-
மிக மிக மிக அபூர்வமான படம்.
மதுஜி!
இந்தப் பெண் சிறார்கள் யார் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?
சாட்சாத் நம் நடிகர் திலகமும், காக்கா ராதாகிருஷ்ணனும்தான்.
மிக மிக மிக அபூர்வமான படம்.
'கதரின் வெற்றி' நாடகத்தில்தான் இப்படி சிறுமியர் வேடத்தில் இருவரும் தோன்றுகின்றனர். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார் நடிகர் திலகம்!
கையில் குடம் வைத்திருக்கும் சிறு வயது அழகி சிறுமிதான் நம் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...0cfb954799.jpg
-
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் நடிகர் திலகம் வாழ்ந்த வீடு.
http://i1087.photobucket.com/albums/...IMG_0004-4.jpg
-
-
எம்.ஆர்.ராதா அவர்களின் நாடகக் குழுவில் சிறு வயது நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...79d6a464cd.jpg
-
-
-
-
வாழ்க்கையில் வரும்போது தெரியாது.. போன பின்பு அதைப் பற்றி நினைக்கத் தூண்டிக் கொண்டே இருக்கும்.. அது வேறொன்றுமில்லை இளமை..
வளமையாம் எண்ணங்கள் வாகாக உடலில்
விழவைக்கும் அழகினை விந்தையெனத் தந்தேn
சிலகாலம் தானிருக்கும் சீக்கிரம் செல்லும்
இளமையெனும் அற்புதமே ஆம்..
அதோ பாருங்கள்.. இந்த இளைஞனுக்கு என்ன ஆயிற்று.. துள்ளித் திரிய வேண்டிய இளமைப் பருவம் தான் ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை..காரணம்...யெஸ்..அவனுளம் கவர்ந்த நங்கை..
கண்ணினைக் கொட்டிப் பார்த்து
...கருத்தினில் விழுந்து விட்ட
பெண்ணினை என்ன சொல்ல
..பித்தமும் மாறும் மெல்ல
அவளுக்கு அவன் மேல் கோபம்.. கோபம் என்றால் ரியலெல்லாம் இல்லை..பொய்க்கோபம்..ஊடல் தான்..
வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்
பாவம் புள்ளையாண்டான் என்ன செய்வான்.. இந்தக் காலம்னா இருடி சகி..உனக்காக ஜாய் அலுக்காஸ்ல போய் சின்னதா டைமண்ட் பெண்டண்ட் வாங்கியிருக்கேன் அப்புறம் நீதான் கேட்டியோன்னோ ஒனக்காக ஆப்பிள் ஐ 6 வாங்கியிருக்கேன் பாரு..வீட்டுக்குப் போய் சார்ஜ் பண்ணிட்டு என்னோட பேசு..என்ன” என்று சொல்வான்..அது மட்டும் பத்தாம ஹோட்டலுக்கு வேற – சென்னைன்னா கிருஷ்ண விலாசம், எஸ்கேப் அவென்யூன்னு கூட்டிக்கிட்டு டின்னர் போகணும்..
ஆனா அந்த இளைஞனோ ப்ளாக் அண்ட் ஒய்ட் கால இளைஞன்.. என்ன செய்வான் பாட்த்தான் செய்வான்.. என்ன பாட்டு..
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
காதலியே தவறேது செய்தேன் பிரிய?
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
உனை மணம் புரிபவன் நானல்லவோ - நீ
ஒன்றும் புரியாத சின்னஞ்சிறு நீயும் ஓடாதே
எந்தன் அருகினில் நாணம் ஏனோ?
இன்னும் நீ வேறு நான் வேறோ எனைப் பாரடி
சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே
துடிக்கும் உணர்வில் இரு நெஞ்சம் கலந்த பின்னும்
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
கொழுக் மொழுக்குன்னு கண்கள் முழுக்க குறும்பு மின்ன அந்த இளைஞன் பாடறதக் கேட்டு அவளுக்கும் சிரிப்பு வருது சிரிச்சுடறா..
ம்ம் ந.தி இளைஞன் சர்ரோஜா தேவி இளைஞி.. படம் குலமகள் ராதை..
(எப்ப நினைச்சாலும் கேட்டாலும் இனிக்கும் பாட்டு)
-
மறுபடியும் ஒரு இளைஞன் மறுபடியும் ஒரு மங்கை.. காதல் தான்..
வாதனை செய்துவிடும் வேதனை கூட்டிவிடும்
சோதனை கூட்டியே சொக்கிடும் – காதலிலே
எண்ணம் மயங்கியே என்றும் விழுந்திடுவார்
திண்ணமாய் மாந்தரவ்ர் தான்..
என்ன பண்றது.. இந்தக் காதல் செய்யும் மாயம் அப்படி.. அந்த இளைஞன் மீது இவளுக்கும்கோபம்.. காதல் இருக்கு ஆனா இல்லை என்பது மாதிரியான பேதை..(உடை கூட சின்ன உடை தான் அந்த நங்கைக்கு!)
இவனுக்கோ புரியறது.. சரி..இதுஏதோ ஊடல் என்னடா இது லீவ் விட்டிருக்கு எஞ்சாய் பண்ணலாம்னு வந்தா..பார்க்கறா..ஆஹா எவ்ளோ அழகாப்பா இருக்கா இவ..
அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்குமவள் அழகே
மனசே சொக்கி மயங்குதே.. சரி கொஞ்சம் என்னடின்னு கேக்கலாம்னு கேட்டா கோச்சுக்கிட்டு எங்கேயோ போறாளே..
பாடலும் வருதே..பாடப் பாட அப்படி ப் பாடறவன் படற பாட்டப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வருது..ஊடல் போச்சே போயிந்தே இட்ஸ் கான்..
இளைஞன் நடிகர் திலகம்.. ஹீரோயின்.. வேறு யார் லத்து.. படம் சிவகாமியின் செல்வன்.. ந.தி. இந்தப் பாட்டுல க்ம்ப்யூட்டர் யூஸ் பண்ணியிருப்பார்..(லேப்டாப் )
*
ஆடிக்கு பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு
ஆமா
அல்லி மலரை சந்திரன் தேடி அணைவது உண்டு
ஆமா
தோட்டத்து காட்டில் பூங்கொடி ஆடும்
சொக்கும் குரலில் பூங்குயில் பாடும்
ஆமா ஆமா
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள்
நீ அல்லவோ
ஆ இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
அது உன் எண்ணம்
ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே
வானிடை ஓடிய மின்னலினாலே
மேகம் வில்லொன்று போடும்
தேனிடை ஊறிய செங்கனி வாயும்
காதல் உண்டென்று கூறும்
மனதுக்குள் இருப்பது ரகசியம்
உனக்கதை பெண்மை சொல்லாது
கனவுகள் பிறப்பதும் கவிதையில் விரிப்பதும்
காதல் ஆகாது
ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே
மான் விளையாடிடும் மைவிழி ஒரு நாள்
காதல் உன்னோடு பேசும்
பூ விளையாடிடும் மேடையின் மேலே
பூவும் பொட்டோடு ஆடும்
அது சரி நடக்கட்டும் புதுக் கதை பிறக்கட்டும்
நேரம் பார்ப்போமா
ஒரு பக்கம் திரையிட்டு மறு பக்கம் அணையிட்டு
உலகை வெல்வோமா
இல்லை சொல்லாதே இனி ஆமாம் சொல் கண்ணே
ஆமாமாமா ஆமா ஆமா ஆமா
அது நானல்லவோ
*
ந.தியின் குறும்பும் பாடலும் என்றும் மறக்காது..
-
வாசு ஜி.. ஒவ்வொரு படமும் ஒரு பொக்கிஷம்.
பாதுகாப்பு படம் அந்தக் காலத்தில் தி. நகர் கிருஷ்ணவேணி திரையரங்கில் பார்த்தது. இந்தப் பாடல் வானொலியில் கேட்ட நினைவே இல்லை. "ஒரு நாள் நினைத்த","வரச்சொல்லடி","முத்து நகை" மற்றும் "ஆத்துக்கு பக்கம்" பாடல்கள் அடிக்கடி ஒலிக்கும். பல வருடங்களுக்குப் பிறகு வீடியோவுடன் மீண்டும் காணக் கிடைக்கும் என்று எண்ணியதே இல்லை. ( அட.. அந்தப் பாட்டு முழுவதுமே இளமை துள்ளும் விதமாக ஒரு ஸ்டைலாக அவர் நடப்பார் கவனிங்க ). சும்மா நன்றி நன்றி என்று எழுதுவதில் பயனில்லை என்று தோணுது. அட்வான்ஸா நிறைய நன்றிகளை இப்பவே அனுப்பி விட்டேன்.
சிக்கா.. என்ன ஆச்சு ? பாலைவன ஏரியாவில் ஏதும் ஜில்லுனு காத்தும் மழையுமா இருக்கா ? கவிதை பொங்குதே !