ஆமாமா, தெருவில் ஜாதி பெயரை அழித்த திரியில் ,அய்யர்கள் வருகை அதிகமாகி விட்டதாலோ என்னவோ ,தமிழ் அர்ச்சனைக்கு எதிராக கொடி தூக்கி விட்டீர்கள்.
Printable View
நான் குறிப்பிட்ட தூய தமிழ் அர்ச்சனை - நீங்கள் பதிவிட்ட பதிவு ...எண் 3562
மீண்டும் படித்து பாருங்கள் .உங்கள் தமிழ் அர்ச்சனையை முதலில் மாற்றுங்கள் .
திரியை பற்றியோ அய்யரை பற்றி கவலை வேண்டாம் .எல்லோரும் நாகரீகம் தெரிந்தவர்கள் .
கிருஷணனை தாக்க இன்னொரு கோபாலரா ?
உங்களுக்காக ஒரு பாடல் ... ரசிக்கவும் கோபாலரே
http://youtu.be/Dlj0CLgVPuU:pink::pink::pink:
மாலை மதுரம்.
http://i.ytimg.com/vi/yHIQfz4JzqQ/movieposter.jpg
'அசோக் குமார்' திரைப்படத்தில் பாகவதரின் மனம் கொள்ளை கொண்ட பாட்டு.
அற்புதக் கருத்துக்களை ஆணித்தரமாகக்கூறும் அவனி போற்றும் பாடல் இது.
சத்திய தயாநிதி புத்தரைப் போற்றச் சொல்லும் இப்பாடல் மிகச் சிறப்பு வாய்ந்தது உன்னதத் தமிழ் வரிகளால்.
மனதில் ஆணி அடித்தாற் போல நச்சென்று பதிந்து மனதைக் குடையும் அறிவுத்தல் பாடல் இது. தியாகராஜ பாகவதர் என்ற கந்தர்வ இசைக் குரலோனின் குரலால் காந்த சக்தி கொண்டது இப்பாடல்.
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடபோம்
காலமும் செல்ல மடிந்திடபோம்
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோர் …ஓ..
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோர்
சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரை போற்றுதல் நம் கடனே
புத்தரை போற்றுதல் நம் கடனே
உண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
மண்மீது ஓர்சுமையே பொதி தாங்கிய
பாழ் மனமே வெறும் பாமரமே
மண்மீது ஓர்சுமையே பொதி தாங்கிய
பாழ் மனமே வெறும் பாமரமே
http://www.youtube.com/watch?feature...&v=Cwb4tvP9yv8
'வான்மதி நீ அறிவாய்'
http://cdn1.biscoot.com/Thumbnail/So...73_190x190.jpg
'அவன் அமரன்' (1958) திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், ஜிக்கி குரலில் ஒலிக்கும் மதுர கானம்.(பல இடங்களில் இணையத்தில் ஏ.பி.கோமளா என்று போட்டிருப்பார்கள். எது சரி?) ராஜ சுலோச்சனா, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி இருவரும் பங்கு பெற்ற பாடல் இது. பாலையா கண்ணாம்பா, எஸ்.வி.சுப்பையா, முத்துலஷ்மி போன்ற பெரிய நடிகர்கள் நடிக்க, நம் வீணை பாலச்சந்தர் இப்படத்தை இயக்கியிருந்தார். டி.எம்.இப்ராஹீம் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
இப்பாடலில் இன்னொரு சிறப்பு உண்டு. தானே தனக்கு சொந்தக் குரலில் பாடிக் கொள்ளும் 'நடிப்பிசைப் புலவர்' கே.ஆர் .ராமசாமி அவர்களுக்கு சீர்காழி கோவிந்தராஜன் குரல் தந்திருப்பது வியப்பாய் இருக்கிறது.
http://www.youtube.com/watch?v=ZC5eH4omD9E&feature=player_detailpage
'டாக்சி டிரைவர்' (1954) (தேவ்ஜி நடித்தது) என்ற இந்திப் படத்தில் எஸ்.டி.பர்மன் இசையமைக்க Talat Mahmood பாடிய 'Jaayen tu jayen kahan' என்ற புகழ் பெற்ற இந்திப் பாடல்தான் மேலே சொன்ன 'வான்மதி நீ அறிவாய்' தமிழ்ப் பாடலாக மாறியது.
http://www.youtube.com/watch?v=9XLhptDlJN0&feature=player_detailpage
அப்படியே 'Jaal' (1952) படத்தின் 'Yeh Raat Ye Chandni Phir Kahan' பாடலையும் கேட்டு வையுங்கள். ஹேமந்த்குமார் பாடியது. ஏதோ ஒற்றுமை தெரிவது போல் இல்லை?!
http://www.youtube.com/watch?v=Aq_BtFLi1F4&feature=player_detailpage
Avan Amaran 1958. (The Hindu)
http://www.thehindu.com/features/cin...cle3411992.ece
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் பதிவுகள் அனைத்தும் அருமை வாசு ஜி
டியர் கிருஷ்ணாஜி சார்,
தங்களது பதிவுகளைத் தொடருங்கள்.
கோபு.
டியர் வாசு சார்,
அசோக் குமார் திரைப்படத்தில் தியாகராஜ பாகவதரின்
காலத்தால் அழியாத கானத்தினைப் பதிவிட்டமைக்கு நன்றிகள்.
கோபு.
Krishna,
You need not take offence in my statement. Limit your postings not to bury Good ones and try to be original.