Quote:
பாடல்கள் இசைத் தட்டுக்களில் காந்தக் குறியீடுகளாக சுழல் வட்டமாகப் பதிக்கப் பட்டு வெளிவந்த காலத்தில் HMV கம்பனி பிரசித்தம்! இசைத்தட்டு வைக்கப்பட்ட கிராமபோனின் முன்னால் நன்றிமிக்க நாய் தனது எஜமானனின் குரலைக் கேட்கக் காதுகளைத் தீட்டிக் கொண்டு ஏக்கத்துடன் மோனாலிசா போஸில் காத்துக் கொண்டிருக்கும் எம்ப்ளமும் மிகப்பிரபலம் !!
காந்த ஊசி பொருத்தப் பட்டு கிராபைட் தட்டின் சுழல் வட்டப்பாதையில் குறிப்பிட்ட கட்டுப்பாடான வேகத்தில் ஊசி பயணிக்கும்போது காந்தப் பதிவுகள் ஒலி அலைகளாக மாறி கீதங்கள் இசைக்கப்பட்டு ஒலிபெருக்கி வாயிலாக அதைக் கேட்கும் சுகமே அலாதி !
இன்று கிராமபோனும் பெட்ரோமாக்ஸ் லைட் போல ஒரு பசுமையான நினைவுச் சின்னமே !
கிராமபோன் பின்னணிப் பாடல் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஸ்ரீதரின்