Originally Posted by
venkkiram
தவறான பார்வை. அது என்ன ராஜாவின் தரம்? ஒரு பாடலை பட்டி தொட்டி, நகரம் என ஒரு இடம் விடாமல் ஒலிக்கச் செய்வதும் அதையும் தமிழ் நாட்டையும் தாண்டி ஆந்திரா, கேரளா என புகழ் பரப்பியதும் சாதாரண வேலை அல்ல. இந்த மெட்டிற்கு இது போதும் என ராஜாவிற்கு தெரிகிறது. ஒரு பாடலின் அமைப்பு ரொம்ப எளிமையா இருந்தா ஓரங்கட்டுவது எப்படி நியாயமாகும்? அப்படியே பார்த்தாலும் போவோமா ஊர்கோலம் - கிளாசிக். ஆரம்ப இசை, இடையிசை எல்லாமே அற்புதம். குயிலப் புடிச்சி பாடல் - பாலுவின் சோகப்பாடல்களில் முக்கியமான ஒன்று. படம் குப்பை எனச் சொல்லுங்கள். அதில் நியாயம் இருக்கிறது. பாடல்கள் இன்றைக்கும் கேட்டு ரசிக்கலாம். ஆனால் படத்தை என்னால் ஒரு நிமிடம் கூட சகித்து பார்க்க முடியாது. நகைச்சுவைக் காட்சிகள் தவிர.