Rangan :D
தமிழ் சினிமாவுக்கு 'புனர் ஜென்மம்' கொடுத்தவர் நம் நடிகர் திலகம் 8-)
Printable View
Rangan :D
தமிழ் சினிமாவுக்கு 'புனர் ஜென்மம்' கொடுத்தவர் நம் நடிகர் திலகம் 8-)
:D :thumbsup:Quote:
Originally Posted by joe
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1974
இந்த வருடம் வெளியான படங்கள் - 6
1. வெள்ளி விழா படம் - 1
தங்கப்பதக்கம்
[html:120f2ea890]
http://www.nadigarthilagam.com/paper...kamrunning.jpg
[/html:120f2ea890]
100 நாட்களை கடந்து ஓடிய திரைப்படங்கள் - 2
வாணி ராணி
[html:120f2ea890]
http://www.nadigarthilagam.com/paper...s/vanirani.jpg
[/html:120f2ea890]
என் மகன்
50 நாட்களை கடந்து ஓடிய திரைப்படங்கள் - 2
சிவகாமியின் செல்வன்
அன்பை தேடி
2. மதுரையில் முதன் முதலாக ஓபனிங் ஷோ காலையில் ஏழு மணிக்கு தொடங்கிய சாதனையை நிகழ்த்தியவர் நடிகர் திலகம்.
படம் - சிவகாமியின் செல்வன்
நாள் - 26.01.1974
அரங்கு - ஸ்ரீ தேவி
3. மதுரை ஸ்ரீதேவியில் சிவகாமியின் செல்வன் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 104.
[அதாவது முதல் 31 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].
மதுரை ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 69
4. மீண்டும் மதுரையில் தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை இந்த வருடமும் செய்து காட்டினார் நடிகர் திலகம்.
வாணி ராணி - 12.04.1974 - நியூசினிமா - 112 நாட்கள்
தங்கப்பதக்கம் - 01.06.1974 - சென்ட்ரல் - 134 நாட்கள்
என் மகன் - 21.08.1974 - நியூசினிமா - 101 நாட்கள்
5. சிவாஜி நாடக மன்றம் மூலமாக முதலில் நாடகமாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு பின்னர் திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய ஹாட்ரிக் சாதனையை புரிந்தார் நடிகர் திலகம்.
கட்டபொம்மன்
வியட்நாம் வீடு
தங்கப்பதக்கம்
6. இவற்றோடு ஞான ஒளி மற்றும் கெளரவம் ஆகியவற்றையும் சேர்த்தால் அதிகமான நாடகங்கள் திரைப்படமாக வெற்றி பெற்றது நடிகர் திலகத்தின் படங்கள் மூலமாக தான் என்பது தெளிவு.
7. தமிழகத்தில் முதன் முதலாக 1 3/4 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படம் - தங்கப்பதக்கம்.
8. தமிழ் நாட்டில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஊர்கள் - 9
சென்னை
மதுரை
திருச்சி
கோவை
சேலம்
நெல்லை
தஞ்சை
[மற்றும் சில]
9. 25 வாரங்களை (வெள்ளி விழாவினை) கடந்து ஓடிய இடங்கள்
சென்னை
சாந்தி
கிரௌன்
புவனேஸ்வரி
திருச்சி - பிரபாத்
நடிகர் திலகத்தின் சாதனையை மீண்டும் நடிகர் திலகமே முறியடிப்பார் என்பதை நிரூபித்த படம் - தங்கப்பதக்கம்.
10. மதுரை - சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா ஏற்படுத்திய சாதனையை முறியடித்து புதிய சாதனை புரிந்தது தங்கப்பதக்கம்.
11. மதுரை சென்ட்ரலில் தங்கப்பதக்கம் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 185
[முதல் 56 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].
12. மதுரையில் தங்கப்பதக்கம் ஓடிய நாட்கள் - 134
மொத்த வசூல் - Rs 5,42,902.90 p
வரி நீக்கிய வசூல் - Rs 2,74,013.35 p
விநியோகஸ்தர் பங்கு - Rs 1,46,115.39 p
13. வெளி மாநிலங்களில் தங்கப்பதக்கம்
பெங்களூரில் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள் - 2
சங்கீத்
கினோ
14. கேரளத்தில் 50 நாட்களை கடந்து ஓடிய இடங்கள் - 3
திருவனந்தபுரம்
எர்ணாகுளம்
பாலக்காடு
15. வெளி நாட்டில் தங்கப்பதக்கம்
இலங்கையில் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள் - 2
ஸ்ரீதர்
சென்ட்ரல்
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
Murali,
As usual, a nice summary of NT's 1974 movies.
Couple of things about Thangapadhakkam:
1. Saw this movie at Madurai Alankar during its re-release. It was Saturday night show and theater was almost full, with NT fans dominating in the crowd. As usual, the outside posters were hugely garlanded. There were two scenes that made fans go uncontrollable:
* NT's brief dance movement during Nallathoru Kudumbam song. It was done in a slick and stylish manner with NT's trademark stamp.
* NT's emotional action when the police commissioner tells him that his wife is dead. The whole sequence is done so beautifully that proves the theory that NT is King of acting.
2. I thought Thangapathakkam was a silver jubilee hit in Madurai. Why didn't it run for 25 weeks? Did another NT movie replace it?
3. It has been long time that I last saw vani rani (at madurai dinamani). I vaguely remember that NT has got the guest appearance in vani rani!? If so, NT is the only actor in TFM who gave successful movies in spite of his guest appearance.
Regards
Murali,
Regarding 1972 movies: at the same time, Madurai new cinema and central were running vasantha maaligai and p.pattanama respectively. These theaters, along with devi and santhi, form a circle around 4 maasi streets. How did fans manage to divide their time among NT movies? Was devi running an NT movie during PP and VM run?
It is simply astonishing that an actor is running two silver jubilee movies almost at the same time. That too, in Madurai, those two theaters are located just couple of blocks away. I can just visualize the craziness of NT fans. It proves that NT was simply a darling of fans and masses.
I just cannot believe, in spite of his frequent releases, NT fans spent time and energy to decorate the movie halls during releases.
Being the golden year 1972, which of his movie in that year had a crazy and massive opening?
Murali sir, thanks for the post.
Yes. Thangapadakkam - another all time favourite.
Is there any full fledged police officer's film in tamil before TP ?? I doubt there is any.
NT had set a bench mark to the role thru SP Choudhary. Those grey whiskers, majestic moustache and a stiff body language - wow, enna oru gambeeramana police officer :notworthy:
சூரியன் உதிப்பதற்கு முன்னும் பின்னும் ஆயிரம் நட்சத்திரங்கள் தோன்றி மறைந்திருக்கலாம் .ஆனால் சூரியன் சூரியன் தான் .Quote:
Originally Posted by rangan_08
தமிழ் திரையுலகில் எஸ்.பி.சவுத்திரி காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டு.
Tanggapathakkam
It never makes it to my favourite list simply because I have issues with the character, Inspector Chowdry. That he would send his son to a boarding school and never see the kid till he is grown up shows the kind of daddy I want to have issues with. No wonder he grows up to be worst man than the coins stealing, cigarette smoking brat he was in the beginning. Chowdry should have brought him up on his own, keeping an eye on the kid, an another eye on the bad guys as usual. Things would have improved, his son with him and probably the wife would have survivied.
But who am I kidding, if not for the boarding school move, we would have Siva Kumar, instead of Srikanth. NT would have dueted Nadaiyaa Ithu Nadaiyaaa with KR Vijaya, instead of Sumaitaanggi Saaynthaal. K.R. Vijaya would have lived and we would have Vazha Ninaittal Vazhalaam instead of Sothanai Mel Sothanai. NT’s Inspector Chowdry would be cool, calm and composed, instead of being tensed, stressed and volcanic in temper.
I have only issues with Chowdry the dad. I have issues because he seem so real, so scary, so intimidating, that when he breaks, I break too. I break saying, “Why? Why? You should have brought him up yourself, instead of all this mess”. I realise I dislike the characters action, but not the character itself. NT made it alive. I even forget that NT himself sent his kids to boarding school. Gosh, how he would have related to that character.
Such a real character. Such a nightmarish live he led just because of one stupid move.
NT sar, if 1972/73 is explosive, 1974 is emotional. Thanks sir.
Good one groucho :) TP - inspite of being duty oriented, its also an emotional saga of a police officer.
:lol:Quote:
Originally Posted by groucho070
That makes a sufficient case in my opinion :-)Quote:
Originally Posted by groucho070
முதன் முதலாக ஒரு நடிகனின் இறுதி மரியாதைக்கு திரண்ட கூட்டத்தை கட்டுப்படுத்த வந்த காவல் துறையினர் கண்களிலும் கண்ணீர் - இது பத்திரிகை செய்தி .
காவல் துறை அதிகாரி என்னும் பாத்திரத்துக்கு இலக்கணமும் மரியாதையும் வகுத்துக்கொடுத்த அந்த மகா கலைஞனுக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்.
தன் திறமையை மட்டுமே நம்பிய நடிகர்திலகத்தின் அசாத்திய துணிச்சல்.....
எண்பதுகளுக்குப்பிறகு இவர் ஏற்று நடித்த வயதான வேடங்களை விட்டுவிடுவோம். ஆனால் இவர் மிகவும் மும்முரமான கதாநாயனாக நடித்த 1952 முதல் 1975 வரையிலான கால கட்டத்தை எடுத்துக்கொள்வோம். அன்றைய கால கட்டம், கதாநாயகன் என்றால் ஜோடியாக ஒரு கதாநாயகி வேண்டும். அவருடன் குறைந்தது மூன்று அல்லது நான்கு டூயட்டுகள் பாட வேண்டும் என்று தமிழ்த்திரையின் முன்னணி கதாநாயகர்கள் இருந்த நிலையில், இவர் ஜோடியில்லாமல் நடித்த படங்கள் எத்தனை......
இவற்றை பல வகைகளாக பிரிக்கலாம்.... அறவே கதாநாயகி (இவரது ஜோடியாக) இல்லாத படங்கள். சும்மா ஒரு பாடலுக்கு மட்டுமே ஜோடியாக வந்துவிட்டுப்போகும் படங்கள். படத்தின் முற்பாதியில் மட்டும் கொஞ்ச நேரமே ஜோடி இருக்க, பின்னர் படம் முழுதும் இவர் தனியாகவே நடித்த படங்கள் இப்படி பல பிரிவுகள்.
அற்வே ஜோடியில்லாத படங்கள்...
லட்சுமி கல்யாணம்
பழனி
காவல் தெய்வம்
மூன்று தெய்வங்கள்
ராமன் எத்தனை ராமனடி (கதாநாயகி உண்டு, ஆனல் இவருக்கு ஜோடி அல்ல)
சரஸ்வதி சபதம் (இதில் வரும் ஒரே ஜோடி நாகேஷ் மனோரமா மட்டுமே, சிவாஜி, ஜெமினி, கே.ஆர்.விஜயா யாருக்கும் ஜோடியே கிடையாது)
ஒரே ஒரு பாடலுக்கு, அல்லது சிறிது நேரத்துக்கு மட்டுமே ஜோடி, பின்னர் தனி ஆவர்த்தனம்...
நெஞ்சிருக்கும் வரை
பாபு
ஞான ஒளி
தீபம்
படத்தின் முற்பகுதியில் சிறிது நேரம் மட்டுமே ஜோடியைகொண்ட படங்கள்...
அவன்தான் மனிதன்
பைலட் பிரேம்நாத்
ஜோடி இருந்தும் டூயட் பாடல்கள் இல்லாத படங்கள்....
பாச மலர்
படித்தால் மட்டும் போதுமா
மோட்டார் சுந்தரம் பிள்ளை (even he comes as young in flash-back)
கைகொடுத்த தெய்வம்
தில்லானா மோகனாம்பாள்
நீதி
தவப்புதல்வன்
அந்நேரத்தில் ஒரு படத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு டூயட் பாடல்கள் கண்டிப்பாக தேவையென்றிருந்த நிலையில், இவர் மட்டும் எப்படி......!!!!.
நடிகர்திலகம் பற்றி சமீபத்தில் மறைந்த இயக்குனர் மேதை SREEDHAR சொன்னது:
'எனக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தபோது அதில் சிவாஜி கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அப்போது (1963) அவர் 'கர்ணன்' படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கலந்துகொள்ளச்செய்தார். திருமணச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் இருந்து ட்ரங்கால், சிவாஜி பேசுகிறார் என்றார்கள். உடனே போனை வாங்கிப்பேசினேன். மறுமுனையில் சிவாஜி எனக்கு மனதார வாழ்த்துச்சொன்னார். அத்துடன் 'நம்ம வீட்டிலிருந்து எல்லோரையும் வரச்சொல்லியிருந்தேனே, வந்திருக்காங்களா?' என்றுகேட்டார். சற்று முன்னர்தான் வி.சி.ஷண்முகம் எனக்கு கைகுலுக்கி வாழ்த்துச்சொல்லியிருந்தது நினைவுக்கு வர, 'ஆமாண்ணே, வந்திருக்காங்க' என்றேன். 'உன் கல்யாணத்தில் கலந்துகொள்ள கமலாவுக்கும் ரொம்ப ஆசை. ஆனா நான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்திட்டேனே' என்றார். சில நாள் கழித்து அவர் ஜெய்ப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவரது இல்லத்தில் எங்கள் இருவரையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். புறப்படும்போது கமலா அம்மா ஒரு தங்கச்சங்கிலியை என் மனைவிக்கு அணிவித்தபோது, சிவாஜி 'இதோ பாரும்மா, இதுவும் உனக்கு ஒரு மாமியார் வீட்டுதான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம்' என்றவர் என்னைப்பார்த்து, 'இதோ பாரு, இதுவரைக்கும் சதா ஸ்டுடியோவிலேயும் சித்ராலயா ஆஃபீஸ்லேயும் பழியா கிடப்பே. இனிமேலாவது ராத்திரியில் நேரத்கோடு வீட்டுக்கு வந்துசேர். அதுமட்டுமில்லே, காலேஜில படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அதுக்காக அந்தப்பொண்ணோட படிப்பை நிறுத்திடாதே. தொடர்ந்து படிக்கட்டும்' என்று அட்வைஸ் பண்ணினார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நல்லா படிக்கணும்ங்கிறது அவர் எண்ணம். அந்த நேரத்தில் அவரோடு விடிவெள்ளி படம் பண்ணியபிறகு மற்றவர்களோடுதான் படம் பண்ணிக்கொண்டிருந்தேன்.
'காதலிக்க நேரமில்லை' படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். 'உன் பேரைச்சொன்னாலே 'அழுமூஞ்சி டைரக்டர்' என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிறமாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்' என்றார். 'அண்ணே, 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்' என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை. இடையிடையே செட்டில் சந்திக்கும்போதெல்லாம் அதைப்பற்றிக் கேட்பார். 'அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்' என்றேன். சொன்ன மாதிரியே அந்தக்கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற கதைதான் 'ஊட்டி வரை உறவு' என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.
சில பல காரணங்களால் HERO-72 படம் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டிருந்தபோதிலும், எங்களுக்கிடையில் இருந்த நட்பில் விரிசல் விழுந்ததில்லை. 'உரிமைக்குரல்' பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்தேன். 'பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (MGR) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இதுவரைக்கும் ஒருநாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வரமுடியும் சொல்லு. ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள் உனக்கு நிச்சயம் இருக்கும்' என்று வாழ்த்தினார்.
('பொம்மை' மாத இதழில் வெளியான பேட்டியில், நடிகர்திலகம் பற்றிய கேள்வி ஒன்றுக்கு SHREEDHAR அளித்த பதில்)
Murali sir,
Sorry, after a long time I have attending this thread.
Amazing informations about 'THE RECORDS' created by our great NT in every year. You are doing a commandable work and bringing somany hidden facts to light, for which all the NT fans submit our sincere thanks to you.
Raghavendhar sir,
More and more thanks for your great efforts in collecting and entering the 'Newspaper Advertisements' of the movies of our NT in NT's website.
Wonderful.......
Both of your efforts will reach the peak and our NT's fame will be glittering for ever.
Enan irundhaalum I miss the NT Songs thread of murali :-(
Avaru Box Office king-a irundhaalum illattalum, he is the greatest actor tamil cinema has seen. Avar acting skills-ai prove panna effort-e thevai illai. Ippadi kashtapattu facts and figures collect pannave thevai illai. Avaru nadhicha padangalin surulai kaapathina podhum. 2080-la paarkaravan kooda madhi mayangi povaan.
Adhanala, Murali, I request you to re-focus atleas partially on THAT thread!
Dear tac,
Thanks for the kind words. Regarding Thangappathakkam, not only then, even now the song and the dance movement is able to evoke the same response as it was witnessed during the recent 80-th Birthday celebrations of NT.
Unfortunately TP couldn't do a Silver run in Madurai. It was due to multiple reasons. Previous agreements, all theatres that went on a strike were couple of them. It was not replaced by another NT film but by some other movie.
NT's role in Vani Rani was not a guest role, though he played second fiddle to the heroine. He had his own moments in the film like "Paarthhu Po" song.
Now coming to 1972, as you rightly said, PP and VM were running simultaneously and it's a stone's throw from each other. So fans didn't have any problem. The third movie that was running at that time was Thavappudhalvan which was in Chinthamani.
Before VM was released, PP was at Central, Dharmam Enge was at Devi and Thavappudhalvan was at Chinthamani. But as DE was shifted after 50 days, Sri Devi didn't have any NT movie during PP and VM's run.
Regarding the craze and massive opening, as for as 1972 was concerned it was for Dharmam Enge. The sort of massive crowds and the festive atmosphere it created in the theatre, I have not even seen it for Vasantha Maaligai. May be the only movie that could match the same was Sivandha Man [I am talking about a time period which I have been eye witness to].
Regards
Mohan,
Thanks and as Joe rightly said, even if there had been any police officers role in Tamil cinema before, they did not stand up to Choudary's stature. Even your own words about his get up and body language, the same can be felt in the paper ad inserted by Joe.
Rakesh,
I know you have a grouse against Mr.Choudary because you had already talked about it in this thread. But again as you rightly said, without that, we would not have been talking about him even after 34 years.
சாரதா,
நன்றி. ஸ்ரீதரின் அந்த பேட்டியை இங்கே பதிந்ததற்கு. இதன் மூலம் பலரின் சந்தேகங்களை தீர்த்து விட்டீர்கள்.
Welcome back Karthik. I was missing you.
Regards
Plum,Quote:
Originally Posted by Plum
I think many have this doubt and so let me clear this. I have not ditched that Paadalgal Palavitham thread to concentrate on this. There is no connection between this and that. Even before that thread came up, I have been regular in this thread [In fact the only thread I have been regular to].
PP thread involves a lot of study, research and compilation of facts. Also I have made up a point to meet someone connected with that song/film before putting pen to paper. Recently due to official and personal works, could not meet some personalities whom I had planned to and that's why the posting has got delayed. I will definitely continue to post as it a commitment from me to the Hub.
Regarding the year wise records of NT, why it is was started and why I do it, I would come out with an answer soon as I have already covered upto 1975.
Regards
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1975
1.100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2
அவன்தான் மனிதன்
மன்னவன் வந்தானடி
2. 50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3
மனிதனும் தெய்வமாகலாம்
Dr.சிவா
பாட்டும் பரதமும்
3. 23 ஆண்டுகளில் 175 படங்கள். அனைத்திலும் நாயகனாக நடித்து மீண்டும் சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.
முதல் படம் - பராசக்தி - 17.10.1952
175-வது படம் - அவன்தான் மனிதன் - 11.04.1975
4. மீண்டும் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளில் 100 -ஐ கடந்தது அவன்தான் மனிதன்.
மதுரை சென்ட்ரலில் அவன்தான் மனிதன் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 130.
[முதல் 39 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].
5. மதுரை - சென்ட்ரலில் ஓடிய நாட்கள் - 105.
6. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு இதே அவன்தான் மனிதன் அதே மதுரை சென்ட்ரலில் திரையிட்ட போது ஒரே வாரத்தில் அள்ளி குவித்த வசூல் ரூபாய் அறுபதாயிரதிற்கும் அதிகம் [more than Rs 60,000/-]. பழைய படங்கள் மறு வெளியீட்டில் இது ஒரு புதிய சாதனை.
[இந்த சாதனையை முறியடித்ததும் மற்றொரு நடிகர் திலகத்தின் படம் தான். 2005 மார்ச் மாதம் இதே சென்ட்ரலில் வெளியான கர்ணன் இரண்டு வாரங்கள் ஓடி இந்த வசூலை மிஞ்சியது].
7. பெரிய நகரங்கள் மட்டுமல்ல இடை நிலை ஊர்களிலும் சாதனை புரிந்தவர் நடிகர் திலகம் என்பதை மீண்டும் நிரூபித்த படம் - அவன்தான் மனிதன்.
முதன் முதலாக பொள்ளாச்சி - செல்லம் திரையரங்கில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்த படம் - அவன்தான் மனிதன்.
8. அவன்தான் மனிதன் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள்
சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி
மதுரை - சென்ட்ரல்
திருச்சி - ராஜா
சேலம் - நியூசினிமா
[html:f4fb8d7858]
http://www.nadigarthilagam.com/papercuttings/adm.jpg
[/html:f4fb8d7858]
9. மதுரையில் முதன் முதலாக ஒரே காம்ப்ளெக்ஸ்- ல் இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் படம் - மன்னவன் வந்தானடி.
அரங்குகள் - சினிப்ரியா, மினிப்ரியா
நாள் - 02..08.1975
10. மன்னவன் வந்தானடி மதுரையில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 125
11. மன்னவன் வந்தானடி மதுரையில் ஓடிய நாட்கள் - 110.
12. இதே வருடத்தில் மதுரையில் மீண்டும் இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் படம் - பாட்டும் பரதமும்.
அரங்குகள் - சினிப்ரியா, மினிப்ரியா
நாள் - 06.12.1975
ஓடிய நாட்கள் - 63.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
Added a review of Ooty varai uravu in my blog - Added Ooty varai uravu at http://awardakodukkaranga.wordpress....y-varai-uravu/
We are getting a new channel here called " Murasu " for the past one week. Varietiy of songs are telecasted in this channel. Last week it was NT & MT songs one after another - non-stop for more than an hour without any commercial breaks.
Their song selection was too good. Nothing from the b&w era. Very colorful - Sorgam, VM, OVUravu, Thiruvilayadal, SSabatham, Gowravam, Raja, S.En.Sundari, E.Vandhaal.......
It was a real feast.
Saradha,
Sridhar's comments on Sivaji was very nice. Mind if I repost it in my blog?
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1976
1. இந்த வருடம் வெளியான படங்கள் - 6
அதில் வெள்ளி விழா படம் - 1
உத்தமன்
100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2
கிரகப்பிரவேசம்
சத்யம்
50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2
உனக்காக நான்
ரோஜாவின் ராஜா
[html:8252aae1ec]
http://www.nadigarthilagam.com/paper...ajarelease.jpg
[/html:8252aae1ec]
2. நடிகர் திலகத்தின் திரையுலக பயணத்தில் ஒரு சிறிய தேக்க நிலை என்று சொல்லப்பட்ட காலகட்டத்திலேயே இப்படிப்பட்ட வெற்றிகளை கொடுத்தார் என்றால் அவரது Boxoffice Power-ஐ புரிந்து கொள்ளலாம்.
3. மதுரை - நியூசினிமாவில் உத்தமன் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 106
[25.06.1976 அன்று வெளியான இந்த படம் முதல் 32 நாட்களில் நடை பெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்]
4. மதுரை - நியூசினிமாவில் உத்தமன் ஓடிய நாட்கள் - 105
5. கடல் கடந்து இலங்கையில் இரண்டாவது வசந்த மாளிகையாக உருவெடுத்தது உத்தமன்.
கொழும்பு - சென்ட்ரல் - 203 நாட்கள்
யாழ்பாணம் - ராணி - 179 நாட்கள்
மட்டுநகர் - விஜயா - 114 நாட்கள்
6. அதே நேரத்தில் வெளியான சத்யம் திரைப்படமும் இலங்கையில் 100 நாட்களை கடந்து ஓடியது.
சத்யம் - யாழ் வின்சர் திரையரங்கில் ஓடிய நாட்கள் - 102
7. ரோஜாவின் ராஜா: படம் வெளியாகி (25.12.1976), 20 நாட்கள் ஆகும் முன்பே அடுத்த படம் (அவன் ஒரு சரித்திரம் -14.01.1977) வெளியாக, அடுத்த 10 நாட்களில் அடுத்த நடிகர் திலகத்தின் படம் (தீபம்- 26.01.1977) வெளி வந்தும் கூட, சென்னை பிளாசாவில் ரோஜாவின் ராஜா 70 நாட்களை கடந்தது.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
Saw an ad in the newspaper of an upcoming film " Indhira vizhaa" starring Nameetha. There was a still of Vivek in the same ad.
Vivek looks like Barrister Rajnikanth with a pipe in his hand. :twisted:
Bhoori (RV)....Quote:
Originally Posted by Bhoori
No need to ask me, because it is not my own post, but a part of the interview given by Sreedhar to the 'Bommai' magazine.
So it is open for all.
I will be happy if you re-produce it in your blog.
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1977
1.இந்த ஆண்டில் வெளியான அனைத்து படங்களுமே 50 நாட்களை கடந்தது.
இந்த ஆண்டு வெளியான படங்கள் - 5
100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2
தீபம்
[html:dd522437c1]
http://www.nadigarthilagam.com/paper...prerelease.jpg
[/html:dd522437c1]
அண்ணன் ஒரு கோவில்
50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3
அவன் ஒரு சரித்திரம் (12 வாரங்கள்)
[html:dd522437c1]
http://www.nadigarthilagam.com/paper...aosreserve.jpg
[/html:dd522437c1]
[html:dd522437c1]
http://www.nadigarthilagam.com/paper...prerelease.jpg
[/html:dd522437c1]
இளைய தலைமுறை
நாம் பிறந்த மண்
2. நடிகர் திலகத்தின் சகாப்தம் முடிந்து விட்டது என்று எழுந்த சில கூக்குரல்களுக்கு பதிலாக மீண்டும் ஒரு மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம் தீபம்.
3. 26.01.1977 அன்று வெளியாகி தமிழகத்தின் பெரிய ஊர்களிலெல்லாம் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கு நிறைந்த காட்சிகள் ஓடிய படம் தீபம்.
சென்னை
சாந்தி - 100 காட்சிகள்
கிரவுன் - 100 காட்சிகள்
புவனேஸ்வரி - 85 காட்சிகள்
மதுரை - சிந்தாமணி - 110 காட்சிகள்
கோவை - கீதாலயா - 100 காட்சிகள்
திருச்சி - ராக்ஸி - 102 காட்சிகள்
சேலம் - சங்கீத் - 80 காட்சிகள்
நெல்லை -பார்வதி - 75 காட்சிகள்
4. அன்றைய காலக்கட்டதிலே ஒரு புதிய வசூல் சாதனை படைத்தது தீபம்.
ஆறே வாரங்களில் (42 நாட்களில்) தீபம் பெற்ற வசூல்
சென்னை
சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி - Rs 8,14,730/-
மதுரை - சிந்தாமணி - Rs 2,18,785/-
கோவை - கீதாலயா - Rs 3.04,529/-
திருச்சி - ராக்ஸி - Rs 2,06,419/-
மற்றும் நெல்லை, தஞ்சை, ஈரோடு,பாண்டி, வேலூர் நகரங்களில் 42 நாட்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் பெற்று சாதனை படைத்தது.
5. 100 நாட்களுக்கு மேல் ஓடிய அரங்குகள்
சென்னை
சாந்தி - 135 நாட்கள்
கிரவுன்
புவனேஸ்வரி
மதுரை - சிந்தாமணி.
6. கடல் கடந்து இலங்கையிலும் 100 நாட்களை கடந்தது தீபம்.
7. வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு படம் (ரோஜாவின் ராஜா), பொங்கலன்று ரீலிஸாகி பத்து நாட்களுக்குள்ளாக அடுத்த படம் (தீபம்), இப்படி நடிகர் திலகத்தின் படங்களே ஒன்றுக்கு ஒன்று போட்டியாக வந்தாலும் 12 வாரங்கள் (84 நாட்கள்) ஓடிய படம் அவன் ஒரு சரித்திரம்.
[html:dd522437c1]
http://www.nadigarthilagam.com/paper...unning10wk.jpg
[/html:dd522437c1]
அரங்கு - ஸ்ரீகிருஷ்ணா (சென்னை).
8. இடையில் வெளியான இளைய தலைமுறையும் (28.05.1077), நாம் பிறந்த மண்ணும் (07.10.1977) முறையே 60 நாட்களை கடந்து ஓட, தீபாவளி தினத்தன்று திரையுலக வாழ்கையில் வெள்ளி விழா வருடங்களை (1952 - 1977) நிறைவு செய்தார் நடிகர் திலகம்.
[html:dd522437c1]
http://www.nadigarthilagam.com/paper...prerelease.jpg
[/html:dd522437c1]
9. வெள்ளி விழா பரிசாக வந்த அண்ணன் ஒரு கோவில் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை காணிக்கையாக தந்தது.
[html:dd522437c1]
http://www.nadigarthilagam.com/paper...kcbe50days.jpg
[/html:dd522437c1]
10. தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் மீண்டும் ஒரு சாதனை புரிந்தது அண்ணன் ஒரு கோவில்.
சென்னையில் சாந்தி,கிரவுன், புவனேஸ்வரி அரங்குகளில் 350-கும் மேற்பட்ட காட்சிகள்.
மதுரை -நியூ சினிமாவில் - 101 காட்சிகள்.
கோவை - கீதாலயா - 118 காட்சிகள்.
11. பல போட்டிகளுக்கும், போட்டியாளர்களுக்கும் நடுவே 1977 தீபாவளி ரேசில் முதல் பரிசு பெற்று மிகப் பெரிய வெற்றியை அண்ணன் ஒரு கோவில் மூலமாக பெற்றார் நடிகர் திலகம்.
12. அண்ணன் ஒரு கோவில் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள் - 9
சென்னை
சாந்தி
கிரவுன்
புவனேஸ்வரி
மதுரை - நியூ சினிமா
கோவை - கீதாலயா
திருச்சி - பிரபாத்
சேலம் - சாந்தி
தஞ்சை -அருள்
குடந்தை - செல்வம் (நூர்மஹால்).
13. தமிழில் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழனில் நடித்த நடிகர் திலகம் அதே போல் தெலுங்கு மொழியில் முதல் சினிமாஸ்கோப் படமான சந்திரகுப்த சாணக்யா படத்திலும் நடித்தார்.
14. ஆந்திராவில் 100 நாட்களை கடந்து ஓடிய படம் - சந்திரகுப்த சாணக்யா.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
Murali Srivas Sir,
You are doing A marvelous job by furnishing us these achievements by the late legend.I have been a silent reader of your postings.Your postings on the 70's seems to bring back all the glory years when as a young boy i use to watch NT's movies 3 to 4 times within the few days it use to run in my small town in Malaysia.It reminds people like me of the joy tamil cinema in general and NT in particular gave us during our growing up years. Thanks once again for your work and looking forward to the year 1978 when Trishoolam broke all existing records.
Regards
Karikalen
Murali-sar, Another silent reader comes out spurred by NT's achievement. Welcome to NT's thread Karikaalan. Please share with us the experience of watching NT's films on big screen here in Malaysia. I have been unfortunate as my dad is a non-NT fan, therefore neglected to bring us to NT big screen spectatle...plus when we were growing up, Tamizh movie theatres were dying.
This has been quoted by Saradha many times and I think that this is very relevant here. In spite of NT not having a heroine, Deepam became a big hit. Is it Vijayakumar - Sujatha pair, Murali?Quote:
Originally Posted by Murali Srinivas
You have quoted A. O.Koil run first at new cinema followed by its run at chintamani? Did it run at Chinatamani or New cinema?Quote:
Originally Posted by Murali Srinivas
சாரதா,
னன்றி! சிவாஜியைப் பற்றி ஸ்ரீதர் சொன்னவை இங்கெ http://awardakodukkaranga.wordpress....#2992;்/ மறுபதிப்பித்திருக்கிறென். முழு இன்டர்வ்யூவும் இருந்தால் கொடுங்களேன்!
Thanks Karikalan and as Rakesh said welcome. It is my pleasure to share all those informations about NT and I am glad that like me there are numerous persons who had grown up with those lovely memories. One correction, Tirisoolam was in 1979 Jan and 1978 contains some great hits, which would be posted today.
Rakesh, what you had told me last week seems to be very much right. Let the tribe grew.
tac,
Sorry. My mistake. Annan Oru Kovil is NewCinema. Thanks for pointing it out and edited accordingly.
As per Deepam, yes it was without jodi but still went on to become a major hit. It contained the famous Perunthalaivar's last words "விளக்கை அணைச்சிட்டு போ" in the climax. I am given to understand by Raghavendar that it would have easlily crossed Silver Jublie in Shanthi but for the theatre management already having contracted to run Devar Films Hindi film.
Regards
Y'day watched a NT song in one of the channels.
Sung by Jayachandran, " Nenjil ulla kaayam ondru, nenjai vittu theerndhadhu....".
What's the name of the film, please ?
Dear Sri Mohan,Quote:
Originally Posted by rangan_08
It's from the film RISHIMOOLAM.
Pls visit the following page for rare images of NT
http://sites.google.com/site/chevali...ji/rare-images
(one giving interview to students for AIR, another during the shooting spot of Raja Raja Sozhan, with G Umapathy, Aru. Ramanathan, AP Nagarajan, Kunnakkudy Vaidyanathan, another image during the composing of the song Manidan Ninaithadundu from the film Avan Dhan Manidan)
Raghavendran.
I was at school in 77, and I remember the string of Sivaji hits - Deepam, Annan Oru Kovil, Thyagam, Ennai pol Oruvan... Clearly my memory is at fault here, but I thought Avan oru saritthiram, Ilaiya thalaimurai, Nam pirandha mann weren't successful. In fact, my memory is that the cameo by Gemini Ganesan in Nam Pirandha mann got more kudos than even Sivaji & Kamal. I was a hardcore Sivaji fan during those days and remember being bitterly disappointed at the failure of Avan oru saritthiram, Ilaiya thalaimurai etc. Perhaps the failure is relative - compared to hits like Annan oru kovil etc.
I still remember the Anandha vikatan review for Annan oru kovil. They used to give marks for all aspects of film during those days. For the acting category, they would usually assign marks to hero, heroine, other actors/actresses and kind of average them. For AOK, they wrote like this:
Sivaji - 70
Sivaji - 70
Sivaji - 70
Sivaji - 70
Nice way of indicating the dominance of Sivaji in AOK...
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1978
1. இந்த வருடம் நடிகர் திலகத்திற்கு மீண்டும் ஒரு மிகப் பெரிய சாதனை வருடமாக மாறியது.
2. இந்த வருடம் வெளியான படங்கள் - 7
இதில் வெள்ளி விழா படங்கள் - 2
தியாகம்
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...2/thyagam3.jpg
[/html:738a86f2a3]
பைலட் பிரேம்நாத்
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...orerelease.jpg
[/html:738a86f2a3]
100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2
அந்தமான் காதலி
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...runningad1.jpg
[/html:738a86f2a3]
ஜெனரல் சக்கரவர்த்தி
50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3
என்னைப் போல் ஒருவன் - 70 நாட்கள்
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...oreleasead.jpg
[/html:738a86f2a3]
புண்ணிய பூமி
ஜஸ்டிஸ் கோபிநாத்
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...prerelease.jpg
[/html:738a86f2a3]
3. இந்த வருடத்தின் முதல் படம் அந்தமான் காதலி - 26.01.19978
சாதாரண நிலையில் படங்கள் பெரிய திரையரங்கில் வெளியாகி சிறிது நாள் கழித்து சிறிய அரங்கிற்கு மாற்றப்படும். ஆனால் சிறிய அரங்கில் (லியோ) வெளியாகி மக்களின் பேராதரவு காரணமாக பெரிய அரங்கிற்கு (மிட்லாண்ட்) மாற்றப்பட்டு 100 நாட்களை கடந்து ஓடிய படம் - அந்தமான் காதலி.
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...dhaman50ad.jpg
[/html:738a86f2a3]
4. மதுரை - சினிப்ரியா அரங்கில் அந்தமான் காதலி தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 130
5. அந்தமான் காதலி 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள்
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...dhaman75ad.jpg
[/html:738a86f2a3]
சென்னை
மிட்லாண்ட்
மகாராணி
ராக்ஸி
மதுரை -சினிப்ரியா
சேலம் - ஜெயா
6. இந்த வருடத்தின் இராண்டாவது படம் - தியாகம் - 04.03.1978
வெள்ளி விழா கொண்டாடிய தியாகம் அந்த வருடத்தின் மிகப் பெரிய வெற்றிப்படமாக மாறி Highest grosser of the year என்ற பெருமையையும் பெற்றது.
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...2/thyagam2.jpg
[/html:738a86f2a3]
7. மதுரையில் மீண்டும் ஒரு முறை, தொடர்ந்து வெளியான மூன்று படங்களுமே 100 நாட்களை கடந்த சாதனையை nth முறை புரிந்தார் நடிகர் திலகம்.
அண்ணன் ஒரு கோவில் - நியூ சினிமா
அந்தமான் காதலி - சினிப்ரியா
தியாகம் - சிந்தாமணி
8. தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளிலே ஒரு புதிய சாதனையை மீண்டும் தியாகம் மூலமாக ஏற்படுத்தினார் நடிகர் திலகம்.
தியாகம் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் பட்டியல்
சென்னை - சாந்தி - 134 காட்சிகள்
சென்னை -கிரவுன் - 210 காட்சிகள்
சென்னை - புவனேஸ்வரி - 100 காட்சிகள்
மதுரை - சிந்தாமணி - 207 காட்சிகள்
[முதல் 63 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல். சிந்தாமணியில் அனைத்து முன் சாதனைகளும் அவுட்]
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...2/thyagam4.jpg
[/html:738a86f2a3]
கோவை -கீதாலயா - 100 காட்சிகள்
சேலம் -சாந்தி - 100 காட்சிகள்
9. தியாகம் 100 நாட்களை கடந்த அரங்குகள் - 8
சென்னை -
சாந்தி
கிரவுன்
புவனேஸ்வரி
மதுரை - சிந்தாமணி
கோவை -கீதாலயா
சேலம் -சாந்தி
திருச்சி - ஜுபிடர்
நெல்லை -பார்வதி
10. தியாகம் வெள்ளி விழா கண்ட அரங்கு - 1
மதுரை - சிந்தாமணி
11. மதுரை சிந்தாமணியில் 175 நாட்களில் பெற்ற மொத்த வசூல் ரூபாய் ஆறு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்திற்கும் அதிகம். [More than Rs 6,74,000/-].
12. அன்று வரை மதுரையில் 175 நாட்களில் சாதனை வசூல் என்று சொல்லப்பட்ட அனைத்து படங்களின் ரிகார்ட்களும் முறியடிக்கப்பட்டு புதிய சாதனையை புரிந்தது தியாகம்.
13. மூன்றாவது படம் என்னைப் போல் ஒருவன் - 18.03.1978
அணைந்து விட்டது என்று சொல்லப்பட்ட இந்த படம் ஜெகஜோதியாய் வெற்றிப் பெற்றது.
14. தியாகம் வெளியாகி இரண்டே வாரங்களில் வெளியான இந்த படம் 70 நாட்களை கடந்து ஓடியது.
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...orunningad.jpg
[/html:738a86f2a3]
அரங்குகள்
சென்னை - தேவி பாரடைஸ், அகஸ்தியா, முரளி கிருஷ்ணா.
15. மதுரை தங்கத்தில் வெளியான இந்த படம் முதல் வாரத்தில் அறுபது ஆயிரத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று புதிய சாதனை புரிந்தது.
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...runningad2.jpg
[/html:738a86f2a3]
16. நான்காவது படம் புண்ணிய பூமி - 12.05.1978
50 நாட்களை கடந்து ஓடியது - சென்னை - சித்ரா.
17. இந்த வருடத்தின் ஐந்தாவது படம் ஜெனரல் சக்கரவர்த்தி (16.06.1978)
ஜெனரல் சக்கரவர்த்தி 100 நாட்களை கடந்து ஓடிய அரங்கு
சென்னை சாந்தி
18. தீபாவளியன்று (30.10.1978) வெளியான இந்திய இலங்கை கூட்டு தயாரிப்பில் உருவான பைலட் பிரேம்நாத், இந்த வருடத்தின் இரண்டாவது வெள்ளி விழா படமாக அமைந்தது.
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...otrunning2.jpg
[/html:738a86f2a3]
19. மேடை நாடகத்தை ஒரு வெற்றிப் படமாக்க தன்னால் (மட்டுமே) முடியும் என்பதை நடிகர் திலகம் மீண்டும் நிரூபித்த படம் பைலட் பிரேம்நாத்.
[நடிகர் ஏஆர்எஸ் நடத்திய மெழுகு பொம்மைகள் நாடகமே பைலட் பிரேம்நாத் படம்]
20. பைலட் பிரேம்நாத் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...otrunning1.jpg
[/html:738a86f2a3]
சென்னை - ஈகா - 100 காட்சிகள்
மதுரை - சென்ட்ரல் - 100 காட்சிகள்
21. பைலட் பிரேம்நாத் 100 நாட்களை கடந்து ஓடிய அரங்குகள்
சென்னை - ஈகா
மதுரை - சென்ட்ரல்
சென்னையின் மிகப் பெரிய திரையரங்கான அலங்கார் (இப்போது இல்லை) தியேட்டரில் 12 வாரங்கள் (84 நாட்கள்) ஓடிய படம் பைலட் பிரேம்நாத்.
22. கடல் கடந்து இலங்கையில் பைலட் பிரேம்நாத் ஒரு புதிய சரித்திரமே படைத்தது.
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...ilot80days.jpg
[/html:738a86f2a3]
23. இலங்கையில் பைலட் பிரேம்நாத் ஓடிய அரங்குகளும் நாட்களும் பட்டியல்
யாழ்பாணம் - வின்சர் - 222 நாட்கள்
கொழும்பு - கேப்பிட்டல் -189 நாட்கள்
கொழும்பு - ராஜேஸ்வரா - 176 நாட்கள்
கொழும்பு - சவோய் - 189 நாட்கள்
24. இதற்கு பிறகு ஷிப்டிங் முறையில் பைலட் பிரேம்நாத் ஓடிய நாட்கள் - 1080.
கடல் கடந்து வேறொரு நாட்டிலே முதன் முதலாக திரைப்படங்கள் வெளி வர ஆரம்பித்த நாள் முதலாக இன்று வரை இந்த சாதனையை செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.
25. நடிகர் திலகத்துடன் ரஜினி முதன் முதலாக இணைந்து நடித்த படம் - ஜஸ்டிஸ் கோபிநாத் - 16.12.1978
[html:738a86f2a3]
http://www.nadigarthilagam.com/paper...cereserve3.jpg
[/html:738a86f2a3]
சென்னை - பாரகனில் 60 நாட்களை கடந்து ஓடிய படம் - ஜஸ்டிஸ் கோபிநாத்.
26. இந்திய திரையுலகில் யாருமே செய்யாத ஒரு ஹாட்ரிக் சாதனை செய்தார் நடிகர் திலகம்.
தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் - ராஜ ராஜ சோழன் (1973)
தெலுங்கின் முதல் சினிமாஸ்கோப் படம் - சந்திரகுப்த சாணக்கியா (1977)
மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் படம் - தச்சோளி அம்பு (1978).
இந்த மூன்றிலும் நடித்த ஒரே நடிகர் நடிகர் திலகம்.
27. இந்த மூன்று படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடியது என்பது மற்றுமொரு சாதனை.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
MuraLi sir :clap:
Dear Murali,
As usual, nice NT movie summary for the year 1978.
Among the lot, I would choose E P Oruvan is the best - but, it is disheartening to see that this movie run was not up to the mark. E P Oruvan is a real treat, in which NT looks better and it is not an usual tear-jerking movie. More importantly, unlike other dual-role movies, E P Oruvan has got both NTs come in young role.
I am yet to see what is so special with Thiyagam? Of course, it is a decent entertainer, but I always wonder why it had such a monster run. One of my cousins used to proudly claim that he saw this movie over 25 times during the first release itself. One thing I must admit that the movie has got beautiful songs, tuned by Illayaraja.
Regards
Another great list of records, Murali-sar.
Tac, I am a fan of Thyagam. Yes, the music played a part. But its NTs role...something that many can relate to. Misunderstood individual...someone grounded, earthy, with ordinary vices, and lives an empty life rejected by the love of his life. I think many of fans can relate to that....we all have gone through that phase one, some more than once. Well narrated role...and the supporting cast were good too (comedy somehow misfired).
Dear Sri Raghavendra Sir, thank you so much for the reply and the wonderful attachment.Quote:
Originally Posted by RAGHAVENDRA
Dear tac,Quote:
Originally Posted by tacinema
Thyagam was based on Uttam Kumar's Amanush. And after Deepam, K Vijayan proved his identity in remakes and Thyagam was one step further. The approach between CVRajendran and KVijayan in remakes were different. A very good businessman K. Balaji, brought in new comer Ilaiyaraaja from the film Deepam which proved he was right in his approach. In fact as I told somewhere else, if at all Ilaiyaraaja-TMS-Kannadasan combo had given more numbers it would have definitely taken TFM to great heights.
Raghavendran.