https://scontent-lhr3-1.xx.fbcdn.net...4d&oe=5779CBC7
Printable View
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...82&oe=57B569A7
எனக்குப் பிடித்த
மன்னவனின்
எழில் தோற்றம்
சத்தியாவின் கைவண்ணம்
கண்ணுக்கு விருந்து
நினைவலைகள்...ஜாதி பார்த்து வேட்பாளரை தேர்வு செய்யவில்லை!
எம்.ஜி.ஆர்
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்த போது எம்.ஜி.ஆர்., ஜாதிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை; பொதுமக்களும் ஜாதியை பார்த்து வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என்கிறார் தேனி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான வி.ஆர். ஜெயராமன் (75).
தேனி மாவட்டம், தாடிச்சேரியைச் சேர்ந்தவர் இவர். தொகுதி மறுசீரமைப்புக்கு முந்தைய தேனி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 1977-இல் திமுக வேட்பாளரை எதிர்த்தும், 1980-இல் காங்கிரஸ், 1984-இல் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேனியில் வசித்து வரும் ஜெயராமன், அப்போதைய தேர்தல் அனுபவங்கள் குறித்து கூறியதாவது:
சட்டம் படித்த நான், மதுரையில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனிடம் ஜூனியராக பணியாற்றினேன். கடந்த 1972-இல் எம்.ஜி.ஆர்.,அதிமுகவை தொடங்கிய போது நடைபெற்ற எம்.ஜி.ஆர். மன்ற முதல் மாநாட்டில் கட்சியில் சேர்ந்தேன்.
கடந்த 1977-இல் அதிமுக முதன் முதலாக பொதுத் தேர்தலைச் சந்தித்த போது படித்தவர்கள், செல்வாக்கு உள்ள பிரமுகர்கள், இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாகக் கூறினார்கள்.
தேனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்தேன். சட்டம் படிப்பு படித்தவன், இளைஞர் என்ற அடிப்படையில் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலைச் சந்திப்பதற்கான பொருளாதார உத்தரவாதத்திற்காக கட்சியில் ரூ.20 ஆயிரம் கட்டச் சொன்னார்கள். தேர்தல் முடிந்ததும் அந்தப் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டனர்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிக்கு ஏற்ப வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் . ஜாதிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எம்ஜிஆர். பொதுமக்களும் ஜாதி பார்த்து வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை. வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கைவிட கட்சித் தலைவர்கள் மீதான அபிமானம்தான் தேர்தலில் மேலோங்கி நின்றது.
கடந்த 1977-இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் தேனியில் இருந்துதான் முதன் முதலாக எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தேனியில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு முன்னதாக திரைப்பட நடிகை லதாவின் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக் கூட்டம், நாட்டிய நாடக நிகழ்ச்சிக்கு மொத்தம் ரூ.20 ஆயிரம் வரை செலவானது.
தேர்தல் பிரசார செலவுக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் நன்கொடை அளித்தனர். பொதுவான தேர்தல் பிரசார சுவரொட்டி, வாக்காளர் அடையாளச் சீட்டு ஆகியவற்றை கட்சித் தலைமையில் இருந்து அனுப்பி வைப்பார்கள்.
வேட்பாளர் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் தனித் தனிக் குழுவாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தோம். தொண்டர்களுக்கு கட்சி தேர்தல் அலுவலகத்தில் காபி தயாரித்து கொடுப்போம். தேர்தல் பிரசார குழுவுக்கு கட்சிக்காரர்கள் வீட்டிலேயே உணவு அளிப்பார்கள்.
வாக்குச் சாவடிக்குச் செல்லும் முகவர் குழுவுக்கு உணவுச் செலவாக ரூ.50 கொடுத்து அனுப்புவோம். அதையும் சிலர் வாங்க மறுப்பார்கள். தேர்தல் பிரசாரத்திற்கும், பொதுக் கூட்டங்களுக்கும் தன்னெழுச்சியாக ஏராளமானோர் கூடுவர். தற்போது நடைமுறையில் உள்ளது போல பணம் கொடுத்து ஆள் பிடிக்க வேண்டியதில்லை.
அப்போது என்னால் எம்.ஜி.ஆரை எளிதில் சந்தித்து வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களை விளக்கி ஒப்புதல் பெற முடிந்தது. 1977 முதல் 1989 வரை தேனி மாவட்டத்தில் ஏராளமான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக வேட்பாளர்களுடன் தற்போதும் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று வருகிறேன்.
கருணாநிதியைத் தவிர அனைவரும் நமது கட்சிக்காரர்கள்தான் என்று எம்.ஜி.ஆர். கூறுவார். அதேபோல, அனைத்துக் கட்சியினருடனும் இயல்பாகப் பேசி பழகும் சூழல் அப்போது இருந்தது என்றார் அவர்.
courtesy -ஜி. ராஜன்