Happy Deepavali to All.
Printable View
Happy Deepavali to All.
எங்கள் தெய்வமகனை மனதில் பூஜித்தபடி
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
http://www.goodlightscraps.com/conte...eetings-22.gif
http://i812.photobucket.com/albums/z...psa6ac3306.jpg
இன்றைய தினத்தந்தி
'புதிய பறவை' உருவானது பற்றி 'ஆரூர்தாஸ்' கட்டுரை. (நான் எழுத மறுத்த சிவாஜி படம்)
http://i812.photobucket.com/albums/z...psaf387712.jpg
http://i812.photobucket.com/albums/z...ps3cacf92a.jpg
http://i812.photobucket.com/albums/z...ps5b1c50b4.jpg
http://i812.photobucket.com/albums/z...psd5c20ef5.jpg
http://i812.photobucket.com/albums/z...psa0286dee.jpg
http://i812.photobucket.com/albums/z...psfe5a7b7a.jpg
http://i812.photobucket.com/albums/z...psf21fcdc6.jpg
http://i812.photobucket.com/albums/z...ps24aeaecf.jpg
http://i812.photobucket.com/albums/z...psbc7fedcf.jpg
http://i812.photobucket.com/albums/z...pse1f41676.jpg
தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும். வாசு சார், உங்களுக்கு ஸ்பெஷலாக... ஆரூர்தாஸ் கட்டுரைக்காக.
http://i1146.photobucket.com/albums/...psa463f00a.jpg
மிக்க நன்றி ராகவேந்திரன் சார்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
quoted from and thanks to: http://www.thehindu.com/features/met...cle5304910.eceQuote:
Deepavali and Tamil films have a relationship that has endured over six decades. Here are some festival releases that have earned money and fame for its makers.
Tamil film Parasakthi, released on October 17, 1952, on Deepavali, ran to packed houses, won critical acclaim, and made history. It gave the film world two superstars — actor Sivaji Ganesan and writer M. Karunanidhi. Sivaji Ganesan was the hero and Karunanidhi wrote the screenplay and dialogues. That set the trend of timing a film release with Deepavali. It was considered a good luck charm and it brought in the moolah for the producers, name and fame for the actors and directors. Even today, film makers strive to release their films on Deepavali. As Karthi’s All in All Azhagu Raja, Ajith’s Arambam, Vishal’s Pandiya Naadu gear up to cash in on the festive mood, some film lovers share their thoughts on films and Deepavali.
Artist V. Jeevananthan, author of Thiraiseelai
Actor Sivaji Ganesan’s two films Engirondha Vandhaal (a remake of the Hindi film Khilona) and Sorgam, released during Deepavali. Both became silver jubilee hits. The song ‘Ponmagal Vandhal’ from Sorgam became hugely popular. The song makes a re-entry as in a remix in Vijay’s film Azhagiya Tamil Magan, that has music by A.R. Rahman.
.....
M. Subramaniam, President of Tamil Nadu Film Distributors Federation
Sivaji Ganesan’s two silver jubilee films Ooty Varai Uravu and Iru Malaragal released on Deepavali. His 100th film Navarathri in which he played nine different roles ran for more than 100 days. People thronged the theatre to watch his performance.
.....
G. Ratnavel, Royal Theatre
Sivaji Ganesan’s Sivantha Mann ran for 100 days. “Bicycles would be parked for over a km to buy tickets. People came with families. ......”
அனைவருக்கும் அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்..
வாசுதேவ்ன சார்.. ஆரூர் தாஸ் கட்டுரை அழகு.. நன்றி..
திரி நண்பர்கள் அனைவர்க்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! .
ஷபா...!!!! அரூர்தாஸ் அவர்களே....! ஹ்ம்ம் !! தாங்கல !
"எனக்கு நேரமில்லை வேற யாராவது எழுதிக்க சொல்லு..சிவாஜி அண்ணன் கிட்டே நீயே சொல்லிடு..." - அரூர்தாஸ் நல்ல எழுத்தாளர் என்ற நினைப்பில் உள்ளவர் அல்லவா ..அதனால் தான் தன கற்பனாசக்தியை இங்கு காட்டியுள்ளார். இது, 5 திரைப்படங்கள் எழுதி பேர் வாங்கியவுடன் அவருக்கு வந்த அஹந்தயைதான் காட்டுகிறதே தவிர ஒரு professionalism துளி கூட காட்டவில்லை அப்படி அவர் உண்மையிலயே இங்கு எழுதியதை போல சிவாஜி பிளம்ஸ் துரையிடம் கூறியிருந்தால் !
இதில் ..." சாரி நீங்க போகலாம் " வேறு...! ஏன்யா அரூர்தாஸ் ! உப்பை போட்டு தானே நீர் உணவு உண்கிரீர் ? எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு ! கேள்விப்பட்டதில்லையா ? என்ன திமிரா உங்களுக்கு !
இது போதாதுன்னு சாவித்திரி சொன்னதாக அப்புடின்னு ஒரு புளுகு " அண்ணனும் தம்பியும் புழிஞ்சிடுவாங்க" வேறு..!
திரு அரூர்தாஸ் அவர்கள் ஒன்றை உணரவேண்டும் ! நீங்கள் வெறும் மசாலா பட கதை எழுதவில்லை.
எழுதுவது ஒரு தலைசிறந்த உலக புகழ்பெற்ற நடிகனுக்கு ! அப்படி இருக்கும்போது வேலை சிறிது தரமானதாக தான் இருந்தாகவேண்டும். தரம் என்றால் சிறிது மூளையை கசக்கதான் வேண்டும்..!
சும்மா என்னமோ ஓசியில் எழுதிகொடுப்பது போல ஒரு எண்ணம் திரு.அரூர்தாஸ் அவர்களுக்கு !
இதை படிப்பவர் வேண்டுமானால் பாருங்கள்..இன்னும் ஓர் இரண்டு வாரங்களில், நடிகர் திலகம் ருபாய் 5,000 முன் பணமாக புதிய பறவைக்கு கொடுத்தார் என்றால் அதை விட இரு மடங்கு அதிகம் வேறொருவர் கொடுத்தார் என்று இதே அரூர்தாஸ் எழுததான் போகிறார் !
உண்மையிலயே அவ்வளவு வேலையிருந்தால் கடைசீவரை எழுதாமல் இருந்திருக்க வேண்டியதுதானே...சும்மாவாவது எதற்கு இந்த வெட்டி பந்தா ! என்னமோ...இவரு முடியாதுன்னாராம் அப்புறம் அவங்க கெஞ்சினாங்கலாம் ...இவரு வேற வழி இல்லாம எழுதினாராம் ! ஏன்ய இந்த சுய விளம்பரம் ? ஏன் உங்களுக்கு நீங்களே மானியம் விட்டுகுறீங்க ?
அறிவை கொடுத்ததோ துரோணரின் கெளரவம் ...அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கெளரவம் ! என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது !
நடிகர் திலகத்தால் முன்னுக்கு வந்தவர்கள் பலரும் இப்படி ஒரு கட்டத்தில் திமிராக பேசியதும் பழகியதும் நமக்கு புதிதில்லை. அந்த வகையில் அரூர்தாஸ் ஒரு அதிர்ச்சி அல்ல ! என்னமோ இவர் பின்னால் சிவாஜி பிலிம்ஸ் கெஞ்சியது போல ஒரு தோற்றத்தை எல்லா வாரமும் இவர் ஏற்படுத்துவது மிகவும் கண்டனத்திருக்கு உரியது !
அரூர்தாஸ் கூட அல்ல..! அவரது பெற்றோர் மற்றும் அவரது மூதாதையர் செய்த புண்ணியம் நடிகர் திலகம் என்ற இந்த புவி கண்ட இனி கானபோகாத கலைஞனிடம் இவரை கொண்டு சேர்த்தது.!
தன்னை மறைமுகமாக உயர்த்திகொண்டு மற்றவரை ...??
தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி
திலகமில்லா தீபாவளி
13-ஆவது தீபாவளி
திலகமில்லா தீபாவளி
திக்கெட்டும் புகழ் மணக்க
திலகமாய் ஒளி வீசுபவர்
இல்லாததால்
திருநாள் வெறும் நாள்தான்
என் வரையில்
அபசம் இல்லை
ஆதங்கம்.
என் தெய்வம் இல்லையென்று
என் தெய்வத்தின் காவியங்கள் எங்கே என்று
ஆனால் மனம் குடிகொண்ட
தெய்வத்தால் மன ஆறுதல்
1992 வரை தீபாளிப் படையலில்
வீட்டில் கலந்து கொண்டதே இல்லை.
அதுதான் சாமி வெண்திரையில் என்
கண்புகுமே! இதயத்திலும் சேர்த்து.
இனிப்பு, காரம், அருஞ்சுவையையும்
என் சாமியே அன்று தந்து விடுமே!
அப்புறம் தனியே எதற்கு ஸ்வீட், காரமெல்லாம்.
பட்டாசு சப்தம் கேட்டது இல்லை
அதுதான் உன் அசைவுக்கு அதை விட
கைத்தட்டல் ஓசை கேட்குமே!
உற்றார் உறவினரைப் பார்த்ததில்லை
அதனினும் சிறந்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து விடுவேனே!
பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கியதில்லையே!
உன் பாதம் தொட்டு கும்பிட மறந்ததேது?
அண்ணன் தம்பிகளுடன் பேசியது கிடையாது
உன் அன்புத் தம்பிகளுடன் கொஞ்சியதுண்டு
அப்பாவின் சம்பளம் தெரியாது
உன் படங்களின் கலெக்ஷன் கைநுனியில்
சொல்ல வெட்கமில்லை எனக்கு
ஏனெனில் நீ நடிகனில்லை
மனிதன். அவனில் நீ மாணிக்கம்.
பரீட்சை எந்த நாள் என்று தெரியாது
பரீட்சைக்கு நேரமாச்சு எந்த நாள் என்று தெரியும்
தொழில் நுட்பக் கல்வி சும்மா பேருக்கு
உன் புகழ் பாட வேண்டும் ஊருக்கு
காலை,மதியம், மாலை, இரவு தீபாவளி உன்னுடனே
ஆளைக் காணோம் என்று எவரேனும் கேட்டால்
வேலையைப் பார் வேந்தனைப் பார்க்கப் போய் இருந்தேன்
என்று கொக்கரிப்பு. கூட்டநெரிசலைக் கண்டு
ஆட்டம் போட்ட காலம் எங்கே?
நீ இல்லை. உன் படங்கள் இல்லை.
ஏதோ கடமைக்கு ஒரு தீபாவளி.
எழுந்தோம்...எண்ணெய் வைத்தோம்...
குளித்தோம்...படைத்தோம்... என்று.
காலை எழுந்தவுடன் உன் முகம் தேடி விழித்தேன்
பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.
நீ இல்லையே... உன் காவியங்கள் இல்லையே
விழிக்காமல் என்ன செய்வேன்.
கண்ணை மூடிக் கொண்டு உன்னுடன் வாழ்ந்த அந்தக் காலங்களை
இன்பமுடன் அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
மனையாள் எழுப்புகிறாள்.
ஏங்க... இந்த ஸ்வீட்டை கொஞ்சம் உங்க நண்பர் வீட்டில கொடுத்துட்டு வந்திடுங்களேன்
ச்சே! என்னடா தீபாவளி இதெல்லாம். நொந்து கொண்டே நொடிந்து போகின்றேன்.
நீதான் இல்லையே! உன் தீபாவளிதான் இல்லையே! உன்னுடன்தான் தீபாவளி இல்லையே
இனி எப்ப வரும் உன் இல்லை என் தீபாவளி
தொலைத்து விட்டு நிற்கிறேன் என் தீபாவளியை.