-
நாளை நமதே… இந்த நாளும் நமதே
கவிஞர் காவிரி மைந்தன்
மக்கள் திலகம் என்னும் அடைமொழி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கல்கண்டு தமிழ்வாணன் அவர்களால் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்களின் மாபெரும் வெற்றிப்படங்களுக்குப் பாடல்கள் இயற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர் கவிஞர் வாலி அவர்கள் என்பதை வரலாறு சொல்கிறது.
திரைப்படப் பாடலாசிரியர்கள் பல நூறு பேர்கள் வந்தாலும் தங்கள் தடங்களைப் பதித்துவிட்டுப் போனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை மட்டுமே காலம் இன்று கணக்கில் வைத்திருக்கிறது. ஏன்.. எப்படி.. எண்ணிப்பார்த்தால், திரைப்பாடல்கள் என்கிற வரையறைகளை வகுத்துக்கொள்ளாமல், வாழ்க்கையின் எல்லைகளை.. இன்ப துன்பங்களை பல்வேறு கூறுகளை.. அப்பாடல்களில் இலகுவாக பக்குவமாய் பதித்து வைத்திருப்பதே அடிப்படைக் காரணம் ஆகும் என்பது புலனாகும்.
குறிப்பாக, புரட்சித் நடிகர் பொன்மனச் செம்மல் என்கிற அடைமொழிகளைத் தாங்கிநின்ற சாதனை சரித்திரமம் எம்.ஜி.ஆர். என்கிற கதாநாயகனின் பாத்திரப் படைப்புகள் எல்லாம் மக்கள் மனதில் நிச்சயமாக, சத்தியமாக, பலமாக பெரியதோர் தாக்கத்தை உண்டாக்கும் வல்லமை – வசனங்களைத் தாண்டி.. இது போன்ற பாடல்களின் மூலமே சாத்தியமாகும் என்பதை கவிஞர் வாலி அவர்கள் எம்.ஜி.ஆருக்காக எழுதிய பல்வேறு பாடல்கள் சாட்சியம் கூறும். இதோ இவ்வரிசையில் நாளை நமதே திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் .. திரையில் இருமுறை மலரும் அன்பு மலர்களே.. நம்பி இருங்களேன். நாளை நமதே..
அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்
மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
பாடவேண்டும் காவியச் சிந்து
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
நாளை நமதே, நாளை நமதே
வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே
நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது
நாளை நமதே நாளை நமதே
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
படம் : நாளை நமதே (1974)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டி.எம். சௌந்தரராஜன்
http://www.youtube.com/watch?v=pY-kqvZr070
இத் திரைப்படம் பார்த்தபோது.. குறிப்பாக இந்தப் பாடலில் இந்த வரிகள் தந்த உற்சாகம், வைராக்கியம் .. இன்று நான் பெற்றுள்ள வெற்றிகளுக்கெல்லாம் முதற்படி என்றால் அது மிகையன்று.
திரு. தர்மேந்திரா அவர்கள் இந்தியில் நடித்த யாதோங்கி பாரத் என்னும் இந்திப்படத்தின் தழுவல் இந்தப் படம் எனினும் பாடல்கள் மெல்லிசை மன்னரால் அதீதமானதவையாகவும் அற்புதமாகவும் மலர.. கவிதை இதழ்கள் விரிவது போல் பாடல் வரிகள் அமைத்தவர் கவிஞர் வாலி என்பதில் இருவேறு கருத்தில்லை.
நாளை நமதே இந்த நாளும் நமதே…
Courtesy: Net
-
-
-
-
நாளை நமதே என்னவொரு தலைப்பு எக் காலத்திற்கும் ஏற்ற தலைப்பு
இந்த திரைபடத்தில் நமது தெய்வம் இரட்டை வேடங்கள் தாங்கி நடித்த படம் .
ஒரு கதா பாத்திரத்தின் பெயர் சங்கர் வித்தியாசமான ஒப்பனையில் தலைவர் தூள் கிளப்பிஇருப்பார் .
மற்றொரு கதா பாத்திரத்தின் பெயர் விஜய் ,சங்கர் கதா பாத்திரத்தின் நேர் எதிர் .முதலில் சங்கர் கதா பாத்திரம் பற்றி சொல்கிறேன். தலைவர் ஒருவித சோகத்தை முகத்தில் படம் முழுக்க தாங்கி வருவார் அவர் சிரித்து நடித்தது என்றால் இரண்டு காட்சிகள் ஒன்று இறுதி பாடல் காட்சியில் தன் தம்பிகளை பார்த்ததும் மிகுந்த பரவசம் அடைந்து சிரிப்பார் இன்னொரு காட்சி படம் முடியும்போது எல்லோரும் நடந்து வரும்பொழுது தலைவர் மக்களுக்கு டாட்டா காட்டி சிரித்துகொண்டே போகசொல்லுவார் .
அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் தலைவர் கோபால கிருஷ்ணனன் அவர்களை தேடி வரும் பொழுது இன்ஸ்பெக்டர் அவர் ரிலீஸ் ஆகி போய்விட்டார் என்று சொல்லும் காட்சியில் தலைவர் நாற்காலியை தூக்கி அடித்து கோபத்தை வெளி காட்டும் காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும் . அதே போல் உணவகத்தில் கண்ணன் வெண்ணிற ஆடை நிர்மலாவினை வம்புக்கு இழுக்கும் காட்சியில் தலைவர் மிக casulavaga பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு நாகேஷிடம் பிஸ்கட் எடுத்து கொடுக்கும் காட்சி அதை தொடர்ந்து சண்டை காட்சி படு சூப்பர் .
நம்பியாருக்காக தலைவர் திருட போகும் காட்சியில் நம்பியார் மகன் வழி எப்படி செல்வது என்று சொல்லும் பொழுது தலைவர் சொல்லுவார் என் வழி தனி வழி என்று இன்று அந்த வசனத்தை மிகுந்த இசை பின்னணியுடன் சொல்கிறார்கள் ஆனால் எங்கள் தலைவர் மிக சாதரணமாக சொல்லிவிட்டு போவார் .
அதே போல் ஓட்டல் வாசலில் தன் தம்பியை அடித்து துரத்தும் பொழுது தலைவர் தன தம்பியின் வாயில் வழியும் ரத்தத்தை லேசாக துடைத்து தன் தலையில் தேய்த்து கொண்டு இந்த நாயிகளிடம் உனக்கு என்ன வேலை என்று சொல்லும்பொழுது திரையரங்கில் விசில் சத்தம கதை பிளக்கும் .
-
-
-
நாளை நமதே சங்கர் கதாபாத்திரத்தின் தொடர்ச்சி
அதே போல் தலைவர் தான் கொள்ளையர்களிடம் கொள்ளையடித்த பணத்தை அனாதை ஆசிரமத்திற்கு கொடுக்கும் பொழுது நாகேஷ் இப்படி எல்லாத்தையும் கொடுத்துவிட்டால் நாளை உங்கள் தம்பிகளுக்கு சேர்த்து வைக்க வேண்டாமா என்று சொல்லும்பொழுது அந்த அனாதை ஆசிரமத்தில் என் தம்பிகள் இருந்தால் என்று தலைவர் கேள்வி எழுப்புவார் .
லதாவினை தலைவர் கடத்தி செல்லும்பொழுதும் சரி லதாவினை தப்பிக்க செய்யும் பொழுதும் வரும் காட்சியில் தலைவர் கலக்கி இருப்பார் தலைவரின் அந்த சங்கர் கதாபாத்திரதிற்கு வசனங்கள் அவ்வளவாக இருக்காது ஆனால் body language மிக அற்புதமாக இருக்கும்.
இறுதி கட்ட காட்சியில் நம்பியாரிடம் தலைவர் பேசும் வசனங்கள் எக் காலத்திற்கும் பொருத்தமான வசனங்கள் மேலும் நம்பியார் ரயில்வே தண்டவாளத்தில் கால் மாட்டி கொள்ளும்பொழுது தலைவர் அவரை காப்பாற்ற முயற்சி எடுக்கும் காட்சி simply சூப்பர் அதனால் தான் நாங்கள் எல்லோரும் அவரை தெய்வமாக வழிபடுகிறோம் .
நாளை நமதே விஜய் கதாபாத்திரம்
என்ன ஒரு இளமையான கதாபாத்திரம் லதாவுடம் அவர் செய்யும் குறும்புகள் கல்லூரி மாணவனின் குறும்பையும் மிஞ்சும் எல்லா பாடல் காட்சியும் இந்த தலைவருக்கு கொடுக்கபட்டது . அதிலும் நான் ஒரு மேடை பாடகன் பாடல் தலைவரின் நடன காட்சி ரசிகர்களை இன்றும் திரைஅரங்கு மேடை மீது ஆட செய்யும் .
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன்
நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன்
பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன் !!
பாதி கண்கொண்டு பார்க்கின்ற பூச்செண்டு
பெண்ணென்று முன்வந்து பாட
அந்த பக்கத்தில் நிற்கின்ற
பருவத்து நெஞ்சங்கள் பார்வைக்குள் ஆட
காதல் கீதம் உண்டாகலாம்
பாடும் நெஞ்சம் ரெண்டாகலாம்
நான் வாய் கொண்டு சொல்லாமல்
வருகின்ற எண்ணத்தை
கண்கொண்டு சொல்கின்றவள் ஓ ..
நான் ஒரு மேடை பாடகி !
பால் நிலவென்ன நேர் வந்ததோ ?
நூல் இடை கொண்டு நெளிகின்றதோ ?
சாயல் விழி என்ன மொழிகின்றதோ ?
யார் உறவென்று புரிகின்றதோ ?
இங்கு வண்டொன்று செண்டோன்று என்றென்றும்
ஒன்றொன்று கண் கொண்டு பேச
அந்த பாஷைக்கும் ஆசைக்கும்
அர்த்தங்கள் கற்பிக்கும் சிற்பங்கள் கூட
காலம் நேரம் பொன்னானது
காதல் நேரம் நெஞ்சானது
நான் யாருக்கு யார் மீது
நேசங்கள் உண்டென்று நேருக்கு நேர் கண்டவன்
இங்கு நாமாட நம்மோடு நண்பர்கள்
எல்லோரும் அங்கங்கு ஆடட்டுமே
-
-