http://i160.photobucket.com/albums/t...psggewyvdb.jpg
http://dinaethal.epapr.in/477724/Din...2015#page/13/1
Printable View
Courtesy - vallamai -தஞ்சை வெ. கோபாலன்
முந்தைய காலங்களில் ஒரு தனி மனிதரின் புகழையும், பெருமைகளையும் உலகுக்கு அறிவிக்க அவரது மெய்க்கீர்த்தியை எழுதி கருங்கல்லில் வடித்து வைப்பார்கள். அப்படிப்பட்ட மெய்க்கீர்த்தியாக எம்.ஜி.ஆர். என்ற* இந்த தனிமனிதரின் புகழ், பெருமை அனைத்தையும் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக ஏழை, எளியவர்கள், பெண்மணிகள், இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோர் தத்தமது நெஞ்சங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். அது சென்ற தலைமுறையோடு முடிந்துபோன செய்தியல்ல, இந்த தலைமுறைக்கும் தொடர்ந்து அதே உணர்வை தந்து கொண்டிருக்கிறது என்பதை அவரது பழைய படங்கள் இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோத பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து தெரியவருகிறது. இது ஏதோ மார்லன் பிராண்டோவையோ, கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த படங்களையோ பார்க்கும் உணர்வில் அல்ல, எம்.ஜி.ஆர். எனும் நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மாமனிதனின் புகழுக்கு மரியாதை செய்கிறோம் எனும் உணர்வில்தான் பார்க்கிறார்கள். காலத்தால் அழிக்கமுடியாத இடத்தை அந்த மனிதர் பெற்றிருந்தார் என்பதுதான் முக்காலும் உண்மை.
மக்கள் இதயத்தில் அகில உலக தமிழ் மக்கள் இதயத்தில் கொடி கட்டி பறந்தவர் மக்கள்திலகம். தமிழ் நாட்டில் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதினை பெற்ற முதல் நடிகர் அவர். ஆனால் நாடகத்தை பின்புலமாக கொண்டவர் என்றாலும் கூட அவரது படங்களில் அவரிடம் அழுத்தமான முகபாவனைகளும் உடல் மொழிகளும் குறைவாகவே இருந்தன எம்பதனை யாரும் மறுக்க முடியாது. உணர்ச்சிகரமான நடிப்பையும் அவரிடம் எதிர்ப்பார்க்க முடியாது. ஆனாலும் கூட அவர் நல்ல விஷயங்களை பாடல் மூலமாகவும் வசனம் மூலமாகவும் வெளிப்படுத்தியதால் அவர் மக்கள் மனத்தில் நிலைத்து நின்றுவிட்டார். எம். ஜி. ஆர் ஒரு நல்ல மனிதர். நல்ல பண்பாளர். ஏழைகள்பால் இரக்கம் கொண்டவர். அவர் படங்களில் சின்ன குழந்தைகளுக்குகூட அறிவுரைகள் கூறியவர்.
‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ என்றும் ‘சின்ன பயலே சின்னபயலே சேதி கேளுடா’ என்றும் கூப்பிட்டு பயம் கொள்ளக்கூடாது, என்றும் வீணர்களின் பேச்சுக்கு இடம் தரலாகாது என்றும் கூறச்செய்தார். அவர் பாடல்களிலும் நல்ல கருத்துக்களை சொல்லும்படி கவிஞர்களை வற்புறுத்தினார்.
அவர் போடும் கத்தி சண்டைகள், சிலம்பாட்டம் எல்லாம் கூட குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவர்பால் ஈடுபாடு கொள்ளசெய்தது. தாயின் மேல் பாசம் கொண்டதால் பாசம் படம். அடுத்து பாசத்தைவிட நீதிதான் பெரிது என்று சொல்ல நீதிக்குப்பின் பாசம் படம் வந்தது. நல்லவன் வாழ்வான் என்று சொன்னதோடு வாழ்ந்தும் காட்டினார். தாய்க்குப்பின் தாரம் என்று படம் தாயை காத்த தனயன் படம் எல்லாமே தாயை வணக்கத்திற்குரிய இடத்தில் வைத்தவை பணத்தை விட பாசம் முக்கியம் பணமா பாசமா, பணத்தோட்டம், பணம் படைத்தவன் படங்கள் முலம் பாசத்தை உயர்வில் வைத்தார். ரகசிய போலீசாக வந்து எதிர் கட்சியின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தினார்.
மீனவ நண்பன், ரிக்*ஷாகாரன், வேட்டைக்காரன் என வந்து அசத்தியவர். இதுகூட கடவுள் இட்ட அரச காட்டளை போலும். அவர் உடல் நிலை கலைக்கிடமாக இருந்தபோது கோடான கோடி மக்கள் அவருக்காக வேண்டி தவம் இருந்த ஒரு உதாரணம் போதும் அவர் மக்கள் மனத்தில் என்றுமே மன்னனாக காஞ்சித் தலைவனாக குடிகொண்டிருந்தார் என்பதற்கு சாட்சி. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடியாக இருந்தாலும் மக்கள் மனத்தில் முழுமையாக நிலைத்து நின்றவர் எம்ஜி.ஆர் ஒருவரே என்றால் அது மிகையல்ல. அந்த மூன்றெழுத்து முடிந்தபோதிலும் பேச்சிருக்கிறதே அதுதான் அவர்தம் வெற்றி!
courtesy - vallamai - sarswathi
http://s27.postimg.org/j8z1o8apf/scan0001.jpg
FORWARDED BY MY FRIEND MR.SELVANATHAN, CUDDALORE
Originally Posted by Murali Srinivas View Post
சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,
கோபாலின் ஒரு பதிவிற்கு எதிர்வினையாக இங்கே ஒரு பதிலும் எம்ஜிஆர் திரியில் ஒரு பதிலும் நீங்கள் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். அதன் தொடர்பாக என்னுள் எழுந்த ஒரு சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
தனி நபர் விமர்சனமும் தரக்குறைவான விமர்சனமும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் விமர்சனமே செய்யக்கூடாது என்பது போன்ற கருத்துக்களை முன் வைப்பது சரியான ஒன்றல்லவே. எந்த நபரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதுதானே ஜனநாயகத்தின் ஆணிவேர்! அதில் விதிவிலக்குகள் யாருமில்லை என்பதைத்தானே இன்றைய தினம் காந்திஜி மற்றும் நேருவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காட்டுகிறது! அப்படியிருக்க எம்ஜிஆர் அவர்கள் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் என்ற உங்கள் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையவில்லை என்பதை சொல்ல வேண்டும்.
ஒரு திரைப்பட கலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால்கூட என்னால் அதை ஒத்துக் கொள்ள முடியும். காரணம் திரைப்படங்களைப் பொறுத்தவரை நமக்கு பிடிக்கவில்லையென்றால் அதை பார்க்காமல் இருந்து விடலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரை அவருக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் அவரே முதல்வர் எனும்போது அந்த பொறுப்பில் இருந்த நேரத்தில் அவர் எடுத்த முடிவுகள் அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொருந்தும் எனும்போது அதை விமர்சனம் செய்யக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?
அப்படி ஒரு விமர்சனம் முன்வைக்கப்படும்போது அதில் தவறான தகவல்கள் இருந்தாலோ இல்லை சொல்லப்படுபவையில் மாற்றுக் கருத்து இருந்தாலோ நீங்கள் அதற்கு தாராளமாக மறுப்பு தெரிவிக்கலாம். உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அதுதானே சரியான முறை! அதை விடுத்து விமர்சனமே கூடாது என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். இதை நான் உங்களிடமும் நண்பர் கலைவேந்தன் அவர்களிடமும் மட்டுமே குறிப்பிடுகிறேன். ஏன் என்றால் கலைவேந்தன் அவர்களும் எம்ஜிஆர் பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார்.
இவ்வளவு விளக்கமாக நான் எழுதுவதால் உடனே இங்கே விமர்சனம் செய்யப் போகிறோம் என்று அர்த்தமில்லை. அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே Current Affairs என்ற section இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
என்னுள் எழுந்த மற்றொரு கேள்வி. எம்ஜிஆர் பற்றி எதாவது சொன்னால் கோவப்படும் நீங்கள், நீங்கள் பங்கு பெறும் எம்ஜிஆர் திரியில் திமுக தலைவர் திரு கருணாநிதியை மிக மோசமாக விமர்சித்து வரும் பதிவுகளை, அவரை ஒருமையில் விளித்து பிற சமூக வலைதளங்களில் மற்றும் அதிமுக பத்திரிக்கையில் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் கார்டூன்களை இங்கே பதிவேற்றம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதை நீங்கள் கண்டித்த மாதிரி தெரியவில்லையே? நான் கருணாநிதி ஆதரவாளன் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் எதிரான கருத்து உடையவன்தான் என்பது இங்கே தொடர்ந்து வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு வேறு நியாயம் என்று இருக்க முடியாதல்லவா?
இதை குறிப்பிடும்போது நீங்கள் நேற்று எழுதிய மற்றொரு பதிவு பற்றியும் சொல்ல விரும்புகிறேன். நேற்றைய தினம் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தின் போஸ்டரை போட்டு கோபால் எழுதியதற்கும் முடிச்சு போட்டு பதிவு செய்திருக்கிறீர்கள்
இன்றைக்கு இந்த திரியில் பதிவு செய்பவர்கள் எவரும் காங்கிரஸ் அனுதாபிகள் இல்லை. கோபால் ஆர்கேஎஸ் போன்றவர்கள் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இல்லை. காங்கிரஸ் பற்றி அவ்வப்போது எழுதும் நானும் 1975 அக்டோபர் 2 -ற்கு பிறகு இயங்கிய காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவன் இல்லை. ராகவேந்தர் சார் போன்றவர்களும் அன்னை இந்திராவின் காலத்திற்குப் பிறகு இயங்கிய காங்கிரஸ்-ஐ ஆதரித்தவர் இல்லை. உண்மை நிலை இப்படியிருக்க இதையெல்லாம் நன்கு தெரிந்த உங்களைப் போன்றவர்களே ஏதோ கோவத்தில் இன்றைய காங்கிரஸ்-ன் நிலையை மேற்கோள் காட்டி இங்கே இருப்பவர்கள் அனைவரும் காங்கிரஸ் அனுதாபிகள் என்ற கருத்து வரும் வகையில் எழுதுவதை தவிர்க்கலாமே!
நான் எழுதிய அனைத்து விஷயங்களையுமே நீங்கள் சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
================================================== ================================================== ===========================================
திரு. முரளி சீனிவாஸ் அவர்களுக்கு :
திரு. கோபால் அவர்களின் ஒரு பதிவிற்கு நான் அளித்த 2 வேறு பதில்கள் குறித்து தங்களுக்குள் எந்த வித கேள்விகளும் எழுவதற்கு நியாயமில்லை.
அப்படியே அது குறித்து வினாக்கள் தோன்றினாலும், அதற்காக திரு. கோபால் அவர்களிடம்தான் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால், ஜெயகாந்தன் மறைவுக்கான இரங்கற் செய்தியில் சம்பந்தமே இல்லாமல் எங்கள் மக்கள் திலகத்தை பற்றி அவதூறாக விமர்சித்து இந்த சர்ச்சையை துவக்கி வைத்தவரே அவர்தான்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை “ஞானசூனியம்” என்றும், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை ‘பெண் பித்தன்’ என்றும், 1972க்கு பின் வெளியான படங்களில் தங்களின் அபிமான நடிகர் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பினை ரசிக்க முடியவில்லை என்றும், ஒரு தேர்தல் தோல்விக்காக கடையை (கட்சியை) மூடிக்கொண்டு சென்ற மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை ஆபிரகாம் லிங்கன் ரேஞ்சுக்கு பேசுவதா என்றும் நடிகர் திலகம் திரியில் தங்களின் மகத்தான பங்களிப்புகளையும், அவ்வப்போது மக்கள் திலகம் திரியில் வந்து பங்களித்து நற்கருத்துக்களை கூறி வரும் சகோதர அன்பர்கள் திருவாளர்கள் ராகவேந்திரா, ரவிகிரண் சூரியா, ஹைதராபாத் ரவி, சிவாஜி செந்தில் உள்ளிட்ட சிலரை சகட்டு மேனிக்கு, தரக்குறைவாக வசை பாடிய திரு. கோபால் அவர்களை, அந்த சமயத்தில் கண்டிக்காமல், தற்போது தாங்கள் வக்காலத்து வாங்கியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
மகன் செத்தாலும் கவலை யில்லை, மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்ற ரீதியில். அதாவது நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்களை கேவலமாக விமர்சித்தாலும் பரவாயில்லை, எவருடனும் ஒப்பிட முடியாத எட்டாத உயரத்துக்கு சென்று விட்ட எட்டாவது அதிசயம் எங்கள் எட்டாவது வள்ளல் மக்கள் திலகத்தின் அழியாப் புகழை தாங்கி கொள்ள முடியாத எரிச்சல்தான் மேலோங்கி நிற்கிறது என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இல்லையென்றால் திரு. கோபால் அவர்கள் தேவையில்லாமல் எங்கள் புரட்சித்தலைவரை வம்புக்கிழுத்தமைக்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு வருவது ஏன் ?
சரி எதோ எழுதி விட்டீர்கள். இனி விஷயத்துக்கு வருவோம் :
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் எவருமில்லை என்ற உண்மை எனக்கும் நன்கு புலப்பட்டிருந்தாலும், கிறுக்குத்தனமாக மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை ஜீரணித்துக் கொண்டிருக்கவும் முடியாது. வேடிக்கையும் பார்த்து கொண்டிருக்க முடியாது.
ஒரு திரைப்படகலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால் கூட தங்களால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று கூறியதற்கு நன்றி ! தங்களின் கருத்துப்படியே நானும் வருகிறேன். திருடாதே பாப்பா திருடாதே, தூங்காதே தம்பி தூங்காதே, ஏமாற்றாதே ஏமாற்றாதே என்று பாடியதும் திரைப்படங்களில் தானே ! அதை ஏன் அரசியலுடன் ஒப்பிட்டார் என்று முதலில் சகோதரர் திரு. கோபால் அவர்களை தாங்கள் கேட்டிருக்கலாமே.
அரசியல் பற்றிய விவாதங்களுக்கென்று CURRENT AFFAIRS என்கின்ற தனியான Section ஒன்று இருப்பதை நான் அறியாமல் இல்லை. ஆனால் அந்த பகுதியில், திரு. கோபால் அவர்கள் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கலாம் அல்லவா ? அதனை ஏன் சுட்டிக் காட்ட வில்லை. அவருக்கு, தாங்கள் அறிவுரை வழங்க தவறி விட்டீர்கள் என்றுதான் நான் கூறுவேன்.
அரசியலில், எங்கள் பொன்மனசெம்மலின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நாங்கள் ஆதார பூர்வமான தகவல்களை அவ்வப்போது முன்வைத்து, மறுப்பு தெரிவித்து, அதனை தவிடு பொடியாக்கி வருவதும் தாங்கள் அறிந்ததே !
சகோதரர் கலைவேந்தன் அவர்க;ள் மட்டுமல்ல, மக்கள் திலகத்தின் அனைத்து பக்தர்களும், ரசிகர்களும், விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி வருபவர்களே ! எங்கள் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள், அவரைப்பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில்தான் எங்களை பெருமையுடன் உயர் நிலையில் வைத்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான், மக்கள், இனி எவராலும் தர முடியாத பொற்கால ஆட்சி வழங்கிய எங்கள் புரட்சித்தலைவர் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து, அவர் இறக்கும் வரை அவர்தான் முதலவர் என்று தீர்மானித்து வாக்களித்து மகிழ்ந்தனர். மேலும், எங்கள் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் தனது சொந்த பலத்திலும், மக்களின் மகத்தான தொடர் ஆதரவினாலும் தான் ஆட்சியை பிடித்தாரே யன்றி, எதிரிகளின் பலவீனத்தால் அல்ல என்பதையும் தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
என்னைப் பொருத்தவரை, தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களை வம்புக்கிழுத்தால் நான் பதிலடி கொடுத்துக்கொண்டேதான் இருப்பேன் என்பதையும் தாங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
மக்கள் திலகம் திரியில், திரு. கருணாநிதி அவர்களை விமர்சனம் செய்து பதிவுகள் இடப்படுவதை தாங்கள் விரும்ப வில்லையாயின் அதற்கு தக்க ஆதாரத்துடன் பதிலை அளித்து விட்டு செல்லுங்களேன். நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம். நாங்களும் எங்கள் புரட்சித்தலைவர் உயிருடன் இருந்தவரை அவர் தோற்றுவித்த பேரியக்கத்தை தீவிரமாக ஆதரித்தவர்கள் தான். தற்போது, எந்த ஒரு கட்சியையும் சர்ந்துள்ளவர்கள் அல்ல என்பதையும் இத்தருணத்தில் குறிப்பிட விறிம்புகிறேன்.
அது போன்று, காங்கிரஸ் கட்சியை கடந்த காலத்தில் ஆதரித்து வந்ததும், இனி ஆதரிப்பதோ அல்லது ஆதரிக்காமல் இருப்பதோ தங்களின் தனிப்பட்ட விருப்பம்.
தற்காலத்தில், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் நடுநிலை தவறும் பட்சத்தில், இந்த திரியும் நடுநிலையிலிருந்து விலகிச் செல்கின்றதோ என்று ஐயம் கொள்ள நேரிடுகிறது.
” இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ” இது எம்ஜிஆர் அவர்களைத்தவிர வேறு எவருக்குமே பொருத்தமாக இருக்காது என்று கருதுகின்றேன்.
நான் ஆணையுட்டால் அது நடந்துவிட்டால் – இங்கு
ஏழைகள் வேதனைப் படமாட்டார் —- என்று படத்தில் பாடிநடித்தோடு நில்லாமல் அதனை நிதர்சனமாக நடத்திக்காட்டியவர்தான் எம்ஜிஆர் என்னும் இமயம்.
அதுமட்டுமல்ல .. நினைத்தை நடத்தியே முடிப்பவன் நான்! நான் ! நான் ! …. என்று துணிவுடன் மூன்று முறை .. நான் என்பதை உச்சரிக்கும் துணிவு எம்ஜிஆர் அவர்களைவிட யாரருக்கு வரமுடியும் ?
குண்டடிபட்டாலும், கால்முறிவு ஏற்பட்டாலும் .. கடசிவரை நடிப்பையும் விடவில்லை. நல்லகுணத்தையும் விடவில்லை. நாட்டையும் மறக்கவில்லை.
” நான் செத்துப் பிழைச்சவன்டா ” என்று பட்ட துன்பங்களையெல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு ‘ உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே ” என்று எம்மையெல்லாம்உற்சாகப்படுத்தி ” நாளை நமதே இந்த நாளும் நமதே ” என்று ஆறுதல் கூறிவிட்டு எல்லோர் மனங்களில் அமர்ந்திருக்கிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.அவரை நாம் ‘ நாடோடி மன்னனாகவும் கண்டோம்’ சக்கரவர்த்தித் திருமகனாகவும் பார்த்தோம்” ” ஆயிரத்தில் ஒருவனாகவும்” அவரே தான் இருக்கிறார்’ அந்த ” இதயக் கனியை” மறக்கத்தான் முடியுமா ? அவர்தான் ‘ மன்னாதி மன்னன் ” ஆகி மக்கள் மனதை இன்றும் ஆண்டுகொண்டு இருக்கிறா
courtesy - vallamai - jayaram
Courtesy- vallamai - ramanujam
திரைப்படப் பாடல்களில் திசையைக் காட்டியவர்:
மீனவ சமுதாயத்திற்காக எழுதிய இப் பாடல் உலக அரங்கம் முழுவதும் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தரைமேல் பிறக்க வைத்தான்…
எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் …
– என்ற பாடல் வரிகளில் அசைந்தாடுகின்றபோது, சமூகத்தின்மீது இவருக்கு உள்ள அக்கறை புலனாகிறது!
ஒரு தாய் மக்கள் நாமென்போம்..
ஒன்றே எங்கள் குலமென்போம்…
– என்ற பாடல் மூலம் நாமெல்லாம் இந்தியத் தாயின் பிள்ளைகள் என்றும் நாம் அனைவரும் மனிதர்கள் என்னும் குலத்தைச் சார்ந்தவர் என்றும் விளக்கினார்.
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்.. அவர்
என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்..
– என்ற பாடலின் மூலம் அண்ணாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்தார்.
திருடாதே பாப்பா திருடாதே..
வறுமை நினைத்து பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே..
-என்ற பாடலில் குழந்தைகளுக்கு திருடக் கூடாது என்ற தத்துவத்தை போதித்து வறுமையை நினைத்து பயந்து போகக் கூடாது. நமக்கு திறமை இருக்கு என்பதை நினைவூட்டி மக்கள் மனதில் திறமையை போதித்தவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.
இவரது பாடல்களை பாமரர் முதல் படித்தவர் வரை கேட்டு மகிழ்கிறார்கள். சோதனையும் வேதனையும் வரும்போது அவரது தத்துவப் பாடல்கள் சோகத்தை விரட்டும் சக்தியாக விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.
சமூகப் பார்வை:
கடமையைச் செய். பலன் தானாக வரும் என்பது கீதையின் வாசகம். சமார்த்தியத்தைவிட சத்தியம் உயர்ந்தது என்பார் எம்.ஜி.ஆர். புகைக்கக் கூடாது … மது அருந்தக் கூடாது… திருடக் கூடாது… அராஜகம் செய்யக் கூடாது… பணிவு வேண்டும்… விசுவாசம் வேண்டும்… பெற்றோரைத் துதிக்க வேண்டும்… தோல்வி கண்டு துவளக் கூடாது… எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் வேதனை வந்தாலும் பொறுமையும் உழைப்பும் நல்ல வாழ்வைத் தரும் என்பார்.
பழி வாங்கக் கூடாது… அடுத்தவர் பொருளை அபகரிக்கக்கூடது… வரதட்சணை வாங்கக் கூடாது… ஊதாரித்தனம் கூடாது… அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும்… மனித நேயம் பேண வேண்டும்… குழந்தைகளை மதிக்க வேண்டும்… அவர்கள்தான் சமூகத்தில் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்பார்… பெற்றோர்கள் நேரில் வந்த தெய்வங்கள் என்பார்.
நம்மை யாரும் பார்க்கவில்லை என்கிற தைரியத்தில் தவறு செய்யாதீர்கள். எங்கும் வியாபித்து இருக்கும் தெய்வம் (சத்தியத்தின் கண்கள்) உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சாட்சியிடம் தப்பிக்கலாம். சட்டத்தின் முன் தப்பிக்கலாம். ஆனால் சத்தியத்திடமிருந்து தப்ப முடியாது – சத்தியம் தெய்வம் அத்தனை வலிமை வாய்ந்தது. இந்தத் தத்துவத்தைத்தான் சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் வரும் மேரே நாம் அப்துல் ரஹ்மான் என்ற பாடலின் வரிகள் வாயிலாக விளக்கியுள்ளார் எம்.ஜி.ஆர்.
முடிவுரை:
தமிழக சட்ட மன்ற வரலாற்றில் முதல்வர்களாக பணி புரிந்ததில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும், ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த காமராசருக்கு அடுத்தபடியாக தொடர்ந்து பத்தரை ஆண்டுகள் முதல்வராகப் பணி செய்த சாதனை புரிந்தவர் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சியில் மக்கள் கஷ்டம் இல்லாமல் திருப்திகரமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்தனர்.
மனித நேயம், உழைப்பு, உண்மை, பாசம், அர்ப்பணிப்பு, நேர்மை, சேவை எண்ணம் கொண்டு மகத்தான சாதனை புரிந்தவர். காஞ்சி மகா சுவாமிகளின் ஆசியும் பெற்ற எம்.ஜி.ஆர். இந்தப் பூவுலகை விட்டு 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் நாள் பொன்னுலகம் சென்றார்.
பொன்மனசெம்மலின் வழியில் நாமும் மனித நேயத்தை வளர்த்து வாழ்க்கையில் முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்து வாழ்வில் வளம் பெறுவோம்.
Courtesy - vllamai - sudarmathi
சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்:
எண்ணிலடங்கா சாதனைக் குவியலிலிருந்து சில… தமிழக்கத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவில் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த சத்துணவுத் திட்டம்… பெருந்தலைவர் காமராசரின் மதிய உணவுத் திட்டத்தின் மேம்பாடு. 1,20,000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வியை உறுதி செய்த பெருமைக்குரிய செயல்பாடு.
நெற்களஞ்சியமாம் தஞ்சைக்கு இரு பெரும் சிறப்புகள் ஒன்று தஞ்சை இராச ராசனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில். மற்றொன்று 1981ல் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசால் நிறுவப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம்…
“ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்…” என்பார்களே அதுபோல தான் இவ்விரண்டும்!
தமிழர் தலைவர்:
“நீங்க நல்லா இருக்கணும்… நாடு முன்னேற…
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற!
சென்ற இடங்களிலெல்லாம் புகழ்! வெற்றியின் கூக்குரல்! தமிழகத்திற்கு நன்மை செய்தாரா இந்த முதல்வர்? இல்லை… தமிழர்களுக்குச் செய்தார்… அண்டை நாடான இலங்கையில் மண்ணோடு மண்ணாக அழிந்து வரும் நம் தமிழனத்தின் துயர் கண்டு, வெகுண்டது தமிழகம்… ஆனால், இலங்கையில் இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள்! வேறு நாட்டில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்து சென்றவர்கள். அனுதாபங்களை அள்ளி வீசுவோம் என்றது இந்திய அரசு! செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் விரைந்தார் டில்லியை நோக்கி… பதிலாக, ஈழத்தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியையும் அளித்தது இந்திய அரசு. கடமை முடிந்தது என்பது போல் நினைக்கவில்லை நம் தலைவர். இயக்கங்களின் தலைவர்களை சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுத்தார்… நேரடியாக! புலிகளின் முன்னேற்றத்திற்காக… விடுதலை வேட்கைக்காக… நான்கு கோடி தேவைப் பட்டது. அரசாங்க ரீதியாக வழங்க தடைஎற்பட்டபோது, தன் சொந்தப் பணத்தை கரங்கள் சிவக்க அள்ளி வழங்கியவர்.
அமெரிக்காவை எதிர்நோக்கிய நெஞ்சங்கள்:
எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் குன்றியபோது, இனி வரமாட்டார்… என்று ஒரு வதந்தி வந்த வேளையில் தமிழகமே இருளானது போல ஒரு மாயை! வதந்திகளும் அவதூறுகளும் புதிததல்ல! பொய்க் கூற்றுகளைத் தவிடுபொடியாக்கினார். நின்றார் ஆண்டிப்பட்டித் தொகுதியில் அமெரிக்காவில் இருந்தபடியே வேட்புமனு பெறப்பட்டது. அபாரமான வெற்றி! அனுதாப வெற்றி என்றார்கள் அறியாதவர்கள். ஆழிப் பேரலையாய் எழுந்து நின்றது தமிழகம். தலைவர் இல்லம் திரும்புகையில் வெற்றிடத்தையும் வெற்றி இடங்களாய் புரட்டிப் போட்டார்!
1977 முதல் 1987ல் தான் இறக்கும் வரை தொடர்ந்து நீண்ட காலமாக இருந்த ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர். என்ற சிறப்பை இன்றளவும் தன்னோடு மட்டுமே வைத்திருக்கிறார் இந்த மகான்!
இனிய நண்பர் திரு செல்வகுமார்
உங்கள் விரிவான பதிலை படித்த பிறகும் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவேண்டும் . செய்வார்களா என்று தெரியவில்லை .மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் புகழுக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்று கோபால் போன்றவர்கள் கங்கணம் கட்டி இருப்பதற்கு மறை முகமாக திரு முரளி ஆதரவு கொடுத்து அவரை கண்டிக்காமல் ஊக்கம் கொடுப்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது .
REAL MAKKAL MUDHALVAR- MGR
https://youtu.be/0jSkXzpzb20