ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 41
பாரதியின் கவிதைகளில் பகலவன் -4
அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் ;
திண்ணிய நெஞ்சம் வேண்டும் ;
தெளிந்த நல்லறிவு வேண்டும் ;
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போலே ,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய் !!