http://oi66.tinypic.com/2r2ozee.jpghttp://oi67.tinypic.com/e0orah.jpghttp://oi68.tinypic.com/vh9cms.jpghttp://oi65.tinypic.com/10s5182.jpghttp://oi68.tinypic.com/35n0kdl.jpg
நன்றி
Printable View
http://oi63.tinypic.com/2qn2s2b.jpg
நன்றி Sivaji Group
அரசியல் அதிகாரம், ஏவல்துறை பின்புலம் ,ரவுடிக்கும்பல்கள் , மற்றும் கைக்கூலிகள் இவற்றின் துணையுடன் உங்கள் நடிகர் எங்கள் நடிகருக்கு செய்த அட்டூழியங்கள் துரோகத்தனங்களை எண்ணி ஒன்றும் செய்ய இயலாமையால் நாங்கள் கண்ணீர் வடிப்பது உண்மைதான்.Quote:
Yesterday, 03:52 AM #1265
சினிமா & அரசியல் சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜிக்கு எதிர்ப்பு என்பது மிக மிக குறைந்த அளவே . அதேபோல் அவருக்கும் அவருடைய படங்களுக்கும் எந்தவித சங்கடங்களோ பிரச்சனைகளோ வந்தது இல்லை சிவாஜிக்கு பத்திரிகைகள் பேராதரவு மிகவும் அதிகம் . மேலும் சிவாஜி கிடைத்த வேடங்களை எல்லாம் ஏற்று நடிப்பிற்கு தீனி போட்டார் .சென்சார் பாதிப்புகள் இல்லை .மேல்தட்டு மக்கள் பெரும்பாலும் அவருக்கு ரசிகர்களாக இருந்தார்கள் .காங் கட்சியின் ஆதரவும் இருந்தது . திமுக தரப்பில் இருந்து மட்டும் பல நேரங்களில் சிவாஜியின் நடிப்பை கிண்டல் கேலி செய்வார்கள் .போஸ்டரில் சாணி அடித்தார்கள்
.
சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் பணமும் கிடைத்தது ,.ஒரு கட்டத்தில் அவருடைய நடிப்பு மக்களுக்கு சலிப்பை உண்டாக்கியது .
1975க்கு பிறகு சிவாஜியின் படங்கள் குறிப்பிட்டு சொல்லும்படி சில படங்கள் மட்டும் வெற்றி கண்டது .
அரசியலில் சிவாஜி மிகவும் பரிதாபமாக காணப்பட்டார் .கூட இருந்தவர்களும் சொந்த ரசிகப்பிள்ளை களும் காலை வாரி விட்டார்கள் .
சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்த இடத்தில இருந்தார் . அரசியலில் கடைசி இடத்தில நின்று காணாமல் போனார் .
நடிப்பில் பெயர் பெற்றதால் நடிகர்திலகம் பட்டம் மட்டுமே நிலைத்துவிட்டது .
உண்மை நிலவரம் புரியாமல் சிவாஜியின் புகழை மறைத்தார்கள் .எம்ஜிஆரின் புகழை திணித்தார்கள் என்றெல்லம் ஓலமிட்டு வரும் சிலரின் கூக்குரல் கேட்க்காமல் இல்லை .சிவாஜிக்கு எது கிடைக்க வேண்டுமோ அது கிடைத்தது ..மனசாந்தி இல்லாமல் காலமெல்லாம் கண்ணீர் வடிக்கும் சிவாஜியின் பிள்ளைகளின் இயலாமை கண்டு பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய இயலும் ? Courtesy : fb.,
ஆனால் சிவாஜி கணேசனுக்கு செய்த அட்டூழியங்கள் துரோகத்தனங்களுக்காக உங்கள் நடிகர் கடைசி காலத்தில் தான் செய்த பாவங்களை கழுவுவதற்காக சிவாஜி கணேசனை தான் கிடந்த வைத்தியசாலைக்கே அழைத்து பாவமன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு அழுதது உச்சத்திலும் உச்சம்.
தமிழ் சினிமா உலகில் 1952ல் ஒரு விடிவெள்ளி வெளிப்பட்டது
அந்த விடிவெள்ளிதான் கலை உலக சக்கரவர்த்தி
வி சி கணேசன் எனும் பெயர் கொண்ட சிவாஜி என எல்லோராலும் அறியப்பட்ட
சிம்மக்குரலோன்,நடிகர் திலகம், நிஜ கொடைவள்ளல் பத்மஶ்ரீ சிவாஜி கணெசன் அவர்கள்
1952ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி பட்டி தொட்டி எங்கும் சாதனை படைத்து வெள்ளிவிழா கண்ட
பராசக்தி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பாற்றலை வெளிக்காட்டியிருந்தார்.
முதல் படத்தின்மூலமே நிஜ வள்ளல் மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றவராகிவிட்டார்
இவரது புயல் வேக வருகை காரணமாக , இவர் வருவதற்கு முன் பல வருடங்களாக தமிழ் சினிமா உலகில்
நடித்துக்கொண்டிருந்த பல நடிகர்களும் இவர்மேல் பொறாமை கொண்டார்கள்.அப்படி இவர்மேல் பொறாமை கொண்டவர்களில்
ஒரு நடிகர் நிஜ வள்ளலை வீழ்த்த செய்த சதிகள் ,துரோகங்கள் ,அட்டூழியங்கள் கணக்கில் அடங்காது.
அப்படி என்ன செய்தார் காத்திருங்கள்.
தொடரும்.......
Sivaji Ganesan Filmography Series
29. Thenali Raman தெனாலி ராமன்
தணிக்கையான நாள் 30.01.1956
வெளியான நாள் 03.02.1956
விக்ரம் புரொடக்ஷன் அன்பளிப்பு
சிவாஜி கணேசன் – தெனாலிராமன்
என்.டி.ராமராவ் – கிருஷ்ணதேவராயர்
வி.நாகையா – அப்பாஜி
எம்.என். நம்பியார் – ராஜகுரு
பானுமதி – கிருஷ்ணா
ஜமுனா – கமலா
பாலசரஸ்வதி – ராதா
சந்தியா – திருமலாம்பாள்
வேணுபாய், இந்திரா ஆச்சாரி, இந்திரா, சுசீலாராணி, லக்ஷ்மிகாந்தம், மாஸ்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் பலர்
வசனம் – கவிஞர் கண்ணதாசன்
பக்திக் கருத்துக்கள் ஸ்ரீ முருக தாஸா அவர்கள் எழுதியது
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், ஆத்மநாதன்
இசை அமைப்பு – விஸ்வநாதன் – ராம்மூர்த்தி
பின்னணி பாடியவர்கள் – பி.லீலா, பாலசரஸ்வதி, கோமளா, சுசீலா, சௌந்தர்ராஜன், வி.என்.சுந்தரம், கண்டசாலா
நடன அமைப்பு – கோபாலகிருஷ்ணன், சோப்ரா
மேக்கப் – கே.வி.சுவர்ணப்பா
சிகை ஜோடனை – பிரபாராய்
அரங்க அமைப்பு – நீலகண்டன் – ரேவதி, சுப்ரமணியன் – நரசு, நடராஜ், நாராயணன்
சீன் ஜோடனை – ஸினி கிராப்ட்ஸ், கிரி
ஸ்டூடியோ – ரேவதி, நரசு, விக்ரம்
ப்ரோஸ்ஸிங் – கிருஷ்ணன் விக்ரம் ஸ்டூடியோ லேபரட்டரி
ஸ்டில்ஸ் – ஆர்.வெங்கடாச்சாரி
ப்ப்ளிஸிட்டி – எபிஷண்ட் ப்ப்ளிஸிட்டி
எடிட்டிங் – பி.ஜி. மோஹன்
ரீரிகார்டிங் – சேஷாத்ரி விக்ரம் ஸ்டூடியோ
ஒலிப்பதிவு – வி.எஸ்.ரங்காச்சாரி, சேஷாத்ரி, ராமஸ்வாமி
பாடல் ஒலிப்பதிவு – டி.எஸ். ரங்கசாமி
புரொடக்ஷன் மேனேஜர் – வி.கே.ஸ்ரீனிவாஸன்
அரங்க நிர்மாணம் – கங்கா வாலி
ஆடை அலங்காரம் – அச்சுதன்
காமரா – பி.என்.ஹரிதாஸ்
மேற்பார்வை – திரு முருகதாஸா
உதவி டைரக்ஷன் – எஸ்.என்.பாலசந்திரன்
டைரக்ஷன் போடோகிராபி – பி.எஸ். ரங்கா
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...f9&oe=5CB27CFF
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...29&oe=5CFA4E79
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...fa&oe=5CFD8616
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...08&oe=5CFCFDEC
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...37&oe=5CE7AEA2
கலியுக கர்ணன் நிஜவள்ளல் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த பராசக்தி மக்களின் பேராதரவுடன் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தியது. வெள்ளிவிழாவையும் தாண்டி 200 நாட்களுக்கு மேல் ஓடியது .திருச்சி நகரில் பேலஸ் தியேட்டரில் 245 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. பராசக்தியில் கலைக்குரிசிலின் துடிப்பான நடிப்பு வசனங்களை உச்சரித்த விதம் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது ,அனைத்துப்பத்திரிகைகளும் நிஜவள்ளலின் நடிப்பை புகழ்ந்து எழுதத் தொடங்கின. சினிமா சம்மந்தப்பட்ட எந்தச் செய்தியானாலும் நிஜ வள்ளலுக்கு முன்னுரிமை கொடுத்து எழுதப்பட்டன.முதல் படத்தின்மூலமே நிஜ வள்ளல் மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றவராகிவிட்டார்.இது நிஜவள்ளலுடன் சிறு வயதுலிருந்தே ஒன்றாக இருந்து ஒன்றாகவே நாடகசபாக்களுக்கு வேலை கேட்டு திரிந்து, பின்னர் நிஜவள்ளல் சினிமா உலகில் காலடி எடுத்து வைப்பதற்கு 10,15 வருடங்களுக்கு முன்னதாக சினிமா உலகில் நுழைந்தும் ஒன்றிரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்தும் பெயர் கிடைக்காத ,பத்திரிகைகள் பெரிதும் கண்டுகொள்ளாத, நிஜவள்ளலின் உடன் பிறவாத அண்ணன் ,தன்னோடு இருந்தவன், தனக்குப்பின் வந்து முதல் படத்திலேயே பெரு வெற்றி கண்டு பெயர் பெற்றுவிட்டானே என்ற பொறாமைத்தீ கனலாக பற்றிக் கொண்ட அந்த அண்ணன்....... செய்த சதித்திட்டங்கள்...
வரும்.......
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை ... ",
" பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே தலையாயது! " என்கிறார் திருக்குறளில் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
" எவன் தனக்கு மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ... அவன், அவனுடைய பாவம் முழுதையும் அவனேதான் அனுபவித்தாக வேண்டும் " என்கிறார் கீதையில் கிருஷ்ணர். அதனால்தான், 'தானத்திலே சிறந்தது அன்னதானம்' என்கிறது தர்மசாஸ்திரம்!
எப்பொருளைக் கொடுப்பினும் போதுமென சொல்லாத நெஞ்சம், உணவை அளிக்கும்போது மட்டுந்தான் போதுமென்று மனநிறைவோடு சொல்கிறத...ு.
தானம் செய்வதற்கு செல்வம் ஒரு முக்கியமே அல்ல... நல்ல மனம்தான் வேண்டும் என்கிறது வாழ்வியல் நூல்கள் பலவும். சிலர் தானம் செய்வது எள்முனை அளவுகூட வெளியில் தெரியாது நம் திலகத்தைப்போல...
அத்தகைய நன்னெறி வாழ்வியலாரான நடிகர்திலகத்தின் தொன்னூறாம் பிறந்தநாளை முன்னிட்டு ' குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்திவரும் ஐம்பத்திரண்டு வார தொடர் அன்னதானத்தின் பத்தொன்பதாம் வார நிகழ்ச்சி இன்று மதியம் நம் அன்னை இல்லத்து பிள்ளையார் கோயிலில் இனிதே நடந்தேறியது.
மஸ்கட்டில் வாழும் நடிகர்திலகத்தின் அன்பு ரசிகை திருமதி.சாவித்திரி ரகுராமன் அவர்கள் இவ்வார அன்னதானத்தின் உபயதாரராக பங்களிப்பு செய்ய, இனிப்பு வழங்கிட உபயம் செய்திருந்தார் திருச்சி நண்பர் திரு.ஹரிகிருஷ்ணன் பிரபு அவர்கள்.
திரைப்பட நடிகர், ஆடிட்டர் திரு. எஸ்.ஸ்ரீதர் அவர்கள் இவ்வார சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்குகொண்டு அன்னதானத்தைத் துவக்கிவைத்தார்.
அதற்கு முன்பாக, 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' சார்பாக திரு.சுகுமார் அவர்கள், ஆடிட்டர் திரு.ஸ்ரீதர் அவர்களுக்கு நடிகர்திலகம் பற்றிய நூலொன்றையும், திரு.பாண்டியன் அவர்கள் நடிகர்திலகத்தின் நாள்காட்டியையும் வழங்கிச் சிறப்பித்தனர்.
திருமதி.சாவித்திரி ரகுராமன் சார்பாக நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு.முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு, அன்னதானம் வழங்கியதற்கான நினைவுச்சான்றிதழை திரு.ஸ்ரீதர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு, நடிகர்திலகம் சிகர மன்றங்களின் முன்னாள் தலைவர் திரு.கே.வி.பி.பூமிநாதன் அவர்கள் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு. மேலும், நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களான திரு.RS.சிவா, திரு.ML.கான், திரு.KM.பாரூக், திரு.ஏழுமலை, திரு. கல்தூண் ரவி, திரு.மணி, திரு.சுப்பிரமணி, திரு.காமராஜ், திரு.கேசவன், திரு.பாண்டியன், திரு.சுகுமார், திரு.நந்தகுமார், திரு. KS.நரசிம்மன், திரு.அண்ணாமலை, திரு.ஜகந்நாதன் உள்ளிட்ட பல நண்பர்களோடு பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். இனிதே நடந்தேறியது நிகழ்ச்சி.
அடுத்து வருகின்ற இருபதாம் வார நிகழ்ச்சியில் மூன்று பேர் உபயதாரர்களாக பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளதால், அடுத்தவாரம் மூன்று பகுதிகளாக அன்னதானம் நடைபெறும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தங்களிடம் பகிர்ந்துகொண்டு விடை பெறுவது
வான்நிலா விஜயகுமாரன்...
Your Toolbox
Grab Your Code
HTML for Websites
IMG Code for Forums & Message Boards
Direct Link for Layouts
Tags: Click to add Tags... Cancel
http://oi63.tinypic.com/33vcith.jpg http://oi65.tinypic.com/so2w4p.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்...