http://i1065.photobucket.com/albums/...psoasnhg8z.jpg
Printable View
இன்று 12 ஆம் தேதி ஜூலை மாதம் -
"மனிதரில் மாணிக்யம்"
தமிழ் திரை உலகின் அவர்காலத்தில் உண்மையான "அதிரடி நாயகர்",
வித்தியாசமான திகிலான சண்டைகாட்சி என்றால் அது ஜெய்ஷங்கர் அவர்கள் திரைப்படத்தில் தான் பார்க்க இயலும் அதுவும் குறிப்பாக பைக் சாகசம் என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல்..!
தென் இந்திய திரை உலகின் இன்று வரையில் போற்றப்படும் ஒரே "ஜேம்ஸ் பாண்ட் 007"
மறைதிரு "மக்கள் கலைஞர்" ஜெய்ஷங்கர் அவர்களின் 77 வது பிறந்த தினம்.
சிறந்த மனிதாபிமானி !
உண்மையான கலியுக வள்ளல் !
உயர்ந்த பரோபகாரி !
விநாயக பெருமானின் மிக சிறந்த பக்தராக திகழ்ந்து அவர் அழைப்பை இளம் வயதிலயே ஏற்றுகொண்டவர் ! .
எண்ணில் அடங்கா நல்ல காரியங்களை வலது கரம் கொடுப்பதை இடது கரம் அறியாமல் செய்த உத்தமர் !
தமிழ் திரையுலகில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரையும் ஊக்குவித்து முடிந்த வரையில் அவர்களை கரை ஏற்றி அவர்கள் வாழ்கையை ஒளி வீச செய்தவர்.
தயாரிபாளர்களையும், சக நடிக நடிகரையும் எந்த விதத்திலும் துன்புறுத்தாதவர் !
இவரால் வாழ்ந்தவர்கள், பலன் அடைந்தவர்கள் எண்ணில் அடங்கா !
நமது நடிகர் திலகம் மீது மிகுந்த அன்பும், பற்றும், பாசமும், மரியாதையும் கொண்டவர். உலக சினிமா பற்றி மிக நன்றாக அறிந்தவர் !
நடிகர் திலகம் பற்றி கூறும்போது ஏழு உலகத்திலும் சிவாஜி அவர்கள் போல ஒரு நடிகர் இருக்கவும் மாட்டார் ..இனி பிறக்கவும் மாட்டார்கள் என்று பெருமை பொங்க கூறுவார் !
பொம்மை / பேசும்பட இதழ் ஒன்றில் சமீபகாலமாக சிவாஜி அவர்கள் படங்கள் சில வெற்றிபெறவில்லையே என்ற கேள்விக்கு ...தங்கத்தின் விலை சற்று ஏறலாம் இறங்கலாம் ..ஆனால் தரத்தில் தங்கம் என்றும் தங்கம் தான் என்று பெருமையாக நடிகர் திலகம் பற்றி கூறியவர் !
மொத்தத்தில் இவர் தமிழ் திரை உலகம் கண்டெடுத்த மனிதரில் மாணிக்யம் !
http://i501.photobucket.com/albums/e...pseayajrt8.jpg
நடிகர்திலகம் Producers' Paradise ஆகத் திகழ்ந்தவர்
அவர் பாதையில் சிறு குறு தயாரிப்பாளர்களின் வரப்பிரசாதமாகப் போற்றப்பட்டு வெள்ளிக்கிழமை நாயகர் என்று அன்புடன் நினைவு கூறப்பட்டவர் தென்னகத்து ஜேம்ஸ்பாண்டாக ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்!! பல படங்கள் சிஐடி சங்கராக சாகசங்கள்!!
அவரது OO77th பிறந்தநாளில் நினைவு கூர்கிறோம்...அவரது நடிகர்திலக படங்களின் இணைவு வாயிலாக!! நூற்றுக்கு நூறு அவரது நடிப்பின் முத்திரைப் படம் !!
https://www.youtube.com/watch?v=JPXCKUTy5Ns
The James Bond of South Jai with his Bond Girl L. Vijayalakshmi!!
https://www.youtube.com/watch?v=60egyDsQhaE