-
வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியான தினம் இன்று,
மீண்டும் பழைய நினைவு வந்து விடுகிறது,
1984 ல் நான் ஏழாவது வகுப்பு படித்து வந்த காலம், அது கிராமத்தில் இருந்த நடுநிலைப் பள்ளி எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு அண்ணாமலை நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் அதனால் காங்கிரஸ்காரர், பள்ளி நேரம் முடிந்த பின் இரவு நேரங்களில் பள்ளியிலேயே இலவச டியூசன் சொல்லிக் கொடுப்பார், ஒரு சில நாட்களில் எங்களுக்கு கட்டபொம்மன், மனோகரா, பராசக்தி,திருவிளையாடல், ஆகிய படங்களில் இருந்து வசனங்களை சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பார், அது பள்ளியின் ஆண்டு விழாவில் அரங்கேற்றம் செய்யப்படும், இதில் விஷேசம் மாணவிகள் கட்டபொம்மனாக நடிப்பது
கட்டபொம்மன் வசனங்களை நாங்கள் பேசி நடிப்பதற்கு ஏற்றவாறு ஒரு சில திருத்தங்களை செய்து எங்களை பழக வைத்திருந்தார், அந்த ஒரு சில மாற்றங்கள் கொண்ட வசனங்கள் எனக்கு இன்னமும் மனதில் ஞாபகம் இருக்கவே செய்கிறது
பானர்மேன்:- யாரங்கே இருமாப்பு கொண்டு இருக்கும் அந்த வீரபாண்டிய கட்டபொம்மனை இரும்புச் சங்கிலியால் இருக பிடித்து இழுத்து வாருங்கள் "
நான் கொஞ்சம் குண்டாக இருந்ததினால் என்னை பானர்மேனாக நடிக்க வைத்து விட்டார்கள்,
எனக்கு கட்டபொம்மன் வேடம் கொடுக்காமல் போனதில் பெரிய ஏமாற்றம் இருக்கவே செய்தது, அது பத்தாம் வகுப்பு படித்த போது நிறைவேற்றிக் கொண்டேன்,
மீண்டும் ஏழாம் வகுப்பிற்கே வருகிறேன், வகுப்பில் மொத்தம் 35 பேர் வரை இருந்த ஞாபகம், அப்போதெல்லாம் சிவாஜி அணி, எம்ஜிஆர் அணி மட்டுமே, அதுவென்னவோ தெரியவில்லை சிவாஜி அணிக்குத் தான் பெரும்பான்மையானவர்கள், அதனால் தான் என்னவோ பள்ளியின் மூலம் காண்பிக்கப்பட்ட அத்தனை திரைப் படங்களுமே சிவாஜி படங்கள் மட்டுமே, எங்கள் வகுப்பில் இஸ்லாமிய தோழன் ஜான் பாஷா. எம்ஜிஆர் அணிக்காரன், நாடோடி மன்னன் படத்தை டெண்ட் கொட்டகையில் பார்த்து விட்டு வந்து வகுப்பறையில் காட்டிக் கொண்ட அளப்பறை கொஞ்சம் நஞ்சம் கிடையாது,
அவனுக்காக வந்தது போல் இருந்தது வீரபாண்டிய கட்டபொம்மன், அடுத்த வாரத்திலேயே டெண்ட் கொட்டகைக்கு வந்து விட்டது, ஸ்பெஷல் பள்ளியின் மூலமே செல்வது, மாணவர் ஒருவருக்கு தலா ஒரு ரூபாய் வசூலித்தாகிவிட்டது, ஐந்து வகுப்பு மேல் படிப்பவர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப் பட்டனர், காசு கொடுக்க முடியாத 40 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஏற்றுக் கொண்டார், ஆர்ப்பரிப்போடு. பார்த்தோம். எனச் சொல்கிறார்களே அது நாங்கள் கட்டபொம்மனை தரிசரித்தோமே அதுதான், படம் பார்த்த முடிந்தபின் எங்களை எல்லாம் விட ஜான் பாஷா அதிகம் நேரம் அழுத படியே இருந்தான், சக மாணவர்கள் தேற்றியும் அழுகை நின்ற பாடில்லை, மறுநாள் வகுப்பிற்கும் கூட வரவில்லை, இரண்டு நாட்களுக்குப் பின் வந்த ஜான் பாஷா நான் இனி நாடோடி மன்னன் கிடையாது, கட்டபொம்மன் போல வாழப் போகிறேன் அன்னியர்களுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டேன், இந்த இந்திய்த் திருநாட்டிற்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று வீர முழக்கமிட்டான், அந்த ஆண்டின் பள்ளி ஆண்டு விழாவில் கட்டபொம்மனாக நடித்து எங்கள் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கா இடம் பிடித்தும் கொண்டான்,
இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியான நாள்
61வது ஆண்டு வைர விழாவைக் கொண்டாடுவோம்
Thanks Sekar Parasuram
-
வீரபாண்டிய கட்டபொம்மன் -16/05/1959
என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.
உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது
கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.
கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.
கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.
இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.
அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.
listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.
நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?
அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் )
எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .
Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.
ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.
ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.
வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.
வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.
வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.
ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.
மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.
இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.
என் மகனே கூட என்னிடம் இந்த படத்தை பார்த்து , நான் முதலில் கூறிய சந்தேகத்தை கேட்டான்.நான் படத்தின் காலகட்டத்தை சொல்லி, அவனிடம் சொன்னேன். ஒரு சாதாரண சின்ன வியாபார பிரச்சினைகளில் வார கணக்கில் mood out ஆகி, சம்பந்தமில்லாமல் எல்லோரையும் எரிந்து விழுந்து சத்தம் போட்டு ,குடும்பத்தையே gloomy சூழ்நிலைக்கு தள்ளிய நாட்கள் உண்டு. அவனிடன் அதை சொல்லி, பிரச்சினை மிக பெரிது. மான ,சுய கௌரவ,மண் சார்ந்த பிரச்சினை. மோதுவதோ வலுவான ,தன்னை மீறிய எதிரி. சூழ்ந்திருப்பவர்களோ எதிரியுடன் இணைந்து விட்டனர். வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் எதிர்த்து நின்றே ஆக வேண்டும். படத்தில் சித்தரிக்கும் காலகட்டமே எதிர்ப்பு,துரோகம்,அவமானம்,வாக்குவாதம்,போர் ,தோல்வி ,தூக்கு இவ்வளவுதான் என்னும்போது ,எங்கே relaxation ,ease முடியும், படத்தின் agenda hyper rhetoric என்றேன் .புரிந்து கொண்டு மிக மிக ரசித்தான்.
அடுத்ததாக ஒரு நண்பர் அரசவை சம்பத்த பட்ட காட்சிகளின் cliched formalities பற்றி கேட்ட போது,நான் அவர் கம்பெனி board meeting எடுத்து விளக்கினேன். tie ,suit ,proper assembling ,protocol ,formalities , fixed agenda ,jargonised technical presentation ,explanations ,பிறகு entertainment இதுதானே? அரசவை என்பது இதை விட formal ஆன இடமாயிற்றே? hierarchy என்பது இன்னும் வலுவாக இருந்த முற் காலமாயிற்றே? எப்படி present பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?அந்த meeting இல் கூட chairmen ,MD ,VP ,senior managers behaviour ,role play வேறு படவில்லையா? ஒரு லாப நோக்கம் கொண்ட வர்த்தக நிறுவனமே இப்படி என்றால், அரசனை சுற்றி வாழ்வா சாவா பிரச்சினையை சந்திக்கும் அரசவை அதற்குரிய ceremonial procedures ,protocol ,formalities , cliched expressions &Language இருக்காதா என்றேன். நண்பர் தலையாட்டி சிந்தித்தார். புரிந்து கொண்டார் என்று புரிந்து கொண்டேன்.
நம் பிரச்சினை என்னவென்றால் ,அறியாத கேள்விகளுக்கும் ,முட்டாள் தனமான விமர்சனங்களுக்கும் நாம் ஒரு compromise பாணி சமாதானம் சொல்கிறோமே தவிர, நம் conviction சரியானது என்று அவர்களை convince செய்ய வேண்டும். முக்கியம் நமக்கு அந்த படம் சம்பத்த பட்ட முழு விவரமும் தெரிய வேண்டும் .
முதல் பத்தியில் பார்த்தது போல வலுவில்லாத கதையம்சம், ஒற்றை நோக்கம் கொண்ட ஒரு glorified folk -lore ---------- உலக நடிகன் கனவு கண்ட பாத்திரமாகி , அவன் அபார திறமையால் ,உலக புகழ் பெற்ற விந்தை, அவர் அந்த பாத்திரத்தை மெருகேற்றி காட்டிய விதம் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.
3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)
5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.
6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .
7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.
8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.
மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .
ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.
என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.
தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.
கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.
Thanks Gobalakrishnan Sundararaman
-
-
-
-
-
-
17-05-2020
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
காலை 9:30 க்கு -.................................................. கீழ் வானம் சிவக்கும் - வசந்த் தொலைக்காட்சியில்,
காலை 11 மணிக்கு -........................................... ஜல்லிக்கட்டு - முரசு தொலைக்காட்சியில்,
மாலை 4 மணிக்கு -............................................. சாந்தி - சன் லைப் தொலைக்காட்சியில்,
இரவு 7 மணிக்கு -................................................. ஜல்லிக்கட்டு - முரசு தொலைக்காட்சியில்
Thanks Sekar
-
கொரானாவின் கோரத்தாண்டவத்தில் தத்தளிக்கும் தமிழகத்தில் சிவாஜி ரசிகர்களின் வியத்தகு மக்கள் பணியில் இன்று காலை ஆண்டார் வீதியில் 40 ஆண்டுகளாக திருச்சியில் சிவாஜி புகழ் பரப்பும் மாரீஸ் குரூப் சிவாஜி புகழ் பரப்பும் குழுவின் பொறுப்பாளர் திரு. தில்லை நகர் பாஸ்கர் சார்பாகவும் திருச்சி மாவட்ட புறநகர் சிவாஜி மன்றம் சார்பாகவும் மலைக்கோட்டை பகுதி*சிவாஜி மன்றம் திருச்சி சார்பாகவும் மற்றும் மெடிக்கல் கணேசன் திருச்சி இருவரின் உதவியடன் மளிகை பொருள்கள் மற்றும் ஸிரங்கம் வரதராஜன் புரோகிதர் சார்பாகவும் மளிகை பொருட்களும் அரிசியும் வழங்கி னார்கள் அதனை பயனாகிகளுக்கு வழங்கினோம் இதில் பாரதி பாஸ்கர் உறையூர் செல்வம் புத்தூர் ராமச்சந்திரன் தென்னூர் ஜெயபிரகாஷ் சண்முகராஜா பழக்கடை ராஜா பீமநகர் நாராயணன் மலைக்கோட்டை கிருஷ்ணன் மெடிக்கல் கணேசன் வரகனேரி*ராஜேந்திரன் முத்தரசநல்லூர் பாலன் திண்டுக்கல் பாஸ்கர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.https://scontent.fmaa1-3.fna.fbcdn.n...5d&oe=5EE855AE
-