Originally Posted by
mr_karthik
அன்புள்ள வாசுதேவன் சார்,
காணக்கிடைக்காத 'ஜென்டில்மேன்' ஆங்கில இதழில் நடிகர்திலகத்தின் சிறப்பு ஆர்ட்டிக்கிள் மற்றும் அவரது பிரத்தியேக பேட்டியை அதன் ஒரிஜினல் வடிவில் பதிப்பித்த விதம் அருமை. இந்த இதழ்கள் எல்லாம் நாங்கள் பார்த்திராதது. கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கழித்து அந்தப்பொக்கிஷப் பதிவுகளைக் கண்ணுறச்செய்தமைக்கு மிக்க நன்றி. நம்மவர்கள் எங்கிருந்தெல்லாம் ஆவணங்களைத்தேடியெடுத்து வந்து தருகிறார்கள் என்பது நிஜமாகவே ஆச்சரியப்படுத்துகிறது.
அன்புள்ள ராமஜெயம் சார்,
சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் இரண்டுமே சென்னையில் 'எலைட் மூவீஸ்' ரிலீஸ்தான். எனவேதான் அவ்விரண்டு படங்களின் 100-வது நாள் வெற்றி விழாக்கள் ஒரே விழாவாகக் கொண்டாடப்பட்டது. வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த இரண்டு படங்களின் வெற்றி விழாக்கள் ஒரே விழாவாக நடந்தது அத்ற்கு முன்னும் அதற்குப்பின்னும் நடந்ததில்லை. (கமல் தனது ஒரே நிறுவனத்தின் சார்பில் தயாரித்த சதி லீலாவதி, மகளிர் மட்டும், குருதிப்புனல் ஆகிய மூன்றின் வெற்றிவிழாக்களை ஒரே விழாவாகக் கொண்டாடினார்).
அத்துடன் என் நினைவுக்கெட்டிய வரையில் பாலாஜியின் எந்தப்படத்தையும் சிவாஜி பிலிம்ஸ் விநியோகித்ததாக தெரியவில்லை.