Thank u very much Gnanaguruswamy sir
Printable View
Thank u very much Gnanaguruswamy sir
Dear Guru
earlier we had used 1 tons of Jasmine flowers for Once More Movie.
for karnan we have used 2tons of jasmine flowers which is the record of all times
now we have started our Work For KUMKI MOVIE
REGARDS
KUMARESHAN PRABHU
Dear Gnanagurusamy sir,
Thanks for your wide photo coverage of Karnan.
விஸ்வநாத நாயக்குடு (தெலுங்கு) (1.5.1987)
1.5.1987- இல் வெளிவந்த நடிகர் திலகத்தின் நேரடி தெலுங்கு வெற்றிச் சித்திரம் 'விஸ்வநாத நாயக்குடு'.
விஜயநகர சரித்திரப் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் நடிகர் திலகத்தின் மிக அரிய காவியங்களில் ஒன்று.
திரைக்கதை, வசனம், இயக்கம் தாசரி நாராயண ராவ்.
நாகம்மா நாயக்கர் என்ற அற்புத ரோலில் நடிகர் திலகம். பழைய மனோகராவை நினைவுபடுத்தும் சங்கிலிப் பிணைப்புக் காட்சிகள். அதிர வைக்கும் வசனங்கள். வயதானாலும் சிங்கம் சிங்கம்தான் என்று தலைவர் மீண்டும் நிரூபித்த படம்.
நடிகர் திலகத்தின் மகனாக டைட்டில் ரோல் விஸ்வநாத நாயக்குடுவாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா.
உடன் ஏராளமான நட்சத்திரக் குவியல். கே .ஆர்.விஜயா, கிருஷ்ணதேவராயராக கிருஷ்ணம்ராஜ், (நடிகர் திலகத்தின் மற்றொரு தெலுங்குத் திரைப்படமான 'ஜீவன தீராலு' (தமிழில் வாழ்க்கை அலைகள்) பட ஹீரோ), ராமகிருஷ்ணா ('புண்ணியபூமி' திரைப்படத்தில் தலைவரின் அண்ணனாக வேடமேற்றவர்), கிருஷ்ணாவின் ஜோடியாக, கலாவதியாக ஜெயப்பிரதா, சுமலதா, ராஜசுலோச்சனா, திம்மராசுவாக பிரபாகர் ரெட்டி ('விஸ்வரூபம்' படத்தில் தலைவருக்கு அடைக்கலம் தரும் வில்லன்), சோமையாஜுலு, பிரம்மானந்தம், காந்தாராவ், சரத்பாபு, ரங்கநாத், ஜெயபிரபா என்று தெலுங்குத் திரைப்படவுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் திலகத்துடன் இணைந்து பெருமையடைந்தார்கள்.
இசை G.ராகவலு.
ஒளிப்பதிவு V.S.R. சாமி.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகத்திற்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் தெலுங்குப் படவுலகின் புகழ் பெற்ற நடிகர் ஜக்கையா அவர்கள்.
சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான ஆந்திர அரசின் 'நந்தி' விருது இப்படத்திற்காக நம் P.சுசீலா அவர்களுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை.
இப்படத்தின் DVD கூட இன்னும் கிடைக்கவில்லை.
நம் அன்பு அங்கத்தினர்களுக்காக இந்த அரிய படத்தின் அரிய நிழற்படங்கள்.
http://i1087.photobucket.com/albums/...31355/1-98.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/4-39.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/5-36.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-31.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/7-21.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/9-15.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/12-5.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
http://i1087.photobucket.com/albums/...31355/13-3.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/8-18.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/10-8.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/14-3.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/15-3.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/16-3.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/17-4.jpg
நடிகர் திலகத்திற்கு டப்பிங் கொடுத்த ஜக்கையா அவர்கள்.
http://www.8pmnews.com/wp-content/up...6/jaggaiah.gif
அன்புடன்,
வாசுதேவன்.
அரிதான விஷயங்களை தேடி அளிப்பதற்கு வாசு சார்க்கு இணை வாசு சார்தான். மற்ற மொழி படங்களில் நடிகர்திலகத்தின் பங்கு,மற்ற மொழி கலைஞர்களுடன் அவர் இணக்கம்,மற்ற மொழி கலைஞர்கள் அவர் மீது கொண்டிருந்த மரியாதை எல்லாம் மலைக்க வைக்கிறது.
மிக்க நன்றி வாசு சார்.
தெலுங்கிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட நடிகர் திலகத்தின் இதர திரைப்படங்களில் முக்கியமானவை
ஜீவன தீராலு- வாழ்க்கை அலைகள்.
நிவுருகப்பின நிப்பு- மிஸ்டர் மகேந்திரா
பெஜவாடா பெப்புலி - சட்டம் ஒரு சக்கரம்.
அரிதான விஷயங்களை அருமையாகப் பாராட்டும் அன்பு கோபால் சாருக்கு என் அன்பான நன்றிகள்.
Dear Mr.Raghavendar,
Wonderful exhibits. Very Rare and Thanks.