-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 33
வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசைக் கேட்டால்
நீதானென்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி ............
https://youtu.be/FpHgR7izIvI
அருமையான பாடல் - சங்கர் மகாதேவன் அவர்களின் இனிய குரலில்
-
ரவி சார்,
மன்னிக்க வேண்டும். இன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் என்னையும் நினைவில் வைத்திருந்து அழைப்பதையே பெருமையாக நினைக்கிறேன். அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி அழைத்தாலும் எனக்கு பெருமைதான், மகிழ்ச்சிதான். உங்கள் விருப்பம் போல அழையுங்கள்.
தாயோடு தெய்வத்தை ஒப்பிட்டு நீங்கள் விளக்கியிருக்கும் கதை அற்புதம். அன்னையர் தினத்தையொட்டிய நல்ல கருத்து.
வாசு சார்,
உங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் அசாத்திய உழைப்புதான் உங்கள் ஸ்பெஷாலிட்டி. தகவல்கள், அதற்கேற்ற விஷுவல்கள் அருமை. மாலினி அவர்களுக்கு நீங்கள் வழங்கியுள்ள பட்டம்... ரசித்தேன். அதைப்படித்து விட்டு மீண்டும் அவர் முகத்தை பார்த்தேன். சிரிப்பை அடக்க முடியவில்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 34
பாரதியின் கவிதைகளில் பகலவன்- 1
சூரிய தரிசனம் - ராகம் பூபாளம்
"சுருதியின் கண் முனிவரும் பின்னே
தூமொ ழிப்புல வோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன் ;
பரிதியே ! பொருள் யாவிற்கும் முதலே !
பானுவே ! பொன் செய் பேரொளித் திரளே !
கருதி நின்னை வணங்கிட வந்தேன் ;
கதிர்கொள் வாண் முகம் காட்டுதி சற்றே !
வேதம் பாடிய ஜோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்
நாத வார்க் கட லின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன் ;
காத மாயிரம் ஓர் கணத் துள்ளே
கடுகியோடும் கதிரனம் பாடி
ஆத வா ! நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 35
பாரதியின் கவிதைகளில் பகலவன் -2
ஞாயிறு வணக்கம் :
கடலின்மீது கதிர்களை வீசிக்
கடுகி வான்மிசை ஏறுதி யையா !
படரும் வானொலி யின்பத்தைக் கண்டு
பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்
உடல் பரந்த கடுலுந் தன்னுள்ளே
ஒவ்வொரு நுண்டுளி யும் வழி யாகச்
சுடரும் நின்றன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே .
என்ற னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்த்திட செய்குவை யையா !
ஞாயிற் றின் கண் ஒளி தருந் தேவா !
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா !!
காதல் கொண்டனை போலும் மண் மீதே
கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே !
மாதர் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள் , இதில் ஐய மொன்றில்லை ;
ஜோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புது நகை யென்னே !
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன் !.
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 36
பாரதியின் கவிதைகளில் பகலவன் -3
ஞான பாநு .
திருவளர் வாழ்க்கை . கீர்த்தி , தீரம் , நல் லறிவு , வீரம்
மருவுபல் கலையின் ஜோதி வல்லமை யென்ப வெல்லாம்
வருவது ஞானத் தாலே வையக முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பானு .
கவலைகள் சிறுமை , நோவு , கைதவம் , வறுமைத் துன்பம்
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம் ,
நல முறு ஞான பாநு நண்ணுக ; தொலைக பேய்கள்
அனைத்தையும் தேவர்க்காக்கி அறந்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம் ,
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்த்தால் வானோர்
இனத்திலே , கூடி வாழ்வர் மனித ரென்றிசைக்கும் வேதம்
பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும் , ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும்
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்
நண்ணிடும் ஞான பாநு அதனை நாம் நன்கு போற்றின் .
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 37
தன்னால் நடக்க இயலாது என்பதைத் தலைவி கூற, தலைவன் அதற்கேற்றவாறு பதிலுரைத்துப் பாடுகிறான்.
மலரும் கொடியும் நடப்பதில்லை! அவை மணம்தர என்றும் மறப்பதில்லை! கோவிற்சிலைகள் நடப்பதில்லை! அதைக் குறையெனக் கலைகள் வெறுப்பதில்லை! தாமரை மலரும் நடப்பதில்லை! அதைத் தழுவும் கதிரவன் வெறுப்பதில்லை! முத்திரை பதிப்பதுபோல அமையும் இறுதி வரிகளைக் கவனியுங்கள்!
நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்துவிட்டோம்;
நினைவினில் குறைகள் வருவதில்லை!
கண்களில் ஒன்றாய்க் கலந்துவிட்டோம்; இனி
காட்சிகள் வேறாய்த் தெரிவதில்லை.
அருமையான பாடல்!!!
https://youtu.be/IaxGu--YQpQ
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 38
Sung by Shankar Mahadevan and Mahalakshmi Iyer, Actor Arun Vijay, Actress Meena and Ramba.
படம் : அன்புடன்
சூரியனே ஒரு மூக்குத்தியாய் நான் செய்து தரேன் - நீ குத்திக்கடி ---
காதலிக்கு , காதல் இருக்கும் வேகத்தில் என்னதான் செய்து போடுவது என்று விவஸ்த்தை இல்லாமல் போய்விட்டது - ம் ம் ------ என்ன செய்வது ?? இருந்தாலும் பாடல் ஒரு அருமை தான் .
https://youtu.be/peMJBuHPJaQ
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 39
மின்னல் சூரியனா - அருமையான வரிகள் - அற்புதமான பாடல் ; படம் -அரண் காவல்
https://youtu.be/VEaSAQ_MzWg
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 40 :-D
மெய்மறக்கும் பாடல் இசைஞானியின் படைப்பில். அலைகள் ஓய்வதில்லை --- புத்தம் புது காலை, பொன்னிற வேளை -------
https://youtu.be/rzbTW2FMvhg
-
ரவி, கலக்குங்கள்.. பாரதியார் பாடல்களுக்கும் லிங்க் கொடுத்திருக்கலாமே.. ம்ம் நட்த்துக்குங்கள்.. நானும் விரைவில் வரப் பார்க்கிறேன்..