http://i63.tinypic.com/mhsm51.jpg
Printable View
உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடந்து கொண்டிருந்த சமயம் அப்பொதைய முதல்வரான
மக்கள் திலகம் எம்ஜிஆர் .அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்க்காக மதுரை வந்து தொடர்ந்து
மூன்று நாட்கள் மதுரையில் மதுரை அசோகா ஹொட்டலில் தங்கி இருந்தார்.
இரண்டாம் நாள் மதியம் அவர் ஓய்வில் இருந்த போது சரியாக 12 மணியளவில் தன்னுடைய உதவியாளரிடம் நான் கொஞ்சம் நடந்து விட்டு வருகிறேன் .
என்று சொல்லி அரையை விட்டு வெளியே வந்தவர். யாரும் எதிர்பார்க்காதா விதமாக ரேஸ்கோர்ஸ் மைதாணத்தை ஒட்டி அமைந்த ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதிக்கு திடிரேன விஜயம் செய்ய முதலில் குழம்பிய மாணவர்கள்பிறகு சுதாரித்துக்கொண்டு தமிழக முதல்வரின் விடுதிவருகையை அனைத்து மானவர்களிடமும் தகவல் சொல்ல எல்லொருக்கும் அளவுகடந்த மகிழ்ச்சி வாடன் அவர்கள் அது விடுமுறை நாளானதால் வீட்டில் மக்கள் திலகம் எம்ஜிஆர் . விடுதி சந்தோசம் கலந்த ஆச்சிர்யத்தில் திளைத்தது. முதல்வர் அவர்கள் அனைத்து அறைகளுக்கு நேரடியாக சென்று அனைத்து மாணவர்களிடமும் உரையாட அதற்க்குள் முதல்வர் அங்கு வந்த செய்தி கேட்டு அப்பொதைய மதுரை மாநகர போலீஸ் உயரதிகாரிகள் விடுதியின் முன் பாதுகாப்பு கொடுக்க முதல்வர் அவர்கள் உயரதிகாரியை வரவழைத்து கடிந்து கொண்டார்
இது குழந்தைகள் வசிக்கும் இடம் இங்கு போலீஸ் வண்டி நின்றால் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் தயவு செய்து வண்டியை கொண்டு போங்கள் என்றவுடன் இரன்டு துணை ஆய்வாளரை அங்கு நிறுத்திவிட்டு மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட அன்று முழுவதும் சுமார் இரண்டு மணிநேரம் மாணவர்களுடம் போழுதை கழித்தவர் மதிய உணவை மாணவர்களுடனே அமர்ந்து சூடான அரிசிகஞ்சியும் , சுன்டைவத்தலும்சேர்ந்து மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட அப்பொழுது அவர் அருகில் அமர்ந்திருந்த ஒருமாணவனின் தாயார் அவனை பார்க்க தேனீமாவட்டத்திலிருந்து வருகைபுரிந்திருந்தார்,
அதை அறிந்த அந்த தாயாருக்கு தனக்காக வந்திருந்த அசோகா ஹோட்டல் உணவை தந்து விட்டு உண்ணச்சொன்னார். தனது மகனை கானவந்த தாய்க்கோ தன்காண்பது கனவா நினைவா என்று புரியாம சில நிமிடம் திகைத்து விட்டு பிறகு சுதாரித்துக்கொண்டு முதல்வரிடம் தன் மகன் நன்றாக படிக்க அறிவுறை சொல்லுங்கள் ஐயா என சொல்லி விடைபேற்றார்.
அவர் உணவின் போது ஒரு முதலாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவன்
கேட்ட கேள்விகளுக்கு உதவியாளர் யாருமின்றி , மதுரை மாவட்டத்தில் மட்டும் எத்தனை அரசு மாணவர் விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள்
அதில் எத்தனை மாணவர்கள் தங்கி பள்ளிகளுக்கு செல்கின்றனர், ஒவ்வொரு மாணவனுக்கும் அரசு செலவிடும் தொகை, மாணவர்களின் நலனுக்காக அரசு எடுத்திருக்கும் சட்டங்கள் , எதிர்கால சட்டங்கள், என அனைத்து விபரங்களையும் புள்ளிவிபரமாக சொல்லி அந்த விடுதி வார்டனே அறிந்திராத விடுதிபற்றிய புள்ளி விபரங்களை எடுத்துச்சொல்லிஅனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியவர்.
அவர் விடைபெற்றுச்செல்லும் சமயம் மாணவர்களே உங்கள் எதிர்காலத்திற்க்காக படியுங்கள் உங்களின் எந்த குறைகளையும் அரசுக்கு தெரிவித்தால் உடனே களைய முயற்ச்சிக்கிறேன். நான் உங்களின் வயதில் இருக்கும் போது இந்த சூடான சேற்றுக்கங்சும் சுன்டைக்காய் பொறியல் கூட எங்களுக்கு பாகியமில்லாமல்
இருந்தது. ஆகையால் அக்கறை கொண்டு படியுங்கள் என அனவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு விடைபேற்றார். அன்று அவரின் அறிவுரைகள் கேட்டு எத்தனை மாணவர்கள் , மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ மாறினார்கள் என்ற புள்ளி விபரம் எனக்கு தெரியாது ஆனால் தனிநபராக மாணவர்களின் மீது அக்கறைகொண்டு அவர்களுடன் உணவருந்தி அந்த மாணவர்களுக்கு மட்டுமல்ல தமிழக பள்ளி கல்லூரிகளில் படித்த அத்தனை மாணவர்கள் நெஞ்சிலும் ஒரு உற்ச்சாகத்தை ஏற்படுத்தி தந்து அவர் படப்பாடல்களில் மட்டும் சொல்லாமல் நேரிலும் தமிழக மக்களில் நலனில் அக்கறை காட்டிய அந்த மாமனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
courtesy - net