http://i60.tinypic.com/jfay9w.jpg
Printable View
இன்று காலை 6 மணி முதல் ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.நடித்த
"ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாகி வருகிறது
http://i57.tinypic.com/2ns70uh.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிடல் பிளசில் புரட்சி நடிகர் / மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "மாட்டுக்கார வேலன் " ஒளிபரப்பாகிறது.
http://i60.tinypic.com/16a1b21.jpg
மக்கள் திலகத்தின் ''ஆசைமுகம் '' படம் வெளி வந்து 49 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் திரை அரங்கினில் ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம் . தகவல் தந்த திரு ரவிச்சந்திரன்
அவர்களுக்கு நன்றி .
சென்னை - பாடி - சிவ சக்தியில் மக்கள் திலகத்தின் 100 வது காவியம் ஒளிவிளக்கு - தகவல் மற்றும் விளம்பரங்கள் பதிவிட்ட திரு சுந்தர் , திரு லோகநாதனுக்கு நன்றி .
NOW ON JAYA MOVIE - THALAIVAN
https://www.youtube.com/watch?v=ssC0vTtNKNo
Today onwards
at coimbatore
delite theatre
kumarikkottam
https://www.youtube.com/watch?v=s8XCUBoJ1jk
Please watch from 17:13 onwards.
http://i57.tinypic.com/10yf044.jpg
‘ஒத்தையா? மொத்தமா?
எத்தனை பேர் வாரீங்க?’
இந்தியா இலங்கை இடையே கடற்பகுதியில் அமைந்திருக்கும் பல தீவுகளில் ஒன்றுதான் புங்குடு தீவு. அந்த தீவைச் சேர்ந்த செல்லையா என்பவருக்கும் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி அவர்களது அன்பில் விளைந்தது ஒரு மழலை. கொஞ்சம் வளர்ந்து சிறுவனானதும் யாழ்ப்பாணத்தில் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ராணி தியேட்டரில் தலைவர் நடித்த மலைக்கள்ளன் படத்தை பார்த்ததும் அன்று முதல் மனம் முழுவதும் தலைவரை அப்பிக் கொண்டு அவரது ரசிகனான் அந்தச் சிறுவன்.
பின்னர், தமிழகம் வந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படித்த இளைஞனுக்கு தலைவர் மீது பற்று வளர்ந்த வேகத்தைப் போலவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் வளர்ந்தது. நாடகங்களை எழுதி அவற்றில் நடிக்கவும் செய்தார். கலங்கரை விளக்கம், பணமா பாசமா? உள்ளிட்ட படங்களின் கதாசிரியர் ஜி.பாலசுப்பிரமணியன் மூலம் தலைவரின் அறிமுகம் கிடைத்தது.
பச்சையப்பன் கல்லூரி விழாவில் தலைவர் ஒருமுறை கலந்து கொண்டபோது அந்த இளைஞனின் பேச்சு தலைவரை கவர்ந்தது. ஜி.பாலசுப்பிரமணியம் மூலமாக தலைவரை ஒரு படப்பிடிப்பில் அவரது மேக் அப் ரூமில் தனியாக சந்தித்தபோது, தானே முந்திக் கொண்டு அந்த இளைஞனுக்கு வணக்கம் சொன்ன தலைவரின் பண்பும் பணிவும் அடக்கமும் இளைஞனை அவருக்கு மேலும் அடிமைப்படுத்தின. பணிவோடு தலைவரின் கால்களைத் தொட்டு வணங்கி தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டான் அந்த இளைஞன்.
தங்க நிகர்த் தலைவரின் அழகும் நிறமும் ஒளிபொருந்திய அவரது முகமும் கட்டுடலையும் பார்த்ததும் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை குழிதோண்டிப் புதைத்தான்.
‘‘படித்து விட்டு என்ன செய்வதாய் உத்தேசம்?’’......... தலைவர்.
தலைவரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்த பின், நடிக்க விரும்புகிறேன் என்று எப்படி சொல்வது? வெட்கம் பிடுங்கித் தின்றது அந்த இளைஞனுக்கு. ஏற்கனவே நாடகங்களில் நடித்ததோடு, சில நாடகங்களையும் எழுதியிருந்ததால், ‘கதை எழுதுவேன்’ என்றான் இளைஞன்.
‘அப்படியா? ’ என்று கேட்டு மகிழ்ச்சியடைந்த தலைவர் ‘எனக்கு ஒரு கதை கொடுங்களேன்’ என்று அந்த இளைஞனிடம் கேட்க 3 நாட்களில் கதை தருகிறேன் என்று சொல்லி விடைபெற்ற இளைஞன். (விடைபெறுவதற்கு முன் தலைவரின் அன்பான உணவு உபசரிப்பு) 3 நாளில் கதையோடு வந்தான்.
கதை தலைவருக்கும் பிடித்துப் போனது. அந்தக் கதைதான் தலைவர் நடித்து 1966-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் தாமதமாகி பின்னர் 1968-ம் ஆண்டு வெளியாகி வசூலை வாரிக் குவித்த வெற்றிப் படமான ஜேயார் மூவிஸின் ‘புதிய பூமி’.
படத்துக்கான கதையைக் கொடுத்த தலைவரின் ரசிகனான, கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு அப்போது வயது 17.
பெயர் ..... வி.சி.குகநாதன்.
‘‘என் திரையுலக வாழ்க்கையில் திரைக்கதாசிரியனாக அங்கீகாரம் அளித்து என் திரையுலக வாழ்க்கைக்கு பச்சைக் கொடி காட்டி தொடங்கி வைத்தவர் நான் வணங்கும் இதய தெய்வம் புரட்சித் தலைவர்’’ என்று பின்னாளில் வி.சி.குகநாதன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
புதியபூமி படத்தில் தலைவரின் பெயர் கதிரவன். கிராம மக்களுக்கு சேவை செய்யும் டாக்டராக வருவார். புதியபூமி படம் வெளியான நேரத்தில் 1968-ம் ஆண்டு தென்காசி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் பெயர் கதிரவன். தேர்தலில் கதிரவன் வெற்றி பெற்றார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
*எல்லாரும் தலைவரை எங்க வீட்டுப் பிள்ளை எனக் கொண்டாடுவதை தலைவரே கூறுவதைப் போல அமைந்த , ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை...’ பாடல், மற்றும்,
* சின்னவளை முகம் சிவந்தவளை..
* நான்தாண்டி காத்தி....
* நெத்தியிலே பொட்டு வெச்சு...
* விழியே விழியே உனக்கென்ன வேலை....
போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்ட நம் எல்லாருக்குமே மிகவும் பிடித்த படம் புதியபூமி. (எல்லாத்தையும் இப்பயே சொல்ல முடியாது. ஒவ்வொரு வருஷமும் கொஞ்சம்... கொஞ்சம்.... சரியா?)
அதிலும் விழியே விழியே... பாடலின் முடிவில் தலைவர் பெண் போலவும் செல்வி. ஜெயலலிதா அவர்கள் ஆண் போலவும் அபிநயங்கள் செய்வது அட்டகாசம். பாடல் முடியும்போது படிகளில் ஜெயலலிதாவை இடதுபுறமும் வலதுபுறமுமாக மாற்றியபடியே, zigzag ஆக அவரை விட வேகமாக ஓடும் தலைவரின் சுறுசுறுப்பு....... அவருக்குத்தான் வரும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பின்குறிப்பு: புதியபூமி படத்தின் பாடல்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும். ‘நான்தாண்டி காத்தி..’ யும். அதனால்தான் அதில் வரும் அடுத்த வரிகளான ‘ஒத்தையா? மொத்தமா? எத்தனை பேர் வாரீங்க?’ என்பதையே இந்த கட்டுரைக்கு தலைப்பாக்கினேன். மற்றபடி, தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி. ஜெயலலிதா அவர்கள் போட்டியிடும், நாளை நடக்க இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கும் இந்த தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் படிப்பவர்கள் தாங்களாக அப்படி நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
புதிய பூமி - வி.சி . குகநாதன் பற்றிய அறிமுகத்துடன் ,படத்தை பற்றியும் , இன்றைய அரசியல் பற்றியும் இணைத்து
தாங்கள் விளக்கிய விதம் சூப்பர் .