http://i58.tinypic.com/w0ib5s.jpg
Printable View
http://www.raaga.com/player4/?id=204...96963375373667
சுதர்சனம் சார் இசையில்
மணிமகுடம் திரை படம் 1966
நம் பாடகர் திலகம் கான கந்தர்வ குயில் கண்ணிய பாடகி
http://3.bp.blogspot.com/-fYTcBAbemv...dam%2B1966.jpg
பாடல்
டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
அதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்
டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
டி.எம்.எஸ்: பழகிய கிளிகள் துடிக்கின்றன
பழகிய கிளிகள் துடிக்கின்றன
சுசீலா: எங்கோ பறக்க சிறகை விரிக்கின்றன.....(சிரிப்பு)
டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா.... ஆ......
வானில் பறக்குது வெள்ளைப் புறா
சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா
சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
டி.எம்.எஸ்: ஆடிக் களிக்குது தோகை மயில்
ஆடிக் களிக்குது தோகை மயில்
சுசீலா: தன் ஆட்டம் முடிவது தெரியாமல்.....
தன் ஆட்டம் முடிவது தெரியாமல்....
டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
டி.எம்.எஸ்: புதிய பாதை தெரிகின்றது...
புதிய பாதை தெரிகின்றது
சுசீலா: அது போகும் பொழுதே முடிகின்றதே
டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்
டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
Esvee போட்ட முதல்வரம்மா படங்களைப் பார்த்ததும் லேட்டஸ்டாக ஒரு நாள் அனாதை ஆனந்தன் படப்பாடலை
டி.வி.யில் போட்டபோது எங்க சொந்தக்காரர் சொன்னது நினைவுக்கு வந்தது.
"ரிசர்வ் பேங்க் சப்வே பக்கத்துல இப்படி தெருவில் டான்ஸ் ஆடும்போது இவங்க பக்கத்து செக்ரடேரியட் உள்ளே
முதலமைச்சராக உட்காருவோம்னு நினைச்சிருப்பாங்களா ? ஆஹா.. விதி எப்படி எல்லாம் விளையாடுது"
ஹிந்தியில் பத்மினி கொஞ்சம் ஸ்டவுட் ஆக ஆண்பிள்ளைத்தனமாக ஆடியதை தமிழில் ஜெயலலிதா கொஞ்சம்
மிருதுவாக ஆடியிருப்பார். லதா மங்கேஷ்கரின் தங்கப் பாடல்களை வைரம் இழைத்துக் கொடுக்கும் சுசீலா இதில்
ஆஷாவின் குரலில் ஒலித்த பாடலுக்கும் இன்னும் மெருகேற்றியிருப்பார்.
தமிழில் அனாதை ஆனந்தன்
http://youtu.be/6_yaMhaehGU
ஹிந்தியில் சந்தா அவுர் பிஜ்லி
http://youtu.be/EzhNFizkGpE
எல்லாரும் பக்திப் பாட்டா போடறாங்க..ஏதோ என்னாலானது :)
**
*
என்னவோ. நான் சின்னப் பையன் ஆனதுனால... இந்த ராதா காதல் வராதா நினைவு..:)
*
ஹரே நந்தா ஹரே நந்தா
ஹரே நந்தா ஹரே ஹரே..
கோகுல பாலா கோமகள் ராதா
ஆயர்கள் பாலா ஆனந்த ராதா..
ராதா காதல் வராதா
நவனீதன் கீதம் போதை தராதா
ராச லீலை தொடராதா
செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாலே
தாலாட்டும் புல்லாங்குழல்
செந்தூர நதியோடும்செவ்வாயின் இதழோரம்
கண்ணா உன் காதல் கடல்..
இடையணி இருக்க உடைமட்டும் நழுவி..
சுகமென்ன சொல்லடி ராதா..ராதா
மந்தார மழைமேகம் நின்றாடும் விழி வண்டு
கொண்டாடும் இசை என்னடி..
தாளாத இடைமீது தள்ளாடும் மணிசங்கு
ஆடாதோ என் கைவழி..
மார்கழி ஓடை போலொரு ஆடை
என்னிடம் ஏனடி ராதா..ராதா..
**
மதுஜி,
என்ன ஜி இப்படி சொல்லிட்டீங்க. அப்பவே போட்டுட்டேனே! பார்க்கலையா நீங்க. பதிவு எண் 3408 பாருங்க.
இருந்தாலும் மறுபடியும் போடுறேன்.
மது சார்,
இழுத்துக் கொண்டு வந்தாகி விட்டது. இதோ நீங்கள் கேட்ட 'கதாநாயகன்' படப்பாடல்
'சில நேரங்களில் சில மனிதர்களை'
சிந்தித்தித்துப் பார்த்தால் சிரிப்பு வரும்.
நான் அப்போது மிகவும் விரும்பிக் கேட்ட பாடல். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி மது சார்.
http://www.mediafire.com/download/3y...Nerangalil.mp3
(இப்பாடலை இணையத்தில் தந்து உதவி செய்த அன்பு நண்பர் பாடல் பிரியன் அவர்களுக்கு நமது திரியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!)
காலம் வெல்லும்....
http://youtu.be/LSNZdo8E1i4