புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கு. நீண்ட நாள் திரியில் வராமல் போனதற்கு மன்னிக்கவும். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆண்டவனை மற்றவர்களுடன் ஒப்பிடுவது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. திரையுலகிலும் அரசியலிலும் அவர்தான் நம்பர் 1 என்பதை இந்த நாடே அறியும். அவர் திரைப்படங்கள் இன்றும் அமுத சுரபியாய் வாரி கொடுத்துகொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தலைவரின் திரைப்படத்தின் ஒரு சாதனையை அவரது திரைப்படம்தான் முறியடித்திருக்கிறது. அது எப்படி முடிந்தது என்றால் அவர் மக்கள் உள்ளம் கவர்ந்த நடிகர் என்பதால்தான். அந்த வெற்றியே பின்னர் முதல்வராகவும், இப்போது தெய்வமாகவும் உருமாறியிருக்கிறது. நாம் ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றிகளையும் படிகற்களாக செய்து அதன் மீது ஏறி வெற்றி வெற்றி வெற்றி என்று கூக்குரலிடுகிறோம். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன். அன்பே வா..நேற்று இன்று நாளை, உழைக்கும் கரங்கள், நவரத்தினம், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், நீதிக்கு தலைவணங்கு, குடியிருந்த கோயில்,etc... என தொடங்கி..கருப்பு வெள்ளை படங்களான மதுரை வீரன், தாழம்பூ, பணம் படைத்தவன், கன்னித்தாய், தொழிலாளி, கலங்கரை விளக்கம், ஆசைமுகம் (பட்டியல் நீளும்) என எந்த படமானாலும் இன்றளவும் திரைப்பட விநியோகஸ்தர்களால் வெளியிடப்பட்டு வெற்றி காண்கிறார்கள். அதுதான் எம்ஜிஆர் பார்முலா என்றும் பெருமிதம் கொள்கிறார்கள். எனவே தன்னிகரில்லா தெய்வத்துடன் போட்டியிட இன்னொரு ராமச்சந்திரன்தான் பிறந்து வர வேண்டும்..அப்படியொரு பெருமை பெற்ற தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். எனவே, ஏதோ ஒன்று..ஒன்று.ஒன்று மட்டுமே.... கூறுவதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் நம் தலைவரின் புகழ் பாடுவதை நோக்கமாய்க் கொண்டு பதிவிடுமாறு உங்களைக்கேட்டுக்கொள்கிறேன் . பூஜை அறையில் நம் புனிதர் தெய்வமாய். இந்த உலகத்தில் எத்தனை பேருக்கு இந்த பேறு கிடைத்தது..இதை விட வேறு என்ன வேண்டும். இந்த புகைப்படம் புதுவையில் எம்ஜிஆர் பக்தர், திரு. ஜெயபாலன், வீட்டில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது.
http://i60.tinypic.com/2vjeyx0.jpg
http://i61.tinypic.com/wt645z.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்