Sundar Rajan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...00&oe=5A6C8F25
Sundar Rajan
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
பத்திரிக்கையாளர்களுக்கும், மீடியாக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒரு மாபெரும் குழப்பம்,
சிவாஜி அவர்கள் இறந்து 16 வருடங்கள் ஆகிவி...ட்டது, ஆனால் அவர் மீது அன்பு வைத்திருந்த ரசிகர் கூட்டம் குறைந்தபாடில்லை. எந்தவித அரசு பதவிகளை வகித்தவரில்லை. பணம் கொடுத்து கூட்டம் சேர்க்க முடியாமல், பள்ளி மாணவர்களை வைத்தும் கூட்டம் சேர்க்க முடியவில்லை. ஆனால்
சிவாஜி என்று சொன்னால் தானாக கூட்டம் வந்து விடுகிறது என்பது புதிராக இருக்கிறது.
இதோ இந்த படத்தைப் பாருங்கள், இந்த போட்டோ கிட்டத்தட்ட 72ல் இருந்து 78க்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது நமது மக்கள்தலைவர் அவர்கள் உச்சத்தில் இருந்த நேரம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் ரசிகர்களுக்கு மத்தியில் எப்படி அமர்ந்திருக்கிறார் பாருங்கள்.
இப்போது சில நடிகர்களை பார்ப்பதே குதிரைக்
கொம்பாக இருக்கிறது. பிறகு எப்படி போட்டோ எடுப்பது.
உலகில் எந்த நடிகரும் இப்படி தன் ரசிகர்ளுடன் அளவளாவியது கிடையாது என உறுதியாக சொல்லலாம்.
அது போல், அதிக ரசிகர்கள் திருமணத்திலும், அவர்களது இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் தான்.
இது தான் இன்றும் சிவாஜி என்ற மந்திர வாா்த்தைக்கு மயங்கி கிடக்கிறோம்.
என்றும் மயங்கிக் கிடப்போம்.