-
அவர்களுடைய பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டே, பார்வை யாளர் புத்தகத்தையும் புரட்டி பார்த்து, ஏற்கனவே இதற்கு முன் பள்ளி க்கு வருகை தந்த வேறு தலைவர்கள் எழுதிய குறிப்புகளை படித்துவிட்டு, பிறகு, எம்.ஜி.ஆர்., தன் சட்டை சைடு பாக்கெட்டில், எப்போதும் வைத்திருக்கும் பேனாவை எடுத்து, எழுத ஆரம்பித் தார்.
கொஞ்சம் எழுதுவதும், மேடையில் மற்ற பேச்சாளர்களின் பேச் சை கேட்பதும் என, இர ண்டு பணிகளையும் ஒ ரே நேரத்தில் செய்து கொண்டிருந்தார். இடையிடையே அரு கில் இருந்தவர்களிடம் ஏதோ பேசி, ஜோக் அடி த்து சிரித்து, ஜாலி மூடி ல் இருந்தார்.
விழா இறுதியில் அவர் பேச வேண்டிய நேரம் வந்த போது, சரி யான நேரத்தில் எழுதி முடித் து, கையொப்பமிட்டு, நிர்வாகியிடம் கொடுத் தார். நிர்வாகத்தை பா ராட்டியும், அதே நேரத்தில் மாணவர் களுக்கு அறிவுரை வழங் கியும் பேசினார்.
நிகழ்ச்சி முடிந்த பின், நேராக காருக்கு செல்லாமல், மேடையை விட்டு கீழே இறங்கியவர், பாதுகாப்பு வளையத்தை மீறி, பார் வையாளர் பகுதிக்கு சென்று விட்டார்.
அங்கு நின்று கொண்டிருந்த என்.சி.சி., மாணவர்கள் மற்றும் சிறுவ ர்களிடம் தோளைத் தட்டியபடி, கேஷûவலாக பேசி, அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்.
பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டுமே மேடை யில் அனுமதிக்கப்பட்டு, எம்.ஜி.ஆரை அருகில் பார்க்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வை யாளர்கள் பலரும் எம்.ஜி.ஆரை அருகில் நெருங்கி பார்க்க ஆசைப் பட்டாலும், பாதுகாப்பு காரணமாக போலீசார் நெருங்க விடுவதில் லை.
இதை எம்.ஜி.ஆர்., அறியாமலா இருப்பார்! அதனால்தான், விழா முடிந்ததும், அவர்களை நோக்கி சென்று, அருகில் நின்று, மாணவர் களை தொட்டு பேசியதை யாரும் ஜென்மத்தில் மறக்க மாட் டார்கள். இது தான், மற்ற தலைவர்களிடமில்லாத எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள தனி சிறப்பு.
விழா முடிந்த பின், எம்.ஜி.ஆர்., தன் கைப்பட எழுதிய அந்த எழு த்தை பார்க்க ஏகப்பட்டோர் விரைந்தனர். அதை பாதுகாப்பது பெரும் பாடாய் போய் விட்டது. அப்படி அன்று என்னதான் எழுதினார் என்பதை, நம் வாசகர்களுக்காக அதன் பிரதி எடுத்து வெளியிட்டுள்ளோம்.
-
-
-
-
பொன்னின் நிறம், பிள்ளை மனம், வள்ளல் குணம் எம்.ஜி.ஆர்.,
இப்போதும் அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு மிக முக்கிய காரணம் அவர் சிறு கதா பாத்திரங்கள் ஏற்று நடிக்கும் காலத்திலே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தம்மிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தது தான் . தனக்கு சிறு வயதில் சாப்பாட்டிற்கு ஏற்பட்ட கஷ்டம் படிக்கும் வயதில் உள்ள மாணவ சமுதாயத்திற்கு நேர கூடாது என்பதால் பெருந்தலைவரின் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கூடங்கள் விரிவாக்கம் செய்தார். அவர் நடிக்கும் காலத்திலும் அவர் முதல்வராக இருந்த காலத்திலும் ஏழை எளிய மக்களின் துயரை தம்மால் இயன்ற அளவிற்கு துடைக்க முயற்சி மேற்கொண்டார் என்பதை நிச்சயம் தமிழக வரலாறு மறுக்காது . இன்னும் 100 ஆண்டுகாலம் அவர் பெயர் தமிழக திரையுலக மற்றும் அரசியல் உலகில் நீங்காது இருக்கும் .
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் அதிகமாய் உச்சரித்த ஆங்கிலச்சொல் எம்.ஜி .ஆர். ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் 26 அதில் எந்த எழுத்தை வேண்டுமானாலும் மறந்து விடலாம் ஆனால் அந்த மூன்று எழுத்தை மட்டும் மறக்கவே மாட்டார்கள் தமிழ் மக்கள் அதுதான் m g r
m g r ஒரு சஹாப்தம். யாராலும் வெல்ல முடியாது. இந்த உலகம் உள்ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்கும்.
தமிழ் சினிமா வரலாற்றில், மக்கள் திலகத்தின் பங்களிப்பு , ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், தனி முத்திரையுடன், ஒளிரும்.
சூரியன் ஒன்று என்பது போல் எம்.ஜி.ஆர் என்பதும் ஒன்றே, அவர் இடத்தை நிறப்ப அன்றும் இன்றும் என்றும் பிறந்ததும் கிடையாது பிறக்க போவதும் கிடையாது. அவா் ஒரு பன்பட்ட மனிதா். அதனால் தான் அவருக்கு இப்படியொரு பெயரும் புகழும் கிடைக்கப்பெற்று நின்று நிலைக்கின்றது.
பள்ளி குழைந்தைகள் பல் விளக்கவேண்டும் என்று பல் பொடி வழங்கியவர் பசி இல்லாமல் ஒருவேளை உணவாது உண்ணவேண்டும் என்று சத்துணவை மதிய உணவாக தரம் உயர்த்தியவர் விவாசியிகலின் கடனை வட்டியை ரத்து செய்தவர் ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்த்தவர் பல துறைகளில் பல சாதனைகளை படைத்த வள்ளல் என்று பாடுவேன்
இதய தெய்வம் புரட்சி தலைவர் ஒரு அதிசிய பிறவி. அவரை போல ஒரு மனிதர் தோன்ற பல நூறு ஆண்டுகளாவது ஆகும். மக்களிடம் தனது செல்வாக்கை, தான் மறைந்த பிறகும் நிலை நிறுத்தி உள்ள ஒரு தெய்வ பிறவி. தனது ஆட்சி காலத்தில் மக்களின் குறைகளை அறிந்து அதற்கேற்ப விலைவாசியை கட்டுபடுத்தி, நல்ல ஒரு ஆட்சியை தந்த தலைவர். தனது கொள்கைகளை திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து பிறகு அவர்களது ஆதரவால் தனது இறுதி மூச்சு வரை அவர்களுக்காக தனது கொள்கைப்படி ஆட்சி செய்த மாசற்ற மாமனிதர்.
பொன்மனச்செம்மல் என்றும், புரட்சி நடிகர் என்றும், புரட்சித் தலைவர் என்றும், மக்கள் திலகம் என்றும், எங்கள் வீட்டு பிள்ளை என்றும், சத்துணவு தந்த சரித்திர நாயகன் என்றும், வாத்தியார் என்றும், இதயக்கனி என்றும், இதய தெய்வம் என்றும்........ இன்னும் என்னென்னவோ வாழ்த்துரைகளாலும், எத்தனை, எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்கள் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரை வாழ்த்தியும், வணங்கியும், பின்பற்றியும் மகிழப் போகிறார்கள். "எம்.ஜி.ஆர்" என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான். நினைக்கும் போதும், உச்சரிக்கும் போதும் உற்சாகத்தையும், உயர்வையும் தருகின்ற திருமந்திரம்.
எம்.ஜி.ஆர். பணம் கொட்டும் திரைப்பட துறையில் யாரும் தொடாத உச்சத்தை தொட்டவர் அதுவும் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற பரிமாணத்தில் வசூல் சக்கரவத்தியாக திகழந்தவர்.இன்னு கூட அவருடைய பழைய படங்கள் வெளியாகி வெற்றிகரமாக நாடெங்கும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. தன் காலத்திற்கு பின் தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் தான் நேசித்த மக்களுக்காகவே உயில் எழுதி விட்டு சென்றார். அதில் ஒன்றுதான் வாய் பேசாத காத்து கேளாத மாணவ மாணவியர்களுக்கு கல்வியும் தங்கள் குறை தெரியாமல் வாழும் முறையும் கற்பிக்கும் பாடசாலை. அப்துல் கலாம் கூட அங்கு வந்து "வாழ்ந்தால் எம்.ஜி.ஆர். அவர்களை போல் வாழ வேண்டும்" என்று அந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி விட்டு சென்றார். சாகிறபோது சட்டை பையில் வெறும் 100 ருபாய் இருப்பதை விட, கடைசி காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் வரிசையில் நிற்பதை விட , தான் வாழ்ந்தபோது தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைத்து, மறைந்த பின்பும் மற்றவர்களையும் வாழ வைத்துகொண்டு இருக்கும் எங்கள் எம்.ஜி.ஆர். வாழ்க்கை முறையே சிறந்தது, கடவுளக்கு நிகரானவர். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம் என்ற கண்ணதாசன் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது காமராசர் காலத்தில் அமைச்சரா இருந்த அந்த காங்கிரஸ் மறந்த கக்கனை கூட வாரி அணைத்தவர் எங்கள் எம்.ஜி.ஆர். அதனால்தான் இன்றும் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது உதாரணம் பிரதமர் மோடி கூட தன்னை கவர்ந்த தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்று இன்றைய கால கட்டத்தில் சொல்கிறார் என்றால்...... அதான் எம்.ஜி.ஆர்.
நன்றி - தினமரில் இடம் பெற்ற வாசகர் கருத்துக்கள்
-
Following 8 Images were taken from the postings made by Mr. A.r. Hussain in the Facebook.
http://i66.tinypic.com/1pxn2d.jpg
-
-
-
-