......
Printable View
......
Similarly, NAAN VAAZHA VAIPPEN is getting very good response from the General Public since Friday at New Broadway, Chennai. Mr.Alagappan, Thiruvottiyur Distributor passed on this information from theater
http://www.youtube.com/watch?v=hQO2BLhSeGU
டியர் ரவி சார்.
நன்றி!
'ஒரு அணிலின் கண்ணோட்டத்தில்' பதிவு பிரமாதம். இப்போது உங்களை அணிலாக பார்க்க முடியவில்லை. வளர்ந்து வரும் அரிமாவாகத்தான் பார்க்கிறோம். அட்டகாசமான ஒப்பீடுகள். கவுளர்கள் முதற்கொண்டு கட்டபொம்மன் வரை நடிகர் திலகத்தை தாங்கள் அவர்களுடன் ஒப்பிட்டுள்ளது பரவசப்படுத்துகிறது. அறிவுசார்ந்த நகைச்சுவை விதூஷகர் தெனாலி ராமனைக் கூட தலைவர் விட்டு வைக்க வில்லையே!
அந்தத் தெனாலிராமன் காளியின் அருள் பெற்று விதூஷகனாகி அனைவரையும் மகிழ்வித்து தேவராயரின் அரியாசனத்தைக் காத்து சிறந்தான்
நம் மன்னவரோ பராசக்தியின் அருள் பெற்று உன்னத நடிகராகி அனைவரையும் ரசிக்கவைத்து ஆச்சர்யப்பட வைத்து திரையுலகை காத்து சிறந்தரே! அது மட்டுமா! தெனாலி ராமனின் புத்திசாலி நகைச்சுவை அப்படியே தலைவரிடத்தில் உண்டே! படங்களிலும் சரி! வாழ்க்கையிலும் சரி!
உதாரணத்திற்கு ஒன்று.
எனக்கு நெய்வேலியில் (nlc) வேலைக் கிடைத்த செய்தி கிடைத்தவுடன் கடலூரிலிருந்து அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை எடுத்துக் கொண்டு சென்னை சென்று, அன்னை இல்லத்தில் தலைவர் காலில் விழுந்து ஆசீவாதம் வாங்கினேன்.
தலைவர் என்னை ஆசீர்வாதம் செய்து சொன்னது என்ன தெரியுமா?
"கடலூரிலிருந்து உருப்பட்டவன் நீ ஒருத்தன்தான் போலிருக்கு!"
டைமிங்கில் தலைவரை அடிக்கவே முடியாது நடிப்பைப் போல.
வாழ்த்துக்கள் ரவி சார்! தொடருங்கள்.
சரஸ்வதி அவர்களே!
தங்கள் பாராட்டிற்கு நன்றி! 'நான் வாழ வைப்பேன்' செய்யும் அட்டகாசங்களை அப்டேட் செய்து கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி! செய்திகளை சேகரித்து தருவது என்பது அற்புதமான ஒரு சேவை. அதைக் கொஞ்சமும் தளராமல் தாங்கள் எங்களுக்கு அளித்து வருவது குறித்து மகிழ்ச்சி. நன்றி!
டியர் பரணி சார்,
தங்களுக்கு ஒரு pm அனுப்பியுள்ளேன். அவசியம் பார்க்கவும்.
எஸ்வி சார்,
வழக்கம் போல சுறுசுறுப்புடன் முந்திக் கொண்டு விட்டீர்கள். ராகவேந்திரன் சாரின் அற்புத 5000 பதிவுகளுக்கு வாழ்த்து சொல்லி விட்டு எங்களை பின்னுக்குத் தள்ளி விட்டீர்களே! இன்பமான அநியாயம்.
http://blog.getyourguide.com/wp-cont...ibeach_460.jpghttp://thumbnails103.imagebam.com/26...e266041328.jpg
இன்னும் சில மணி நேரங்களில் 5000 ஆவது சாதனைப் பதிவை இட இருக்கும் ரசிக வேந்தர் திரு. ராகவேந்திரன் சாருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
Raghavendra Sir
Congrats on your 5000th post.
One of legendary hubbers of NT thread...