Dear Shri. Vasudevan
Thank you very much for guiding me to upload the photos.
JAIHIND
M. Gnanaguruswamy
Printable View
Dear Shri. Vasudevan
Thank you very much for guiding me to upload the photos.
JAIHIND
M. Gnanaguruswamy
திரு. பம்மலார், திரு. கார்த்திக் மற்றும் திரு. கோபால் அவர்களுக்கு,
கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெற்ற மறக்க முடியுமா! என்ற தொடரில் சொல்லப்பட்டதால் ஏற்பட்ட சிறு கலக்கம். இருப்பினும் என் சந்தேகத்திற்கு செவி மடுத்து உடனடியாக பதில் அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
நட்புடன்,
இணையதளம் ஒன்றில் கிடைத்த தலைவரின் பென்சில் ஸ்கெட்ச் கட்டபொம்மன் ஆர்ட். வரைந்தவர் பெயர் குறிப்பிடப்படவில்லை, அந்த ஓவியருக்கு நம் வாழ்த்துக்கள். அந்த தளத்திற்கும் நம் நன்றிகள்.
http://farm5.static.flickr.com/4070/...a8698440_b.jpg
அன்புள்ள பம்மலார் அவர்களே,
வீரபாண்டிய கட்டபொம்மனின் 100-வது நாள், வெள்ளி விழா விளம்பர ஆவணங்களும், அதன் மாபெரும் வெற்றி பற்றிய கூடுதல் தகவல்களூம் வழக்கம்போல மிக மிக அருமை. நீங்கள் நினைத்திருந்தால் 97 நாட்கள் ஓடிய அரங்குகளையும் 100 நாள் பட்டியலில் சேர்த்திருக்கலாம். ஆனால், உள்ளதை உள்ளபடி தரும் பெருந்தன்மையாளர் அல்லவா எங்கள் பம்மலார்?.
நெருடிய சில விஷயங்கள்:
1) இத்தனை அரங்குகளில் மாபெரும் வெற்றிபெற்ற காவியத்தின் 100-வது நாள் விளம்பரத்தில், அனைத்து அரங்குகளின் பெயர்களையும் இடம்பெறச்செய்து விளம்பரம் அளிக்க தயாரிப்பாளருக்கு துப்பில்லை. எனவே இவரது அடுத்த படம் தோல்வியடைந்ததில் தப்பில்லை.
2) மரகதம் திரைப்படத்தை ஒரு 3 அல்லது 4 நாட்கள் தள்ளி வெளியிட்டிருந்தால் கூடுதலாக 14 அரங்குகளில் கட்டபொம்மன் 100 நாட்களைக்கடந்திருப்பார். அதில் ஆர்வம் காட்டாத அனைவருமே (கட்டபொம்மன் தயாரிப்பாளர், மரகதம் தயாரிப்பாளர் மற்றும் நம் அண்ணன் உள்பட) குற்றவாளிகளே. (1965 துவக்கத்தில் சென்னை பிளாசா தியேட்டர் வாசலில் வந்திறங்கிய வேறொரு படத்தின் படப்பெட்டியை டாக்ஸியில் திருப்பி அனுப்பிவிட்டு தங்கள் படத்தை 100 நாட்கள் ஓட்டியவர்களிடம் நம்ம ஆட்கள் நிறைய பாடம் கற்றிருக்க வேண்டும்).
3) திருச்சி ஜூபிடர் (153 நாட்கள்), சேலம் ஓரியண்டல் (160 நாட்கள்) ஆகியவற்றிலும் வெள்ளிவிழாவைக் காணச்செய்ய தயாரிப்பாளர் முயற்சிக்கவில்லை. முயன்றிருந்தால் தமிழகத்தில் 3 அரங்குகளில் வெள்ளிவிழாவைக் கண்டிருக்கும்.
எப்படியோ இத்தனை தடங்கல்களையும் கடந்தும், இன்றும் சாதனைச்சித்திரமாகத் திகழும் கட்டபொம்மனின் ஆவணப்பொக்கிஷங்களை அள்ளி வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றி.
Thank you Pammalar sir
Thank you Vasudevan sir
Pammalar sir your information should be published in all magazines,if this happen,all people will come to know about SIVAJI'S fame
பல்வேறு ஆவணங்கள், நிழற்படங்கள், தகவல்கள், கருத்துக்கள் என பம்மலார், வாசு, கார்த்திக், பாலா உட்பட அனைத்து நண்பர்களின் கைவண்ணத்தில் கட்டபொம்மன் விழாக் கோலமே பூண்டு விட்டது. அனைவருக்குமே பாராட்டுக்கள்.
கெய்ரோ ஆசிய ஆப்பிரிக்க விழாவில் நடிகர் திலகம் சிறந்த நடிகர் பரிசு பெற்றது தெரியும். அந்த விழாவினைப் பற்றிய செய்தி, மற்ற விவரங்கள் நாம் அறிந்து கொண்டால் முழுமை அடையும்.
மார்ச் 15 1960 அன்று நடைபெற்றது இரண்டாம் ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்பட விழா
Prince of Samarkand என்கிற ருஷ்யப் படமும் தாஜ் மஹல் என்கிற இந்திய குறும்படமும் இணைந்து தங்கக் கழுகு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டன. சிறந்த நடிகருக்கான வெள்ளிக் கழுகு விருதிற்கு சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பாளருக்கான வெள்ளிக் கழுகு விருதிற்கு ஜி.ராமநாதன் அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு சிறப்பு விருதிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டது. Kaiss and Laila என்ற படத்தில் நடித்த மகதா என்கிற எகிப்து நடிகையும் Five Golden Flowers என்ற படத்தில் நடித்த Yan Li Tchun என்கிற சீன நடிகையும் சிறந்த நடிகைக்கான வெள்ளிக் கழுகு விருதினை பகிர்ந்து கொண்டனர். இதே சீன படத்தை இயக்கிய Wang Chia Ni என்பவர் சிறந்த இயக்குநருக்கான வெள்ளிக் கழுகு விருதினைப் பெற்றார். முழு நீள படங்களில் பங்கேற்றவர்களுக்கான 12 சிறந்த பங்களிப்பிற்கான நற்சான்றிதழ் பத்மினி அவர்களுக்கும் வழங்கப் பட்டது.
இந்த விவரங்கள் ஹிந்து பத்திரிகையின் இணைய பதிப்பில் தரப் பட்டுள்ளன.
நடிகர் திலகத்திற்கு வழங்கப் பட்ட சான்றிதழின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...wardforweb.jpg
எகிப்து நடிகை மகதா நடித்த கைஸ் மற்றும் லைலா படத்திலிருந்து ஒரு நிழற்படம்
http://www.nadigarthilagam.com/images9/kaisleila.jpg
சீன நடிகை நடித்த சீன மொழிப் படத்திலிருந்து ஒரு நிழற்படம்
http://www.nadigarthilagam.com/images9/fgf.jpg
அன்பு ராகவேந்தர் சார்,
பிறந்த நாள் வாழ்த்துக்கள். இறைவன் அருளால் பல்லாண்டுகள் தாங்கள் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறோம்.
கெய்ரோவில் நடந்த படவிழா பற்றிய முழுமையான தகவல்களுக்கும், கிடைத்தற்கரிய புகைப்படத்தொகுப்புக்கும் மிக்க நன்றி.
1960-ல் நடந்த விழா நிகழ்ச்சிகளை இப்போது நாம் அறிய முடிகிறது என்றால், தங்களின் சேவையையும், இணையத்தின் பங்களிப்பையும் என்னென்று வியப்பது.
well said mr kartik sir. somehow our producers distributors and concerned people have not taken any intiative in all these matters
not ony kattabomman days EVENTODAY iam sorry to say this point. hope you will agree with me.
when karnan rerelease was going strong the movie was lifted in sme theatresfor reasons unknown. otherwise we will have 100days celebrations in more theatres.
நம்முடைய NTFANS அமைப்பின் சார்பில் இன்று ஸ்க்ரீன் ஆகிக் கொண்டிருக்கும் 'எங்கிருந்தோ வந்தாள்' (சில ஸ்டில்ஸ்)
http://t2.gstatic.com/images?q=tbn:A...WZMCSeAILqkSKw
http://www.tamilsongstv.com/uploads/...37c7896f-1.jpg
http://dbsjeyaraj.com/dbsj/wp-conten...011/07/EV1.jpg