ரவி
நவராத்திரி அற்புதராஜ் பற்றிய பதிவிற்குத் தாங்கள் அளித்துள்ள ஆதரவான உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்த பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.
Printable View
ரவி
நவராத்திரி அற்புதராஜ் பற்றிய பதிவிற்குத் தாங்கள் அளித்துள்ள ஆதரவான உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்த பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.
http://i61.tinypic.com/1z3vzg9.jpg
சிவாஜிக்கு நண்பர்கள் என்றால் உயிர். அரரைப்போல் தன் நண்பர்களிடம்
பழகுபவர்களை காண்பதே அரிது. அவ்வளவு அன்யோன்யமாய் பழகுவார்.
யாருக்காவது பணக்கஷ்ட்டம் என்றால் அவர் வெளிக்கு பரிதாபப்படுவதுபோல்
காட்டமாட்டார்.ஆனால் ஆச்சரியப்படும் அளவில் உதவி செய்வார்.
இந்தமாதிரியாக எனக்கே நேர்ந்திருக்கிறது.
கணேசனிடம் உள்ள குறைகள்பற்றி நான் நேரிடையாக
அவரிடம் அடிக்கடி கூறுவேன்.
"இதோ பாருங்கள் உங்களுக்கு ஜட்ஜ்மென்ட் போதாது
இல்லாவிட்டால் இப்படியாகுமா...?" என்று அவரது
உதவியை பெற்றுக்கொண்டு அவரையே தாக்கும்படி
அமையும் சம்பவங்களை குறிப்பிட்டுச் சொல்வேன்.
"அப்படி சொல்லாதே பாய் நான் நினைத்தபோது அவங்க சரியாத்தான் இருந்தாங்க.
அதனால் நான் அன்புகாட்டினேன்.அவங்க மாறிட்டா அது என் தப்பா?" என்று சமாதானம் சொல்வார் அவர் .
குறிப்பாக தன் நண்பர் ஒருவருக்கு உதவிகள் செய்து அவரை முன்னுக்கு கொண்டுவந்த பிறகு
அவரே இவரிடம் கொஞ்சமும் நன்றியில்லாதவராக நடந்துகொண்டபோது புழுங்கிக் கொண்டாரே தவிர
அதை தனக்கு தெரிந்ததாகவே வெளிஙில் காட்டிக்கொள்ளவில்லை.
அதை அப்படியே ஜீரணித்துக்கொண்டுவிட்டார். இத்தகைய பொறுமை உணர்ச்சியை
வேறு யாரிடமும் நான் கண்டதில்லை
( திரு பீம்சிங்)
http://i1065.photobucket.com/albums/...psvkdzbuwc.jpg
பாதிரியார் ஜேம்ஸ்.,போலீஸ் அதிகாரி அருள்என்று இரண்டு வேடங்களில் நடிகர் திலகம் நடிப்பில் பிரமிப்பை ஏற்படுத்திய படம்.வருடம் போனால் என்ன?நல்ல வயசும் ஆனால் என்ன?உருவத்தை பாரடி மெல்ல என்ற வைர வரிகள் இந்த படத்தைப் பார்க்கும் போது நினைவுக்கு வராமல் இருக்காது.நடிகர்திலகத்தின் மென்மையான கண்ணியமான பாதிரியார் நடிப்பு சமுகத்தில் உண்மையான பாதிரியார்களுக்கே பாடமாக அமைந்திருந்தன.
கம்பீரமானகாவல்துறை அதிகாரியாக தங்கப்பதக்கத்தில் நடித்திருந்த போதிலும்இதிலும் கம்பீரமான நடிப்பை வேறு ஒரு கோணத்தில்நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.ஆரம்பமாகும் முதல் காட்சியிலேயே அட்டகாசப்படுத்தியிருப்பார்.
கைதிகளை விசாரிக்கும் காட்சி அவரின் விழி அசைவுகள் அதிசயங்கள் காட்டும்.
http://i1065.photobucket.com/albums/...pssx556lp0.jpg
தேவனின் கோவிலிலே பாடலில் ஆரம்பிக்கும் படம்.அதுவே முழு படம் பார்த்த நிறைவை தந்திருக்கும்.அப்படி ஒரு அருமையான பாடல்.
அந்த பாடலுக்கு பின்வரும் காட்சிகள் விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கும்.பிரபுவின் குடும்பம்,
ராதாவின் காதல்,பின் ராதாவின் மரணம்,பாதிரியார் (நடிகர்திலகம்)மீது சந்தேகம்..பிரபுவின் கோபம்...
நடிகர்திலகத்தை பிரபு அடிக்கும் காட்சி,.,
இந்தப்பட சூட்டிங் ஊட்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அந்தக் காட்சியின் அமைப்பை மட்டும் ஜெமினிசினிமா வார இதழ் வெளியிட்டது.அதைப் படித்தவர்கள் மற்றவர்களிடம் சொல்ல அதுவே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
அந்தப்படம் எப்போது வரும் என்ற ஆவலை உண்டாக்கி,.,
வெள்ளை ரோஜா
தீபாவளி அன்று வெளியாகி மேற் குறிப்பிட்ட காட்சிக்காக சொந்த மகன் என்றும் பாராமல் பிரபு தீபாவளியன்றேதீவிர சிவாஜி ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டது தனிக்கதை.
ராதாவின் சந்தேக மரணத்துக்காக, அண்ணன் போலீஸ் அதிகாரியை பாதிரியார் சந்திக்கும் சந்திக்கும் காட்சி.
ஒரே பிரேமில் இரண்டு சிவாஜிகள் தோன்றும்எந்தப்படமும் உலகின் அதிசயங்களை கண்டது போல் இருக்கும்.
பிரேமின் ஒரு பாதி மென்மையையும்
மறு பாதி கம்பீரத்தையும் காட்டும்.இது நம் உடம்பின் உணர்வுகளிலும் எதிரொலிக்கும்.
பிரேத பரிசோதனைக்காக J.Jஅருள் வருகை தரும் காட்சி. அதன் பின் சவப்பெட்டி வெளியே எடுத்தல்.சவப்பெட்டி திறக்கப்படுதல்.திறக்ககப்பட்டதும்...
[emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298] [emoji298]
போஸ்ட்மார்ட்டம் என்ற மலையாள படத்தின் தழுவல் தான் இந்த வெள்ளை ரோஜா.அந்தப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு கூட அந்தக்காட்சி இடி விழுந்தது போல்தான் இருந்திருக்கும்.
பிணமாக அவரைக் காட்டும் காட்சி
ஒரு பொக்ரான் அணுகுண்டு,6.8ரிக்டர் அளவு பூகம்பம் போன்று அதிர்வுகளை ஏற்படுத்தும்காட்சி.அந்தக்காட்சியில்
இரண்டு வேடங்களுக்கும்நடிகர்திலகம் காட்டும் முகபாவங்கள் அற்புதங்களின் கலவை என்று கூறலாம்.
பாதிரியாரின் சாந்தமான முகம் நம்மைஅழ வைக்கும் என்றால் போலீஸ் அதிகாரி யின் முகம் நம்மை வெறி கொள்ள வைக்கும்.
படம் வெளியான சமயத்தில் கோவை அர்ச்சனாவில் படம் பார்த்த ஒரு பெண் அதிர்ச்சியில் இறந்து விட்டதாக வேகமான தகவல் பரவியது இன்றும் வந்து போகும் ஒரு நினைவு.
பின்னர்,நடிகர்திலகம, பிரபு சந்திக்கும் காட்சி வெகு சுவராஸ்யம்.அவரின் விழிவீச்சும் அங்க மொழிகளும் அலட்டல் இல்லாத நடிப்பும்,அந்த உடையும், நடையும் ரசனையை மேமம்படுத்தும் காட்சியமைப்பு.
அதன்பின் நடக்கும் விசாரணைகள்
ஆவியாக நடித்தல் பாட்டுக்கச்சேரி என்று பல விதமான விறுவிறுப்பான காட்சிகளில்
துடிப்பான நடிப்புகள் நம்மை
இமை மூட மறக்கச் செய்யும்.
க்ளைமாக்ஸ்
தூங்காதே தம்பி தூங்காதே,தங்கமகன்,தங்கைக்கோர் கீதம் போன்ற படங்களும் ஒன்றாக ரிலீஸாகி வெற்றிபெற்றும்அதையும் மீறி சென்னையில் ஆறு தியேட்டர்களில்100 நாட்களும்,கோவை அர்ச்சனாவில்100 நாட்களுக்கு மேலும் நகராட்சியான பொள்ளாச்சியில் 55 நாட்களுக்கு மேலும் ஓடி வசூலில் மாபெரும் சாதனை புரிந்த படம்.கோவை அர்ச்சனாவில் வசூலான தொகை 13 லட்சத்திற்கும் மேல்.ஆண்டு 1983 தீபாவளி.
http://i1065.photobucket.com/albums/...psdnjn8qji.jpg
https://upload.wikimedia.org/wikiped...20px-M.s.v.JPG
இசை இன்று அதிகாலை 5 மணிக்கு நம்மையெல்லாம் விட்டு இறைவனிடம் சேர்ந்து விட்டது.
மெல்லிசை மன்னர் நம் இதயத்தில் இசையாய் குடியிருந்த அந்த தெய்வம் தெய்வத்தோடு சேர்ந்து விட்டது.
http://thefunstons.com/wp-content/up...4/03/tears.jpg
வார்த்தைகள் வரவில்லை. எழுத்தும் அழுகிறது.
அமரத்துவம் வாய்ந்த மனதிற்கினிய நடிகர்திலகத்தின் மதுர கான மெல்லிசையால் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நமது இதயங்களை ஆண்ட மன்னருக்கு கண்ணீர் அஞ்சலி
Our Heartfelt condolences on the sudden demise of the Mind and Soul Vibrator MSV. May his soul rest in peace keeping our souls filled with his ever lasting melodies as part and parcel of our NT's saga!
அஞ்ஞாத வாசத்திற்கு பிறகு என் முதல் பதிவே , என் இசை தெய்வத்துக்கு அஞ்சலியா? கடவுளே, என் இசை ஞானத்தின் ஆரம்ப புள்ளி, குடும்ப நண்பர், ஒரு வருட மொட்டை மாடி உலாவல் தோழர், நான் இந்தியாவிலேயே முதல்வராக நினைக்கும் இசை மேதை , எனக்கு மிக வேதனையான கருப்பு தினம். அந்த மேதையை இழந்து வாடும் திரி உறவினர்களுக்கு, என் நண்பர்களான அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். (எனக்கே தேவை)
எம்.எஸ்.வி
எம்.எஸ்.வி - சிவாஜி இந்த இரண்டு மூன்றெழுத்துக்காரர்களையும் பிரிக்க முடியாது. மொத்தம் 120 திரைப்படங்கள் மெல்லிசை மன்னரும், நடிகர்திலகமும் இணைந்து பனியாற்றியிருக்கிறார்கள். (T .K .ராமமூர்த்தியுடன் இணைந்து 25, தனியாக 95) .
உயரம் குள்ளம், உயர்ந்த உள்ளம். எல்லோரிடமும் எளிமையாகப் பழகுபவர். நடிகர்திலகத்திற்காக நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் அந்த மேதையோடு கலந்துகொள்ளக்கூடிய, உரையாடக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நடிகர்திலகத்தைப் பற்றி என்றுமே உயர்வாக, பெருமையாகப் பேசுவார்.
அன்னாருடைய மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு, இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாகும். திரையுலகம் உள்ளளவும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களின் பெயர் நிலைத்து நிற்கும். மறைந்த அன்னாருக்கு, நடிகர்திலகம் ரசிகர்கள் சார்பில் அஞ்சலியை செலுத்துவோம்
http://i1234.photobucket.com/albums/...ps588111f8.jpg
http://i1234.photobucket.com/albums/...ps8c21968a.jpg