-
சி.க, ரவி, நாயக்
உங்கள் அனைவரது பதிவுகளையும் படித்து முடித்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக திரிக்கு அழகு சேர்க்கின்றன. ரவி சூரிய கதிர்களால் கலக்குகிறார் என்றால் உடனே சி.க சந்தனம் தடவுகிறார். (சி.க பலே ஆள் அய்யா நீங்கள்!:-D) கல்நாயக் அமாவாசை முடிந்து விட்டதா? மீண்டும் குளிர்ச்சி எப்போது?
ராஜ் ராஜ் சார்!
எக்ஸலண்ட். ஜுகல் பந்தியில் மிக அபூர்வமான 'mera naam chin chin chu ...... போட்டு கலக்கி விட்டீர்கள். எதிர்பார்க்கவே இல்லை. என் உள்ளம் கொள்ளை கொண்ட அருமையான பாடல். ஒரு காலத்தில் இப்பாடலை கேட்காத நாளே கிடையாது. நீண்ட நாள் சென்று பார்க்கும் போது பரவசம் அடைந்தேன். ஜுகல் பந்தியில் இது டாப். 'மேலே பறக்கும் ராக்கெட்டு' போல.:)
ராஜேஷ்ஜி!
என்ன சுசீலாவுடயது ஒன்றையும் காணோம்?:(
ஆதிராம் சார்,
நீங்கள் 'செந்தமிழ் பாடும் சந்தனக் காற்றை' ஞாபகப்படுத்தியவுடன் நம் நடிகர் திலகம் திரியில் குதூகலமாக 'வைர நெஞ்சம்' கொண்டாடியது நினைவுக்கு வந்து விட்டது. என்ன இனிமையான நாட்கள்!
இன்னும் அதிகமான பங்களிப்பைத் தந்து ஜமாயுங்கள். நன்றி!
-
சி.க, ரவி, நாயக்
இதோ நான் தடவும் சந்தனம் என் பங்கிற்கு.
வழக்கம் போல இறைவணக்கம் பாடி என் தெய்வத்திடம் இருந்து ஆரம்பிக்கிறேன்.
நடிக மாமன்னர் பொய் மூக்கு வைத்து அபிநய சரஸ்வதியை கலாய்க்கும் அரிதான பாடல் 'அஞ்சல் பெட்டி 520' லிருந்து.
'சந்தனச் சிலையே கோபமா
சாகசமா இல்லை நாணமா'
பார்ப்பது நடிகர் திலகத்தையா அல்லது ஸ்கூல் பாயையா?
https://youtu.be/jGMZOJH8LPQ
-
அடுத்து அருமையான் சந்தன மணம் வீசும் ஒரு பாடல். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாலாவின் பாடல். இசை சங்கர் கணேஷ் என்பது அமர்க்களமான விஷேசம்
'சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே!'
ராஜீவ் நடித்த 'நாடோடி ராஜா' படத்திலிருந்து எப்போதுமே மறக்க முடியாத பாடல். உடன் 'ஓநாய்க் கண்' அருணா
https://youtu.be/X2CFrJExt8M
-
அடுத்து என் ராட்சஸி சீர்காழியுடன் கொடி நாட்டும் சந்தனப் பாடல். 'வாழ்க்கைப் படகு' படத்திலிருந்து
'பழனி சந்தன வாடை அடிக்குது... பூசியது யாரோ?
அரிதான அபூர்வ பாடல்.
https://youtu.be/Q_H7Jo9YIWw
-
அடுத்து ஏற்கனவே போட்டிருந்தாலும்
'ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்'
https://youtu.be/PsHJIb--hG8
-
'ராஜகாளியம்மன்' படத்தில் 'வைகைப் புயல்' தென்றலாய் பாடும் பாடல். அது மட்டுமல்ல. ரம்யா கிருஷ்ணன் புயலும் பவ்யம்.
சந்தன மல்லிகையில் தூளி கட்டிப் போட்டேன்.
https://youtu.be/VXyvKQ2QSpo
-
'எல்லாமே என் ராசாதான்' படத்தில் ராஜாவின் ரகளை. 'புலி' ராஜ்கிரண்கிட்டே 'ஆட்டுக்குட்டி' சங்கீதா பாடுது
'ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே'
https://youtu.be/44z5s_GOykM
-
'சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா?'
தல பாலைவனத்துல தலை காய பாடும் அருமையான பாடல்.
https://youtu.be/5vIoG7VQjms
-
இதோ இன்னுமொரு சந்தன சாகச சாங். ராஜாவின் அம்சம்.
'சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே'
சி.க,
ஏன் சேராது? ரஞ்சிதா சாமியார் மார்பில் சாய்ந்தால் சந்தன மார்பில் குங்குமம் சேரத்தானே செய்யும்?:)
https://youtu.be/lAbpBIwOB-U
-
இதோ 'தேவரின்' மகன் சிலம்பாட்டம் ஆடி 'சாந்து பொட்டும்' ,
அப்புறம் 'சந்தனப் பொட்டும்' வைத்து தூள் கிளப்புகிறாரே!
https://youtu.be/kglYjWVHiEQ