலைவர் ஆசியுடன் தொடருகிறேன் . ''புரட்சிதலைவர் நாமம் வாழ்க '' நன்றி வணக்கம் .
One Good news AAYIRATHIL ORUVAN Pvr Cinemas tomorrow 4.00 pm show House full
:2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup::2thum bsup::2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup:
tomorrow devi paradaise 3.45 pm show advance booking going so fast