A creative art work by Karupaiah Ranjith.
http://i125.photobucket.com/albums/p...ps34ecdff8.jpg
Printable View
A creative art work by Karupaiah Ranjith.
http://i125.photobucket.com/albums/p...ps34ecdff8.jpg
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செயிது விடல் - தொடர் பகுதி : 6
----------------------------------------------------------------------------------------------------------------------
ஏற்கனவே இந்த தலைப்பில் - நடிகை டி.வி. குமுதினி, எல்லிஸ் ஆர். டங்கன், கண்ணதாசன், நடிகை பானுமதி, நடிகர் சந்திரபாபு ஆகியோரை குறிப்பிட்டு எழுதியதை தொடர்ந்து, ஒரு பத்திரிகை உதவி ஆசிரியர் வாழ்வில் நடந்த சம்பவத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் அவர். அவருக்கு நெருக்கமாக விளங்கி வந்த நடிகரைப் பற்றி அவர் சார்ந்திருந்த பத்திரிகையில் அதிகமாக செய்திகளையும் அவரது படங்களையும் வெளியிட்டு வந்தார். அதே சமயம் நமது எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி தவறான கருத்துக்களை வெளியிடா விட்டாலும், அவருக்கு உரிய அளவில் கிடைக்க வேண்டிய விளம்பரத்தைக் கூட தராமல் இருந்தார். இது தவிர, மற்றபடி அந்த உதவி ஆசிறியரின் உயர் பண்புகள் பழகும் தன்மை காரணமாக, நமது பொன்மனச்செம்மல் அவர்கள் இதைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.
அந்த உதவி ஆசிரியரின் சகோதரிக்கு திருமணம் ஏற்பாடாகீயது. திருமணத்துக்கு நேரில் சென்று எம்.ஜி. ஆர். அவர்களை அழைக்க அவர் தயங்கினார். அழைப்பிதழை பொம்மை மாத இதழ் ஆசிரியர் சாரதி அவர்களிடம் அளித்து, அதை மக்கள் திலகத்திடம் எப்படியாவது கொடுத்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொம்மை சாரதி அவர்களும் அந்த அழைப்பிதழை புரட்சித்தலைவரிடம் தந்தார். எப்போதும் போல சகஜமாக நம் வரலாற்று நாயகனும் வாங்கிக் கொண்டார்
திருமணம் நடைபெறவிருந்த முன் தினம் எம். ஜி. ஆர். அவர்களின் அலுவகத்திலிருந்து பொம்மை சாரதி அவர்களுக்கு அழைப்பு வந்தது. அவரும் போனார். எம். ஜி. ஆர். அவர்களின் அலுவக மேனேஜர் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் பொம்மை சாரதி அவர்களிடம் ஒரு கவரைத் தந்து, "அதனை அந்தப் பத்திரிகை உதவி ஆசிரியரிடம் சேர்த்து விடும்படி எம்.ஜி.ஆர். அவர்கள் உங்களிடம் சொல்லச் சொன்னார்" என்று கூறினார்
திருமணத்துக்கு சென்ற பொம்மை சாரதி அவர்கள்,அந்த பத்திரிக்கை நண்பரிடம், "எம்.ஜி.ஆர். அவர்கள் உங்களிடம் தரச் சொன்னார்கள்"என்று அந்தக் கவரை கொடுத்தார். பிரித்துப் பார்த்த அந்த நண்பர் அப்படியே திகைத்துப் போய் விட்டார். அவர் சிறிதும் எதிர்பாராத நிலையில் ஒரு பெரிய தொகை அதில் இருந்தது.
இதில் குறிப்பிடத் தக்க ஒரு விஷயம், அந்தப் பத்திரிக்கை நண்பரின் நெருங்கிய நடிகராக விளங்கியவரிடமிருந்து, ஒரு வாழ்த்து செய்தி கூட வரவில்லை. இதையும், அந்த பத்திரிக்கை நண்பர் தன்னிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார் என்று பொம்மை சாரதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
================================================== ==========================================
பொம்மை - மாத இதழ் ஆசிரியர் சாரதி அவர்கள் எழுதிய "வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்" என்ற புத்தகத்திலிருந்து ஒரு ஆதார தகவல்
அந்த பிரபல நடிகர் யார் என்று குறிப்பிடாமல் வாசகர்களின் யூகத்துக்கு விட்டு விட்டார், பொம்மை சாரதி அவர்கள்.
================================================== ==========================================
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
CONGRATULATIONS ROOP KUMAR SIR
for having crossed 700 Postings.
http://i46.tinypic.com/rw315j.jpg
Ever yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
EVEN TODAY - NEW TAMIL MOVIES ADVERTISEMENT MAKKAL THILAGAM PIC AND MATTER IS REQUIRED TO THE PRODUCERS TO PROMOTE THEIR BUSINESS
DIRECTOR AND ACTOR RAJAKUMARAN IN HIS OWN MOVIE ''THIRUMATHI TAMIZH''ADVT CAME IN DAILYTHANDHI TODAY .
http://i47.tinypic.com/2hrl7r5.jpg
Mgr in thalaivan - 1970
அறிவுக்கு வேலை கொடு ..
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம்
மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
முரசு தொலைக்காட்சியில் நாளை இரவு 7.30 மணிக்கு
மக்கள் திலகம் நடித்த
தாய்க்குத்தலை மகன் ஒளிபரப்ப உள்ளது .
உலக திரைப்பட வரலாற்றில்
இந்திய திரைப்பட வரலாற்றில்
முதல் முறையாக உலக புகழ் பெற்ற
மக்கள் திலகத்தின் திரைப்பட 134 படங்களில் தோன்றிய
ஒவ்வொரு படத்திலும் இடம் பெற்ற
மக்கள் திலகத்தின்
http://i49.tinypic.com/16bd65y.jpg
அழகு முகம்
எல்லா நவரசமும் நிறைந்த படக்காட்சிகள்
பக்கத்திற்கு பக்கம்
ஈடு இணையில்லாத கலை வேந்தனின்
உலக அளவில் பெயர் பெற்ற பல நடிகர்கள் அனைவரையும் மிஞ்சி
ஒரு உன்னதமான நடிப்பு வேந்தரின் பட ஆல்பம்
யாருமே செய்ய நினைக்காத
இந்த அரிய படைப்பினை நமக்கு விரைவில் கண்ணுக்கும் ..... மனதுக்கும்
https://www.youtube.com/watch?v=WP6CB5VQxR8
AAYIRATHIL ORUVAN - 9
https://www.youtube.com/watch?v=3r0Ka4-rupM
AAYIRATHIL ORUVAN - 10