http://i62.tinypic.com/2djxyrc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i62.tinypic.com/2djxyrc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/2d9b60n.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/10wuzuo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/102wf3m.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/334kl6b.gif
மிஸ்டர் அண்ணாதுரை எழுந்து நில்லுங்கள் !
திராவிட முன்னேற்ற கழகம் 1967 ல் முதல்முறையாக தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் ஆட்சியைப் பிடித்தது . அமைச்சரவை பதவியேற்ற பின்னர் கடற்கரையில் நடைபெற்ற வெற்றி விழா கூட்டமொன்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர் .
நாவலர் நெடுஞ்செழியன் , மக்கள் திலகம் எம்ஜிஆர் , கலைஞர் கருணாநிதி போன்ற முன்னணித் தலைவர்கள் பேசிமுடித்தவுடன் தன் பேச்சினை துவக்கினார் பேரறிஞர் அண்ணா .
பேச்சின் நடுவில் ஒருமுறை தன்னுடைய சுட்டு விரலை உயர்த்தி அனைவரும் எழுந்துநில்லுங்கள் என்றார் . அதுவரை கடற்கரை மண்தரையில் அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் உடனே எழுந்து நின்றது , உடனே தன் சுட்டுவிரலை தாழ்த்தி அனைவரும் அமருங்கள் என்றார் கூட்டம் மொத்தமும் உடனே அமர்ந்து கொண்டது .
அதன் பின்னர் பேச்சை தொடர்ந்த அண்ணா அவர்கள் உங்கள் அனைவரையும் சிரமபடுத்திவிட்டேன் மன்னித்துக்கொள்ளுங்கள் , இங்கே காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் நம்முடைய இந்த வெற்றிவிழாவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் .
நாங்கள் ஒருமுறை போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்றம் சென்றிருந்தோம். நீதிபதியின் வருகைக்காக காத்திருந்த நேரத்தில், அங்கே வளாகத்தில் ஒராமாகப் போடப்பட்டிருந்த மேசையில் நான் அமர்ந்தேன் , அப்போது இங்கே பாதுகாப்பிற்கு வந்துள்ள அதே அதிகாரி அப்போது நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
நான் மேஜையில் அமர்ந்தவுடன் தன் சுட்டுவிரலை உயர்த்தி மிஸ்டர் அண்ணாதுரை எழுந்து நில்லுங்கள் என்றார். அந்த உயரதிகாரியின் சுட்டுவிரல் அசைவுக்கு உள்ள மதிப்புக்கு மரியாதை கொடுத்து நான் எழுந்து நின்றுகொண்டேன் அப்போது, இப்போது என் சுட்டுவிரலின் மதிப்பையும் மரியாதையையும் அவருக்கு உணர்த்திடத்தான் என் அன்புத்தம்பிகளாகிய உங்களைச் சிரமப்படுத்திவிட்டேன் என்றார் .
இந்த அரிய தகவலை எனக்கு சொன்னவர் பழங்காநத்தம் விக்ரம் ஸ்டீல்ஸ் உரிமையாளர் நண்பர் Rajasekar Rp அவர்களின் தந்தையார் நினைவில் வாழும் திரு இரா.பாண்டியன் அவர்கள் .
Thanks to Madakkulam Prabhakaran Sir.
http://i59.tinypic.com/3517iwg.gif
" பாட்டாளி மக்களுக்கு உதவவேண்டும்; வறுமையாளர்களுக்கு வழி செய்ய வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் துயரைத் துடைக்க வேண்டும்; ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணம் தம்பி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு.
ஏழை மக்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களுக்கு எப்படி உதவி செய்வதென்றே புரியாமலிருக்கிறார்கள்; ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளைக் கண்டிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு, இப்படி மழை அங்கிகளைத் தரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
இந்த நேரத்தில் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குமுன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாடகத்தில் நடிக்க திருச்சிக்குச் சென்ற பொழுது, திருச்சியில் குதிரை வண்டி, மாட்டு வண்டிக்காரர்கள் மரத்தில் நிழல்கூட இல்லாமல் வெயிலில் இருப்பதைக் கண்டு, உடனே அங்கு ஒரு கொட்டகையைக் கட்டி அவர்களுக்கு உதவினார்.
தம்பி , எம்.ஜி.ஆர் நல்ல கலைஞர், நல்ல கலைஞர்கள் பெரிய மோட்டார் வைத்திருப்பார்கள்; அதில் சென்றால் ஏழை எளியவரைப் பார்க்க முடியாது; உள்ளே பள்ளமாக இருப்பதால் வெளியில் இருப்பவர்களைப் பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அப்படிப்பட்ட உயரிய நிலையிலே வாழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் குடிசைகளைப் பார்க்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது? அதைத்தான் அவரே விளக்கினார். ‘யானை கவுனிப் பகுதியில் ஏழை நடிகனாக கேட்பாரற்றவனாக எத்தனையோ நாட்கள் நடைபாதையிலேயே நடமாடினேன். அதுதான் ஏழைகளின் நிலையை உணரமுடிந்தது’ என்று சொன்னாரே-அந்த உள்ளந்தான் அவரை எண்ணிப் பார்க்க வைத்தது.
அந்த வேதனைக் காலத்தை நினைக்கும்போது அதனுடன் ஒப்பிட்டு இன்று அல்லல்படும் மக்களை எண்ணி, அவர் வேதனைப்படுகிறார். அதன் காரணமாகத் தான் ஏழை மனிதனாகப் பிறந்து, மிருகத்திலும் கேவலமாக மனிதனை மனிதன் இழுத்துச் செல்லும் காட்சிகளைக் கண்டு உள்ளத்திலே நினைத்து, கண்ணீர் விட்டு அழுது, அவன் துயரத்தைத் துடைக்கத் தானும் ஓரளவு உதவலாம் என்று முன்வந்து மழை அங்கிகளை அளிக்கிறார்.
இந்த அருமையான காரியத்தை மற்றவர்களும் செய்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டுவேன்; அவர்கள் கலைஞர்களாக இருந்தால் மெத்த சந்தோஷம்; கழகத்தைச் சார்ந்த கலைஞர்களாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி; எம்.ஜி.ஆர் தான் செய்கிறாரே என்று யாருமே சும்மா இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆருடன் போட்டி போட்டுக் கொண்டு நன்கொடை வழங்க முன்வரும் கலைஞர்கள், இந்த நல்ல காரியத்தைச் செய்யலாம். எம்.ஜி.ஆர் ஒரு சிறு உதவி செய்தால் அவர்கள் அதைவிடப் பெரிதாக நல்ல உதவி செய்யட்டும் .
“மக்களிடம் பெறுகிறோம். மக்களுக்குத் திருப்பித் தருகிறோம்” என்று எம்.ஜி.ஆர் கூறினார். நல்ல தத்துவம். எவ்வளவு பெரிய உலகத்திலேயே ஈடு இணையற்ற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை இவ்வளவு எளிமையாகச் சொல்கிறாரே என்று நானே அதிசயித்துப் போனேன் அவர் பேசும்பொழுது?
மக்கள் கொடுக்கும் பணத்தை மக்களுக்கே திருப்பித் தருவதாகக் கூறினாரே அதிலேதான் அவருடைய உயர்ந்த உண்மை இருக்கிறது. அவர்கள் உள்ளத்தில் முன்னேற்றக் கழகமே உள்ளது. தம்பி எம்.ஜி.ஆர் தூய உள்ளத்தின் தத்துவத்தை நானாகப் புரிந்துகொண்டேன். இந்தத் தத்துவம் எந்த ஆட்சி நடந்தாலும் அதன் அடிப்படையாக இருக்க வேண்டும்.
நம்முடைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் மழை அணி வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.
எம்.ஜி.ஆர் ஒருவரின் புகழுக்காக என்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து கொண்டே எம்.ஜி.ஆர் ரிக்ஷாக்காரர்களை ஒவ்வொருவராக அழைத்துக்கொடுத்திருந்தால் அந்த மழை அங்கி அவர்களின் உடலிலே ஒட்டிக்கொள்ளாதா’ ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று அவர்களும் சொல்லியிருக்க மாட்டார்களா? தானாகவே ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று கூறக்கூடியவர்கள், மழை அங்கி வாங்கிக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்?
எம்.ஜி.ஆர் மக்களுக்கு அறிமுகமாகாதவரல்ல; அவர் தலையைக் கண்டாலே, ‘எம்.ஜி.ஆர். வாழ்க. எம்.ஜி.ஆர். வாழ்க’ என்ற குரலெழுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தலைகாட்டப் பயப்படுகிறார்; காரணம், மக்கள் அன்புத்தொல்லை கொடுப்பதால்.
‘ஐயோ, மக்களைப் பார்த்தால் என்ன ஆகுமோ?’ என்று பயப்படுகிறார்கள், மற்றவர்கள்.
எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னாலான உதவியைச் செய்திருக்கிறார். அவரைப் பாராட்டுகிறேன். அவர் மேலும் பல நல்ல காரியங்களைச் செய்வதினால் பெருமைப்படுகிறேன் ! "
- அறிஞர் அண்ணா (நம்நாடு - 4.12.61)
Thanks to Mr. Chandran Veerasamy, FB.
தேவர் பிலிம்ஸ் - ''தனிப்பிறவி '' இன்று 48 ஆண்டுகள் நிறைவு நாள் .
16.9.1966
மக்கள் திலகம் எம்ஜியாரின் புகழ் பெற்ற பாடல்கள்
உழைக்கும் கைகளே ...உருவாக்கும் கைகளே
நேரம் நல்ல நேரம் .....
ஒரே முறைதான் உன்னோடு ....பேசி
கன்னத்தில் என்னடி காயம் ....
சிரிப்பென்ன சிரிபென்ன ... சின்னம்மா
எதிர்பாராமல் நடந்ததடி .... இந்த பாடலில் மக்கள் திலகம் முருகராக தோன்றி இருப்பது சிறப்புஅம்சம் .
ஜூடோ -சண்டை காட்சிகள் புதுமையாக இருந்தது .
தனிப்பிறவி - மக்கள் திலகதிற்கு பொருத்தமான பெயர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் மனம் கவர்ந்த படம் .
CONGRATULATIONS VINODH SIR FOR COMPLETING 10000 POSTINGS
http://i1170.photobucket.com/albums/...ps86392a03.jpg