-
ஹாய் ஆல்..வந்துட்டேன் :)
**
பாயுங் கதிர்களினால் பக்குவத்தைக் கொள்ளாமல்
காயுமொளி கொண்ட கதிரவனே - மேவிநீ
சுட்டெரிக்க மேனியும் சூடேறச் சந்தனத்தைப்
பட்டாய்த் தடவுவேன் பார்..
என்னங்க பண்ண்றது ஒரே வெய்யில்.. வீட்டிலயும் நெட்டில்ல
வெளியிலையும் வெய்யில் உள்ளேயும் தான் ..ஆமா என்ன செய்யலாம்
மனசு குளிரணுமே.. சந்தனம் பத்தி எழுதிப் பார்த்தா..
தளதள்க்கும் கன்னி தனியாய் இருந்தால்
களவைக் கிணற்றிலே காண்..
அவன்; அவள்; இளமை; தனிமை என்றால் இல்லை..அம்மா வீட்டில்..
நைஸாகக் கடத்தி வீட்டின் பின்புறம் கிணறு.. பின்னென்ன பாடலாம் தானே..
https://youtu.be/5Rn162eVxBM
சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது
சம்மதம் நடப்பதற்குத் தந்திரம் புரிந்ததென்ன மனமோ இது
மனமோ இது என்ன குணமோ இது
ந.தி பாரதி.. + இளமை
-
**
சந்தனம் நறுமணப் பொருட்களில் ஒன்றாக விளங்குகிறது. இது மிக அரியதும், விலைமதிப்புள்ளதுமான ஒரு வாசனைப்பொருளாகும்.
(ஹை என்ன கண்டு பிடிப்பு)
தோல் சுருக்கங்கள், கறுப்பு தோல்கள் போன்றவற்றை மாற்றுகிறது.
உலர்ந்த சருமத்திற்கு லேசான ஈர உணர்ச்சியைக் கொடுத்து அதை மிருதுவாகவும்,
பளபளப்பாகவும் செய்கிறது. சிறுநீர்க்குழாய்களில் உண்டாகும் சில வியாதிகள் இந்த வாசனை எண்ணெயினால் குணமாக்கப்படுகின்றன.
//ஹை நிறைய உபயோகம் இருக்கே//
எனக்குத்தெரிந்த சந்தனம் ..ஒரு குட்டி வட்டமாய் ஒரு பலகை வீட்டில் மதுரையில் இருந்தது.. ஏதாவது ஆத்திர அவசரத்திற்கு
ஃபார் எக்ஸாம்பிள் ட்யூரிங் டிவாலி டைம் ஏதாச்சும் பட்டாசு சுட்டா அம்மா டபக்கென சிலசமயம்
தண்ணீர் கொஞ்சம் அந்த வட்டக் கட்டையில் விட்டு அதை த் தேய்க்கும் சின்னக் கட்டையில் தேய்த்துத்
தடவியிருக்கிறார்..மதுரை அக்னி நட்சத்திர நாட்களில் சில சமயம் கரெண்ட் வராத காலத்தில்
கொஞ்சம் உடலில் பூசிக் கொண்டு தூங்கியதாக நினைவு (வெகு சின்ன வயதில்)
வந்தனம் சொல்லியே வாகாக வெக்கையை
சந்தனம் போக்குமே தான்..
இங்க என்ன சந்தனக்காற்றே செந்தமிழூற்றே சந்தோஷப் பாட்டே வா..வா.. ரஜினி ஸ்ரீதேவி..+ இளமை..
தனிக்காட்டு ராஜா..
https://youtu.be/JSlpkQLdJj8
*
-
*
சந்தனம் தெய்வத்திற்கு பூஜை செய்யப் பயன் படும் பொருள்.. மணமிகு ச்ந்தனம் அழகிய குங்குமம் என்கிறார் மருதமலை
மாமணியே முருகையா பாடலில் மதுரை சோமு.
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் என்கிறார் வைர முத்து..
அப்பொழுது தான் மலர்ந்த பெண்ணைப் பற்றி - அரச்சசந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெற்றியிலே என்கிறார் கங்கை அமரன்..
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து ...ந.தி. சாவித்திரி + கண்ணதாசன்..
தந்தச் சிலையழகாய் தங்கக் கரமழகாய்
..சந்தக் கவியழகாய் சிந்தும் நகைகொண்டே
வந்தாள் வனத்தினிலே வாகாய் வஞ்சியவள்
..சொந்த மென்வெனக்கு சொர்க்கம் தனைக்காட்ட
செந்தேன் குரலினிலே சேலாம் விழியகல
..சொக்கத் தான்வைத்தாள் சுந்தர பாவையெனை
மின்னல் சுடுமென்பார் மங்கை யிவளழகோ
..மேனி குளிர்விக்கும் சந்தனம் ஆச்சுதையா..
என்கிறார் அந்தக்கால சின்னக் கண்ணனார்..
இங்க பாருங்கள்..கவிஞர் வாலி என்ன கேக்கறார்.. சந்தனமேடையுமிங்கே சாகச நாடகமெங்கே..
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ... ம.தி.. ராதாசலூஜா + இளமை ..படம்.இதயக்கனி..
https://youtu.be/_DHxEHm1blM
இன்னும் நிறைய சந்தனம் இருக்குங்க்ணா.. சொல்லுங்க பார்க்கலாம்..
**
ராஜ்ராஜ் சார்.. எழுதுங்கள்..படிக்கக் காத்துக்கிட்டிருக்கோம்..
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 45
Thazhunna Sooryane..
When the sea of surging waves raises its arms
To receive the descending Sun
You came rushing, oh! The damsel called golden clouds!
To hide him inside your locks of hair
"Won't let him leave me, I won't"
Thus groans your futile craving!
Equally agitated is the sea too
That is holding this self-dissolving Golden Idol!
There resonates in its oscillating waves
The rhythm of the great drum of the Time!
Cries at a distance an unknown sea-bird
All that we loved are just momentary!
All those fascinating colours of the rainbow
Are they not just a single sunlight!
The twinkling star of the distant sky
Was it not once a little flower on the earth!
Travellers are we who are assembled here
To part and leave with pain one day!
This is a beautiful song from the 2005 Malayalam Movie "Made in USA" (മേഡ് ഇന് യു.എസ്.എ). The famous South Indian film music composer Shri.Vidyasagar has set music for the wonderful lyrics of the great Malayalam Poet - Padma Vibhushan ONV Kurup. The song is set in the morning Raag Bhoopalam (Hindustani -- Bhupal Todi) though the theme of the lyrics is about the setting sun. The back ground score for this song by the great Vidyasagar is astoundingly phenomenal
The transiency of love and the pain of the ultimate separation that everyone has to face are so beautifully brought out by the poet in an allegory of both the sky and the sea grieving at the vanishing of their lover- the Sun in the evening.
( all comments as above are borrowed from a posting in Youtube )
https://youtu.be/MAWkbT02Mf0
-
ஹை..இன்னொரு பாட் நினைவுக்குவந்துச்சே..
நல்ல வரிகள்..
நிலாவே அழகு..அதுவும் கொஞ்சம் வெளிர் மஞ்சள்ள இருக்கறா மாதிரி இருக்கும் தூரத்தே இருந்துபாக்கறச்சே..
ஆமா நிலா எப்பவரும்..இது என்ன அபத்தக் கேள்வியா..இந்த இரவு நேரத்தை என்ன சொல்றார் கவிஞர்
சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
ஓகே அது குட் ஈவ்னிங்க் சொல்லிச்சு சரி..அப்புறம் என்ன
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம்
தூக்கம் வராதோ :)
நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன
இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கைகள் என்னை கொய்தன… (ஹை.. நல்லா இருக்கே லைன்ஸ்..)
*
கொஞ்சுதற்குத் தோதாய் குளிர்நிலவாய் வஞ்சியவள்
மிஞ்சுகின்ற வெட்கத்தில் மேனியிலே அச்சமுடன்
கெஞ்சுகின்றாள் கண்களினால் கேட்கின்றாள் ஓசையின்றி
விஞ்சுவதும் ஆசையது ஆம்..
(சரியா வந்திருக்கா..)
ரஜினி ராதா..+ இளமை..
https://youtu.be/bUYMBZIFDcM
-
ஹாய் CK ! welcome back ! மோடம் சரியாகிவிட்டதா ? என் பதிவுகள் முக்கால் வாசி காலையில் உதயமாகும் கதிரவனைப்பற்றியது - காலை வெய்யில் உடம்புக்கு மிகவும் நல்லது - உங்களுக்கு வைட்டமின் 'D" இலவசமாக கிடைக்கும்படியும் செய்துள்ளேன் .
சந்தனம் தடவிக்கொண்டுதான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை - இருந்தாலும் எடுத்துக்கொண்டுள்ள பாடல்கள் அனைத்தும் இந்த திரியில் உள்ளவர்களைப்போல ( அருமை என்பதை இப்படியும் வர்ணிக்கலாம் ) . கிரேட் reliever வந்துவிட்டதால் நான் கொஞ்சம் விடுமுறை எடுத்துக்கொள்ளலாமா ( நீங்கள் விட்டு சென்ற பொருள்கள் எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்க்கவும் - பிறகு -அதை காண வில்லை , இதை காண வில்லை என்று என்னை குறை சொல்லக்கூடாது )
-
ரவி..அப்படிச் சொல்லாதீங்க.. இன்னும் முழுக்க குணமாகவில்லை..இது அவ்வப்ப்போது லஞ்ச்ல பண்ணினது அம்புட்டுதேன்.. முழுக்க சரியானதும் வீட்டில் உங்களது பாடல்களைக் கேட்டுச் சொல்ல உத்தேசம்..டோண்ட் டேக் லீவ்..ஸேம் திங்க் கோஸ் டு கல்ஸ் ஆல்ஸோ..
-
நான் சொன்ன வெய்யில் ரியல் வெய்யில்ங்க..உங்களோடசூரியப் பாடல்களில்லை.. வெளில கொஞ்சம் ஜாஸ்தி ஹ்யுமிடிட்டி.. அம்புட்டு தேன்..
-
CK sir,
why are you wandering here and there for 'sandhanam', when our own song is here..?
Sendhamizh paadum 'sandhana' kaatru
therinil vandhadhu kanne
(vaira nenjam)
-
Adiram mentioned song is a good choice from NT's film. There are some more from others: "Santhana thenralai" from Kandukondaen Squared. "Santhana Marbile Kungumam sernthathe" from Nadodi Thendral.
https://www.youtube.com/watch?v=Jd8SLXBnq8M
https://www.youtube.com/watch?v=WbgtMPG5tqA
https://www.youtube.com/watch?v=iVxHjyWQYew