http://i65.tinypic.com/5be9h0.jpg
Printable View
இன்று முதல் (17/05/19) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பணம் படைத்தவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/2nbrsrt.jpg
நமது மக்கள் திலகம் திரியில் சிறப்பு மிகு 26001 சூப்பர் பதிவுகள் கண்டு, அதையும் கடந்து சென்று வருங்கால பெருமை மிகு எண்ணிக்கைகளை அடைய முயற்சிக்கும் புரட்சி தலைவர் பக்தர் திரு. லோகநாதன் பல, பல களம் காண மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...........👌 👍 🎂
"நாம் திரும்பி வரும்போது (ராமவர) தோட்டம் ஜப்தி செய்யபட்டிருக்கலாம்.."
உதவியாளரிடம் சொன்ன #எம்ஜியார்
ஒரு நாள் எம்.ஜி.ஆர்.தோட்டத்திலிருந்து தனது உதவியாளருடன் படப்பிடிப்புக்கு புறப்படுகிறார். காரில் ஏறியவர் தன் உதவியாளரிடம் சொல்கிறார்..
"தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் திரும்பி வரும்போது இது ஜப்தி செய்யப்பட்டிருக்கலாம்"
இடி போன்ற அந்தச்செய்தியை கொடி போன்றதொரு குறும் புன்னகையோடு சொல்கிறார் தலைவர்.
"என்னங்க இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க" என்ற கேள்விக்கு...
"பின்னே அலறி அடிச்சுக்கிட்டா சொல்லணும்" எதிர் கேள்வி கேட்ட செம்மல்
"ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொடுத்த உங்களுக்கா ஈட்டிக்காரன்"
"என்ன செய்வது? சொந்தப் படம் எடுத்தாலே எனக்கு எப்போதும் பற்றாக் குறைதான்.
#உலகம்_சுற்றும்_வாலிபன் வெளிநாட்டு ஷூட்டிங்கில் ஒரு நடிகை தன் சொந்த செலவில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாங்க.
'என் சொந்தப் படத்தில் நான் தான் செலவு செய்யணும்' என்றேன்..
அவ்வளவு தான். மறு நாள் அனைவரும் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் தொகை 84000 ரூபாய். (1972-இல்)
நான் போட்ட அரங்குக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு தொகை தந்தேன். ஷூட்டிங் முடிந்து ஹோட்டலை காலி செய்த இரவு அனைவரும் சாப்பிட்டதற்கான பில்லைப் பார்த்து அவங்களுக்கே மயக்கம் வந்துடுத்து.
இதை நான் பெருமையாகவோ வருத்தமாகவோ சொல்லலே. அவங்க என் மேல எடுத்துக் கிட்ட உரிமையும் நம்பிக்கையும் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.
பார்க்கலாம் குஞ்சப்பன் கிட்டே ஸ்டே வாங்க சொல்லிய இருக்கேன். வந்தா தோட்டம். இல்லைன்னா சத்யா ஸ்டூடியோவிலேயே குடும்பம் நடத்துவோம்"
சலனமில்லாமல் சொல்பவர் சாதாரணமாக பேப்பர் படிக்க ஆரம்பிக்கிறார்.
"எப்படிங்க உங்களாலே இவ்வளவு சாதாரணமா எடுத்துக்க முடியுது?"
"வாழ்க்கையிலே எது நடந்தாலும் அதை ஏத்துக்கற பக்குவம் இருக்கணும். ஜனங்க என்னை பெரிய கோடீஸ்வரன்னு நினைக்கறாங்க. ஆனா நான் ஏழைன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.
நான் ஒன்றும் குபேர வீட்டு பிள்ளை இல்லை? எனக்கு குடிசையிலும்
வாழத்தெரியும். இப்போ கூட கண்ணாடி மூடிய காரில் பயணம் செய்யறேன் என்றால் அதுக்கு ஜனங்கதான் காரணம்.
என்னைப் பார்த்துட்டாங்கன்னா அன்புல என்னை பிய்ச்சு எடுத்துடுவாங்க.
எங்க அம்மா எங்களை இரண்டனா பணத்தில் வளர்த்தாங்க. இந்த ராமச்சந்திரனால இரண்டு ரூபாயிலே இப்போ வாழ முடியும்.
ஆனால் என் மக்கள் என்னை ஏழையாக்க மாட்டார்கள். எப்பவுமே நாம் நீதிக்கு தலை வணங்கித் தானே தீரணும்" சொன்னவர் உடனே இன்னொற்றையும் சொல்கிறார்.
"அட இந்தத் தலைப்பிலேயே ஒரு படம் பண்ணலாமே"
அந்த வகையில் உருவானது தான்
#நீதிக்கு_தலை_வணங்கு படம்.
எவ்வளவோ பேர்களின் வீட்டை மீட்டுக் கொடுத்தவரின் வீடு பறி போகும் நிலையில் இருந்தாலும்...அவருடைய தர்மம் அவர் வீட்டை மட்டுமல்ல இந்த நாட்டையும் அல்லவா அவரிடம் தந்தது....
எத்தனை ஆழமான அன்பும் நம்பிக்கையும் மக்கள் மேல் அவர் கொண்டிருந்தால் 'என்னை ஜனங்கள் ஏழையாக்க மாட்டார்கள்' என்று சொல்லி இன்றளவும் நம் மனங்களில் கோடீஸ்வரனாகவே கொலு வீற்றிருப்பார்..
திருச்செங்கோடு பொதுக்கூட்டத்தில் புரட்சித்தலைவர் பேசுகிறார்: "நான் சிறுவனாக இருக்கும்போது சாப்பாட்டுக்கு வழி இல்லாம 3 நாள் சாக கிடந்தோம், எங்களது நிலையைக் கண்ட பக்கத்து வீட்டு மூதாட்டி, என் அம்மாவிடம் முறத்துல கொஞ்சம் அரிசியைக் கொடுத்து, 'பிள்ளைகளை பட்டினிபோட்டு கொன்னுடாதே, இந்த அரிசியை காய்ச்சி அவர்களுக்கு கஞ்சி ஊத்து' என்றார், அந்த மூதாட்டி அன்று எங்களுக்கு அரிசி தராமலிருந்தால் இன்று இந்த தனயன் இல்லை''( தலைவரின் பேச்சுக்கு ஓவியம் வரைந்தது
பேராசிரியர் சாமுவேல் )............. Thanks wa.,
இதயக்கனி
_____________
தொட்டா இடமெல்லாம்
தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னாள
பட்டு முகம் கொஞ்சம்
வெட்கத்துடன் சிவக்க
முத்தம் அவன் தந்தான்
மெத்தையிடும் முன்னால்
தளிர் மேனியில் விரல்
பட்டதும் குளிர் போனதே
குளிர் போனதும் மழைக்
கூந்தலின் புகழ் பாடினேன்
புகழ் பாடியே தினந்தோறுமே முகம் தேடினேன் முகம் கண்டதும்
புதுக் காதலின்
நடம் ஆடினேன் !
கவிஞர் நா . காமராசன்
கற்பனைக்கு எட்டாத
கற்பனை வளம்
துவண்டு கிடப்பவனும்
துள்ளும் வரிகள்
ஆயுள் அதிகரித்திருப்பதாக
ஆய்வுகள் கூறுகின்றன
இப்பாடலின் வரிகள்
இதை உர்ஜிதபடுத்துகிறது
டி எம் எஸ் , சுசிலா குரலின் இனிமை நாம்
அறிந்ததே ஆனால்
இப்பாடலில் இவர்களின் இனிமை
திரும்ப முடியாத வசந்தத்திற்கு அழைத்துச் செல்லும் !
இத்தனைச் சிறப்புள்ள
இப்பாடலில் மக்கள் திலகத்தின் ஈடுபாடு இல்லாமலா இருக்கும்
அவனன்றி ஒரு அணுவும்
அசையாதே !
ஹயாத்............ Thanks wa.,
இன்று தலைவர் நிகழ்ச்சிக்காக பெங்களுர் பயணம். தலைவரின் திருவுருவ சிலைக்கு சிவாஜி நகரில் மாலை 4.00 மணிக்கு அன்னதானம் மற்றும் சிறப்புபூஜை நடைபெறுகிறது.திரு எம்.ஜி.ஆர் ரவி அவர்களின் அமைப்பான உரிமைக்குரல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நற்பணி அறக்கட்டளை அமைந்துள்ள சிவாஜி நகரில் நடைபெறுகிறது இன்று திரு. எம்.ஏ. பழனி (Bhll) அவர்கள் மூலம் தலைவர் திருவுருவ சிலைக்கு சிறப்பு செய்யப்படுகிறது. உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,