இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
இருவேடங்களில் நடித்த "ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாக உள்ளது.
Printable View
இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
இருவேடங்களில் நடித்த "ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாக உள்ளது.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக தலைவர் வெளிநாடு சென்றபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம். டொமஸ்டிக் டிபார்ச்சர்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளதற்கு மேலே உள்ள எழுத்துக்களைப் பார்த்தால் ஜப்பானிய எழுத்துக்கள் போல தெரிகிறது. ஜப்பான் விமான நிலையம் என்று கருதுகிறேன். ஒரு கை இடுப்பிலும் இன்னொரு கை பேண்ட் பாக்கெட்டிலும்.... ஸ்டைல் சக்கரவர்த்தியின் அட்டகாச போஸை கவனித்தீர்களா? நன்றி பேராசிரியர் திரு.செல்வகுமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கடந்த ஒரு வாரமாக மக்கள் திலகத்தின் பல படங்கள் பல் வேறு ஊடக தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்பட்டது.
இன்று மட்டும் சங்கே முழங்கு , பறக்கும் பாவை , ராஜா தேசிங்கு , குமரிகோட்டம் , ஆயிரத்தில் ஒருவன் 5 படங்கள் ஒளிப்பரப்பப்பட்டது.
துணை இயக்குநராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் பணியாற்றிய திரு. சங்கரன் (நாயர்) அவர்கள், தலைவரின் அறிவுரையை ஏற்று பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை துறந்து சங்கரன் என்றே பின்னாளில் அறியப்பட்டவர். முக்கியமான காட்சிகளில் கண்ணாடியை கழற்றி உறுத்துப் பார்ப்பது இவரது தனி முத்திரை. புகைப்படத்தை பதிவிட்டதற்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வடக்கெல்லை போராட்டம் நடத்தி திருத்தணியை தமிழ்நாட்டுக்கு சொந்தமாக்கிய பெருமை பெற்ற சிலம்புச் செல்வருடன் தலைவர் இருக்கும் அரிய புகைப்படத்தை பதிவிட்ட திரு.குமார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
தலைவர் பற்றிய பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள், விழாக்களின் புகைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள் பற்றியும் ஸ்டைல் சக்கரவர்த்தியின் அட்டகாச புகைப்படங்களுடன் விவரங்களை பதிவிடும் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி. தகவல் தெரிவித்த மடிப்பாக்கம் திரு.சுந்தர் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நமக்கெல்லாம் தலைவரின் ஆக்க்ஷன் படங்கள் பிடிக்கும் என்றால், தலைவருக்கு பிடித்தமான அவரது படம் பெற்றால்தான் பிள்ளையா? வித்தியாசமான படங்களை தலைவர் விரும்பினாலும் வியாபாரம், நம்மைப் போன்ற ரசிகர்களின் திருப்தி என்றெல்லாம் இருக்கிறதே? நன்றி திரு.யுகேஷ் பாபு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்