-
கொரானாவின் கோரத்தாண்டவத்தில் தத்தளிக்கும் தமிழகத்தில் சிவாஜி ரசிகர்களின் வியத்தகு மக்கள் பணியில் இன்று காலை 40 ஆண்டுகளாக திருச்சியில் சிவாஜி புகழ் பரப்பும் மாரீஸ் குரூப் சிவாஜி புகழ் பரப்பும் குழுவின் சார்பாக திருச்சி புத்தூரில் அரிசியும் காய்கறியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தூர் ராமச்சந்திரன் தென்னூர் ஜெயபிரகாஷ் சண்முகராஜா மலைக்கோட்டை கிருஷ்ணன் ஆண்டார் வீதி வெங்கட், சிவாஜி பெரிய தம்பி, முரளி, தென்னுர் அண்ணாதுரை புத்தூர் அன்பழகன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.http://scontent.fmaa1-4.fna.fbcdn.ne...d1&oe=5EE7172C
-
ஊரடங்கு 4.0
18-05-2020 , திங்கட்கிழமை
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1)கந்தன் கருணை -.................................................. .... காலை 6மணிக்கு ஜீ திரை டிவிச் சேனலில்,
2) முதல் தேதி -.................................................. ............. காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்,
3) அம்பிகாபதி -.................................................. ........... நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்
4) அமரகாவியம் -.................................................. ........ நண்பகல் 12:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் டிவியில்,
5) கை கொடுத்த தெய்வம் -....................................... பிற்பகல் 1:30க்கு பாலிமர் டிவிச் சேனலில்,
6) சபாஷ் மீனா -.................................................. .......... பிற்பகல் 2 மணிக்கு முரசு டிவியில்
7) வாழ்க்கை -.................................................. .............. இரவு 10:30 க்கு பாலிமர் டிவிச் சேனலில்,
Thanks Sekar
-
திண்டுக்கல் மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் பல்வேறு பகுதி சார்ந்த சுமார் 100 நபர்களுக்கு அரிசி பருப்பு மளிகை பொருள் மற்றும் காய்கறி தொகுப்பு வழங்கபட்டது சிவாஜி A. திருப்பதி A பாண்டியன் K. மாரியப்பன் S. மாரிமுத்து R.பாஸ்கரன் R. வெங்கிடுBM சத்யன் Nரத்னம்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...b3&oe=5EE599AAhttps://scontent.fyto1-2.fna.fbcdn.n...db&oe=5EE92126https://scontent.fyto1-1.fna.fbcdn.n...59&oe=5EE97A8D
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a3&oe=5EE5A011
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...6b&oe=5EE7208B
Thanks Sivaji Thirup pathi
-
-
-
-
-
-
தமிழகத்தின் காவல்துறை அமைச்சராக
ஒன்பதாண்டு காலம் இருந்தவர்.........
பெருந்தலைவரைப் போலவே எளிமையானவர், நேர்மையானவர்.....
இவர் அமைச்சராக இருந்த போது தனது சகோதரருக்கு தகுதியின் அடிப்படையில் கிடைத்த அரசு வேலையை கைவிட சொன்ன உத்தமர்...
உனது தகுதிக்கு கிடைத்த வேலை என்றாலும் எதிராளிகள் மந்திரி கக்கன் தம்பிக்கு அரசு வேலை கொடுத்தார் என்று சொல்வார்கள்.....
எனவே வேலையை விட்டு விட்டு வந்து என்னைப் பார் என்றவர்.........
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து, சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு சிறை சென்றவரான ஐயா பி.கக்கன் அவர்கள் காங்கிரஸ் ஆட்சியை இழந்து விட்ட. போது உடல் நலம் இல்லாமல் தும்பைப்பட்டியில் தனது இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்......
மதுரையில் நடந்த ஒரு விழாவுக்கு வந்த நடிகர் திலகம் தகவல் தெரிந்து தும்பைபட்டி செல்ல விரும்பி ஏற்பாடுகளை செய்யுமாறு மன்ற நிர்வாகிகளிடம் சொன்னார்..........
அப்போது மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த கரிமேடு திரு.வி.ஆர்.காந்தி மற்றும் கரிமேடு சிங்கத்தேவன் அவர்களும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்.......
எனவே நானும் வருவதாக சொல்லவே சரியென்று என்னையும் அழைத்துச் சென்றனர்...........
தும்பைபட்டிக்கு தகவல் சொல்ல வேண்டாம் என்று நடிகர் திலகம் சொல்லி விட்டதால் நாங்கள் அங்கு போகும் போது எந்தவிதமான பரபரப்பும் இல்லை...
நம்ம ஐயாவை பார்க்க வெளியூரிலிருந்து கார்ல யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு கிராமத்து மக்கள் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்......
நடிகர் திலகம் முன் சென்ற காரிலிருந்து இறங்கி அந்த சிறிய வீட்டிற்குள் சென்றார்.......
வீட்டிற்குள் ஒரு சாதாரண நாற்காலியில் மேல் சட்டை இல்லாமல் நாலைந்து குழந்தைகளோடு இருந்தார் கக்கன்ஜி அவர்கள்.......
நடிகர் திலகத்தை கண்டதும் அவசரமாக எழுந்தவரை நமதய்யன் கையை பிடித்து அமர வைத்தார்.....
வந்தவர்கள் எல்லோரும் உட்காரக் கூட அந்த வீட்டில் இடமும் இல்லை நாற்காலிகளும் இல்லை.......
நிலைமையை புரிந்து கொண்டு. வெளியே வந்தார் நடிகர் திலகம்.....
கக்கன்ஜி அவர்களும் நாற்காலியிலிருந்து எழுந்து வெளியில் வந்து திண்ணையில் அமர, நடிகர் திலகமும் அவர் அருகில் அமர்ந்து அவரின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு இறுகிய மனதோடு அமைதியாக இருந்தார்.....
கக்கன்ஜி அவர்களே பேச்சை ஆரம்பித்தார் .....
என்ன இவ்வளவு தூரம் என்றார் நம்மவர் மதுரைக்கு ஒரு விழாவிற்கு வந்ததாகவும் தங்களை பார்த்து நலம் விசாரித்து போக வந்ததாகவும் சொன்னார்.....
ஆடி ஓடி முடிஞ்சாச்சி ஜனங்க நமக்கு ஓய்வு கொடுத்துட்டாங்க அதான் வீட்ல இருக்கேன் என்றார் கக்கன்ஜி அவர்கள்......
அதற்குள் வந்திருப்பது சிவாஜி என்று தெரிந்து கொண்டு கக்கன்ஜி வீட்டை நோக்கி வர மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தார்கள்..........
கள்ளமில்லா சிரிப்போடும் வெள்ளை மனதோடும் தன்னைக் காண வந்த கிராமத்து மக்களை கரம் குவித்து வணங்கினார் நடிகர் திலகம்...........
அந்த ஒரு. மணி. நேரத்தில் காட்டுத் தீ போல செய்தி பரவ மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தார்கள்......
நிலைமையை புரிந்து கொண்ட கக்கன்ஜி அவர்கள் நடிகர் திலகத்திற்கு விடை கொடுக்க தயாரானார்.....
அப்போது ஐயா, நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க கக்கன்ஜி அவர்கள் எனக்கு ஒன்னும் வேண்டாமய்யா....
நீங்கள் எவ்வளவோ வேலைகளுக்கு இடையில் இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி என்றார்..........
நடிகர் திலகம் யோசனையோடு எழுந்து விடை பெற்று காரில் ஏறிக் கொண்டார் .....
மன்றத்து நிர்வாகிகளையும் தன்னோடு ஏற்றிக் கொண்டு மதுரை வரும் வரை அவர்களோடு ஆலோசனை செய்து கொண்டே வந்தார்........
அந்த ஆலோசனையில் உதித்ததுதான் கக்கன்ஜி அவர்களுக்காக நாடகம் நடத்தி நிதி வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது....
அதன்படியே தங்கப்பதக்கம் நாடகம் கோவையிலும், மதுரையிலும் நடத்தப்பட்டு கக்கன்ஜி அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது......
இப்படி வழங்கப்பட்ட நிதியை காங்கிரஸ் கட்சியின் நிதிக்காக அளிப்பதாக கக்கன்ஜி அவர்கள் மேடையிலேயே அறிவிக்க அதிர்ந்து போன நடிகர் திலகம் பெருந்தலைவரால் தனக்கு அணிவிக்கப்பட்ட பத்து பவுன் தங்க சங்கிலியை ஏலம் விட்டு அந்த பணத்தை ஐயா பெயரில் வங்கியில் போட்டு அதன் வட்டியை கக்கன்ஜி அவர்களுக்கு மாதம் தோறும் கிடைக்கச் செய்தார் நடிகர் திலகம்..........................
நடிகர் திலகத்தோடு தும்பைப்பட்டி வரை சென்றது என் வாழ் நாளில் மறக்க முடியாத மலரும் நினைவுகள்......
இந்நிகழ்வின் கால கட்டம் சரியாக நினைவில் இல்லை....அநேகமாக 1969---1971 க்கும் இடையில் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.....என் நினைவில் உள்ளதை அப்படியே பதிவிட்டுள்ளேன்.
இந்த சந்திப்பின் புகைப்படங்கள் அண்ணன் கொடிக்குறிச்சி முத்தையா அவர்களிடம் இருந்தால் பதிவிடும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்........ இந்த சந்திப்பின் போது நடிகர் திலகம் நேரில் வழங்கிய சிறு நிதியை ஏற்றுக் கொள்ள பிடிவாதமாக மறுத்து விட்டார் கக்கன்ஜி. அவர்கள்.............
பெருந்தலைவரின் தொண்டரல்லவா......
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...3f&oe=5EE921AE
Thanks Lakshmanan Lakshmanan
.................................................. ......................................
பின்னுட்டம்
தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன் மூலம் வசூலான தொகையை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த விழாவில் ஐயா கக்கன் அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது அந்த நிதியை அதே மேடையிலேயே ஐயா கக்கன் அவர்கள் கட்சி நிதிக்காக அளித்து அதை கண்டு நடிகர்திலகம் தனது கழுத்திலிருந்த சங்கிலியை ஏலம் விட்டு அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து அதனுடைய வட்டி கக்கன் அவர்களுக்கு கிடைக்கும்படி செய்தார் இந்த விழாவுக்கு நான் நேரில் சென்றிருந்தேன்.....தும்பைபட்டியில் கக்கன் அவர்களின் இல்லத்திற்கு நடிகர்திலகம் வந்து சென்றதன் நினைவாக அங்கு ஒரு சுவற்றில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது அந்த கல்வெட்டு இன்றும் இருக்கிறது.......
.........................................
3
Hide or report this
-
உன்னதமான நடிப்பாற்றலால் எப்போதும் மன நிறைவு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு உழைத்தவர் .அவர தன்னை அறிந்திருந்தார்.அவரை தங்களின் இதய தீபமாக கருதிய கலைஞர்கள் அதிகம்
சின்னத்திரையில் ஓரிரு காட்சியில் இடம் பெறும் நடிகர்கள் கூட சுளையாகதினம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற காலம் இது.ஆனால் சிவாஜி வாழ்ந்த காலத்தில் அவர் தண் நடிப்புக்காகவும் கலையின் வெற்றிக்காகாவும் கதாபாத்திரம் நெஞ்சில் நிற்பதற்காகவும் ஏற்று க்கொன்ட சிரமங்கள் இன்னொரு நடிகன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.சிவாஜியை கஞ்சன் என்று கூட வாய் கூசாமல் மேடையில் கேவலமாக அழைதிறுக்கிறார்கள்.சிவாஜியின் படங்களை தலை கீழாக ஒப்பிக்கும் ரசிகர் கூட்டம் தமிழ் உலகில் இருக்கிறது.அவரது ரசிகர்கள் சாதாரணமானவர்கள் இல்லை.மிகப் பெரிய அந்தஸ்தில் உயரிய கல்வி கற்ற செல்வ சீமான்கள்,காவல் துறை அதிகாரிகள் நாடு போற்றும் பத்ரிகையாளர்கள் என பட்டியல் நீளும்.சிவாஜி சினிமா பைத்தியம் பிடித்தவர்கள் நூற்றுக்கு 50பேராவதுஇன்றும் வாழ்கிறார்கள் அவரது சினிமா புகழை பாடியே தனது விற்பனையை வள ர்த்துக்கொன்டனஅன்றைய சினிமா பத்ரிகைகள்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...c8&oe=5EE99860
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...78&oe=5EE6ADC4
Thanks Vijaya Raj Kumar