-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 48
Payum oli nee yenakku Bombay Jayashri Kannamma
பாரதியின் கவிதைகளில் பகலவன் -4
பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!
வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!
வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!
வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!
வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!
காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!
நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!
தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!
https://youtu.be/0iyqMTNqvzg
சந்தனமே துளிக்கூடத்தேவையில்லை - பாம்பே ஜெயஸ்ரீ யின் குரல் - பாரதியின் வரிகள் , குளிமையான எண்ண ஓட்டங்கள் -- காதலின் உச்சக்கட்டம் - வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு; இப்படி இருவரும் ஒன்றாக இருந்தால் காதலில் பிரிவு ஏது ? நிலாவைக்கண்டு ஏன் காயவேண்டும் ?
பாரதி - உன் காதல் உயர்வானது - whatsapp இல் வளருவதில்லை - email லில் வாழ்வதில்லை - sms இல் பிழைப்பதில்லை - இங்கு நாங்கள் வாழும் வாழ்க்கை ஒரு போலியானது - அதில் உண்மை காதல் இல்லை - உயர்ந்த கொள்கைகள் இல்லை - சிம் கார்டில் எங்கள் காதல் முடிவடைந்து விடுகின்றது - காதலியை ஸ்க்ரீன் சேவர் ஆக வைத்துள்ளோம் - பிறர் பார்க்க - facebook இல் எங்கள் குடும்பம் ஓடுகின்றது . Twitter இல் காதல் பயணித்துக்கொண்டு இருக்கின்றது - எங்களுடைய கண்ணமாக்கள் கனவில் தான் வருகிறார்கள் . இன்று நீ எங்களுடன் இருந்திருந்தால் இப்படித்தான் பாடியிருப்பாய்
" கிரெடிட் கார்ட்டடி நான் உனக்கு - தலை வேதனை நீ எனக்கு "
" காசோலை நான் உனக்கு - பேங்க் பேலன்ஸ் அடி நீ எனக்கு "
காதல் ஒரு கண்ணாமூச்சியடி - கண்ணம்மா - அதில் கண்ணை இழந்தவனடி நான் உனக்கு
போகும் வேகத்திலே கண்ணம்மா - சேரும் இடம் புரியவில்லையடி !!
-
இந்தப் பாட்டை யாரும் போட்ட மாதிரி தெரியலையே கண்ணு. சந்தனக் குடத்தை விடலாமோ? என்னாமா மெல்லிசை மன்னர் இசையமைத்திருக்கிறார். மகாகவி பாரதியின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி பாடிய பாடலாம். என்ன அற்புதமாக கௌளை ராகத்தில் அமைந்து மயக்குகிறது. நடிகர்களை விடுங்கள். கண்ணை மூடி பாடலைக் கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=VhkpMY-jycE
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 49
பாரதியின் கவிதைகளில் பகலவன் -5
ஒளியும் இருளும்
வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!
சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!
தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சம் தியங்குவ தென்னே!
நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல்லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே!
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 50:)
பாரதியின் கவிதைகளில் பகலவன் -6
காலைப்பொழுது
காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே.
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்;
பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னற்றே.
தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்னப் பருந்தினுக்கு மாலை யிட்டுச் சென்றதுவே.
தென்னை மரக்கிளைமேற் சிந்தனையோ டோர் காகம்
னவன்னமுற வீற்றிருந்து வானைமுத்த மிட்டதுவே.
தென்னைப் பசுங் கீற்றைக் கொத்திச் சிறு காக்கை
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே.
வன்னச் சுடர் மிகுந்த வானகத்தே தென் திசையில்
கன்னங் கருங்காகக் கூட்டம்வரக் கண்ட தங்கே.
கூட்டத்தைக் கண்டஃது கும்பிட்டே தன்னருகோர்
பாட்டுக் குருவிதனைப் பார்த்து நகைத்ததுவே.
சின்னக் குருவி சிரிப்புடனே வந்தாங்கு
கன்னங் கருங்காக்கை கண்ணெதிரே யோர்கிளைமேல்
வீற்றிருந்தே“கிக் கிக்கீ;காக்காய் நீ விண்ணிடையே
போற்றியெதை நோக்குகிறாய்? கூட்டமங்குப் போவ தென்னே?:”
என்றவுட னே காக்கை-“என் தோழா! நீ கேளாய்,
மன்றுதனைக் கண்டே மனமகிழ்ந்து போற்றுகிறேன்.”
என்றுசொல்லிக் காக்கை இருக்கையிலே ஆங்கணோர்
மின்திகழும் பச்சைக் கிளிவந்து வீற்றிருந்தே.
“நட்புக் குருவியே ஞாயிற்’றிளவெயிலில்
கட்புலனுக் கெல்லாம் களியாகத் தோன்றுகையில்,
நும்மை மகிழ்ச்சிடன் நோக்கியிங்கு வந்திட்டேன்!
அம்மவோ!காகப் பெருங்கூட்ட மஃதென்னே?”
என்று வினவக் குருவிதான் இஃதுரைக்கும்;-
“நன்றுநீ கேட்டாய்,பசுங்கிளியே!நானுமிங்கு.
மற்றதனை யோர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன்;
கற்றறிந்த காக்காய்,கழறுக நீ!” என்றதுவே.
அப்போது காக்கை,“அருமையுள்ள தோழர்களே!
செப்புவேன் கேளீர்,சில நாளாக் காக்கையுள்ளே.
நேர்ந்த புதுமைகளை நீர்கேட்டறியீ ரோ?
சார்ந்துநின்ற கூட்டமங்கு சாலையின்மேற் கண்டீரே?
மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே?
கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்;
ஏழுநாள் முன்னே இறைமகுடந் தான் புனைந்தான்;
வாழியவன் எங்கள் வருத்தமெல்லாம் போக்கிவிட்டான்.
சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை;துன்பமில்லை;
போற்றற் குரியான் புதுமன்னன்,காணீரோ?”
என்றுரைத்துக் காக்கை இருக்கையிலே அன்னமொன்று
தென்திசையி னின்று சிரிப்புடனே வந்ததங்கே.
அன்னமந்தத் தென்னை யருகினிலோர் மாடமிசை
வன்னமுற வீற்றிருந்து,-“வாழ்க,துணைவரே!
காலை யிளவெயிலிற் காண்பதெலாம் இன்பமன்றோ?
சால நுமைக் கண்டுகளித்தேன் சருவிநீர்,
ஏதுரைகள் பேசி யிருக்கின்றீர்?” என்றிடவே
போதமுள்ள காக்கை புகன்றதந்தச் செய்தியெல்லாம்.
அன்னமிது கேட்டு மகிழ்ந்துரைக்கும்;-“ஆங் காணும்!
மன்னர் அறம்புரிந்தால்,வையமெல்லாம் மாண்புபெறும்.
ஒற்றுமையால் மேன்மையுண்டாம்; ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே?”
என்று சொல்லி அன்னம் பறந்தாங்கே ஏகிற்றால்;
மன்று கலைந்து மறைந்தனவப் புட்களெல்லாம்.
காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்களிதை;
ஞால மறிந்திடவே நாங்களிதைப் பாட்டிசைத் தோம்.
-
ரவி,
பாரதியின் வரிகளிலும் படித்துத் தேடி அவரின் வரிகளை எழுதி ... அப்பாடி என்னமாக இந்த மழையிலும் கதிரவனாய் கொளுத்துகிறீர்கள்!!!
-
வாசு,
சி.க. சந்தனம் என்று சொன்னாலும் சொன்னார். கொண்டு வந்துவிட்டீர்கள் சரம் சரமாக சந்தனத்தை (!!!) நன்றி.
-
ராஜ்ராஜ் அவர்களே,
உங்களின் ஜுகல் பந்தி பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
-
சி.க. ,
உங்களின் ஊட்டியில் வெள்ளை ரோஜா பாடல் சூட்டிங் பார்த்த அனுபவம் நன்றாக இருந்தது. அவ்வப்போது இப்படி நீங்கள் சொல்லும் அனுபவங்கள் தனிச் சுவையாய் இருக்கிறது. நன்றி.
நிலாப் பாடல்கள் விரைவில் வரும்.
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 51
இரட்டை கதிரே - படம் " மாற்றான் "
மாற்றான் என்கிற திரைப்படத்தின் துவக்கப்பாடல் . அருமையான பாடல் - நவீன முறையில் எடுக்கப்பட்டுள்ளது .conjoined twins ஆக இருக்கும் இரு சூர்யாக்களும் நேர் எதிரான குணாதிசயங்களில் அமைந்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் இரண்டு சூரியாக்களும் திரையரங்கிற்குச் சென்று ஒரு திரைப்படம் பார்ப்பதாக ஒரு காட்சி வருகிறது. புதிய தொழில்நுட்பத்தில் வெளிவந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன். . இரண்டு பேருமே சிலாகித்து வெகுவாக ரசித்து கைதட்டுகிறார்கள்..
ரசிக்க வேண்டிய பாடல்
https://youtu.be/H3Hg42HVEKo
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 52
Views in Youtube :
பாடல் : சோலைக்குயிலே காலைக்கதிரே
படம் : பொண்ணு ஊருக்குப் புதுசு
பாடியவர்: எஸ்.பி ஷைலஜா
பாடலைப் புனைந்தவர் : திரு. எம் . ஜி . வல்லபன்
இசை : இசை ஞாயிறு இசைஞானி இளையராஜா
கதை,வசனம் எழுதி இயக்கியவர் ஆர்.செல்வராஜ்
வருடம் : 1979
இராகம்: மத்யமாவதி
ஆரோகணம் : ஸ ரி2 ம1 ப நி2 ஸ
அவரோகணம் : ஸ நி2 ப ம1 ரி2 ஸ
மத்யமாவதி இராகம். இது மங்களகரமான இராகமாக அறியப்படுகிறது. 22ஆம் மேளகர்த்தா இராகமான கரகரப்ரியா இராகத்திலிருந்து பிறக்கும் ஜன்ய இராகம் இது. மோகனம், ஹிந்தோளம் இராகங்களைப் போலவே இது ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். ஹிந்தோளத்தைப் போலவே இதுவும் ஆரோகண அவரோகணங்களிடையே சமச்சீர் தன்மை கொண்ட இராகம்.
ஹிந்துஸ்தானி பாரம்பரியத்தில் இந்த இராகம் மதுமத் சாரங் என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் இதை பின்மதிய வேளைக்கு ஏற்ற இராகமாகக் கருதுகிறார்கள். கர்நாடக இசையின் முன்னோடியாகக் கருதப்படும் தமிழிசை மரபில் இது செந்துருத்திப் பண் என்று அழைக்கப்பட்டது. கர்நாடக இசையில், இது மங்களகரமானது எனவே கச்சேரியின் இறுதியில் இறைவணக்கமாகப் பாடுவதற்கு ஏற்றது எனப் பாவிக்கிறார்கள். மேலும், கச்சேரியின் இடையில் இந்த இராகத்தைப் பாடினாலும் கச்சேரியின் குறைகள் கடவுளாலும் இரசிகர்களாலும் மன்னிக்கப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. இளையராஜா மத்யமாவதி இராகத்தைப் பல உணர்ச்சிகளைக் காட்டப் பயன்படுத்தியிருக்கிறார்:
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல், நிலாக்காயுது நேரம் நல்ல, ஈரமான ரோஜாவே என்னை, ஆரிரோ ஆராரோ, பொன்மேனி உருகுதே, செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு, தங்க நிலவுக்குள் நிலவொன்று வந்ததே, தாழம்பூவே வாசம் வீசு, துள்ளித் துள்ளி, தாலாட்டு, பிள்ளை உண்டு தாலாட்டு.
என்னுடைய கருத்துக்கள்
அருமையான இளைய ராஜாவின் கைவண்ணத்தில் உதித்த பாடல் - ராஜா ராஜாதான்
https://youtu.be/cgG6Bf6naSc