-
16-05-2020
சனிக்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1)லட்சுமி வந்தாச்சு -.................................................. ............. காலை 6 :30 க்கு ஜீ திரை தொலைக்காட்சியில்,
2) உருவங்கள் மாறலாம் -.................................................. ... காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
3) ராஜபார்ட் ரங்கதுரை -.................................................. .... காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
4) சிவந்த மண் -.................................................. ..................... நண்பகல் 12 மணிக்கு மெகா தொலைக்காட்சியில்,
5) மிருதங்க சக்கரவர்த்தி -.................................................. . பிற்பகல் 1:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்
6) தங்கப் பதக்கம் -.................................................. .............. மாலை 6 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்,
Thanks Sekar Parasuram
-
எங்கள் பகுதியில் இருந்த டூரிங் கொட்டகையில் தங்கப் பதக்கம் வந்துவிட்டது,
இது நடந்தது 1986 ல்
மக்களின் ஏகோபித்த ஆதரவை அள்ளிக் கொண்ட காவியம் என்பது தற்போது சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை,
ஆனால் தமிழகத்தில் தங்கப் பதக்கம் உருவாக்கிய தாக்கம் என்பது எல்லையை கடந்தது,
அப்போது எங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலைய லிமிட்டில் சப் இன்ஸ்பெக்டராக திரு ஏசுபாதம் அவர்கள் இருந்து வந்தார், அடிக்கடி எங்கள் கிராமம் சுற்றுவட்டத்தில் ரோந்து வருவார், அப்போதெல்லாம் கள்ளச் சாராயம் பெருமளவில் இருந்ததால் அவர்களுக்கு ஓய்வெடுக்க நேரமில்லை என்பதே உண்மை, உண்மையாவே கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த முனைப்பு காட்டிய காட்சிகள் நான் பள்ளி மாணவனாக இருந்தாலுமே காட்சிகள் நினைவிலிருந்து அகலவில்லை,
சுற்றுவட்ட கிராமங்களில் இருந்த மக்கள் சப் இன்ஸ்பெக்டர் ஏசுபாதம் அவர்களை சிவாஜி வருகிறார் என்றே தகவல் பேச்சுப் பேசிக்கொண்டனர், அத்தனை மெனக்கெடுத்தல் கொண்டு எஸ்.பி.சௌத்ரியை தனக்குள் உள் வாங்கியிருந்தார், அவரது பேச்சு, நடை எல்லாமும் தங்கப் பதக்கம்தான், ஒரு முறை இரவு நேரத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது புல்லட் பைக் வண்டி வந்து எங்கள் அருகில் நின்றது, பசங்க எல்லாம் சிவாஜிடா சிவாஜிடா என கிசுகிசுத்ததை அவர் காதில் வாங்கிக் கொண்டவர் போலத் தான் தெரிந்தது, அவருடன் இருந்த உதவிக் காவலரை ஊருக்குள் ஏதோ விவகாரமாக அனுப்பி வைத்தவர் எங்களிடம் பேச்சுக் கொடுத்தார், எல்லாரும் ஒழுங்காப் படிக்கிறீங்களா? ஸ்கூலுக்கு சரியாப் போறீங்களா? என்றார்
நாங்கள் அதற்கெல்லாம் ஹூம் சார், ஹூம் சார் என்றவர்கள் அன்று விளையாட தெருவிளக்கு எரிவதில்லை எனக் கோரிக்கையை சொன்னோம்,
எஸ்.பி.சௌத்ரியைப் போலவே லாவகமாக தலையை ஆட்டிக் கொண்டே ஈ.பி. போர்மேன் வீட்டை தெரிந்து கொண்டவர் அவரை இடத்திற்கே வரவைத்து நிலைமையை பேசினார், ஈ.பி.போர்மேன் அவர்களும் மறு நாள் காலையில் பல்பை மாற்றி விடுகிறேன் என சொன்னவரிடம் எங்களுக்காக வேண்டி நீண்ட குழல் விளக்கு( டியூப் லைட்) ஐ மாற்றிவிட அதற்கு தேவையான பணத்தையும் கொடுத்து புறப்பட்டுப் போனார்
அடுத்த நாளிலிருந்து நாங்கள் கண் குளிர விளையாடிட டியூப் லைட் வெளிச்சம் கிடைத்தது,
ஏதோ ஒரு விதத்தில் அன்றைய நடிகர் திலகம் ரசிகர்கள் உதவி செய்தவர்களாகவே மக்களிடையே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்,
எஸ்.பி.சௌத்ரிப் போன்றே காவல் துறை அதிகாரியை நேரிடையாக பார்த்தாகி விட்டது,
சரி டூரிங் கொட்டகையில் தங்க பதக்கம் வந்திருக்கிறதே அந்த நினைவுகளுக்கும் வந்து விடுகிறேன்
எங்கள் பகுதியை பொறுத்த அளவில் சுற்றியுள்ள கிராமங்கள் சிவாஜி ஊர், எம்ஜிஆர் ஊர் என்று சினிமா கொட்டகையில் பேசும்.அளவிற்கு இருந்தது, சிவாஜி சினிமா என்றால் குறைந்தது 20 லிருந்து 25 மாட்டுவண்டிகள் வந்து விடும் வண்டிக்கு குறைந்தபட்சம் 15 போரிலிருந்து 20 பேர்கள் வரை நிரப்பிக் கொண்டு வந்து விடுவார்கள், மற்ற நடிகர்களின் படங்களுக்கு இவ்வளவு மாட்டு வண்டிகளை பார்க்க முடியாது இந்த வழக்கம் பெரு நகரங்களில் கார்கள் அணி வகுத்து நிற்பது போல,
மாட்டு வண்டிகளில் வந்தவர்களே பாதிக்கும் மேலாக கொட்டகையை நிரப்பிக் கொள்வார்கள், சைக்கிள்கள் 100 ஐ குறையாது,
அன்று சினிமா கொட்டகையே நிரம்பி வழிந்தது, வழக்கம் போல நான் எனது நண்பர்கள் என ஐந்து பேர் அன்று தங்கப் பதக்கம் பார்க்கிறோம், எங்களுக்கு முன் உடகார்ந்து இருந்தவர்கள் மணலை கூட்டி மேடு உருவாக்கி உயரமாக உட்கார்ந்து இருந்தார்கள், அவர்களை சீண்டி அண்ணா மறைக்குது என்றோம், படம் வேறு ஓட ஆரம்பித்து விட்டது, நமது தலைவர் மேஜரை அடுத்து துவைக்கும் காட்சியே வந்து விட்டது, ஒரே விஷில் சத்தம், எங்களை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை, எட்டி எட்டி பார்க்க கஷ்டமாகப் போனது, முன்னாடி இருப்பவர்களிடம் நாங்கள் மோதவெல்லாம் முடியாது அவர்கள் " சிவாஜி ஊர்க்காரர்கள்" தலைவர் படம் பார்க்கும் போது தொந்தரவு செய்கிறீர்களா? என கிளம்பி விட்டால் தாங்காது என யோசித்தவாறு பின்னாடி கொஞ்சம் திரும்பினேன்
பின்னாடி இருந்தவர்கள் தங்கப் பதக்கத்தை பார்த்த அனுபவம் இருக்கே
அவர் பக்கத்தில் இருந்தவரை முகத்தில் பளீரெண்டு அரைகிறார்( அது வலிக்காது போல)
" டேய் தலைவரின் முகத்தை பாருடா"
மீண்டும்.அவரது தொடையை தட்டுகிறார்
" டேய் தலைவரின் புருவத்த பாருடா நடிக்குது"
மீண்டும் தலையைப் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டுகிறார்
" தலைவரது உதட்டை பாருடா, கையிலிருக்கும் லத்தியப் பாருடா"
இதாண்டா நடிப்பு, சும்மா டிஷ்யூம் டிஷ்யூம் என சண்டைப் போடுற படத்தை மட்டுமே பார்த்தா நடிப்பை பற்றி எப்படி தெரியும்?
என்ற அவர்களது செல்லமான சண்டை உரையாடல் மட்டுமே அன்றைய பெரும்பகுதி தங்கப் பதக்கம் முடிந்தது,
சாதனைகளை கடந்த தங்கப் பதக்கம் நாளை 16-05-2020 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜெயா டிவியில் மீண்டும் ஒளி பரப்பாகிறது,
Thanks Sekar Parasuram
-
பராசக்தி மூலமாகவே மிகப்பெரிய ஹீரோ ஆகிட்டார்.. அதன் பிறகு பல படங்களில்.. ஆன்டி ஹீரோ.. வில்லன்.. குணச்சித்திரம் என்று தன் வழி தனி என்று தனது பன்முகத் தன்மையை நிரூபித்துக் கொண்டிருந்தார்.. சரியாக ஏழாண்டுகளில் அதே தீபாவளியில் பாகப்பிரிவினை வந்தது.. இதில் சுவாரஸ்யம் எனனவென்றால் ஜஸ்ட் 5 மாதங்களுக்கு முன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் வந்து தமிழ் திரைப்பட வரலாற்றை திருப்பிப் போட்டது.. அதிக பொருட் செலவு.. அதற்கேற்ற பிரம்மாண்டம்.. ஒரு பாளையக்காரரை மஹாராஜா ரேஞ்சுக்கு உயர்த்தி எடுக்கப்பட்ட சினிமா.. ஹீரோ அந்தஸ்து 100 மடங்கு உயர்ந்தது.. அந்தப்படம் மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்த அந்த தருணத்தில்த்தான் "பாகப்பிரிவினை" என்கிற மிகக்குறைந்த பட்ஜெட்டில் மிகச்சாதாரணமாக வெளிவந்தது.. ஒரு மாற்றுத்திறனாளி மனிதனாக கதைக்குள் உலவினான் கன்னையன்.. வரலாறு வியந்தது.. தன்னுடைய மிகப்பெரிய ஹீரோ இமேஜை தானே அடித்து நொறுக்கினார்.. வரலாற்றில் எந்த சூப்பர் ஹீரோவுக்கும் வராத அசாத்திய துணிச்சல் இவருக்கு வந்தது? ஏன் தான் ஒரு நடிகன்.. கதாபாத்திரங்களை தன்னுள் ஏற்றுக் கொண்ட கலை வித்தகன் என்ற கலை மாமணி அவர்.. எல்லோரும் எதிர் பார்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வசூல் சாதனைகளை எல்லாம் விஞ்சி நின்றது பாகப்பிரிவினையின் வசூல்.. ஆம்.. 1959ல் வசூலில் பாகப்பிரிவினைதான் முதலிடம் பெற்றது..
Thanks Jahir Hussain
-
-
-
-
-
-
-